-மருத்துவர். ஜெ.ராஜமூர்த்திபக்தி உலகில் முழுமுதற் கடவுளான விஷ்ணு எனப்படும் திருமாலை நினைத்து 12 ஆழ்வார்கள் பாடியுள்ள இனிமை மிக்க அமுதப் பாசுரங்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என அழைக்கப்படுகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட இந்தப் பாசுரங்களை 10 ஆம் நூற்றாண்டில் வைணவ ஆச்சாரிய மரபில் தோன்றிய நாதமுனிகள் என்பவர் தொகுத்தார்..முதல் ஆழ்வார்கள் ஆன பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்களோடு பெரியாழ்வார் மற்றும் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், நம்மாழ்வாரையே போற்றிப்பாடிய மதுரகவி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிபொடி ஆழ்வார் எனப் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ’ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்’ எனத் தமிழில் அழைக்கப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகும். ’திவ்ய’ என்ற வடமொழிச் சொல்லுக்கு மேலான, புனிதமான, தெய்வாம்சம் பொருந்திய என்று பல பொருள்கள் உண்டு. பிரபந்தம் என்பது பாடல்களின் திரட்டு அல்லது தொகுப்பு ஆகும். திருமாலின் அவதாரச் சிறப்புகளையும் அவரது நின்ற, இருந்த, கிடந்த, கோலங்களையும் அதன் அழகையும் திருமால் அடியார்களின் பெருமையையும், இவர்களால் இதில் பாடப்பெற்றுள்ளது. ஆழ்வார்கள் பாடியுள்ள வைணவத்தலங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வாறாக 108 திவ்ய தேசங்கள் குறித்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர். 108 திவ்ய தேசங்களின் சிறப்புகளையும் அழகான செந்தமிழால் எடுத்து நமக்கு கூறுவது இந்தப் பாடல்களாகும்.108 வைணவத் திருத்தலங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தரகாண்டிலும், 1 திருத்தலம் குஜராத்திலும், 1 திருத்தலம் நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் (திருப்பாற்கடல், பரமபதம் என்கின்ற வைகுண்டம்) வானுலகத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.இந்த 12 ஆழ்வார்களில் மிக குறைவான பாடல்களைப் பாடியவர் திருப்பாணாழ்வார். இவர் பாடியது 10 பாசுரங்களே என்றாலும் திருமால் அடியார்களின் உள்ளங்களைக் கவர்ந்து இழுக்கும் பாடல்களாகும். மதுரகவியாழ்வார் திருமாலை பாடாமல் நம்மாழ்வாரையே தமது குருவாகப் போற்றி 11 பாடல்கள் பாடியிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் பாடியவர்கள் திருமங்கை ஆழ்வாரும் நம்மாழ்வாரும் ஆவார்கள்..12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் சரியான எண்ணிக்கை 3892. இவற்றோடு திருவரங்கரத்து அமுதனார் பாடியுள்ள ராமானுஜர் நூற்றந்தாதி நூறு பாடல்களைச் சேர்த்து 4000 பாடல்களாக வைக்கப்பட்டுள்ளது. சைவத்தில் பன்னிரு திருமுறைகள் சைவ சித்தாந்தத்தை அதனுடைய தத்துவங்களை சிவநெறியைப் பாடியுள்ளது போல வைணவத்தில் திருமால் நெறியை இராமானுஜர் தந்த விசிஷ்டாத்வைதத்தை தேனினும் இனிய பாடல்களால் நமக்குக் காட்டுவன. விசிஷ்டாத்வைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும், சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. குருவினிடத்தில் பக்தி, பரம்பொருளாம் விஷ்ணுவின் மீது