-எஸ். ஸ்ரீதுரைஒருவரிடம் கல்விச்செல்வம் மட்டும் இருந்துவிட்டால் ஏனைய ஐஸ்வர்யங்கள் அவரிடம் தாமாகவே வந்து சேர்ந்துவிடும்.தெய்வப்புலவர் திருவள்ளுவரும் – “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றை யவை.”என்று கல்வியின் பெருமையைச் சிறப்பித்துக் கூறுகின்றார்..இத்தனை சிறப்புகள் வாய்ந்த கல்வியறிவினைப் பெற விரும்பும் ஒருவர் ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாளின் அருளைப் பெறுவது முக்கியமாகும்.ஸ்ரீவேதாந்த தேசிகர் என்ற ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியபுருஷர் தாம் அருளிய ஸ்ரீஹயக்கிரீவ ஸ்தோத்திரத்தில், “ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாளே, சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாக உருவெடுத்து உபதேசம் செய்வதற்கும், சரஸ்வதி தேவி கல்விக்கடவுளாகத் திகழ்வதற்கும், வால்மீகி, வியாஸர் போன்றவர்கள் அற்புதமான பெரும் காவியங்களைப் படைப்பதற்கும் உன்னுடைய அருளன்றோ காரணம்!” என்று கூறுகின்றார். “முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப, வந்து பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின்”என்று திருமங்கையாழ்வாரும் ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாளின் பெருமையைத் தாம் அருளிய பெரியதிருமொழியில் போற்றிப் புகழ்கின்றார்..முன்னொரு காலத்தில் மது, கைடபர் என்ற அசுரர்கள் இருவர் தோன்றினர். அவர்கள் படைப்புக்கடவுளாகிய நான்முகனிடம் இருந்த வேதங்களைக் கவர்ந்து சென்று சமுத்திரத்தின் அடியில் ஒளித்து வைத்துவிட்டனர். வேதம் தமது கையை விட்டுச் சென்று விட்டதால் பிரம்மாவும் தமது படைப்புக் கலையை மறந்தார். சிருஷ்டி என்பதே நின்றுவிட்டதால் அண்டசராசரங்களிலும் வெறுமை நிலவியது. ஞானியர்களான முனிவர்கள், எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் அசுரர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.இதனைக் கண்ட எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் குதிரைமுகக் கடவுளாக அவதரித்து சமுத்திரத்தின் அடிப்பகுதியில் இருந்த மது, கைடபன் இருவரையும் கொன்று அவர்கள் வசம் இருந்த நான்கு வேதங்களையும் மீட்டுக்கொண்டுவந்து பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார். வேதங்கள் கிடைக்கப் பெற்ற பிரம்மனும் மீண்டும் தமது படைப்புத் தொழிலில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கினார். பிரபஞ்சம் முழுவதும் பழையபடியே உயிர்ப்புடன் இயங்கத் தொடங்கியது..உயர்ந்த ஞானத்தை உள்ளடக்கமாகக் கொண்ட வேதங்களை மீட்டுக்கொடுத்த ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாள் குதிரை முகமும் மனித உடலும் கொண்டு தூய்மையான திருமேனி, வெண்ணிறமான ஆடை, சக்கரம், சங்கு, புத்தகம், ஜபமாலை ஆகியவற்றை ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் அறிவு மயமாகவும், ஆனந்த மயமாகவும் தோற்றமளிக்கின்றார்.மது, கைடபர்களை மாய்த்த பின்பும் சினம் அடங்காதிருந்த ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாளை ஸ்ரீலட்சுமிதேவி அணுகிய அடுத்த நொடியில் அவருடைய சினம் தணிந்ததுடன் அவருடைய திருக்கண்களில் கருணை சுரந்தது.அப்படிப்பட்ட ஹயக்கிரீவப் பெருமாளைச் சரணடைந்தவர்கள் அனைவரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், லட்சுமி கடாட்சமும் பெற்று மகிழ்கின்றனர். இந்த ஆண்டு 29.8.2023 அன்று ஸ்ரீ ஹயகிரீவர் ஜெயந்தி அமைகின்றது. .பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்த ஸ்ரீவேதாந்ததேசிகர் தம்முடைய மாமாவாகிய அப்புள்ளாரிடமிருந்து கருட மந்திர உபதேசம் பெற்றார்.