-வி.பி.ஆலாலசுந்தரம்பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்கத் தலங்கள் திவ்ய தேசங்கள் எனப்படும். அதில் 9 ஆவது திவ்ய தேசமாக விளங்குவது தஞ்சாவூர் மாவட்டத்தில் கபிஸ்தலத்தில் அமைந்துள்ள கஜேந்திர வரதப் பெருமாள் (ஆதிமூலப்பெருமாள்) திருக்கோவிலாகும்..இத்தலத்தின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது ஸ்ரீமத் பாகவத புராணத்தில் 8 ம் ஸ்கந்தத்தில் காணப்படுகிறது.ராமாவதாரத்திற்குப் பின் இத்தலத்தில் காவிரிக் கரையில் முந்நூறு ஆண்டுகள் கடும் தவம்புரிந்தார் அனுமன். அப்போது அவருக்கும் பராசர முனிவருக்கும் இத்தலப் பெருமாள் மீது அதீத பக்தி ஏற்பட்டது. இருவரும் அவரிடம் கஜேந்திர மோட்சப் படலத்தை மீண்டும் இத்தலத்தில் நிகழ்த்தியருள வேண்டினர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றினார் ஆதிமூலப்பெருமாள். ஆஞ்சநேயருக்கு விஷ்ணு அருள்பாலித்த தலம் என்பதால் இது ‘கபிஸ்தலம்‘ எனப் பெயர் பெற்றது. (கபி என்றால் குரங்கு என்று பொருள்.).இந்திராஜூம்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தன். ஒருசமயம் அரண்மனைக்கு வந்த அகத்திய முனிவரை அவன் மதிக்கவில்லை. கோபம் கொண்ட முனிவர், ‘’நீ அடுத்த பிறவியில் யானையாகப் பிறப்பாய்!’’ எனச் சாபமிட்டார். தவறை உணர்ந்த மன்னன் மன்னிப்புக் கேட்க, ’’விஷ்ணுவால் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’’ என்றார் அகத்திய முனிவர். காஷ்யப முனிவர் நதியில் இறங்கி அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் கூஹீ என்ற கந்தர்வன் விளையாட்டாக முனிவரின் காலைப் பிடித்து இழுத்துத் துன்புறுத்தினான். கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாக மாறும்படி சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த கந்தர்வன் மன்னிப்பு கேட்டதால், ’’விஷ்ணுவால் நீ சாப விமோசனம் அடைவாய்!’’ என்றார், காஷ்யப முனிவர்..ஒருநாள் யானை குளத்தில் நீர் அருந்தச் சென்றபோது, அதன் வலது காலை ஒரு முதலை கடித்தது. எத்தனையோ முயன்றும் காலை விடுவிக்க முடியவில்லை. யானை, ‘ஆதிமூலமே’ என திருமாலை அழைக்க, கருட வாகனத்தில் பறந்து வந்து தனது சக்கராயுதத்தால் முதலையைத் தாக்க, இருவரும் விஷ்ணுவின் தரிசனத்தால் தங்கள் சுயரூபத்தை பெற்றனர். யானைக்கு கஜேந்திர மோட்சம் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்த கபிஸ்தலத்தில் கிழக்கு நோக்கி கஜேந்திர வரதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆதியில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் நம் காண்பது செம்புத்தகடால் வேயப்பட்ட நெடிதுயர்ந்த துவஜஸ்தம்பம். அதையடுத்து பெருமாளை நோக்கி கருடாழ்வார் சன்னதி உள்ளது. நாற்பது தூண்கள் தாங்கிய முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது..கருவறையில் பாம்பணையில் புஜங்க சயனத்தில் வலதுகரத்தில் சின் முத்திரை காட்டி ஆதிமூலப்பெருமாள் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். நாபிக்கமலத்தில் பிரம்மா அமர்ந்த நிலையில் உள்ளார். பெருமாளுக்குப் பின்புறம் ரமாமணி தாயாரும், செண்பகவல்லித் தாயாரும் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். கருவறை மீது ஐந்து கலசங்களைத் தாங்கிய மூன்று நிலை விமானம் கலை நுணுக்கத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.மூலவருக்கு முன்புறம் ரமாமணி தாயார் (பொற்றாமரையாள்), செண்பகவல்லித்தாயார் சமேத கஜேந்திர வரதர் ஆண்டாள் நாச்சியாருடன் உற்சவ மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றனர். சக்கரத்தாழ்வார், நரசிம்மர், விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனிச் சன்னதிகளும், 12 ஆழ்வார்கள் திருமேனிகளும் உள்ளன..இத்தலம் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. தல விருட்சமாக மகிழம்பூ மரமும், தீர்த்தமாக கஜேந்திர புஷ்கரணி மற்றும் கபில தீர்த்தமும் விளங்குகின்றன. வைகானஸ ஆகமப்படி பூஜைகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் இதுவும் ஒன்று. யானை மற்றும் முதலை ஆகிய விலங்கினங்களுக்கு பெருமாள் அருட் காட்சி தந்த தலம்.வைகாசி விசாகத்தன்று பிரம்மோற்சவம், தேரோட்டம், ஆடிப்பௌர்ணமி மூன்று நாட்கள் நடைபெறும் கஜேந்திர மோட்சம் ஆகியவை இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கியப் பெருவிழாக்களாகும். ஆடிப்பூரம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசியில் நவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன..கஜேந்திர வரதரிடம் வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறுகிறதாம். நம் மனதில் உள்ள குறைகளையும் கஷ்டங்களையும் பெருமாளிடம் சொல்ல, அவர் கருடன் மீதமர்ந்து விரைந்து வந்து அவற்றை நிவர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தீராத வியாதி உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து திருமஞ்சனம், ஆராதனைகள் செய்தால் விரைவில் நற்பலன் கிடைக்குமாம். குறிப்பாக ராகு, கேது தோஷ பரிகாரத்திற்கு ஏற்றத் தலம். இவர் தூய்மையான பக்தி கொண்டோருக்கு மோட்சம் அளிக்கவல்ல பெருமாள் என புராணங்கள் கூறுகின்றன. ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் என திருமழிசையாழ்வார் பாடுகின்றார்.இத்தனை சிறப்புகள் ஒருங்கே அமைந்த பவித்திரமான இத்தலத்திற்கு வாழ்வில் ஒரு முறையேனும் சென்று பெருமாளை சேவித்து அருள் பெற்று வாருங்களேன்!எங்கே இருக்கு?கும்பகோணம் - திருவையாறு சாலையில் பயணித்து கபிஸ்தலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம். பாபநாசத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.தரிசன நேரம் காலை 8 – பகல் 12; மாலை 4 - இரவு 7