-ச.நாகராஜன்ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய இடமே இல்லை என்ற குரல் தற்காலத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இதற்கான காரணம் மெக்காலே கல்வி முறையும் தொடர்ந்து இந்தியாவின் மேல் தொடுக்கப்பட்ட அன்னியப் படையெடுப்புகளும் அதைத் தொடர்ந்த முகலாயர் மற்றும் ஆங்கிலேய ஆட்சியுமே தான்!.சுதந்திர இந்தியாவில் மீண்டும் புகழோங்கிய காலம் மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது.‘பெண்ணின் பெருந்தக்க யா உள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்?’ (குறள் எண் 54) என்ற திருவள்ளுவர் கூற்றை மெய்ப்பிக்கும் பாத்திரங்கள் ராமாயண, மகாபாரத இதிகாசங்களில் உள்ளன.அது மட்டுமல்ல, ராமாயண, மகாபாரத இதிகாசங்களை ஒரு பார்வை பார்த்தால் பழைய கால இதிகாசப் பெண்மணிகள் வியப்பூட்டும் பல்கலை நிபுணத்தன்மையைக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்திக் கூறும் நேர்த்தியான துணைவி (PERFECT PARTNER), உளவியல் சிகிச்சை நிபுணர் (PSYCHOLOGICAL HEALER), பாதுகாப்பு அதிகாரி (SECURITY OFFICER), திறம்பட வாகனம் ஓட்டுநர் (CHARIOTEER), அதீத தெய்வ ஆற்றல் கொண்டவர் (MTSTIC), அதீத நினைவாற்றல் கொண்டவர் (MEMORY EXPERT), நேருக்கு நேர் சண்டையிடும் திறன் படைத்தவர் (COMBAT EXPERT), மரணத்தையும் வெல்லுபவர் (PSYCHIC POWER), மாற்று யோசனைத் திறன் கொண்டவர் (LATERAL THINKER) போன்ற பல்வேறு அதிசயிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்ட இதிகாசப் பெண்மணிகள் ஏராளம்..இதோ சில வியப்பூட்டும் பெண்மணிகள்: லங்கிணி:இலங்கையை ஆண்ட இராவணனின் வலிமை ஒப்பற்றது.முக்கோடி வாழ்நாள் பெற்றவன். ‘எக்கோடியாராலும் வெலப்படாய்’ என்ற வரத்தைப் பெற்றவன். வாரணம் பொருத மார்பு. (கைலாய மலையினை) வரையினை எடுத்த தோள்! நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா அவனுடையது. தாரணி மௌலி பத்து. சங்கரன் கொடுத்த வாள் - இப்படியெல்லாம் ராவணனின் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.அவனது இலங்கை பொன்னால் இழைக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டது. இலங்கையைக் காக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer ) லங்கிணி என்ற ஒரு பெண்மணியே. பிரம்மாவால் அனுப்பப்பட்ட அவளது காவல் மிக வலுவானது. இத்தனைக்கும் இராவணனை நினைத்தாலே உலகத்தோரும் தேவர்களும் பயப்படும் போது இலங்கைக்குள் யார் தான் புக முடியும்?இந்திரஜித்தின் மாளிகையைக் காவல் காத்த வீரர்களுக்கு போர் அடித்துப் போயிற்றாம். சலிப்பு எதற்காக? யாரேனும் உள்ளே நுழைய முயன்றால் தானே அவர்களது காவலுக்கு ஒரு சிறிதாவது அர்த்தம் இருக்கும்! யாரும் லங்கிணியைத் தாண்டி இலங்கைக்குள்ளேயே நுழைய முடியாதே!ஆகவே அவர்கள் மாளிகை வாயிலில் புதிர்களைச் சொல்லும் போட்டியில் (Quiz competition) தான் எப்போதும் இருப்பார்களாம்!இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகையை அங்கிருந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை சொல்லும் போது நகைச்சுவையையும் தவழ விடுகிறான் தன் பாடலில்!வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தி புன்சிரிப்புடன் இருக்கும் வீரர்கள் பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பர் - டைம் பாஸ் செய்ய! ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார் ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர் காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான் - சுந்தர காண்டம், ஊர்தேடு படலம் பாடல் எண் 139 அனுமன் தனது பெரிய உடம்பைச் சுருக்கிக் கொண்டு (தன் தகை அனைய மேனி சுருக்கி) இருளில் பிரதான வாசல் வழியே செல்லாமல் மதிலைக் கடக்க முயற்சி செய்வதைப் பார்த்த லங்கா தேவி சூரியனை ராகு,கேது கவ்வுவது போலத் தடுத்தாள்.எட்டுத் தோள் கொண்டவள் அவள். நான்கு முகம் அவளுக்கு உண்டு. வட்டமிடும் கண்ணால் அனைத்தையும் பார்ப்பவள், அனுமனை நில் நில் என்கிறாள். அப்படி ஒரு காவல் அவளுடையது.பெரும் போர் நிகழ அனுமன் அவளைப் பிடித்து உதைக்கிறான். பிரமனால் காவல் காக்க அனுப்பப்பட்ட லங்கா தேவி, பிரமன், ‘எப்போது ஒரு குரங்கு உன்னை அடிக்கிறதோ அப்போதே உனது பணி முடிந்தது, நீ திரும்பலாம்’ என்பதை நினைவு கூர்ந்து தன் பணியை முடித்து, ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று அனுமனிடம் சொல்லி பிரம்ம லோகம் மீள்கிறாள்.அற்புதமான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான லங்கிணியின் பாத்திரப் படைப்பு விரிவாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..கைகேயி:கேகய நாட்டு மன்னனின் புதல்வியான கைகேயி பேரழகி. மதி நுட்பம் வாய்ந்தவள். ஏழு சகோதரர்களுடன் ஒரே பெண்ணாக உடன் பிறந்ததால் அவர்கள் கற்ற கலை அனைத்தையும் அவளும் கற்றாள்.சம்பராசுரன் என்னும் அசுரன் இந்திரனுக்குத் தீங்கு விளைவிக்க அவன் தசரதனின் உதவியை நாடினான். சம்பராசுரன் மீது போர் தொடுக்க தசரதன் சென்ற போது அவனது ரதத்தைச் செலுத்தியவள் கைகேயி. அதாவது charioteer. கடுமையான யுத்தத்தில் தசரதனின் உயிரைக் காப்பாற்றியதோடு ரதத்தின் அச்சாணி முறிந்தபோது அச்சாணி இருக்கும் இடத்தில் தன் கைவிரலை வைத்து ரதத்தைத் திறம்படச் செலுத்தினாள் அவள்.‘கொடுமனக் கூனி’ஒரு பாத்திரமாக ராமாயணத்தில் தோன்றுவதற்கு முன்னர் கம்பன் கைகேயியை வர்ணிக்கும் போது பாற்கடலில் அமைந்த பவளக்கொடி போல அவள் பேரணை மேல் படுத்துக் கொண்டிருந்தாள் என்று சிறப்பிப்பதோடு அவளை தெய்வக் கற்பினாள் என்றும் சிறப்பித்துக் கூறுகிறான்.மான் போன்ற விழிகளுடைய கேகய மான் இரக்கத்தை உதறித் தள்ளினாள் என்கிறான் கம்பன். அதனால் தான் ராமாயணக் கதையே நகர்கிறது. தேவர்கள் மகிழ ராவணன் வதம் செய்யப்படுகிறான்..கலா, திரிஜடை:ராமனைப் பிரிந்த மன உளைச்சலில் சீதை மனம் வருந்தி சோகத்துடன் உயிரையே விடக் கருதிய வேளையில் உளவியல் ரீதியாக ஆறுதல் சிகிச்சையை அளிப்பவர்கள் விபீடணனின் புதல்வியான கலாவும், திரிசடையும்.