எப்போதும் நம்பிக்கை, உலக ஆசைகளை துறத்தல், பகவத் கைங்கர்யம் எனப்படும் திருமாலுக்குத் தொண்டு புரிதல், பாகவத கைங்கர்யம் எனப்படும் திருமால் அடியார்களுக்கு சேவை செய்தல், திருமால் அடியார்களாம் தொண்டர் குலத்தோடு சேர்ந்து இருத்தல், ஆழ்வார்களின் பாசுரங்களை பாராயணம் செய்தல், இவற்றால் பிறவியின் முடிவில் கர்ம பந்தத்தை விட்டு அந்தப் பரம்பொருளை அடைந்து முக்தி பெறலாம் என்பதே விசிஷ்டாத்துவைதத்தின் சாரம். இது ஆதிசங்கரர் வலியுறுத்திய அத்வைதத்தை விடச் சிறப்பு உடையது. விசிஷ்ட-(சிறப்பு), அத்வைதம் (இரண்டல்ல). விசிஷ்ட+அத்வைதம்=விசிஷ்டாத்துவைதம். இராமானுஜரின் இந்த நெறிக்கு வலுசேர்க்கும் வண்ணம் ஆழ்வார்கள் பாடல்கள் அமைந்துள்ளன..அமுதம் என்பது அதை உண்பவர்களை மரணத்திலிருந்து காக்கும் தன்மை உடையது. அதைப்போல இந்த ஆழ்வார்களின் பாசுரங்கள் நம்மை மரணப்பெரும் பிணியில் இருந்து காக்கும் தன்மை உடையன எனவும், மீண்டும் பிறவாத முக்தி நெறியை அளிக்கும் என்றும் நாம் கருதலாம்.ஆழ்வார்கள் பாடல்கள் கேட்க கேட்க செவிக்கு இனிமை தருவதாய் சிந்தையை மகிழ்விப்பதாய் பக்தி பரவசத்தில் நம்மை அழுத்தவன! ஆழ்த்துவன! ஆழ்வார்கள் என்றால் அவர்கள் பக்தியில் ஆழ்ந்தவர்கள் என்றும் கொள்ளலாம். பெருமாள் மீது அதாவது திருமால் மீது பேரன்பில் ஆழ்ந்தவர்கள் என்றும், தமிழ் அறிவினிலே ஆழ்ந்தவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்..சைவத்தில் சிவஞானிகளான சிவனடியையே சிந்தித்த 63 நாயன்மார்களில் எல்லோரும் கவிஞர்கள் அல்ல. சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், காரைக்கால் அம்மையார் எனச் சிலரே பக்திப் பாடல்களை திருமுறைகளில் பாடியுள்ளளர். ஆனால் வைணவத்திலோ ஆழ்வார்களுக்கு உள்ள தனிச்சிறப்பு என்னவெனில் இவர்கள் அனைவரும் புலவர்கள். திருமாலைத் தவிர மறந்தும் புறந்தொழாத, தமிழைத் தன் வயப்படுத்தி கவிபுனையும் ஆற்றல் பெற்றவர்கள்.ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள் என அறிந்தோம். இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்ரபாணி பெருமாள் மீதான ’ஆராவமுதே’ என்று தொடங்கும் திவ்யபிரபந்தப் பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய்மறந்து நின்றார். வீரநாராயணபுரம் எனும் காட்டுமன்னார்கோவிலில் இந்த 10 பாடல்களை நாதமுனிகள் கேட்டதாக இன்னொரு செய்தியும் உண்டு. அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம், நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துப்பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே? என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டறிந்தார்..அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை, 12 ஆயிரம் முறை எவரொருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்கள். அதன்படி நாதமுனிகள் 12 ஆயிரம் முறை மதுரகவியாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். அவரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றதாக வரலாறு கூறுகிறது.