-மீரா திருநாவுக்கரசுசிவன் பார்வதி மைந்தனான பிள்ளையாரை, சிவ பூத கணங்களின் அதிபதியாக சிவன் நியமித்ததால் அவர் கணபதி ஆனார். மேலும் அவருக்கு முதற் கடவுள் அந்தஸ்து வழங்கி இவருக்கு மேல் பெரியவர் இல்லை எனக் குறிப்பில் உணர்த்த கணபதி விநாயகர் ஆனார் (வி என்றால் இதற்கு மேல் பெரியவர் இல்லை; நாயகர் என்றால் தலைவர் / பெரியவர்)..யானை முகமும், பெரிய வயிறும் எனத் தோற்றத்தில் பயங்கரமானவராக விநாயகர் தோன்றினாலும் குழந்தை மனம் கொண்டவர். மனம் கலங்கி நிற்கும் வேளையில் மனம் உருகி வேண்டினால், வேண்டியதை செய்து தருவார் வேழமுகத்தோன். அப்படி அவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உதவிய தருணங்கள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்..சுந்தரமூர்த்தி நாயனார், பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவரும், சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரும் ஆவார். இவர் திருக்கைலையில் ஈசனது அடியவராக ஆலால சுந்தரராக இருந்து, இரண்டு பெண்கள் மீது ஆசை கொண்டதால் மானுடப்பிறவி எடுக்கும்படி ஆயிற்று. எனவே திருக்கைலையில் இருந்தவருக்கு விநாயகரின் அறிமுகம் இருந்திருக்கும் அல்லவா! ஆகையால் தான் சுந்தரர் மானுடப்பிறவி எடுத்தபோது, அவருக்கு பல சந்தர்ப்பங்களில் விநாயகப் பெருமான் உதவியுள்ளார்.அச்சம் தீர்த்த விநாயகர் - திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்..திருமாகாளம் என்ற ஊரில் சோமாசி மாறன் எனும் நாயனார் ஈசனை நோக்கி சோம யாகம் வளர்த்து அந்த யாகத்தின் பலனை (அவிர் பாகம்) ஈசன் சிவபெருமானே நேரில் வந்து வாங்கிக்கொள்ள விரும்பினார். ஆகவே ஈசனின் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டார். தனது எண்ணத்தை சுந்தரரிடம் கூற, அவரும் ஈசனிடம் சொல்லி அவரை யாகத்திற்கு வரச் சொல்கிறேன் என்று வாக்களித்தார். சுந்தரர் ஈசனிடம் இதைப் பற்றிக் கூற ஈசனும் யாகத்திற்கு வரச்சம்மதித்தார். ஆனால் யாகத்தின் போது ஈசன் தன் குடும்பத்துடன் மாற்று வேடத்தில் வந்தார். அவர் ஒரு வெட்டியான் போல, இறந்த கன்றுக்குட்டி ஒன்றைத் தன் தோளில் போட்டுக்கொண்டு மிகச் சத்தமாக பறை அடித்துக் கொண்டு வந்தார். அன்னை பார்வதி கள் இருக்கும் பானையை சுமந்தபடி வந்தார். விநாயகரும் முருகரும் சிறு பிள்ளைகள் போல பறை அடித்துக் கொண்டே வந்தனர். யாகத்திற்கு சிவபெருமானை காண வந்த அனைவரும் இவர்கள் தோற்றத்தைப் பார்த்து பயந்து ஓடிவிட்டனர்.சோமாசி மாற நாயனார் சுந்தரரிடம், “என்ன இது! ஈசன் வரும் நேரத்தில் இப்படி பறை அடிக்கும் நபர்கள் வந்து தொந்தரவு செய்கிறார்கள்?’’ எனக் கேட்க, சுந்தரருக்கோ ஒன்றும் புரியவில்லை. யாகத்திற்கு ஈசனை வரச் சொல்லியிருந்தால் இங்கு யார் யாரோ வருகிறார்களே, சிவன் வரும் வரை யாகம் நல்லபடியாக நடக்குமா என்று பெரிதும் அச்சம் கொண்டார். அச்சம் தீர்ப்பவர் அல்லவா நம் விநாயகப்பெருமான்! அதுவும் சுந்தரமூர்த்தி நாயனாரை கைலையிலேயே நன்குத் தெரியும் ஆனைமுகனுக்கு. அவருக்கு உதவாமல் இருப்பாரா யானை முக இறைவன். மனித உருவிலிருந்து மாறி தன் சுய ரூபத்தில் சுந்தரருக்குக் காட்சி தந்தார். சுந்தரர் அவரை வணங்கினார். அங்கு வந்திருப்பது சிவனே என்று சுந்தரருக்கு எடுத்துக்காட்டினார் விநாயகர். கலக்கம் நீங்கிய சுந்தரர் விநாயகருக்கு நன்றி தெரிவித்து ஈசனை வணங்கினார். இப்படி சுந்தரரின் அச்சத்தைப் போக்கிய விநாயகர் இவர் ஆதலால் அச்சம் தீர்த்த விநாயகர் என்று இவர் அழைக்கப்பட்டார்..கை காட்டி விநாயகர் - திருநாட்டியத்தான்குடி, திருவாரூர் மாவட்டம்:சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரிலிருந்து திருநாட்டியத்தான்குடி எனும் ஊருக்குச் சென்றார். அங்கிருக்கும் ரத்னகிரீசுவரர் ஆலயத்திற்குச் சென்ற சுந்தரர் அங்கு இறைவனும் இறைவியும் இல்லாததால் மிகவும் அதிர்ச்சியுற்றார். பின்பு அங்கிருந்த விநாயகப்பெருமானிடம் சென்ற சுந்தரர், ’’இறைவர் இருவரும் எங்கே?’’ என வினவினார். அதற்கு விநாயகப்பெருமான், ’’தேவரும் தேவியும் நாற்று நடும் திருவிளையாடலுக்குச் சென்றுள்ளனர்’’ என்று பதில் உரைத்தார். இறைவனைக் காணாமல் தவித்த சுந்தரருக்கு இறைவன் இருக்கும் இடத்தைக் காட்டிய விநாயகர் இவர் ஆதலால் இவரைக் கை காட்டி விநாயகர் என்று அழைப்பர்..மாற்றுரைத்த விநாயகர் - விருத்தாசலம் மற்றும் திருவாரூர்:திருமுதுகுன்றம் என்று அழைக்கப்பட்ட விருத்தாசல தலத்து இறைவனை வணங்கி பன்னிரண்டாயிரம் பொன் பெற்றார் சுந்தரர். ஆனால் இந்த பொற்குவியலை எப்படி திருவாரூர்க்கு எடுத்துச் செல்வது என யோசித்த சுந்தரர் இறைவனிடம் வேண்ட, அவர் அருகிலிருக்கும் மணிமுத்தாறு ஆற்றில் விட்டு திருவாரூர் கோவில் தாமரைக் குளத்தில் கண்டெடுக்குமாறு கூறினார். அதன்படி சுந்தரர் அந்தப் பொற்குவியலில் சிறிது மச்சம் (பொன் துண்டு) வெட்டி வைத்துக்கொண்டு, அதனை உரைத்துப் பார்த்து விட்டு மீதியுள்ள பத்தரை மாற்றுத் தங்கத்திற்குச் சாட்சியாக முதுகுன்றத்தில் அருளும் விநாயகரிடம் காட்டினார். அவரும் பொன்னின் பத்தரை மாற்றை உறுதி செய்தார். அதனால், 'மாற்றுரைத்த பிள்ளையார்’எனப் பெயர் பெற்றார் (கோவிலின் அறுபத்துமூவர் பிராகாரத்தில் இவரைத் தரிசிக்கலாம்).பிறகு, பொற்குவியலை மணிமுத்தா நதியில் இட்ட சுந்தரர், அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களைத் தரிசித்து, திருவாரூரை அடைந்தார். அங்கு கோவிலின் கமலாலயக் குளத்தில் பதிகம் பாடி பொற்குவியலைக் கண்டெடுத்தார். அதை எடுத்து வந்து, முன்பு தான் மச்சம் வெட்டி எடுத்து வைத்திருந்த மாதிரியுடன், குளக்கரையில் இருந்த விநாயகர் சந்நதியை நாடினார். பொற்குவியல் மாற்றுக் குறைவாக இருப்பதை விநாயகர் சுட்டிக் காட்ட, மீண்டும் சிவபிரானை துதித்தார் சுந்தரர். இறைவனார் மாற்றுக்குறையாத பொற்குவியலை அளித்தார்..