நிம்மதி!சந்தோஷம்!உற்சாகம்!.இறைவனுக்கு வணக்கம்.இதய பாரதத் தாய்க்கு வணக்கம்.இன்பத் தமிழ்ச் சோலைக்கு வணக்கம்.இனிய தமிழ் பக்தர்களுக்கு வணக்கம்.முதல் அடியை எடுத்து வைப்போம்! மாதா, பிதா, குரு, தெய்வம். இந்த வரிசையை வைத்துக்கொண்டு கடைசியில்தான் கடவுள் என யாரும் அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது. ஒரு மனிதனுக்கு, தாயானவள் தந்தையைக் காண்பிக்கிறார். அவர்கள் இருவரும் அவர்களின் வாரிசுகளுக்கு குருவை அறிமுகம் செய்கிறார்கள். அவர் கடவுளை அடையும் வழியை ஆற்றுப்படுத்துகிறார்.‘’கடவுள் நினைத்தால் எந்த மரத்திலும் எந்தக் காயையும் காய்க்க வைக்க முடியும்; எந்த விதியையும் மாற்றமுடியும்’’ என மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார்.இறைவனை அடையும் வழி சுலபம் அல்ல. அதை அறிந்தவர் தான் குரு. அறிந்தால் தான் குரு. ஒழுக்கம், ஆன்மிகம் தொடர்பான அனைத்தையும் ஒருவர் அறிந்துகொள்ள அடிப்படையாக இருப்பவர் அவர்தான். அதனால் ஒவ்வொருவருக்கும் குரு அவசியம். அவர் மூலம் கற்றுக்கொண்டது ஒருவரிடம் எப்படி வெளிப்படும்? எப்போது வெளிப்படும் என்பது அவரவர் சித்தம்.குருவுக்கும் ஆசிரியருக்கும் வேறுபாடு இருக்கிறது. வாழ்க்கைக்குக் கல்வி அவசியம். அதைப் போதிக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய ஆசிரியர் தேவை. பொருள் ஈட்டும் காலம் வரைக்கும் ஒருவருக்கு அவர்களது தேவை இருக்கிறது.ஆனால் குரு அப்படி அல்ல. நம் அக இருளை நீக்கி ஞானமாகிய ஒளியைக் காண்பிக்கக்கூடியவர் அவர். இச்சை என்பது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை அடக்குவதைவிட துறப்பது கடினம். அப்படி துறந்தவர்களைத்தான் உண்மையான குருவாக அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.அப்படிப்பட்ட பெரியோர்களை நம் சாஸ்திரம் வணங்கச்சொல்கிறது. அவர்களை வணங்குவது என்பது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அல்ல. எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அவர்களை பொருளும், புகழும் இருப்பவர்கள், அரசர்களும்கூடத்தான் சென்று வணங்குகிறார்கள். அவர்களுக்கு அரசனும் ஒன்றுதான் ஆண்டியும் ஒன்றுதான். அவர்களின் கணக்குப்படி எல்லோருமே ஜீவாத்மாக்கள்தான்.ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றும் அகன்றால்தான் இறைவனை அடைய முடியும். அது அவ்வளவு சுலபத்தில் போகாது. அதன் முதல் படி குருவை வணங்கி நம் அகந்தையை அகற்றுவதுதான். எல்லோருக்கும் அந்த பரம்பொருளால் குரு கிட்டட்டும். நாம் இறைவனை அடைய முதல் அடியை எடுத்து வைப்போம்! பக்தியுடன் ஆசிரியர்