- டாக்டர் ஏ. சந்திரமதிஅறுபடை வீடுகள் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஆறுமுகப்பெருமான்தான். அதுபோல விநாயகப்பெருமானுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?.திருவண்ணாமலை (அல்லல் போக்கும் விநாயகர்), திருமுதுகுன்றம் என்ற விருத்தாசலம் (ஆழத்துப் பிள்ளையார்), திருக்கடவூர் (கள்ள வாரண விநாயகப் பெருமான்), மதுரை (காரிய சித்தி விநாயகர்), பிள்ளையார்பட்டி (கற்பக விநாயகர்), திருநாரையூர் (பொள்ளாப்பிள்ளையார்) ஆகியவைதான் ஆனைமுகனுக்கான அறுபடை வீடுகள்.இதில் இரண்டாம் படை வீடான விருத்தகிரீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்துப் பிள்ளையாரைப் பார்ப்போம்.ஆலய வளாகத்தில் அமைந்திருந்தாலும் ஒரு முழுமையான கோயிலுக்கு உரிய அனைத்து அம்சங்களுடன் தரை மட்டத்திலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் அமையப் பெற்றுள்ளது ஆழத்துப் பிள்ளையார் சன்னதி..கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன் கொடிக்கம்பமும், அதனை அடுத்து மூன்று கலசங்களைத் தாங்கிய மூன்று நிலை ராஜகோபுரமும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. விநாயகப்பெருமானின் பல்வேறு சிற்பங்கள், மூஷிக வாகனம், கஜலட்சுமி எனப் பல்வேறு சுதைச் சிற்பங்கள் கோபுரத்திற்கு மேலும் அழகைக் கூட்டுகிறது.ராஜகோபுரம் வழியே சுமார் 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள மூலஸ்தானத்தை அடைய படிக்கட்டுகள் வழியே இறங்க வேண்டும். மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய ஆறு தூண்களைத் தாங்கி நிற்கும் மகாமண்டபத்தைக் கடந்தால் மூலவர் சன்னதியை அடையலாம். எதிரே மூஷிக வாகனம் அமைந்துள்ளது. கருவறையில் ஆழத்து விநாயகர் அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே மருவி ‘ஆழத்து விநாயகர்‘ என அழைக்கப்படுகிறாராம். விநாயகப் பெருமான் ஆழத்தில் அமைந்திருந்தாலும் கருவறையை வலம் வந்து வணங்கலாம். கருவறை மீது ஏகக்கலசம் தாங்கிய இருநிலை விமானம் அழகுற அமைந்துள்ளது..இவ் விநாயகரை தூய்மையான உள்ளத்தோடு வேண்டினால் எண்ணியதெல்லாம் இனிதே நிறைவேறும்; கல்விச் செல்வம், பொருட் செல்வம் உள்பட அனைத்துச்செல்வங்களும் கிட்டி நம் வாழ்வு மேன்மை அடையும் என்கிறார்கள். குறிப்பாக சங்கடஹர சதுர்த்தியன்று இவரிடம் வேண்டுக்கொண்டால் விரைவில் பலன் கிட்டுமாம். பின்னர் சிதறுத்தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.இவருக்கு சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் என அன்று முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.இரண்டாம் படை வீடான ஆழத்துப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தொழுது அவன் அருள் பெற்று வரலாமே!எங்கே இருக்கு ?விருத்தாசலம் நகரில், விருத்தகிரீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஆழத்துப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ.தரிசன நேரம் காலை 6 - பகல் 12; மாலை 4 – இரவு 8.30.