Bakthi Magazine
கிராம தெய்வங்கள்: கிராம தேவதை வழிபாடு!
சில ஊர்களில், பக்திமானாக விளங்கி சித்தியடைந்தவர், இளம்வயதில் இறைவனடி சேர்ந்த தெய்வாம்சம் பொருந்திய பெண் ஆகியோரது ஆவி உடனிருந்து ஊரைக் காக்கும் என நம்பினர். இதனால்தான் கிராம மக்கள் சுடுமண்ணாலான ஆண், பெண் தெய்வங்கள் மற்றும் மிருகங்களின் உருவச் சிலைகளை ஊரின் எல்லையில் நிர்மாணித்தனர். அவற்றில் நல்ல ஆவிகள் குடியிருந்து ஊரை அழிவிலிருந்து காக்கும் எனவும் நம்பினர்.