-வெ.கணேசன்உலகத்து உயிர்களை எல்லாம் தாயன்போடு காத்துநிற்பவள் அந்த மகாசக்தி. அவள் கருவறையில் மூலவராக முத்துமாரி அம்மன் என்ற பெயரிலும்; அர்த்த மண்டபத்தில் சந்தனமாரி அம்மன், உச்சினி மாகாளி அம்மன், பத்ரகாளி அம்மன் என்ற பெயர்களிலும் எழுந்தருளியிருக்கும் அற்புதத் தலமாக விளங்குவது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருப்பணி செட்டிகுளம்..பரந்து விரிந்த ஏரிபோல் நீர் நிரம்பிக் காணப்படும் செட்டியார்குளம் என்னும் நீர்நிலை இத்தலத்தில் அமைந்துள்ளதால், அந்தக் குளத்தின் பெயரால் ஊர்ப்பெயர் அழைக்கப்பட்டு, ஒருகட்டத்தில் அது மருவி திருப்பணி செட்டிகுளம் என இன்றைக்கு அழைக்கப்படுகிறது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் திருவழுதிவளநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் மக்களின் பசிப்பிணிப் போக்க தானிய உற்பத்தியைப் பெருக்கிடும் வகையில் தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை ஊர்கள்தோறும் தேக்கி வைத்துப் பயன்படுத்த ஆங்காங்கே பல குளங்களை வெட்டி நீர் மேலாண்மையைத் திறமையாகச் செய்திருந்தனர். இத்தகைய நீர் வசதி இருந்த காரணத்தால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குட்டம் என்ற கடற்கரை கிராமத்திலிருந்து கொஞ்சம் பேர் குடிபெயர்ந்து இத்தலத்தில் வந்து தங்கினர். அவர்கள் அம்மன் வழிபாட்டுக்கு சிறிய கொட்டகை அமைத்து, அதில் மூன்று முகம் கொண்ட முத்துமாரி அம்மனை மூலவராக நிறுவினர். காலப்போக்கில் ஊரும், மக்களும் வளர்ச்சியடைய அம்மனுக்கு பிரமாண்ட கோவிலை உருவாக்க எண்ணினர். அதன்படி நாலாபுறமும் திருமதில் சூழ வடக்குப் பார்த்த வண்ணம் முத்துமாரியம்மன் கோவில் உருவானது..கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபத்துடன் எழிலான கலை அம்சத்தில் அமைந்துள்ள கோவிலில் மூலவராக மூன்று முகம் கொண்ட முத்துமாரி அம்மன் தன் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டபடி ஆறு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள். தர்மத்தைக் காக்கும் அதிதேவதையாக விளங்கும் அவளது பேரழகும், கனிவும் வாய்ந்த திருமுக தரிசனம் காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவர்ந்திழுக்கும். தன் மேல் இரு கரங்களில் கத்தி, வஜ்ராயுதம், நடு இரு கரங்களில் உடுக்கை, நாகர்; கீழ் இரு கரங்களில் திரிசூலம், குங்குமச் சிமிழ் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறாள். முத்துமாரி அம்மன் செல்வத்துக்குரிய தெய்வமாகக் கருதப்படுகிறாள். இவளை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும். சொத்து பிரச்னைகள் அகலும். வீடு, மனை, வாகனம், சொத்து சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் செல்வவளம் பெருகும்..அம்பாளின் எதிரே காலபைரவர் விக்ரகம் உள்ளது. கருவறை மூலவர் விமானம் ஏகதளமாக அமைந்துள்ளது. மேற்குச் சுற்றில் சுடலை மாடசுவாமி, சாஸ்தா, காணிக்காரன் ஆகிய சந்நதிகள் உள்ளன. இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, காணிக்காரன் சந்நதி அமைந்துள்ளது. அதாவது, உள்ளூரிலிருந்து மணவாழ்க்கை காரணமாக வெளியூருக்குச் சென்று வாழும் பெண்கள், தாங்கள் இனிய இல்லறம் நடத்தியதன் சான்றாக பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த சந்நதிக்கு வந்து பூஜை நடத்திச் செல்லும் வழக்கம் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. .கிழக்குச் சுற்றில் ஸ்ரீமன் நாராயணசாமி, பெரியசாமி சந்நதிகள் உள்ளன. நாராயணசாமி சந்நதியில் ஆத்துச்சாமியும், பெரியசாமி சந்நதியில் லாட சந்நியாசி, பிரம்மசக்தி, சிவன்சக்தி, கட்டை ஏறி பெருமாள், பெருமாள் ஆகியோரும் பரிவார தேவதைகளாக உள்ளனர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் கோவிலுக்குச் செல்லும் வழியில் பிரமாண்டமான தோரணவாயில் கட்டப்பட்டது. வெளிச்சுற்றில் தாமிரபரணி கால்வாய்க் கரையில் செல்வ விநாயகர் சந்நதி உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாயன்று அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் மற்றும் 108 திருவிளக்கு வழிபாடு, மாதாந்திர பௌர்ணமி தோறும் சிறப்பு அலங்காரம், அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். அந்நாட்களில் நாள்முழுவதும் கோவில் திறந்திருக்கும். சித்திரை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் கொடை விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதுசமயம் வில்லுப்பாட்டு, திருவிளக்கு பூஜை, ஆத்துச்சாமி படையல், பிடிசாதம் என ஒவ்வொரு நாளும் அதிவிமரிசையாக நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்..ஆடிக்கடைசி வெள்ளியன்று கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி இரண்டாம் செவ்வாயன்று முத்துமாரி அம்மனுக்கு கொடை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும். அதுசமயம், ஊர் அழைப்பு, வில்லுப்பாட்டு, சங்குமுகத் தீர்த்தக் கட்டத்தில் அபிஷேக நீர் எடுத்து வருதல், முளைப்பாரி, கும்மி ஊர்வலம், இறுதி நாளன்று கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கார்த்திகை மாதம் முழுவதும் கோவில் நடை காலை, மாலை திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை பஜனை பாடல் நிகழ்ச்சியுடன் திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். திருக்கார்த்திகை, சரஸ்வதி பூஜை நடைபெறும். தை மாதப் பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம், மகாசிவராத்திரி ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு வரும் 28.8.2023, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. எங்கே இருக்கு?தூத்துக்குடியிலிருந்து சாயர்புரம் மார்க்கமாக ஏரல் செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பணி செட்டிகுளம் அமைந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து 28 கி.மீ. பேருந்து நிறுத்தத்திலேயே கோவில் உள்ளது. தரிசன நேரம்செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 – இரவு 8. மற்ற நாட்களில் வந்தாலும், அங்குள்ள எண்ணில் தொடர்பு கொண்டால், பூசாரி வந்து தரிசனம் செய்துவைப்பார்