கமலாலயக் குளத்தின் வடகிழக்கு மூலையில் அருளும் விநாயகரின் உதவியால், சுந்தரர் பொன் உரைத்துப் பார்த்ததால், அந்த விநாயகரும் மாற்றுரைத்த விநாயகர் எனப் பெயர் பெற்றார். இவரது சிறு கோவிலின் மேற்புறத்தில், சுந்தரர் குளத்தில் பொன்னைத் தேடுவதும், விநாயகர் முன்பு மாற்று உரைத்துப் பார்ப்பதுமான காட்சிகள் சுதை வடிவில் உள்ளன. பாருங்கள், எப்படிச் செலவே இல்லாமல் பொன்னை மாற்று உரைத்துப் பார்க்க சுந்தரருக்கு உதவியுள்ளார் நம் விநாயகப் பெருமான்!.ஓலமிட்ட விநாயகர் - திருவையாறு:ஓலம் என்றால் உதவி வேண்டி குறிப்பிடும் ஒலியாகும். சுந்தரர் தமது தோழர் சேரமான் பெருமாள் நாயனாருடன் காவிரியின் தென்கரையில் உள்ள திருக்கண்டியூரை அடைந்தார். எதிரே திருவையாறு தோன்றிற்று. காவிரியாற்றிலோ வெள்ளம் கரை புரண்டோடிற்று. ஆற்றைக் கடந்து ஐயாறு சென்று தொழ நினைந்த சுந்தரர் உதவி வேண்டி 'ஓலம்', 'ஓலம்' என்று கத்தினார். தனக்குப் பிடித்தவரான சுந்தரருக்கு உதவி செய்யும் வகையில் திருவையாறு விநாயகரும் சேர்ந்து கொண்டு, 'ஓலம்', 'ஓலம்' என்று கத்தினார். தன் பிள்ளையும், தோழனும் உதவி கேட்க செவி சாய்க்காமலா இருப்பார் ஈசன்! சுந்தரருக்கு அருளினார். காவிரி வெள்ளம் இருபுறம் ஒதுங்கி வழிவிட்டது. கோவிலுக்குச் சென்று விநாயகருக்கு நன்றி தெரிவித்தார் சுந்தரர். அவரே ஓலமிட்ட விநாயகர் ஆவார்.கூப்பிடு விநாயகர் - திருமுருகன்பூண்டி, திருப்பூர் மாவட்டம்:ஐயாரப்பரை வணங்கிய பின் சுந்தரரும், சேரமான் நாயனாரும் சேர நாடு சென்றனர். அங்கு சில காலம் தங்கிய பின் சுந்தரருக்கு திருவாரூர் ஞாபகம் வர, சேரமானிடம் விடைபெற்று தன் ஊருக்குக் கிளம்பினார். சேரமானும் தன் நண்பருக்கு நிறைய செல்வங்களைக் கொடுத்து அனுப்பினார். சுந்தரரும் அடியவர்களும் செல்வங்களை எடுத்துக் கொண்டு திருமுருகன்பூண்டி தலத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது, சில வேடுவர்கள் வழியில் வந்து செல்வங்களைப் பறித்துக்கொண்டு மறைந்து விட்டனர். இது என்ன சோதனை என மிகவும் சோகமடைந்தார் சுந்தரர். வருந்திக்கொண்டிருந்த சுந்தரரின் துயரம் தாங்க மாட்டாமல் அங்கிருந்த விநாயகர் அவரை அழைத்து, ’’இப்படி வேடுவர்களாக வந்தவர் சிவ பூத கணங்களே. ஈசன் சொல்லித்தான் உங்களது செல்வங்கள் களவாடப்பட்டன’’ என்று உண்மையை உரைத்தார். அருகிலிருக்கும் திருமுருகன்பூண்டி தலத்து இறைவனை வணங்கி செல்வங்களை மீட்டெடுக்க சுந்தரருக்கு அறிவுறுத்தினார் விநாயகப்பெருமான். சுந்தரரும் அதன்படி திருமுருகன்பூண்டி சென்று ஈசனை வணங்கி இழந்த செல்வங்களைப் பெற்றார். இப்படி இக்கட்டான சூழ்நிலைகளில் தவிப்பவர்களுக்கு கூப்பிட்டு உதவி செய்யும் விநாயகர் கூப்பிடு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்..பெரியானை விநாயகர் - திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.