இந்த நாதமுனிகள் பத்தாம் நூற்றாண்டிலே கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள வீரநாராயணபுரம் எனும் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர். அதைப்போல சைவத் திருமுறைகளில் பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி அதே பத்தாம் நூற்றாண்டில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே திருநாரையூரிலே பிறந்து, அங்குள்ள பொல்லாப் பிள்ளையார் அருளால் தொகுத்தார் என்பர். ஆகவே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், பன்னிரு திருமுறைகளை சைவத்தில் தொகுத்தவரும் வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவரும் அருகருகே பிறந்து வாழ்ந்தவர்கள் என்பதாகும். காட்டு மன்னார் கோவிலும் திருநாரையூரும் கடலூர் மாவட்டத்தில் அருகருகே அமைந்துள்ள ஊர்களாகும்.ஆழ்வார்கள் பாடியுள்ள இந்த 4000 பாடல்களும் திராவிட வேதம் என்றும், தமிழ் வேதம் என்றும், ஐந்தாம் வேதம் என்றும் அழைக்கப்படும் சிறப்புடையன ஆகும். ”வேதம் தமிழ் செய்த மாறன்”என்று நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தம்முடைய பாடலிலே சுட்டிக் காட்டுகிறார். இனிய தமிழிலே, தூய தமிழிலே நமக்குக் கிடைத்திருக்கின்ற பக்தியின் ஊற்றாய் இந்தப் பாடல்கள் விளங்குகின்றன. ஆழ்வார்கள் பிறமொழிகள் குறிப்பாக வடமொழி கலக்காத வண்ணம் தூய தமிழில் இந்தப் பாமாலைகளை திருமாலுக்குச் சூட்டி உள்ளனர் எனலாம்..இவை அனைத்துமே யாப்பிலக்கணத்துக்குள் வரக்கூடிய மரபுக் கவிதைகளாகும். வெண்பாக்கள், விருத்தப்பாக்கள் என தமிழிலே மரபுக் கவிதைகளால் இவைகளைச் செய்துள்ளனர். முதல் ஆழ்வார்கள் பாடல்களிலே இரண்டை நாம் இங்கு ரசித்துப் பார்க்கலாம். முதல் ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் பின்வருமாறு பாடுகிறார்.‘’வையம் தகளியா வார்கடலே நெய்யாகவெய்ய கதிரோன் விளக்காக- செய்யசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலைஇடராழி நீங்குகவே என்று’’. என்பதே அப்பாடல்.எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்கு, மூவுலகையும் ஈரடியால் அளந்த உத்தமனுக்கு, வாமன அவதாரம் கொண்டு விஸ்வரூபம் எடுத்தவனுக்கு சிறிய விளக்கை ஏற்ற விரும்பாமல் எல்லோரும் வியக்கும் வண்ணம் விளக்கேற்றுகிறார். இந்த மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டு அதிலே விளங்குகின்ற கடல் நீரை நெய்யாகக் கொண்டு அதன் விளிம்பிலே காட்சியளிக்கும் சூரியனைச் சுடராக்கி வழிபட்டுத் துன்பக் கடலில் இருந்து தமக்கு விடுதலை வேண்டுமாறு இறைஞ்சுகிறார்! என்ன அழகான பிரமிக்க வைக்கும் ஆழ்வாரின் பிரமாண்ட சிந்தனை!..பொய்கையாழ்வார் இப்படி புறத்திலே நாம் காணுகின்ற இயற்கையை வைத்துப் பாடினார் என்றால் பூதத்தாழ்வார் வேறு விதமாகப் பாடுகிறார். இந்தப் பாடலிலே வித்தியாசமாக அகத்திலே உணருகின்ற உணர்வுகளை வைத்துப் பாமாலை சூட்டுகிறார். அந்த பாடல்.“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா- நன்புஉருகிஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்குஞானத்தமிழ் புரிந்த நான்”..