-தஞ்சை இராசுதுன்பங்கள் வரும் போது இறைவனை நினைப்பதும், இன்பங்கள் வரும் போது இறைவனை மறந்துவிடுவதும் வாழ்வில் யதார்த்தமாகிவிட்டது.குந்திதேவி, ’’எனக்குத் துன்பத்தையே கொடு!’’ என கிருஷ்ணனிடம் வேண்டினாள். அதற்கு அவன் காரணம் கேட்க, ’’துன்பத்தில் இருக்கும் போதுதான் கிருஷ்ணா உன்னை நினைக்கத் தோன்றுகிறது’’ என்றாளாம். இது எவ்வளவு நிதர்சனமான உண்மை!.பக்தர்கள் நினைத்தாலே ஓடிவந்து அரவணைத்துக் காக்கும் பகவான் நவநீதகிருஷ்ணனாக எழுந்தருளியுள்ள தலங்களுள் ஒன்று, தஞ்சாவூர்.வடஇந்தியாவில் இருந்து வந்த மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர்களை விரட்டிவிட்டு ஆட்சிசெலுத்தினார்கள். அவர்களுள் ஒருவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவியோ கிருஷ்ணனின் தீவிர பக்தை. அரசிக்கு குழந்தை இல்லை என்பதைவிட, கிருஷ்ணனை வழிபட தஞ்சையில் கோவில் இல்லையே என்ற ஏக்கம்தான் அதிகமிருந்தது.மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் குலகுருவின் ஆலோசனைப்படி மேலராஜ வீதியில் மராட்டிய மன்னர்களால் ருக்மணி, சத்யபாமா சமேத ஶ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் கட்டப்பட்டது. அதன் பலனாக அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இக்கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகளை பல்வேறு மன்னர்கள் செய்துள்ளார்களாம். இரண்டாம் சரபோஜி மன்னர் கி.பி. 1805-ஆம் ஆண்டு செய்த திருப்பணிகளை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது..ஆலய அமைப்பு:கிழக்கு நோக்கிய கோவிலின் இடதுபுறத்தில் காஞ்சியில் இருந்து தஞ்சைக்கு வந்து தஞ்சமடைந்த பங்காரு காமாட்சி அம்மன் கோவிலும், வலதுபுறத்தின் அண்மையில் மூலை அனுமார் கோவிலும் உள்ளது. சிறிய இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் இடதுபுறத்தில் ஆழ்வார்களின் சன்னதியும், அதையடுத்து திருமடப்பள்ளியும் உள்ளது. பரந்து விரிந்த பகவத்கீதா மண்டபத்தில் தமிழகத்தில் சிறந்த உபன்யாசர்கள் பலரும் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள்.வலதுபுறத்தில் வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி எழுந்தருளும் அலங்கார மண்டபம் உள்ளது. கோவில் தெற்கு பிராகாரத்தில் பங்காரு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல மதில் சுவரில் பிரத்யேகமாக நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராகாரத்தில் துளசி மாடம் உள்ளது. கோவில் நேர் எதிரில் பலிபீடமும், அதன் பின்புறம் கருடாழ்வார் சன்னதியும், அதனையடுத்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபமும் உள்ளது.அர்த்த மண்டபத்தின் இடதுபுறத்தில் இராமர், சீதை, லட்சுமணன், அனுமனும், இவர்களுக்குப் பின்னால் இருபுறமும் நாகர்களுடன் கூடிய அம்மனும் காட்சி தருகிறார்கள். வலதுபுறத்தில் ஆண்டாள், வெங்கடேசரையும், தெற்கு நோக்கி விஷ்ணுவையும், கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்களுக்குப் பதிலாக நுழைவாயிலின் இடதுபுறத்தில் மோகினியையும், வலதுபுறத்தில் விஷ்ணு துர்க்கையையும் தரிசிக்கலாம்..நவநீதகிருஷ்ணன்:கிருஷ்ண என்றால் கருமை. நவநீதம் என்றால் வெண்ணெய். தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகிவிடும். மனிதன் தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல் அந்தப் பாலில் இருந்து பிறந்து அதிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெய்யைப் போல் பற்றற்ற நிலையில் இந்தப் பூமியில் வாழவேண்டும் என்பதை உணர்த்துவதே நவநீத தத்துவமாகும்.