-ஆர்.வி.பதிபழமையான ஆலயங்கள் பல பக்தர்களால் அறியப்படாமல் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் எடையூரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில்..திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த இக்கோயில் உள்ளிட்ட மேலும் சில கோயில்கள் பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை. அவர்களின் ஆட்சிக்குப் பின்னர் வந்த பிற மன்னர்கள் இக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயத்தின் முன்னால் ஒரு தீபஸ்தம்பம் காட்சி தருகிறது. இது இத்தலத்தின் பழமையை பறைசாற்றுகிறது. இவ்விளக்குத் தூணின் கீழ்ப்பகுதியின் நான்கு புறங்களிலும் கருடாழ்வார், சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர் முதலான புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்போடு திகழும் இத்திருக்கோயில் கருவறையில் மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசப்பெருமாள் என்ற திருநாமம் தாங்கி, நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி, அபய, வரத முத்திரை காட்டி கிழக்கு நோக்கி சேவை சாதித்தருளுகிறார். கேட்டதைக் கொடுக்கும் பெரும் வரப்பிரசாதி. மூலவருக்கு முன்னால் உற்சவத் திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறை விமானம் மூன்று தளங்களைக் கொண்டது. முன் மண்டபத்தில் உடையவர் மற்றும் விஷ்வக்சேனர் சிலா ரூபத்திலும், முன் மண்டபத் தூண்களில் திருமாலின் பல்வேறு வடிவங்கள் புடைப்புச் சிற்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. வெளியே பெரிய திருவடி ஒரு சிறிய சன்னதியில் அமைந்துள்ளார். .மலையடிவாரத்தில் தீபஸ்தம்பத்தின் அருகில் ஒரு சன்னதியில் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தாங்கிய கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சிதருவார். ஆனால் இங்கு தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், வீரம், திருமண பாக்கியம், புத்திரப்பேறு முதலானவை கிடைக்கும் என்கிறார்கள். தல விருட்சம் வன்னி மரம். தல தீர்த்தம் சங்கு தீர்த்தம். சமீபத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பொலிவுடன் திகழும் இக்கோயிலில் தினமும் ஒரு காலபூஜை நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளிலும்; நவராத்திரி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராமநவமி முதலான விசேஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..அருகில் அமைந்துள்ள ஒரு மலைமீது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மலர்ந்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். இச்சிறிய கோயில் கி.பி. 1252 ஆம் ஆண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. முதல் படிக்கட்டின் அருகே ஒரு கற்பாறையில் வலம்புரி விநாயகர் மற்றும் யானையின் சிற்பம் காட்சியளிக்கின்றன. இக்கோயில் கோபுரம் மூன்று மாடங்களைக் கொண்டது. மூலவர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். இங்கு மீன் சின்னம் காணப்படுகிறது. இந்த பெருமாளை தரிசிக்கக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள 585 படிக்கட்டுகளைக் கடக்க வேண்டும். பாதை மிகவும் கடினமானது. பெருமாளின் அருள் இருந்தால் மட்டுமே இவரை மலைமீது ஏறிச் சென்று தரிசனம் செய்ய இயலும்..எங்கே இருக்கு? திருக்கழுக்குன்றத்தில் இருந்து பொன்விளைந்தகளத்தூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் எடையூர் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.தரிசன நேரம்காலை 8 - 10.30. மலைத்தலம் சனிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படுகிறது.