அவ்வாறு உபதேசமாகப் பெற்ற கருடமந்திரத்தை அவர் திருவஹீந்திரபுரம் ஸ்ரீதேவநாதபெருமாள் ஆலயத்தின் அருகில் உள்ள ஔஷதகிரி என்ற குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரம் முறை ஜபித்து வந்தார்.ஸ்ரீவேதாந்த தேசிகரின் பக்தி, அசைவில்லாத நம்பிக்கை ஆகியவற்றால் தமது திருவுள்ளம் மகிழ்ந்த கருடபகவான் அவர் முன்பு தரிசனம் அருளி ஆசிர்வதித்ததுடன், அவருக்குச் சக்திவாய்ந்த ஸ்ரீஹயக்கிரீவ மந்திரத்தையும் உபதேசித்தார்.ஸ்ரீகருடபகவானின் மூலம் தமக்கு உபதேசமாகக் கிடைத்த அரிய மந்திரமான ஸ்ரீஹயக்கிரீவ மந்திரத்தைப் பல்லாயிரம் முறைகள் ஜபம் செய்த ஸ்ரீவேதாந்ததேசிகரின் பக்தியை மெச்சி ஸ்ரீஹயக்கிரீவர் நேரடியாகக் காட்சியளித்தார். பரவசத்துடனும் பக்தியுடனும் தொழுது நின்ற ஸ்ரீவேதாந்ததேசிகருக்கு ஸ்ரீஹயக்கிரீவரின் கடைவாயிலிருந்து ஒழுகிய புனிதமான எச்சில் தீர்த்தம் பிரசாதமாகக் கிடைத்தது..ஸ்ரீஹயக்கிரீவப் பிரசாதம் கிடைத்த மறுகணமே அவ்வாசாரியபுருஷரின் வாக்கிலிருந்து மடைதிறந்த வெள்ளமென சுலோகங்களும், பாசுரங்களும் உற்பத்தியாயின. மேலும் அனைத்துக் கலைகளும் கைவரப் பெற்ற தேசிகர் வாதத்திறமையிலும் நிகரற்று விளங்கினார்.தமிழ், வடமொழி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளும் எண்ணற்ற காவியங்கள், துதி நூல்கள், பக்திப் பனுவல்கள், விசிஷ்டாத்துவைத தத்துவ விளக்க நூல்கள் ஆகியவற்றை இயற்றிப் பெரும் புகழ் பெற்ற ஸ்ரீவேதாந்த தேசிகர் ஓர் ஏழை பிரம்மசாரிக்கு அருள்புரியுமாறு பாடிய ஸ்ரீஸ்துதி என்ற ஸ்தோத்திரத்தினால் திருவுள்ளம் மகிழ்ந்த காஞ்சி ஸ்ரீபெருந்தேவித்தாயாரின் திருவருளால் பொன்மழை பொழிந்தது.இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த ஸ்ரீவேதாந்ததேசிகரின் முக்கியமான சிஷ்யராக விளங்கிய ஸ்ரீபிரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் என்பவரால் தொடங்கப் பெற்ற ஸ்ரீபரகாலமடத்தின் ஆராதனைத் தெய்வமாக ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் விளங்குகின்றார்.ஸ்ரீஹயக்கிரீவர் தம்மை வணங்கிடும் பக்தர்கள் அனைவருக்கும் ஞானம், செல்வம், உடல் வலிமை, தைரியம், தன்னம்பிக்கை அருள்கின்றார். .பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்வமத ஆசாரியராகிய ஸ்ரீவாதிராஜதீர்த்தரும் ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாளின் கருணைக்குப் பாத்திரமாக விளங்கினார்.தினந்தோறும் ஸ்ரீஹயக்கிரீவரை மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபடும் ஸ்ரீவாதிராஜ தீர்த்தர் ஸ்ரீஹயக்கிரீவர் திருவுள்ளத்திற்கு உகந்த “ஹயக்கிரீவ பண்டி” என்ற திவ்வியமான இனிப்புப் பிரசாதத்தைத் தம்முடைய சிரசின் மீது வைத்துக் காத்திருப்பார். கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் முதலியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் அந்த இனிப்பினை ஸ்ரீவாதிராஜருக்குப் பின்புறமாக வெள்ளைநிறக் குதிரை வடிவில் எழுந்தருளும் ஸ்ரீஹயக்கிரீவர் பிரியமாக அமுது செய்வது அன்றாட நிகழ்வாக விளங்கியது.ஸ்ரீவாதிராஜ தீர்த்தர் சமர்ப்பிக்கும் “ஹயக்கிரீவ பண்டி” பிரசாதத்தைத் தமது கண்களால் நேரடியாகப் பார்க்க விரும்பிய பக்தர் ஒருவருடைய கண்பார்வை பாதிக்கப்பட, ஸ்ரீவாதிராஜரின் பிரார்த்தனையால் அந்த பக்தருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது. .வடகலை ஸ்ரீவைஷ்ணவர்களுக்குரிய ஆசாரியபீடங்களில் முக்கியமான பீடமாகிய ஸ்ரீமத்ஆண்டவன் ஆசிரமத்தின் ஐந்தாவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீமத் காடந்தேத்தி ஆண்டவன் என்ற மகான்.