இன்றைய நாட்களில் சைக்கலாஜிகல் ஹீலர் (Psychological Healder) செய்யும் பணியை அவர்கள் செய்து சீதையை உற்சாகம் அடையச் செய்கின்றனர். வெயிலில் வைத்த தீபம் போல வாடி இருக்கும் சீதையிடம் திரிசடை இராவணன் அழியப் போவதை தான் காணும் பல துர்நிமித்தங்களையும், தான் கண்ட கனவில் வரும் காட்சிகளையும் வைத்து விரிவாகக் கூறுகிறாள்.‘பாதிக் கனவில் நீ எழுப்பவே நான் எழுந்தேன்’ என்று திரிசடை கூறிய போது, அவளைக் கை கூப்பித் தொழுத சீதை, ‘அன்னையே, அதன் குறை காண்க’ (மீதிக் கனவையும் காண்பாயாக) என்று வேண்டுகிறாள்..ஸ்வயம்பிரபை:அரிய தவத்தைச் செய்யும் மூதாட்டியான ஸ்வயம்பிரபை ஹேமா என்பவளின் மாளிகையைக் காவல் காப்பவள். அந்த மாளிகை உள்ளிட்ட அற்புதமான சிருஷ்டியை மயன் என்ற அசுரன் தன் மாயையினால் விந்திய மலையில் ஒரு குகையில் செய்திருந்தான்.அதற்குள் அனுமனும் மற்ற வீரர்களும் நுழைந்தனர். அதிசயமான பல அற்புதக் காட்சிகளை அங்கே கண்டனர். அவர்கள் ஸ்வயம்பிரபையைக் கண்டு தாங்கள் அனைவரும் சீதையைத் தேடி வந்ததைச் சொல்ல ஸ்வயம்பிரபை மனம் இரங்கினாள்.இந்தக் குகையில் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே செல்லவே முடியாதே என்று அவள் சொல்ல அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அவர்களின் பணியை உணர்ந்த ஸ்வயம்பிரபை, “அனைவரும் கண்களை மூடுங்கள்”என்று சொல்லி தன் தவ வலிமையால் ஒரு நொடியில் அனைவரையும் குகைக்கு வெளியே கொண்டு விடுகிறாள். ஸ்வயம்பிரபை அறிவுநிலை கடந்த உளவியல் ஆற்றல் சக்தியைக் (mystic power) கொண்டிருப்பதை இங்குக் காண்கிறோம்.இந்த வரலாற்றை கிஷ்கிந்தா காண்டத்தில் காணலாம்..சீதை:இதிகாசத் தலைவியான சீதை பொன்னின் ஜோதி. போதின் இன் நாற்றம் (பூவின் நறுமணம்) செஞ்சொல் கவி இன்பம் போலத் திகழ்பவள். கற்பின் கனலி என இப்படியெல்லாம் கம்பனால் வர்ணிக்கப்படுகிறாள்.சீதை அரண்மனையை விட்டு வெளியே செல்லாதவள். என்றாலும் ராமனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று கடும் வனவாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.‘இராவணனை மட்டுமல்ல கணக்கில்லாத உலகங்களை எனது சொல்லினால் சுட்டுப் பொசுக்குவேன்; ஆனால் அது ராமபிரானின் வில்லின் ஆற்றலுக்குக் குறையை உண்டாக்கும்; ஆகவே அப்படிச் செய்யவில்லை’என்பது அவள் வாக்கு. (எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் - சூளாமணிப் படலம் பாடல் 18)Perfect Partner என்றெல்லாம் இப்போது புகழ்கிறோமே பலரை - சீதையை என்ன சொல்லிப் புகழலாம்?!.இனி மகாபாரதத்திற்குள் நுழைவோம்.திரௌபதி:பாஞ்சால நாட்டின் தவப்பயன். ஓவியம் நிகர்த்தவள். அருள் ஒளி. நிலத் திரு. எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியம். தெய்விக மலர்க் கொடி. கடி கமழ் மின்னுரு. கமனியக் கனவு - இப்படி மகாகவி பாரதியார் வர்ணிக்கும் பேரழகி திரௌபதியின் குணநலன்களை எடுத்துக் கொண்டால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம். தர்மபுத்திரர் முடி சூடி அரசனாகத் திகழ நாட்டின் நிர்வாகத்தை நிர்வாகம் செய்யும் பெரும் நிர்வாகியாக (Great State Administrator) ஆகத் திகழ்ந்தாள் திரௌபதி.