Bakthi Magazine
தில்லை நடராஜர் தான் இந்த உலகத்தின் இயக்கமாக இருக்கிறார்!
உலகத்திலேயே ஒரே இடத்தில் நின்றுகொண்டு சிவனையும், பெருமாளையும் வழிபடும் சிறப்பைப் பெற்ற ஒரு கோயில் இதுவாகும். இரண்டு ராஜாக்கள் ஆளும் பூமியாக தில்லை ஸ்தலம் விளங்குகிறது. பெருமாளுக்கு வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தீக்ஷிதர்களே பூஜை செய்த பெருமை கொண்டது. திருமங்கையாழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் மங்களாசாசனம் பாடியிருப்பது தில்லையின் சிறப்பாகும்.