சுந்தரரும், சேரமான் நாயனாரும் முறையே யானையிலும், குதிரையிலும் கைலாயம் சென்றனர். அப்போது கைலாயம் செல்லும் வழியில் பூமியில் ஒளவையார் விநாயகரை பல நறுமண மலர்களால் போற்றித் துதித்து வழிபட்டு வந்ததைக் கவனித்தனர். ’’எங்களுடன் நீங்களும் வருகிறீர்களா, பாட்டி?’’ என இருவரும் அழைக்க, ஒளவையாரும் தான் கணபதி பூஜையை முடித்துவிட்டு வருகிறேன் என்று பதில் அளித்தார். அவர்கள் சென்ற பின் விநாயகர் அவர் முன் தோன்றி, "உங்களுக்கும் கைலாயம் செல்ல வேண்டுமா?" என்று கேட்க ஒளவையார், "நீ இருக்கும் இடமே எனக்கு கைலாயம் தான். ஆனால் நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயம் சென்று சேர்த்து விடு!" எனக் கூறினார். அதன் பின் விநாயகர் தனக்கு ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்க, "சீத களப செந்தாமரை" எனத் தொடங்கும் விநாயகர் அகவலை அருளிச் செய்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த விநாயகர் பெரிய உருவம் எடுத்தார். தனது பெரிய நீண்டிருந்த துதிக்கையில் ஒளவையாரை ஏந்தி கைலாய வாயிலில் கொண்டு சேர்த்தார். அவருக்குப் பின் வெள்ளை யானையில் சுந்தரரும், குதிரையில் சேரமான் பெருமாள் நாயனாரும் வந்தனர்..தங்களுக்கு முன்னால் ஒளவை வந்து சேர்ந்தது குறித்து இருவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதுபற்றி ஒளவையிடமே கேட்க,“மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்ப்பதத்தைமுதிர நினைய வல்லார்க்கரிதோ! முகில் போல் முழங்கிஅதிர நடந்திடும் யானையுந் தேருமதன் பின்வருங்குதிரையுங் காதங் கிழவியுங் காதங் குலமன்னரே” என்றார் ஒளவை.அதாவது, “கணபதியின் பூஜை கைமேல் பலன் தரும். விநாயகர் திருப்பாதத்தை நினைப்பவருக்கு யானை, குதிரை, தேர் எல்லாம் காத தூரம் பின்னால்தான் வரும். எனவே தான் நான் உங்களுக்கு முன்னால் கயிலையை அடைந்தேன்”என்பது இதன் பொருள். ஒளவையாரை கைலாயத்தில் சேர்ப்பதற்காக பெரிய உருவெடுத்ததால் இந்தத் தல விநாயகருக்கு “பெரியானை கணபதி” என்ற பெயர் ஏற்பட்டது..இப்படி விநாயகர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பல சந்தர்ப்பங்களில் உதவியிருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சுந்தரமூர்த்தி நாயனார் ஈசன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர். அவர் ஈசனையே முதன்மைக் கடவுளாகக் கொண்டு வணங்கியவர். அப்படி இருக்கும் பொழுது விநாயகப்பெருமான் அவர் அழைக்காமலே, வேண்டாமலே அவருக்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்தார். அவ்வளவு அன்பும் கருணையும் கொண்டவர் நம் விநாயகப்பெருமான். வேண்டாமலே இவ்வளவு அருள் புரிபவர், தன்னை சிறப்பாக வழிபட்டு பக்தி கொண்டவருக்கு எவ்வளவு அருள் புரிவார். அதற்கு விநாயகர் அகவல் அருளிய ஒளவையார் நல்ல உதாரணம் ஆவார். தன்னை துதித்து வழிபட்டு பக்தி கொண்டவருக்கு சகல சௌபாக்கியமும் அருள்வார் விநாயகர். வரும் விநாயகர் சதுர்த்தி மட்டும் அல்லாமல், எல்லா நாட்களிலுமே விநாயகப் பெருமானை வழிபட்டு அவர் அருள் பெறுவோமாக!