அவளுக்கு இருந்த நினைவாற்றல் அபாரமானது. பல்லாயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு படைப்பது திரௌபதியின் முக்கியச் செயல். திரௌபதியிடம் வேலை பார்த்தோர் பல்லாயிரக்கணக்கான பெண்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய பெயரும் திரௌபதிக்குத் தெரியும். அவர்களுக்குரிய அன்றாட வேலையையும் அவளே கொடுப்பது வழக்கம்.தர்மர் அரசாட்சி செய்தாலும் முக்கியமான அரசு விதிகளை திரௌபதியே உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. கஜானாவில் உள்ள நிதிச் செல்வம் திரௌபதிக்கு அத்துபடி. ஏராளமான ஏழைகளுக்கு உதவும் திட்டத்தினால் அது குறையும் போது உடனடியாக அர்ஜுனன் மற்றும் பீமனை அழைத்து தேவையான நிதி பற்றிக் கூறி உடனே கஜானாவை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு கூறுவது திரௌபதியின் பழக்கம்.இப்படி ஒரு நினைவாற்றல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுவது இயல்பு. ஆனால் இதெல்லாம் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. நெப்போலியனுக்கு அவனது படையில் இருந்த அனைத்து வீரர்களின் பெயரும் தெரியும். அவனைப் பற்றிய சரித்திரம் எழுதிய பல ஆசிரியர்களும் அவனது நினைவாற்றலை, ‘மாபெரும் விந்தை’, ‘போட்டோகிராபிக் மெமரி, ‘ஒப்பற்றது’ என்றெல்லாம் வர்ணிக்கின்றனர்.சைரஸ் மன்னனும் தனது படையில் இருந்த ஒரு லட்சம் வீரர்களை பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம். தெமிஸ்டாக்ளிஸ் ஏதேன்ஸ் நகரில் இருந்த முப்பதினாயிரம் குடிமக்களை பெயர் சொல்லியே அழைப்பாராம். இந்த விவரங்களையும் இன்னும் பல அதிசயச் செய்திகளையும் டோனி புஜன் எழுதிய மாஸ்டர் யுவர் மெமரி நூலில் காணலாம். (Master Your Memory by Tony Buzan)ஆக திரௌபதியை நினைவாற்றல் ராணி (Memory Queen) என்று சொல்வதில் தவறே இல்லை!.சத்யபாமா:பூமி தேவியின் அவதாரமான சத்யபாமா நரகாசுரனை வதம் செய்ய அவதரித்த வீராங்கனை. கிருஷ்ணரின் மனைவி.பூமித்தாயின் புதல்வனான நரகாசுரன் தன் அன்னையினால் மட்டுமே தன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன்.நரகாசுரன் கிருஷ்ணர் ஏவிய அனைத்து அஸ்திரங்களையும் முறியடித்து அவரைத் தனது அஸ்திரங்களால் திணற அடிக்க, கிருஷ்ணர் கீழே விழுகிறார்.இதைக் கண்ட சத்யபாமா பெரும் கோபம் கொண்டு நரகாசுரனின் மீது தானே அஸ்திரத்தை ஏவி, அவனது நெஞ்சில் அடிக்க அவன் மாண்டு போகிறான். அற்புதமாகத் தேரோட்டுவதில் வல்ல சத்யபாமா அஸ்திரங்களைக் கையாளுவதிலும் வல்லவள்.நேருக்கு நேர் நின்று போர் புரியும் சாகசப் பெண்மணியை தற்காலத்தில் கூறப்படும் COMBAT EXPERT என்று சொல்லி வியக்கலாம்.திரௌபதியின் நெருங்கிய தோழி சத்யபாமா. இருவரும் அந்தரங்கமாகப் பேசுகையில் தாம்பத்ய ரகசியங்களைப் பேசிக் கொள்ளும் போது திரௌபதி அவற்றை நுட்பமாக விளக்குகிறாள். (வனபர்வம் 235வது அத்தியாயம்).கணவனுடன் ஒரு மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு திரௌபதி சத்யபாமைக்குக் கூறும் ரகசியங்களை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுவர்...