வரத வேதாந்தாச்சாரியார் என்ற பூர்வாசிரமத் திருப்பெயர் கொண்ட அவருக்கு அப்போதைய ஸ்ரீபரகாலமடத்தின் ஜீயர் மூலம் ஸ்ரீஹயக்கிரீவ மந்திர உபதேசம் கிடைத்தது. ஸ்ரீஹயக்கிரீவ மந்திரத்தையும், வேறு இரண்டு குருமார்களிடமிருந்து உபதேசமாகக் கிடைத்த ஸ்ரீசுதர்சன மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம் ஆகியவற்றையும் தமது இளம் வயதிலேயே பலகோடி முறை ஜபம் செய்த வரதவேதாந்தாச்சாரியாருக்கு அம்மந்திரங்களின் சித்தியால் சிறந்த ஞானம், வைராக்கியம் ஆகியவற்றுடன் அஷ்டமா சித்திகளும் கைகூடி வந்தன. மேலும், ஒரே நேரத்தில் நூறு விதமான செயல்களில் கவனம் செலுத்தும் சதாவதானியாகவும் ஸ்ரீவரத வேதாந்தாச்சாரியார் விளங்கினார்..அக்காலத்தில், பல்வேறு அரசர்களின் சமஸ்தானங்களும், பணக்கார ஜமீன்களும் பண்டிதர்களுக்கிடையில் வாதப் பிரதிவாத போட்டிகளை ஏற்பாடு செய்ததுடன் வெல்பவர்களுக்குப் பொற்கிழியும் பரிசளித்து வந்தனர்.அவ்விதம், அன்றைய கொச்சி சமஸ்தான மன்னரின் எதிரில் ஸ்ரீவரத வேதாந்தாச்சாரியார் தமது வாதத்திறமையை நிரூபித்துப் பொற்கிழியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பும் வழியில் சத்திரம் ஒன்றில் தங்க நேரிட்டது. அவரிடம் வாதத்தில் தோற்ற பண்டிதர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இன்றி அவரைக் கொல்லவும் முடிவு செய்து அவர் தங்கியிருந்த சத்திரம் நோக்கிக் கிளம்பினர். அச்சமயம், பலசாலியான இளவரசன் ஒருவன் வெள்ளைக் குதிரை ஒன்றின் மீது அமர்ந்து தமது கத்தியை உருவியபடி எதிரே வந்ததைக் கண்ட எதிரிகள் பயந்து ஓடிவிட்டனர்.வேறொரு சமயம் ஸ்ரீவரத வேதாந்தாச்சாரியார் பெற்ற பரிசுகளைக் கவர்ந்து செல்லும் எண்ணத்துடன் வந்தவர்களை ஒரு நல்லபாம்பு பயமுறுத்தி விரட்டியது. குதிரை வீரனாகவும், நல்ல பாம்பாகவும் வந்தது ஸ்ரீஹயக்கிரீவரே என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?.இவ்விதம் ஸ்ரீவேதாந்த தேசிகர், ஸ்ரீவாதிராஜ தீர்த்தர், ஸ்ரீமத் காடந்தேத்தி ஆண்டவன் ஸ்வாமிகள் ஆகிய மகான்களை கைதூக்கி விட்டு அம்மகான்களின் திருவுள்ளங்களில் நிறைந்து விளங்கும் ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாளை நாமும் உள்ளமுருகி வழிபட்டு ஞானம், செல்வம், உடல்வலிமை, தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடைந்து மகிழ்வோமாக.பெட்டிச் செய்திஸ்ரீஹயக்கிரீவர் வழிபாடு நடைபெறும் திருத்தலங்களும் வழிபாட்டு முறையும்:மைசூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்ரீபரகாலமடத்தின் கிளைகள் காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி, திருப்பதி, திருமலை, சென்னை மயிலாப்பூர், பெங்களூரு, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பற்பல திவ்வியதேசங்களிலும் அமைந்துள்ளன. இக்கிளைகளிலும், திருவஹீந்திரபுரம், சென்னை நங்கைநல்லூர், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட பல திருக்கோவில்களிலும் ஸ்ரீஹயக்கிரீவப் பெருமாள் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது.குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளிலும், ஸ்ரீஹயக்கிரீவருக்கு உகந்த திருநாளாகிய திருவோண நட்சத்திர நன்னாளிலும் இத்திருக்கோவில்களுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி, ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவப் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை, பாயஸம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடும் மாணவச் செல்வங்கள் தாங்கள் எழுதும் தேர்வுகள் அனைத்திலும் சிறந்த வெற்றியை அடைவது உறுதி.