இதில் அன்பை அகலாகவும் இறை ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தனையையே திரியாகவும் கொண்டு அந்த பரம் பொருளுக்கு ஞானச் சுடரை ஏற்றி வழிபடுகிறார். இந்தப் பாடலிலே பூதத்தாழ்வாரின் மெய்ஞானம் சுடர் விடுகிறது. மேற்கூறிய இருவரும் ஏற்றிய கவிதை விளக்கிலே பேயாழ்வாரோ திருமாலுடைய, ’’திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்”என்று தொடங்கிப் பாடுவது அவர்களது பக்தியின் ஆழத்தைக் காட்டுகிறது. கடவுள் எங்கு இருக்கிறான் என்னும் கேள்விக்கு பேயாழ்வார் பதில் சொல்கிறார். ’நம் மனத்துள்ளான்’ என்கிறார். ’யார் மனத்தில்?’ என்று நம்முள் கேள்வி எழும் அல்லவா! அதற்குப் பதிலாக,’’உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும்உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்”என்று அருள்கிறார்..நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வாரின் பாடல்களையே முதலாவதாக வைத்துப் போற்றுகின்றனர். ஏன் தெரியுமா? பொதுவாக பெரியவர்கள் வயதில் மூத்தவர்கள் தங்களை விட இளையவர்களை வாழ்த்துவதுண்டு; அல்லது இறைவனை நாம் வேண்டி அவனுடைய ஆசியை வாழ்த்துகளை மானசீகமாகப் பெறுவதுண்டு. ஆனால் பெரியாழ்வாரோ அந்தப் பரந்தாமனையே கண் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் மீது பல்லாண்டு பாடுகிறார் .’’பல்லாண்டு பல்லாண்டுபல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்மல்லாண்ட திண்தோள் மணிவண்ணாஉன் செவ்வடி செவ்விதிருக்காப்பு”என்று பெரியாழ்வார் பாடுகின்ற பல்லாண்டு வைணவ திருக்கோயில்களில் தினசரி வழிபாட்டில் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படும் வழக்கில் உள்ளது. இந்தப் பழக்கம் ராமானுஜரை பின்பற்றும் எல்லா வைணவக் கோயில்களிலும் கடைபிடிக்கப்படுகிறது..மேலும் தமிழ் இலக்கியத்தில் 96 வகையான சிற்றிலக்கியங்கள் உண்டு. அதிலே ஒன்று பிள்ளைத் தமிழ். தெய்வங்களை, அரசர்களை, நன்னெறிப் புகட்டும் குருமார்களைப் பற்றி அவர்களை குழந்தையாக உருவகித்து அவர்கள் மீது கற்பனை பல அமையப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். அவ்வாறு பாடப்படுபவரின் வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தை 10 பருவங்களாகப் பிரித்து அவர்களின் செயற்கரும் செயல்களை சுவை சொட்டச் சொட்ட பாடுவது பிள்ளைத் தமிழ். இந்தப் பிள்ளைத் தமிழின் முன்னோடி பெரியாழ்வாரே எனலாம். கண்ணனை குழந்தையாகப் பாவித்து இவர் பாடியுள்ள பாடல்கள் படிக்கப் படிக்க நெஞ்சினிப்பவை.பெரியாழ்வாரின் வளப்பு மகளான சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பாடிய பாடல்கள் அனைத்தும் தெய்வத்தமிழ் மணக்கும் தேன் தமிழ்ப் பாடல்களாகும். கண்ணனை தன்னுடைய காதலனாக கணவனாகக் கொண்டு சிருங்கார ரசம் சொட்டும் பாடல்களை ஆண்டாள் பாடுகிறார். ஆண்டாளின் திருப்பாவை மார்கழி மாதம்தோறும் எல்லா வைணவ கோயில்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஊர்கள்தோறும் திருப்பாவை சொற்பொழிவுகள் நடந்துகொண்டிருக்கும். ஆண்டாள் கண்ணனுடைய வாய்ச்சுவையை எப்படி வேண்டுகிறாள்; அடைய விரும்புகிறாள் பார்ப்போமா!.’’கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே”..