காந்தாரி:காந்தாரத்தை ஆளும் சுபலன் என்பவனின் மகள் காந்தாரி. அவள் பரமேஸ்வரனை வழிபட்டு நூறு பிள்ளைகள் பெறும் வரம் பெற்றவள் என்று கேள்விப்பட்ட பீஷ்மர் கண்பார்வையற்ற திருதாஷ்டிரனுக்கு அவள் ஏற்றவள் என்று கருதி காந்தார தேச மன்னனுக்குத் தூது அனுப்பினார். காந்தார மன்னன், கண்பார்வையற்றவன் திருதராஷ்டிரன் என்பதால் அவனை மருமகனாக ஏற்கத் தயங்க, காந்தாரி தன் பெற்றோரிடம் சம்மதம் தெரிவித்தாள்.கணவன் கண்பார்வையற்று இருப்பதால் அவனை ஒருநாளும் இகழக் கூடாது என்று விரதம் பூண்டு ஒரு துணியால் தன் கண்களை மூடிக் கொண்டாள்.துரியோதனன் மகாபாரதப் போருக்குப் போகும் முன்னர் தன் தாயான காந்தாரியிடம் ஆசி வாங்க வந்த போது, ஆசி தந்த அவள், “எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்” என்றும் கூறினாள்.யுத்தம் முடிந்தது. துரியோதனாதியர் கொல்லப்பட அவர்களின் பிணங்களின் அருகே மனைவிமார்கள் அழ வியாஸர் மூலமாக ஞானக் கண்ணைப் பெற்ற காந்தாரி அந்த அவலக் காட்சிகளைக் காண்கிறாள். அழுகைக் குரல் வானைப் பிளக்கிறது. கிருஷ்ணனை அடைந்த அவள், தனது குடும்பம் நாசமாவதற்குக் காரணமான அவனது குலம் 36 ஆண்டுகளில் அழியும் என சாபமும் இட்டாள்.அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான் மகாபாரத இயக்குநரான கிருஷ்ணன். கதை, வசனம் எழுதும் போது தன் முடிவையும் தனக்குத் தானே அவனே தானே எழுதினான்! அப்படித் தான் நடக்கும் என்று காந்தாரியிடமும் அவன் கூறுகிறான்! தர்மத்தை விடாமல், குடும்ப பாசத்தையும் விடாமல் ஒரு உயர்ந்த தாயாக, அரசியாக, சிறந்த மனைவியாக, தர்மம் காப்பவளாக முழு சமச்சீர்தன்மையுடன் வாழ்ந்தவள் அதிசயப் பெண்மணி - காந்தாரி..தமயந்தி:வேதத்திலேயே கூறப்படும் சரித்திரம் நள-தமயந்தி சரித்திரம். எல்லையற்ற நுண்ணறிவு கொண்டவள் தமயந்தி. (Super IQ) கணவனுடன் இணைந்து எதிர்ப்பட்ட இன்னலை எல்லாம் எதிர்கொண்டு வென்றவள். பேரழகி.அவளது நுண்ணறிவுக்கு ஒரு உதாரணம் - அவள் மேல் காதல் கொண்ட தேவர்கள் நால்வர் ஸ்வயம்வரத்தில் நளன் உருவத்தில் வந்து இருக்க, அதிர்ந்து போன தமயந்தி தனது காதலன் நளனைக் கண்டுபிடித்தது நுண்ணறிவால் தான்.“கண் இமைத்தலால், அடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர் மாலை வாடுதலால்” அவள் நளனைக் கண்டுபிடித்தாள். -நள வெண்பா சுயம்வர காண்டம் பாடல் 135(தேவர்களுக்கு கண் இமைக்காது, மனிதனான நளனுக்கு கண் இமைக்கிறது; தேவர்களின் பாதங்கள் பூமியைத் தொடாது; மனிதனான நளனின் கால்களோ பூமியில் பதிந்துள்ளது; தேவர்களின் மாலை வாடவே வாடாது; மனிதனான நளனின் மாலையோ சற்று வாடி இருக்கிறது) ஆக இந்த லேடரல் திங்கிங்கால் மாற்று யோசிக்கும் நுண்ணறிவால் தனது நளனைக் கண்டாள் தமயந்தி. அவனுக்கே மாலையிட்டாள்.Love Birds என்ற வார்த்தைக்கு நள தமயந்தி பொருத்தம் தானே!மகாபாரதத்தில் வனபர்வத்தில் 49 முதல் 76 அத்தியாயம் முடிய நள-தமயந்தி சரித்திரத்தை விரிவாகப் படிக்கலாம்..சாவித்திரி :உலகில் எந்த நூலிலும் காண முடியாத ஓர் அற்புதமான பெண்மணியாக மகாபாரதத்தில் நம் முன் சித்தரிக்கப்படுபவள் சாவித்திரி; குணக்கடல் என்பதால் இவளைப் பார்க்க யமனே நேரில் வருகிறான்.