-நடுநாடன்மலைநாட்டு திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குவது கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள திருவல்லா மகாவிஷ்ணு ஆலயம். அதே வழிபாட்டு முறையில் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் ஒரு கோயில் உருவானது. அதுதான் மலையின்கீழ் கிருஷ்ணசுவாமி திருக்கோயில்..திருவல்லா மூலவர் ஸ்ரீவல்லாழப்பன் என்றும், திருவனந்தபுரம் மலையின்கீழ் கிருஷ்ணசுவாமி கோயில் மூலவர் திருவல்லாழப்பன் என்றும் அழைக்கப்படுவது, இரண்டு கோயில்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது.திருவல்லாவில் மகாவிஷ்ணு பிரதிஷ்டை நடந்த நேரத்தில் மலையின்கீழ் தலத்தில் வில்வமங்கலம் சுவாமிகளால் மகாவிஷ்ணு பிரதிஷ்டை நடைபெற்றதாக இக்கோயில் தலவரலாறு தெரிவிக்கிறது..இங்குள்ள மூலமூர்த்தி மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரை அக்காலகட்டத்தைச் சேர்ந்த சாத்யகி பூஜை செய்ததாகவும் கூறப்படுகின்றது. பல்லாண்டுகளுக்குப் பிறகு தம்மை வெளிப்படுத்த விரும்பிய மூலவர் மகாவிஷ்ணு, தாம் கரமனை ஆற்றின் அடிப்பகுதியில் வாசம் செய்வதாக வில்வமங்கலம் சுவாமிகளின் கனவில் தோன்றி தெரிவித்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள், மறுநாள் ஆற்றுக்குச் சென்று அச்சிலையை வெளியே எடுத்து இக்கோயிலில் நிறுவியதாக தலவரலாறு கூறுகிறது.தற்போது, கோயில் இருக்கும் இடத்தில் பழங்காலத்தில் ஒரு சாமியாரின் ஆசிரமம் இருந்ததாகவும்; வில்வமங்கலம் சுவாமிகள், திருவல்லாவில் பூஜை செய்த ஐம்பொன் சிலையை ஒரு காலகட்டத்தில் அந்த ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வழிபட்டு வந்ததாகவும்; அவருக்குப் பிறகு இங்கு கோயில் கட்டப்பட்டு அதில் மகாவிஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக, இக்கோயில் குறித்து இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது..இக்கோயிலின் தனித்தன்மையாக பெண்கள் இங்கு கருவறைக்கு வெளியே நின்று தான் வழிபட வேண்டும்.கிழக்கு முகமாய் இரண்டு நிலை விமானத்தைக் கொண்டுள்ள ஆலயம். இடதுபுறம் பிரமாண்ட தீர்த்தக்குளமும், அதன் கரையில் யானை கொட்டகையில் அழகிய யானையும் உள்ளது. நுழைவு வாயில் எதிரில் மர உச்சியில் கிருஷ்ணரின் சயனக்கோல சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு நான்கு வாயில்கள் இருந்தாலும் கிழக்கு வாயிலே பிரதானமாக அமைந்துள்ளது.சில படிகள் ஏறிய பின்பே ஆலயத்திற்குச் செல்லமுடியும்.ஏறும் இடத்தில் வலதுபுறம் ஆண் சிலையும், இடதுபுறம் பெண் சிலையும் காணப்படுகின்றது. இதேபோன்ற சிலைகள் ஆலயத்தின் ஒவ்வொரு சன்னதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் இவ்வாலயத்தை எழுப்பியவர்களாக இருக்கலாம்.படியேறி உள்ளே நுழைந்ததும் கொடிமரம் நம்மை வரவேற்கின்றது. அதையடுத்து நாலம்பலத்தில் நுழையவடக்கு வாயிலையே பயன்படுத்த வேண்டும்..ஶ்ரீகோயில் எனப்படும் சதுர வடிவ கருவறையில் மூலவர் மகாவிஷ்ணு பஞ்சலோக மூர்த்தியாக கிருஷ்ணசுவாமியாக எளிய வடிவில் எழுந்தருளியுள்ளார். நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், தாமரை மற்றும் தண்டம் தாங்கிக் காட்சியளிக்கின்றார். மழலைப்பேறு அருளும் மகாவரப்பிரசாதி. கதளிப்பழமும், பால்பாயசமும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.கி.பி. 1400 – 1500 காலத்தில் கண்ணச பணிக்கர்கள் எனப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவரான மாதவப் பணிக்கர் மலையின்கீழ் கிருஷ்ணசுவாமியை வழிபட்டு வந்துள்ளார். இவர் பகவத் கீதையை மலையாள மொழியில் எழுதியுள்ளார். அது கீதா காவியம் என்ற பெயரில் இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றது. திருவல்லா மற்றும் மலையின்கீழ் கிருஷ்ணசுவாமி இருவரும் ஒரே திருநாமத்தால் அழைக்கப்பட்டாலும், ஒரே வடிவமாக இருந்தாலும், மலையின்கீழ் கிருஷ்ணசுவாமி தண்டம் தாங்கி மூன்றடி உயரத்தில்தான் காட்சிதருகிறார்.கி.பி. 1795 இல் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் மரத்தாலான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பலராமன், கிருஷ்ணன் ஆகிய அவதார வடிவங்கள் மண்டபத்தில் அமைந்துள்ளன. வலம்புரி சங்கும் இங்குள்ளது..மேலும் கணபதி, மகாதேவர், சாஸ்தா, நாகர், பிரம்ம ரக்ஷஸ் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம். கோயிலுக்கு வடக்கே திருக்குளம் அமைந்துள்ளன.பங்குனி மாதம் திருவோணம் நாளில் ஆராட்டு விழா வரும் விதமாக, எட்டு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றது.இது தவிர,ஓணம் பண்டிகை, மலையாள ஆண்டுப் பிறப்பான விஷு பண்டிகை, அஷ்டமி ரோகிணி, பிரதிஷ்டை நாளான ஆனி மாதம் முதல் நாள், மகர சங்கராந்தி, ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு முதலானவையும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன..எங்கே இருக்கு?கேரள மாநிலம், திருவனந்தபுரம் - காட்டாக்கடை சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மலையின் கீழ் எனும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 4.30 – 11; மாலை 5 – இரவு 8.