பெருமாளுக்கு தட்சிணாயனத்தில் புரட்டாசியும், மார்கழியும்; விஷ்ணுபதி புண்யகாலம் எனப்படும் வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதப்பிறப்பு நாட்களும் மிகவும் விசேஷமானதாகும். திதிகளில் அமாவாசைக்கு அடுத்த பிரதமை, ஏகாதசி, துவாதசி, பௌர்ணமியும் அவருக்கு மிகவும் உகந்த நாட்களாகும். நட்சத்திரங்களில் திருவோணமும், பூசமும் அவரின் சுப பலன்களை ஈர்க்கும் நாட்களாகும்..கிழமைகளில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் தரிசனம் விசேஷமானது. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் கரி நாட்களில் வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்பவன், செய்யும் தொழிலில் லாபங்களையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் பெறுகின்றான். குபேர காலம் எனப்படும் வியாழக்கிழமை சூரிய அஸ்தமன நேரத்தில் வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்வோரை பெருமாள் செல்வந்தராக்குகின்றார். ஏகாதசி, பௌர்ணமி, விஷ்ணுபதி, சங்கராந்தி, பிறந்தநாள் போன்ற காலங்களில் அங்கபிரதட்சணம் செய்வதால் வெங்கடேசப்பெருமாளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு அவரின் அருளைப்பெறலாம். விஷ்ணுவாலயங்களில் குபேர திசையில் உள்ள காணிக்கை உண்டியலில் பக்தர்கள் தெற்குப் பக்கம் நின்று குபேரனைத் தொழுது, காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும். அவ்வாறு செய்தால் பணப்பிரச்னை ஏற்படாது. - ஆர். சாந்தா, மயிலாப்பூர்.