அகல் என்பது மண் அல்லது உலோகத்தில் செய்யப்பட்ட எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத ஒளி வீசும் விளக்கு. இதில் பஞ்ச பூதங்களும், நவகிரகங்களும் அடங்கியுள்ளன என்பது விசேஷம். அவற்றைப் பார்ப்போம்.அகல் விளக்கு = பூமியையும், ஆகாயத்தில் தோன்றும் சூரியனையும் குறிக்கும். அதில் இடும் நெய், எண்ணெய், திரவம் = பூமியைக் குளிர்விக்கும் சந்திரன் ஆகும். திரி =அறிவு பெற ஊக்கம் தரும் புதன்.அதில் எரியும் ஜ்வாலை = செந்நிறத் தீக்கனல் செவ்வாய். இந்த ஜ்வாலையின் நிழல் கீழே விழுகிறதல்லவா, அதுவே = ராகு. ஜ்வாலையை உற்று நோக்கினால் அதில் தெரியும் மஞ்சள் நிறம் = குரு. ஜ்வாலையின் அடியில் திரி அணைந்தவுடன் காணப்படும் கருப்புக் கறை = சனி.திரி எரிந்து இருக்குமிடமெல்லாம் வெளிச்சம் பரவுகிறது அல்லவா – இது ஞான மார்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும் கேது பகவான். திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன், சுகபோகம், ஆசைகளைத் தூண்டுபவர்.சில சமயம் வேகமாகக் காற்று வீசி திரி அணையக்கூடிய நிலைக்கு வந்து விடும். ஆசைகள் நம்மை அழிக்கின்றன. அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மறு பிறவிக்கு ஜனனம் எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம். (ஓர் உபன்யாசத்தில் பௌராணிகர் சொல்லக் கேட்டது) -பாகன்