கண்ணனுடைய பவள வாய் உதடுகளில் பச்சைக் கற்பூர வாசனை வீசுமோ? தாமரைப்பூவின் மணம்தான் வீசுமோ? அவன் பவள வாய் தித்திப்புச் சுவையுடன் இருக்குமோ? கடலில் பிறந்த வெண்மையான பாஞ்சசன்னிய சங்கே! குவலாலயபீட யானையின் கொம்பினை ஒடித்த அந்தக் கண்ணபிரானின் உதட்டின் சுவையையும், வாசனையையும் பற்றி, ஆசையுடன் உன்னிடம் கேட்டறிய விரும்புகின்றேன். இதைப் பற்றி எனக்குச் சொல்வாயா? என்று ஆண்டாள் திருமாலின் கையிலுள்ள சங்கிடம் கேட்கிறாள். திருமாலின் கையில் உள்ள சக்கராயுதத்தைவிட பாஞ்சசன்யம் எனும் சங்கிற்கு சிறப்பு உண்டு. ஏனெனில் அது கண்ணனின் வாயில் வைத்து ஊதப்படுகிறது. ஆதலால் அவனின் வாய்ச்சுவை அறிந்த சங்கிடம் அதுபற்றி ஆவலாகக் கேட்கிறாள் ஆண்டாள். ஆண்டாளின் அமுதத் தமிழை சுவைக்க சுவைக்க அது இன்பம் தரும்.நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி தமிழில் வழங்கப்பட்டுள்ள உயர்ந்த வேதமாகும். பக்தியிலே நம்மை மேல் நிலைக்கு ஏற்றுகின்ற படிக்கட்டுகளாக இந்தப் பாடல்கள் திகழ்கின்றன. நம்மைப் போன்றவர்களால் வாழ்விலே நாம் அன்றாடம் காணுகின்ற பொருளிலே நாம் பருகுகின்ற நீரிலே நாம் உண்ணுகின்ற உணவிலே அவனைக் காண முடியுமா? என்பது கேள்விக் குறியே! ஆனால் அது நம்மாழ்வார் போன்ற ஞானிகளால் மெய்ஞானம் அறிந்தவர்களால் காண முடிகிறது. அதனால் தான்.உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்” என்கிறார் நம்மாழ்வார். எப்படிப்பட்ட அழகான பாடல்! கர்ணன் என்னும் திரைப்படத்தில் ”மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடியும் நானே”என்று கண்ணன் பாடுவது போல கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார். அதை நம்மாழ்வார் அவருடைய பாடல்களிலே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார். மேலும், கடவுளை வழிபட எந்தவிதமான ஆடம்பரங்களும் தேவையில்லை, அதிக பொருட்செலவும் தேவையில்லை. நம்முடைய தூய அன்பே அவனுக்குப் போதும்; எளிய பொருள்களைக் கொண்டு அந்த இறைமையை நாம் துதிக்கலாம் என்கிறார் நம்மாழ்வார். ”புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலர்கள் தூவிஎண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும்”என்பது அவருடைய திருவாய்மொழி! நாம் இந்தப் பிறவி பந்தத்தை அறுக்க வேண்டுமாயின் என்னென்ன செய்யவேண்டும்? கடினமான காரியங்கள் எதையும் செய்ய வேண்டாம், நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்து, தூய நீர் கொண்டு மலர்களைத் தூவி, அந்த இறைவனை, அவனது திருநாமத்தை நினைத்தாலே போதும், தமக்கு இந்தப் பிறவித்தளையில் இருந்து விடுதலை கிடைக்கும் அதாவது முக்தி கிடைக்கும் என்பதை நம்மாழ்வார் உணர்த்துகிறார்..குலசேகர ஆழ்வார் திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனை எப்படி எல்லாம் உருகிப் பாடுகிறார் என்பதை அறிந்தால் பக்தியின்பால் ஈர்க்கப்பட்டு நம் உள்ளம் குளிரும். திருவேங்கட மலையின் சுனையில்(நீர்நிலை) உள்ள மீனாக, குருகு என்னும் பறவையாக, வேங்கடத்தான் உமிழுகின்ற பொன்வட்டில் பிடிப்பவனாக, செண்பக மரமாக, தம்பகமாக(புதர்ச்செடி), சிகரமாக(மலை உச்சி), அங்கு ஓடுகின்ற காட்டாறாக, நடக்கின்ற பாதையாக(வழி) ஆக வேண்டும் என ஏங்கியவர், பின் படியாக, அல்லது எதாவது ஒன்றாகக் கிடக்க வேண்டும் எனச் சொல்லும் பாசுரங்கள் ஆழ்வாரின் ஏக்கத்தைக் காட்டுவதோடு, உயிரானது இறைவனை அடையத் துடிக்கும் துடிப்பையும் அல்லவா புலப்படுத்துகிறது! அந்த அனுபவத்தை உணரமுடியுமே தவிர உணர்த்தவா முடியும் நம்மைப் போன்றவர்களால்!.