கருவறையில் ருக்மணி, சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கருணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அருகே உற்சவர்களான ருக்மணி, சத்யபாமா, ஆண்டாள் சமேதராக நவநீதகிருஷ்ணன் ஒருசேர அபூர்வ தரிசனம் தருகிறார்கள். நவநீதகிருஷ்ணனை வழிபட்டால் நலங்கள் பல வந்து சேரும்.இங்கு ருக்மணி லட்சுமி அம்சத்துடனும், பாமா பூமாதேவி அம்சத்துடனும் இருப்பதாக ஐதிகம். பக்தர்களின் பிரார்த்தனைகளை பூமாதேவி வானத்தில் உள்ள லட்சுமிதேவியிடம் எடுத்துரைக்கிறார். அதனை லட்சுமி தேவி பகவான் கிருஷ்ணரிடம் சமர்ப்பித்து அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேற வழிவகை செய்கிறார்..ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு:சொந்த மாமனாக இருந்தாலும் அதர்மம் செய்ததால் கம்சனைக் கொன்றான் கிருஷ்ணன். ரோகிணியில் பிறந்த உங்களை தாய் மாமன்கள் வெறுக்கிறார்களா? கவலைப்படாதீர்கள். ஒருமுறை இத்தலத்திற்கு ரோகிணி நட்சத்திரத்தன்று வந்து நவநீதகிருஷ்ணனுக்கு அபிஷேகம் மற்றும் தீபத்திற்கு நல்லெண்ணெய் வாங்கித் தந்து வழிபட்டால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். மாமன்களுடன் உறவு ஆயுள் முழுவதும் சுமுகமாக நிலைத்திருக்கும்.ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் நவநீதகிருஷ்ணனுக்கு வெகுவிமரிசையாக திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் பக்தர்கள் பிரார்த்தனை செய்துகொண்டு சுவாமி புறப்பாட்டை கோவில் உட்பிராகாரத்தில் நடத்துகிறார்கள். ரோகிணி நட்சத்திரத்தன்று 27 நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் 27 அகல் விளக்கில் தீபமேற்றி 27 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்யம் கிட்டும். வீடு, தோட்டம், கால்நடைகள் வாங்கும் யோகம் அமையும் என்பது ஐதிகம்.மேலும் புதுமணத் தம்பதியரும், குழந்தைப்பேறு வேண்டும் தம்பதியரும் தங்களுக்கு உகந்த நாளில் இக்கோவிலில் உள்ள புராதன சிறப்பு வாய்ந்த தவழும் குழந்தைக் கிருஷ்ணன் சிலையை அர்ச்சகர் மூலம் தரிசித்து, தங்களது பெயர், கோத்ரம், நட்சத்திரம், ராசி சொல்லி சங்கல்பமும், குங்கும அர்ச்சனையும் செய்து, கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெய், அவல், வெல்லம், உலர்திராட்சை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் மழலைச்செல்வம் மடியில் தவழ்வது நிச்சயமாம். இங்கு பிரசாதமாகப் பெற்ற வெண்ணெய்யை உண்டு குழந்தைப்பேறு பெற்றவர்கள் ஏராளம். இத்தலத்தில் பக்தர்கள் புதிய புல்லாங்குழல் வாங்கி வந்து கிருஷ்ணன் பாதத்தில் வைத்து பூஜை செய்து அதனை திரும்பப் பெற்று வீட்டிற்கு எடுத்துச் செல்வதைக் காணமுடிகிறது.1008 தாமரை மலர்களால் நவநீதகிருஷ்ணனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட நோய்களும் குணமாகுமாம்; நஷ்டத்தில் நடக்கும் தொழில்கள் இலாபத்தில் நடக்குமாம்; கர்மவினைகள் யாவும் நீங்குமாம்..தஞ்சை குருவாயூரப்பன்:பக்தர்கள் பலர் தங்களது குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்யமாக வாழ துலாபாரத்தில் குழந்தைகளின் எடைக்கு எடை வெண்ணெய், வெல்லம், வாழைப்பழங்கள், அவல், கற்கண்டு போன்றவை வைத்து அதை குருவாயூரப்பனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம்.குருவாயூரப்பன் கோவிலில் நேர்ந்தது கொண்ட துலாபார பிரார்த்தனைகளை இங்கும் நிறைவேற்றலாம். பக்தர்கள் இக்கோவிலை தஞ்சை குருவாயூர் என்றும் அழைக்கிறார்கள். இங்கு குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் துலாபார பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம்..