Bakthi Magazine
உடையவரைச் சோதித்த உத்தம குரு!
திருக்கோட்டியூர் என்னும் திவ்வியதேசம் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் நகரத்திற்கு அருகில் உள்ளது. இங்குள்ள பஞ்சாங்க விமானத்துடன் கூடிய திருக்கோயிலில் ஸ்ரீஸௌமியநாராயணப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். பெரியாழ்வார் உள்ளிட்ட ஐந்து ஆழ்வார்களால் இப்பெருமாள் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கின்றார்.