Bakthi Magazine
விலங்கல்பட்டு: தந்தையை நெற்றியில் தாங்கிய தனயன்!
இங்குள்ள முருகன் உருவத்தில் சிறியவராக இருந்தாலும் கீர்த்தியில் பெரியவராம். இவரை நாடி வந்த பலரும் வாழ்வில் ஏற்றம் பெற்றுள்ளார்கள். மூலவர் முருகப்பெருமானது நெற்றியில் சிவலிங்கம் காணப்படுவது அபூர்வமான அமைப்பாகும். இந்த முருகனுக்கு பாலபிஷேகம் செய்துவழிபட்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில்நடக்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆறு கிருத்திகை அல்லது ஆறு சஷ்டி நாட்களில் இந்த முருகனை வழிபாடு செய்தால், பக்தர்களின் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சொத்துகளில் உள்ள வில்லங்கம் சரியாகிவிடும் என்கிறார்கள்.