இந்த 4000 பாடல்களுக்கும் பதவுரை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை. அவரது தொண்டரடிபொடி ஆழ்வார் பாடல் ஒன்றின் உரையைக் காண்போம். திருவரங்கத்தில் துயிலும் திருமாலின் அழகை ஆழ்வார் பாடினார். பெரியவாச்சான்பிள்ளை அதனை விளக்கினார். இவரை என்றென்றும் வைணவ உலகம் போற்றிப் புகழ்வதில் ஆச்சரியமில்லை.’’குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டிவட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக் கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே” பதவுரை: உலகத்திலுள்ளவர்களே! கடல் போன்ற கருநிறத்தையுடைய கடவுளான எந்தை மேற்கு திக்கில் முடியை வைத்து, கிழக்குத் திக்கில் பாதம் நீட்டி, வடக்குத் திக்கிலே பின்பு காட்டி தெற்குத்திக்கில் இலங்கை நோக்கி (விபீஷணன் வாழுமிடம்) அன்போடு பார்த்துக்கொண்டு திருவனந்தாழ்வானாகிற (ஆதிஷேசன்) படுக்கையில் யோகநித்திரை செய்யுந் தன்மையை கண்டு ஐயோ என் செய்வேன்! என்ன செய்ய மாட்டுவேன்! என்று இந்தப் பாடலுக்கு விளக்கத்தைத் தருகிறார் பெரியவாச்சான்பிள்ளை..ஆலிநாடன் என்றும் பரகாலன் என்றும், கலியன் நீலன் என்றும், திருமங்கை மன்னன் என்றும் அழைக்கப்பட்டு கள்ளர் குலத்தில் அவதரித்து ஓங்கி உலகளந்த உத்தமனாம் கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டபின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பனுவல்களை செந்தமிழில் தந்தவர் திருமங்கையாழ்வார். சைவ சமயத்தில் ’தாண்டக வேந்தர்’ என திருநாவுக்கரசரை அழைப்பர். தாண்டகம் என்பதும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. வைணவத்தில் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்று பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றவர் திருமங்கை ஆழ்வார். சைவ சமயத்தில் சித்திரக்கவி வகையைச் சார்ந்த திருவெழுகூற்றிருக்கை தந்து பக்தி இலக்கியத்தில் தனக்கென தனியிடம் பெற்று முத்திரை பதித்தவர் திருஞானசம்பந்தர். வைணவத்தில் திருமங்கையாழ்வார் திருவெழுகூற்றிருக்கை பாடியுள்ளார். ஒரு பதிகத்தின் பத்துப் பாடல்களின் இறுதியிலும் ”நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும் நாம்” என்று இவர் பாடியுள்ள பாடல்களைப் படித்தால் நாமணக்கும்; மனம் மணக்கும்; நமக்கு வாழ்வில் உய்யும் வழி கிடைக்கும் என்பது திண்ணம்..திருமழிசை ஆழ்வார் பாடியருளிய ’நான்முகன் திருவந்தாதி’ அந்தாதி முறையில் அமையப்பெற்ற அழகான பாக்கள். திருப்பாணாழ்வார் பத்துப் பாடல்களே செய்தாலும் அவைகள் திருவரங்கத்து அம்மான் அழகை, பெருமைகளை, சிறப்புகளை, மகிமையை நமக்குக் காட்டுவன. ”அமலன் ஆதிபிரான்” எனத் தொடங்கும் முதல் பாடல் தொடங்கி”கொண்டல் வண்ணனைக் கோவலனை,...............................................................................................................................கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே”என்று முடிக்கும் பத்தாம் பாடல்வரை அத்தனையும் தமிழுக்கும் பத்திக்கும் கிடைத்த அரிய இனிய பா முத்துகள்! படித்துப் பாருங்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை!நம்மாழ்வார் அந்தாதி முறையில் ஆயிரம் பாடல்களைத் தமிழிலக்கிய உலகிற்குத் தந்தவர். ”ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்” என்று வைணவ உலகில் புகழப்படும் மாறன் எனும் பேருடையவர். திருக்குருகூர் என அழைக்கப்படும் ஆழ்வார்திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் வைணவ உலகில் ஜொலிக்கும் துருவ நட்சத்திரம். ஆக மொத்தம் 12 ஆழ்வார்களும் தமிழில் நம்மை ஆழ்த்துவதோடு பக்திப் பரவசத்திலும் ஆழ்த்துபவர்கள்!. அடியார்களுக்கு தொண்டு செய்யும் நல் உள்ளத்தையும், வாழ்வின் நோக்கமான திருமாலின் திருவடியில் கலந்து வீடுபேற்றை அடையும் வழியையும் காட்டியவர்கள்!..ஒரு உண்மையான பிரார்த்தனை என்பது எப்படி இருக்கவேண்டும், இறைவனிடத்திலே நாம் என்ன வேண்டிப் பெறவேண்டும் சொத்துகளையா, பொன்னையா, பொருளையா, சுகத்தையா என்றால் அதுவல்ல. நம்முடைய உடல் நலம் நன்றாக இருக்கும்போது நாம் இறைவனைப் பற்றி சிந்திக்கிறோமா என்றால் அதுவும் கேள்வி குறிதான். உடலுக்கு நோய் வந்து மரணப்படுக்கையில் படுத்து இருக்கும் போது, அவனைப் பற்றி நினைத்து என்ன பயன்?நாம் இந்த வாழ்வில் இந்தப் பிறவியில் இளமையில் உடல்நலத்தோடு இருக்கும்போதே உய்யும் வழியை(முக்தி பெறும் வழியை) அந்த ஆண்டவனிடம் வேண்டுவது தான் உண்மையான வழிபாடு. பெரியாழ்வார் என்ன வேண்டுகிறார் பாருங்கள், என்ன கேட்கிறார் பாருங்கள், அதை எப்படிச் சொல்கிறார் பார்ப்போமா........’’துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றேஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!”நம்மை நெகிழவைக்கின்ற மனதை உருக வைக்கின்ற பாடல் இது..பெரிய மனிதர்களை, செல்வந்தர்களை, நல்ல குணமுடையவர்களைச் சென்று அடைந்து அவர்களை அண்டி வாழ்வது என்பது ஏன் எனில் நாம் களைத்து இளைத்த காலத்தே அவர்கள் நமக்கு துணையாய் இருப்பார்கள் என்பதனால் அன்றோ! அவர்களோடு ஒப்பிடுகையில் நான் சமமானவன் அல்ல; எனினும் உன்னைப் புகலடைந்தேன். அன்று யானையை முதலை வாயிலிருந்து காத்து கஜேந்திர மோட்சம் அளித்ததால் உன்னை நானும் அடிபணிந்தேன். நோய் வந்து உடல் மெலிந்து இளைப்புக் கிட்டிவரும் இறுதிக் காலத்தில் அடியேன் உன்னை நினைக்க முடியாது. கோமா (Coma) என்னும் நிலைக்குச் சென்றுவிட்டால் யாருக்கும் சுய நினைவு கூட இருக்காது. எந்தச் சிந்தனையும் தோன்றாது. அந்தக் காலம் வரும் முன்னர் அக்காலத்திற்காக நல்ல தெளிவு பெற்றிருக்கும் இப்போதே அடியேனுடைய விண்ணப்பத்தைச் செய்து வைத்தேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் உன்னுடைய திருநாமத்தை! திருவரங்கத்தில் பாம்பணையில் துயிலும் அரங்கநாதனே! என்று உருகுகிறார் பெரியாழ்வார்.ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்தும் பக்தி உலகிலே, ஆன்மிக உலகிலே, தமிழ் உலகிலே என்றைக்கும் நிலைத்து நின்று அதனை உருகிப்படிப்போர்க்கு பாராயணம் செய்வோர்க்கு திருமாலுடைய திருவடிப்பேற்றை அளிக்கும் என்பது திண்ணம்.’’ஓம் நமோ நாராயணாய”