அன்னப்பிரசன்னம்குருவாயூரைப் போன்று இத்தலத்திலும் ஆண் குழந்தைகளுக்கு 6, 8, 10 மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7, 9, 11 மாதங்களிலும் சோறு ஊட்டும் சடங்கான அன்னப்பிரசன்னம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தலத்தில் அன்னப்பிரசன்னம் செய்தால் குழந்தைகளின் உடல்நிலை மேம்படுவதோடு நீண்ட ஆயுளும் நோய்கள் அண்டாத வாழ்வும் அவர்களுக்கு உண்டாகிறது..அட்சய திருதியை அவல் முடிச்சு வழிபாடு:அட்சய திருதியை அன்று காலையில் வெகுவிமரிசையாக திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அன்றைய தினத்தில் பக்தர்கள் அவரவர் கையால் மூன்று கைப்பிடி அளவு அவலை எடுத்து புதுத் துணியில் வைத்துக் கட்டி, அந்த அவல் முடிச்சுகளைக் கையில் ஏந்தி ஒன்பது முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வது வழக்கம். இப்படி அவல் முடிச்சு சமர்ப்பித்து வழிபட்டால் குசேலர் பெற்ற குபேர சம்பத்துகள் கிட்டும் என்பது ஐதிகம்..கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்:வருகின்ற 6.9.2023, புதன் கிழமை தொடங்கி 16.9.2023 வரை பதினொரு நாட்கள் இத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. 6.9.2023 அன்று காலை 8 மணியளவில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இந்த உற்சவ நாட்களில் தினமும் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் உட்பிராகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இதில் ஒரு நாள் தவழும் குழந்தைக் கிருஷ்ணனை தொட்டிலில் வைத்து கிருஷ்ண ஜெயந்தி தாலாட்டுப் பாடல்களைப் பாடி மகிழ்வார்களாம்.கோவிலுக்கு வர இயலாத பக்தர்கள் கோகுலாஷ்டமி அன்று அவரவர் இல்லத்தில் மாலையில் கிருஷ்ணன் படத்திற்கு பூமாலை சாற்றி, தீபமேற்றி, தங்களது பிரார்த்தனை நிறைவேற படத்திற்கு முன்பாக புதிய மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கட்டி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வெண்ணெய், அவல், வெல்லம் நிவேதனம் செய்து வேண்டிக்கொண்டு வழிபட, நினைத்தவை யாவும் நவநீதகிருஷ்ணன் அருளால் அடுத்த வருட கோகுலாஷ்டமிக்கு முன்பே நிறைவேறிவிடுகிறதாம். பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் இங்கு நேரில் வந்து கிருஷ்ணனை தரிசனம் செய்து மஞ்சள் துணியில் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தை உண்டியலில் செலுத்துவது வழக்கமாம்..சிறப்பு நாட்கள்:தமிழ் வருடப் பிறப்பு, அட்சய திருதியை, வைகாசி கருடசேவை, நவநீத சேவை, ஆடிப் பூரம், கிருஷ்ணன் ஜெயந்தி 11 நாள் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, சங்கராந்தி, ரதசப்தமி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஜெயந்தி, மார்கழி மாதத்தில் தனுர் பூஜைகள், ரோகிணி மற்றும் அஷ்டமி சிறப்பு வழிபாடு எனப் பல நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.இக்கோவிலில் தினசரி காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு நடைபெறும் பூஜைகளில் பங்குகொள்ள புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம். நவநீதகிருஷ்ணனை தரிசனம் செய்யும் பக்தர்கள் அருகில் உள்ள விஜய ராமர், பங்காரு காமாட்சி அம்மன், மூலை அனுமார் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்..எங்கே இருக்கு?தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் மேலராஜ வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 7 - 11.30; மாலை 5 - இரவு 8.30.