Bakthi Magazine
என் கேள்விக்கு என்ன பதில்? : தெய்வக் குற்றங்கள் என்று கூறப்படுபவை எவை?
கோயில் நடையை அர்த்தஜாம பூஜை செய்து, பள்ளியறையில் தெய்வங்களை எழுந்தருளச் செய்து சாத்திவிட்டார்களானால், அதன்பிறகு கோயில்நடையைத் திறக்கக்கூடாது. ஏனென்றால் ஏகாந்தத்தில் இருக்கும் தெய்வங்களை தரிசிப்பது கூடாது. அதனால், கோயில் வாசலோ, கோபுரவாசலோ எந்தக் கதவையும் திறக்கக்கூடாது.