-மோகன் குருஜிபழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்றால் என்ன?-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.ஒரு வீட்ல ஏதாவது ஒரு சாமான் தொலைஞ்சிடுச்சின்னா முதலில் அந்த வீட்டில் வேலைசெய்யக்கூடிய நம்மைவிட தகுதியில் குறைந்த, ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய வேலைக்காரங்களைத்தான் சந்தேகப்படுவோம். உண்மையில் அவர்கள் அந்த மாதிரியான தவறுகளைச் செய்திருக்க மாட்டார்கள். நம் வீட்டில் இருக்கக்கூடிய சில தீயசக்திகள்கூட அவற்றைத் திருடியிருக்கலாம். ஆனால் நாம் முதலில் பழியை வேலைக்காரங்கமீது போட்டுருவோம். பாவத்தொழிலைச் செய்தவன் நம் குடும்பத்தில் இருப்பவனே. இதைத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று சொல்வார்கள்.. குழந்தைகளின் கண்களுக்குக் கடவுள் தெரிவார் என்பது உண்மையா?- த. சத்தியநாராயணன், அயன்புரம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல; நமக்கும்கூட கடவுள் தெரிவார். கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால், கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார் என்றால், நமக்குள்ளும் இருக்கிறார்; நம்மோடும் இருக்கிறார் என்றுதானே அர்த்தம். அப்படி இருக்க அவர் ஏன் நமக்குத் தெரிவதில்லை என்றால், கடவுளை மறைக்கக் கூடியவையான காமம், க்ரோதம், மதம், மாத்சர்யம் இவற்றையெல்லாம் நாம் சேர்த்துவைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்கு அவை இல்லாததால், அவர்கள் கண்களுக்கு சுவாமி தெரிவார். தொட்டிலிலே படுத்துக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று தானாக சிரிக்கும், தலையைத் தலையைத் திருப்பிப் பார்க்கும். அப்போது பெரியவர்கள் சொல்வார்கள், குழந்தைக்கு பிள்ளையார் பூ காட்டுகிறார் என்று. ஆனால், குழந்தை எதைப் பார்க்கிறது, ஏன் சிரிக்கிறது என்பதை அதனால் சொல்ல முடியாது. எப்போது தான் பார்ப்பது என்ன என்று அதற்குச் சொல்லத் தெரிகிறதோ, அதன் பிறகு அது கடவுளைப் பார்த்தாலும் அடையாளம் தெரிவதில்லை. இதைத்தான் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றார்கள். ஆக, குழந்தைகள் கண்ணுக்கு கடவுள் தெரிவார். நாமும் காம க்ரோத மத மாத்சர்யங்கள் இல்லாமல் குழந்தை மனசோடு இருந்தால், நமக்கும் தெரிவார்.தந்தையார் இறந்துவிட்டால், இறந்தநாள் நட்சத்திரத்தை வைத்து மறுவருடம் திதி கொடுப்பது, இறந்த தினத்தை வைத்து திதி கொடுப்பது அல்லது மகாளய அமாவாசைக்கு திதி கொடுப்பது எது சிறந்தது?- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.இறந்தவர்களுக்கு உரிய காரியங்களை, அவர்கள் இறந்த மாதம், இறந்த திதியில்தான் செய்ய வேண்டும். நட்சத்திரம் கூடாது. பிறப்புக்கு நட்சத்திரம், இறப்புக்குத் திதி என்பதுதான் கணக்கு. வருடா வருடம் அந்த மாதம், அந்தத் திதியில் சிரார்த்தம் செய்வதே உசிதம். மற்றபடி மஹாளய பட்சத்தில் செய்வது, திதி தெரியாதவர்களும்கூட செய்வது. அப்போது, திதி தெரிந்தவர்களும் செய்யலாம். அமாவாசை, மாதப்பிறப்பு போன்ற நாட்களில் மாதாமாதம் செய்யும் முன்னோர் கடன்களுக்கு திதி பார்க்க வேண்டாம். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் சிரார்த்தத்தில் அவசியம் திதியே பார்த்துச் செய்ய வேண்டும்.சனிப்பெயர்ச்சி சமயத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம் சென்றால்தான் நன்மை கிடைக்குமா?- எஸ்.நாராயணன், சென்னை.சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறு செல்லவேண்டும்; குருபெயர்ச்சிக்கு ஆலங்குடி செல்ல வேண்டும்; ராகு, கேது பெயர்ச்சியன்று திருநாகேஸ்வரம் போக வேண்டும் இப்படியெல்லாம் எந்தக் கட்டாயமும் கிடையாது. அவரவர் இருப்பிடத்துக்கு அருகிலே இருக்கிற கோயிலில் நவகிரஹ சந்நதியில் உள்ள அந்தந்த கிரஹங்களைக் கும்பிட்டாலே போதும். எங்கே சென்று எப்படி வழிபட்டாலும் மனதார வேண்டிக்கொள்வதுதான் பலன் தரும். அப்படி இல்லாமல், அங்கே சென்றோம், இங்கே போனோம் என்று தேடிச் சென்று கும்பிட்டுவிட்டால் மட்டும் பலன் கிடைத்துவிடாது. மனம் ஒன்றிப் பிரார்த்திப்பதை எங்கே இருந்தும் செய்யலாம்..கோயிலில் தரும் விபூதி, குங்குமம் வீட்டில் சேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்?- வசந்தா மாரிமுத்து, சென்னை-64. கோயிலில் தரும் விபூதி குங்குமங்களை, அங்கே உள்ள கிண்ணங்களிலேயே சேர்த்துவிடுவதுதான் நல்லது. சிவாலயத்தில் இருந்து கடுகளவு மண் கூட உடையில் ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். அப்படியிருக்க, கோயில்களில் இருந்து விபூதி, குங்குமத்தையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுவருவதென்பதே கூடாது. அப்படி அறியாமையால் கொண்டுவந்து வீட்டிலே சேர்ந்துவிட்டால், அவற்றை எங்கேயாவது ஆறு, குளங்களில் நீராடும் சமயத்தில் சேர்த்துவிடலாம். அல்லது, கோயில் திருக்குளங்களில் சேர்த்துவிடலாம். அதன் பிறகு மீண்டும் எடுத்துவந்து சேர்ப்பது கூடாது.