-பொ. பாலாஜிகணேஷ்அகிலத்தை ஆட்சிபுரியும் அன்னை பராசக்திக்கு சிறியது பெரியது எனப் பல இடங்களில் ஆலயம் அமைந்துள்ளது. அவள் அங்காளம்மன் என்ற திருநாமத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வரகடை என்ற சின்னஞ்சிறு கிராமத்திலும் கோவில் கொண்டுள்ளாள்..தஞ்சைத் தரணியை குலோத்துங்கச் சோழன் ஆண்டகாலம் ஒரு பொற்காலம் எனலாம். ஆனால் பின்னாளில் அவனது மகன் சயத்துவசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பசியிலும் பட்டினியிலும் பாதிக்கப்பட்டார்கள்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். காசிக்குச் சென்ற மன்னன், நாட்டில் பஞ்சம் விலக அன்னபூரணியை பிரார்த்தனை செய்தார். அப்பொழுது, ‘’நான்தான் உன் குலதெய்வம். தஞ்சை வளநாட்டில் வரகடைக்குச் செல். அங்குள்ள வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வடகிழக்கே ஓரிடத்தில் மணியோசை கேட்கும். அந்த இடத்தில் உள்ள பாம்புப் புற்றில் நான் இருப்பேன். அங்கே ஓர் ஆலயம் எழுப்பு. என்னை வழிபடுவோருக்கு அனைத்து நற்பலன்களையும் அருள்வேன்’’ என அசரீரி வாக்கு ஒலித்தது..ஊர்வந்து சேர்ந்த மன்னன் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றார். அங்கே புற்றின் அருகில் அம்மன் சுயம்பு வடிவில் இருப்பதைக் கண்டுமகிழ்ந்தார். பஞ்சம் நிலவும் சமயத்தில் கோவில் கட்டமுடியாததால், அருகில் ஓட்டுக் கட்டடத்தில் குடியிருந்தவரை அணுகினார். அவர் தம் வீட்டை மனமுவந்து கொடுக்க, அங்கேயே அங்காளம்மன் என்ற திருநாமத்தில் சுயம்பு அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பிற்காலத்தில் அங்கு நூதன ஆலயம் உருவானது. கோவிலுக்கு இடம் கொடுத்த அந்த பக்தரின் பரம்பரையினரே இன்றும் அந்தக் கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.கோவிலுக்கு முன்னால் உள்ள தோரணவாயிலில் அங்காளம்மன், படையாண்டவர், விநாயகர் மூவரும் காட்சிதர, அவர்களை வணங்கிவிட்டு ஆலயத்திற்குள் நுழைந்தால் முதலில் நாம் தரிசிப்பது மகா மண்டபம். அதில் நந்தி, பலிபீடம், இருளப்பசாமியும், சுவர்களில் சுதைச்சிற்பங்களாய் அஷ்டலட்சுமிகளும் காட்சிதருகிறார்கள். அர்த்தமண்டபத்தில் சன்னதிகள் எதுவும் இல்லை..கருவறையில் செவ்வகப் பீடத்தில் அமர்ந்த நிலையில் சாந்த சொரூபமாக நான்கு திருக்கரங்களோடு அங்காளம்மன் அற்புத தரிசனம் தருகிறாள். பிராகாரத்தில் விநாயகர், வீரபத்திரர், பாவாடைராயன், பேச்சியம்மன், காட்டேரியும்; காவலர்கள், பழமையான வேப்பமரமும் உள்ளது.அங்காளம்மன் பலருக்கு குலதெய்வம். இக்கோவிலில் தினம்தோறும் பொங்கல் வைத்துப் படைத்து பக்தர்கள் பலர் குலதெய்வ வழிபாடு செய்வதைக் காணமுடிகிறது.குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர் ஆதிவேப்பமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து, விரைவில் குழந்தைப்பேறு அமையப்பெறுகிறார்கள். பின்னர் குழந்தையுடன் வந்து அங்காளம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை இங்கே நடத்துகிறார்கள்..பல்வேறு தடையால் திருமணம் நடைபெறாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குளித்து முடித்து ஈரத்துணியுடன் மூன்று முறை கோவிலை அங்கப்பிரதட்சணமாகச் சுற்றுகிறார்கள். இதனால் திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கிறதாம். பிறகு அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து நன்றிக்காணிக்கை செலுத்துகிறார்கள்.குழந்தைகளை முதன்முதலில் பள்ளிக்கு அனுப்பும்முன் கல்வி சார்ந்த பொருட்களை அங்காளம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து குழந்தைகள் கல்வியில் முன்னேற பிரார்த்தனை செய்கிறார்கள்..சித்ரா பௌர்ணமி அன்று அங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரை பொங்கல் அம்மனுக்கு முன்னால் பரப்பி வைக்கப்படுகிறது. அப்போது பொங்கலின் மேலே இருக்கும் நெய்யில் அம்பாளின் முழு உருவமும் தெரியுமாம். இதை தரிசனம் செய்தால் குடும்பத்தில் உணவுப்பஞ்சமே ஏற்படாதாம்.மாசி மாத அமாவாசையன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் காட்சிதருவாள். அங்காளம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அன்று ஒருநாள் குடும்பத்துடன் இங்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். இதில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்களும் பெருமளவில் கலந்துகொள்வார்கள்..தற்போது திருப்பணிகள் நடைபெற்று வரும் இவ்வாலயத்தில் 10.9.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது..எங்கே இருக்கு?மயிலாடுதுறையிலிருந்து முடிகண்டநல்லூர் செல்லும் தடம் எண் 37ல் பயணித்து வரகடையை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.தரிசன நேரம்காலை 11 - மதியம் 3.