பதினாறுவகைச் செல்வத்துக்கும் அதிபதியாக விளங்குபவள் ஸ்ரீ லக்ஷ்மிதேவி. அவளது அருள் வேண்டி செய்யும் ஒரு நோன்புதான் வரலக்ஷ்மி விரதம்.சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் நிலைக்கவும், குடும்பத்தில் சுபிட்சம் பெருகவும், கன்னிப் பெண்கள் மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையவும் முறையாக மகாலக்ஷ்மியை வேண்டி விரதமிருந்து வீட்டிற்கு அழைத்து வழிபடும் இந்த பூஜையை எந்தவித மொழி, இனப்பாகுபாடின்றி மகாலக்ஷ்மியின் அருளைப்பெற விரும்புவோர் அனைவரும் மேற்கொள்ளலாம்.வரலக்ஷ்மி பூஜைக்கு தேவையானவை: சின்ன வாழைக்கன்று, இரண்டு மாவிலைத் தோரணம், அம்மனின் பின்னல் அலங்காரத்தை ரசிக்க முகம் பார்க்கும் கண்ணாடி, அம்மன் அலங்காரத்திற்கு மாலைகள், பூச்சரம், அம்மனை வைக்க சொம்பு, இரண்டு பக்கமும் வைக்க காதோலை, இரண்டு கருகமணி வளையல், மாவிலைக்கொத்து, அம்மன் முகம் வைக்க தேங்காய், தாழம்பூ ஜடை அலங்காரம், அரிசியைப் பரப்பி அம்மனை வைக்க சிறிய வாழை இலை, அம்மனுக்குச் சாத்த புதிய ரவிக்கைத் துண்டு.வரலக்ஷ்மி விரத பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு வெற்றிலையில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு குங்குமம் இட்டு, அருகம்புல் வைத்து அவரை வழிபட வேண்டும்.இந்த பூஜையை விரிவாகச் செய்ய இயலாவிட்டால், இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு, மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அவளை அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்..வரலக்ஷ்மி விரத பூஜை முறை:வீட்டின் கிழக்கு திசையில், ஈசான்ய மூலைப்பகுதியில் பூஜைக்கான இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தை நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ், நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கும்பத்தை வைக்கவேண்டும். அரிசியை கும்பத்தில் நிறைத்து, மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரிக்கவும்.புதிய வஸ்திரம் சாற்றி, மகாலக்ஷ்மியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து பிறகு வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்க வேண்டும்.விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்று காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அதற்கு முந்தைய நாள் மாலை வேளையில் ஆரத்தி எடுத்து வரலக்ஷ்மியை இல்லத்திற்குள் வரவேற்பது ஒருமரபு. அன்று மாலை ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலக்ஷ்மி தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வர வேண்டும்."லக்ஷ்மி ராவே மா இண்டிகி" என்ற தெலுங்குப் பாடல் கூட இப்படி லக்ஷ்மியை வரவேற்பதற்காக வரலக்ஷ்மி விரதத்தன்று பாடப்படுகிறது. கன்னட மொழியிலும் பாக்யாத லக்ஷ்மி பாரம்மா! நம்மம்மா நீ சௌபாக்கியாத லக்ஷ்மி பாரம்மா! என்று கூறி மகாலக்ஷ்மியை அவர்கள் இல்லத்திற்கு வரவேற்கிறார்கள்.வரலக்ஷ்மி விரதத்தன்று சொல்லக்கூடிய ஸ்லோகங்கள்:’’பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்கல்ய விவர்த்தினிபாக்யம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகா மாம்ச்ச தேஹிமேவரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணுவக்ஷஸ்தலஸ்த்திதேவரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்சதேஹிமே’’என்றும்"ஓம் சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேதிரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே"என்றும் கூறி மகாலக்ஷ்மியை நமஸ்கரிக்கவும். மேலும் தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை எடுத்து அனைவருக்கும் விநியோகிக்கவும். அடுத்தநாள் வரலக்ஷ்மி விரதத்தின் நிறைவாக புனர்பூஜை செய்யப்படுகிறது.மூன்றாவது நாள் அன்று, வரலக்ஷ்மி பூஜை நிறைவடைந்ததும் வரலக்ஷ்மி அம்மனின் முகபிம்பத்தை பத்திரமாக எடுத்து அடுத்த ஆண்டு பூஜைக்காக உள்ளே வைக்கப்படுகிறது.வரலக்ஷ்மி பூஜை முடிந்ததும் கலசத்தின் உச்சியில் உள்ள தேங்காயை உடைத்து அதில் உள்ள தண்ணீரை துளசி போன்ற செடிகளுக்கோ அல்லது பூச்செடிகளுக்கோ விடவேண்டும். மக்கும் குப்பைகளான பூக்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் பல பொருட்களை கிணற்றிலோ அல்லது அருகில் உள்ள புதிய நீரிலோ விட்டு விடலாம் .வரலக்ஷ்மி விரத பலன்கள்:இவ்விரதத்தின் மூலம் குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் உள்ள சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.இந்த நன்னாளில் அம்மன் கோவில்களுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.மகாலக்ஷ்மியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். இந்நன்னாளில் அபிராமிபட்டர் அருளிய சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜ தனயை எனத் தொடங்கும் அபிராமி பதிகமும் படிக்கலாம் .வரலக்ஷ்மி விரத பிரசாதங்கள்:இட்லி, அப்பம், உளுந்துவடை, கொழுக்கட்டை, வெல்லப்பாயசம், கொத்துக்கடலை சுண்டல், சாயந்திர நைவேத்தியத்திற்கு பால்பாயசம், பழவகைகள். இவற்றுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், துளசி போன்றவற்றைச் சேர்த்து வரலக்ஷ்மி விரதத்தை இல்லத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர்.பதினாறு வகை செல்வங்களையும் நமக்கு மகாலக்ஷ்மி பரிபூரணமாக அருள வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்போம் இல்லம்தோறும் திருமகளின் அருளும் ஆசியும் பொங்கட்டும்; சகல சுபிட்சங்களும் நிலைக்கட்டும்!-சாந்தி ஜகத்ரக்ஷகன்