மத்ர நாட்டு மன்னனின் புதல்வியான சாவித்திரி சத்தியவானைப் பார்த்துக் காதல் கொள்கிறாள். அவன் தன் தாய் தந்தையரை அழகுறப் பாதுகாத்த விதம் அவளைக் கவர்ந்தது. அவனையே மணந்து கொள்கிறாள். ஆனால் நாரத முனிவர் அவனது ஆயுள் இன்னும் ஒரு வருடமே உள்ளது என்கிறார். குறித்த நாளில் சத்தியவான் உயிரை எமன் கவர்ந்து கொள்ள, தன் கற்பின் சக்தியால் யமனைப் பின் தொடர்கிறாள் சாவித்திரி. கணவன் உயிரைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள் என்று எமதர்மன் கூற, சாவித்திரி தனக்கு நூறு புத்திரர்கள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். யமனும் அருள்கிறான். ஆனால் பதிவிரதையான அவளுக்குக் கணவன் இல்லாமல் எப்படி நூறு மகன்கள் பிறக்க முடியும்? எமன் சத்தியவானின் உயிரைத் திருப்பித் தருகிறான்.இந்த சாவித்திரி பாத்திரம் பாரத தேசப் பெண்மணிகளின் நம்பிக்கை நட்சத்திரம். காரடையான் நோன்பு, வடபூர்ணிமா விரதம் என்பன போன்ற விரதங்களை அனுஷ்டித்து, பெண்மணிகள் ‘சாவித்திரி போல ஆவாயாக’என்று வாழ்த்துவது இன்றும் உள்ள மரபாகும்..மகாபாரதத்தில் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் இதை மிக விவரமாக தர்மபுத்திரருக்குச் சித்தரிக்கிறார் (பதிவிரதா மாஹாத்ம்ய பர்வத்தில்)போன உயிர் மீளாது என்பது நிரந்தர உண்மை.ஆனால் அதையும் பொய்யாக்கி அதீத புலனாற்றல் சக்தி என்பதையும் மீறி இறப்பையே பொய்யாக்கிய பெண்மணி சாவித்திரி என்பதை நினைத்துப் பெருமை கொள்ளலாம்.பெண்ணின் பெருமையே பெருமை. பெண்மையின் சிகரம் சீதை என்று பெருமையுடன் கூறினார் ஸ்வாமி விவேகானந்தர்.சாதுர்யம் பூஷணம் நார்யா (சாதுர்யமே பெண்களுக்கு பூஷணம்) என்று கூறினார் ஒரு கவிஞர்.இப்படி பெண்ணின் பெருமையைக் கூறும் ஆயிரக்கணக்கான செய்யுள்கள் ராமாயண, மகாபாரத, புராணங்களிலும் மற்றும் காவியங்களிலும் உள்ளன.ஒரு பெண் ஐந்து குணங்களைப் பெற்றிருந்தாள் என்றால் அவளை மனைவியாகக் கொள்பவன் அதிர்ஷ்டசாலியே என்று ஒரு கவிஞர் பட்டியலிடுகிறார் :1) அநுகூலம் - காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கை கொடுப்பவள்2) விமலாங்கி - குற்றம் இல்லாதவள்3) குலஜா - நல்ல குடியில் பிறந்தவள்4) குஷலா - திறமை வாய்ந்தவள்5) சுசீலா - நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்இப்படிப்பட்டவள் பெய் என்றால் மழையும் பெய்யும் அல்லவா?எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இணையே தான்!வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் விண்வெளி கலத்தில் செல்லும் வீராங்கனை, விமானம் ஓட்டும் பைலட், ராணுவ பெண் அதிகாரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என எங்கும் பெண்களை நாம் இன்று பார்க்க முடிகிறது.சமுதாயத்தின் நடைமுறைப் போக்கில் ஆண் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஆண் பெண் இருவரும் சமம் என்பதை இன்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!இதை அன்றே ஏராளமான இதிகாசப் பெண்மணிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், இல்லையா?!