-நடுநாடன்கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரம். இந்தப் பெயரைக்கேட்டதும் பலருக்கு ஶ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவிலே சட்டென்று நினைவுக்கு வரும். இதன் அருகே ஸ்ரீவராகம் என்ற பிரமாண்டமான வராகர் கோவில் உள்ளதை வெகு சிலரே அறிந்திருப்பார்கள்..மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மூன்றாவதாகப் போற்றப்படுவது வராக அவதாரமாகும். இந்தியாவில் 23 வராகர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் திருவனந்தபுரம் ஶ்ரீவராகம், பாலக்காடு - பன்னியூர் வராகர், தொடுப்புழா − இடுக்கி சாலையில் பன்னூர் வராகர் என மூன்று பழங்கோயில்கள் மூன்று கேரள மாநிலத்தில் மட்டும் இருக்கின்றன. வராகர் அவதாரம் குறித்துப் பார்த்துவிட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் ஶ்ரீவராகம் கோவிலை வலம் வருவோம். புராண வரலாறு: இரண்யாட்சன் என்ற அசுரன் தன் தவ வலிமையால் பல்வேறு வரங்களை பிரம்மனிடம் பெற்றுக்கொண்டான். அதன் பின் ஆணவத்தால் அதர்மங்களை பூமியில் அரங்கேற்றினான். இதைக் கண்டு வெகுண்ட பூமாதேவி வெள்ளத்தால் பூமியை மூழ்கடித்தாள். இதனால் கோபங்கொண்ட அசுரன், பூமியைப் பாய்போல் சுருட்டி, கடலுக்கடியில் பதுக்கி வைத்துவிட்டான். பூவுலகம் கடலில் மூழ்கி இருந்ததால், உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், பிரம்மாவால் தமது படைப்புத் தொழிலை மேற்கொள்ள முடியவில்லை..இதனால் பிரம்மா, ரிஷிகள் முதலானோர் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். உடனே வராக அவதாரம் எனும் பன்றி வடிவெடுத்த மகாவிஷ்ணு, தமது தெற்றுப் பற்களால் கடலில் மூழ்கியிருந்த பூமியை வெளியில் கொண்டுவர முயன்றார். அப்போது அதைத் தடுத்த இரண்யாட்சனை வதம் செய்து பூமியை வெளிக்கொண்டு வந்து நிலை நிறுத்தினார் மகாவிஷ்ணு. அசுரனுடன் சண்டையிட்டதால் வராகர் ஆவேசமாகக் காணப்பட்டார். அப்போது அங்கு வந்த லக்ஷ்மி அவரது மடியில் அமர, வராகரின் உக்கிரம் தணிந்தது. அதன் பின்னர் அவர் லக்ஷ்மி வராகர் என்ற திருநாமத்தால் அழைக்கப்பட்டு கோவில்களில் எழுந்தருளியுள்ளார்..ஆலய அமைப்பு:கேரள கட்டட பாணியில் அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு கிழக்கு, வடக்கு, மேற்கு என மூன்று வாயில்கள் உள்ளன. வெளிச்சுற்று நாலம்பலம் சதுரமாகவும், கருவறை வட்ட வடிவிலும் அமைந்துள்ளன. கருவறை மேற்கூரை செம்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளன. உச்சியில் தங்கக்கொடி அணிசெய்கின்றது. கருவறையைச் சுற்றிலும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் தீபஒளியால் ஆலயம் பிரகாசிக்கும். மேற்கு நோக்கிய கருவறை கொடிமரத்தையும், திருக்குளத்தையும், மறுகரையில் உள்ள விநாயகரையும் பார்த்தபடி அமைந்துள்ளது. கருவறையின் முகப்பில் துவாரபாலகர்கள் காவல்புரிகின்றனர். கருவறைக்குள் ஒளிவீசும் தேகத்தோடு வராகர் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க, அவர் மடியில் லக்ஷ்மி கம்பீரமாக அமர்ந்து அருளாசி வழங்குகின்றார். வராகர் தமது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கிக் காட்சி தருகின்றார். ஶ்ரீவேலி பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். ஆலயச் சுற்றில் விநாயகர், கிருஷ்ணன், நாகராஜா, யஷியம்மா, ரக்ஷா முதலான சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. பிரமாண்ட திருக்குளம்:நடுவில் அழகிய நீராழி மண்டபத்துடன் கோவில் எதிரில் பிரமாண்டமான வராகத் தீர்த்தம் காணப்படுகிறது. எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இது அனந்தபத்மநாபசுவாமி திருக்குளத்தைவிட அளவில் பெரியதாகும். கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரன்முளா திருக்கோவில் குளத்தை அடுத்த இரண்டாவது பெரிய திருக்குளமாக இது விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இக்குளத்தின் எதிர் கரையில் பழமையான விநாயகர் திருக்கோவிலும், பக்கவாட்டில் சிறுசிறு ஆலயங்களும் அமைந்துள்ளன. இக்குளத்தை அர்ஜுனன் உருவாக்கியதாக தலவரலாறு கூறுகிறது. இது மகிமைமிக்க 108 தீர்த்தங்களுள் ஒன்றாகவும் போற்றப்படுகின்றது. பிரார்த்தனை:வராகர் பூமியை மீட்டவர் என்பதால் வீடு, மனை அருள்பவராகவும்; அவை தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பவராகவும் விளங்குகின்றார். அதுபோல லக்ஷ்மி வராகரை வழிபட்டால் கல்வியில் உயர்ந்த நிலையை அடையலாம். விரும்பிய வேலை கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அர்ச்சனை, லட்சார்ச்சனை செய்தும்; திரிமதுரம், பால் பாயசம் படைத்தும்; துலாபாரம் உள்ளிட்ட காணிக்கைகளையும் செலுத்துகின்றனர். விழாக்கள்:இக்கோயிலில் வைணவ சம்பிரதாய விழாக்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவம் மலையாள மீன மாதத்தில் எட்டு நாட்கள் வெகுவிமர்சையாக நடத்தப்படுகிறது. வராகர் ஜெயந்தியன்று லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வியாழக்கிழமை இவரை வழிபட உகந்த நாளாகக் கூறப்படுகின்றது. எங்கே இருக்கு? கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஶ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவிலின் பின்புறம் மேற்கு கோட்டை சுவரையொட்டி ஶ்ரீவராகம் என்ற இடத்தில் லக்ஷ்மி வராகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தரிசன நேரம்காலை 5 - 11.30; மாலை 5 - இரவு 8.