-தஞ்சை இராசுயுகங்களில் இருண்டகாலம் எனப்படும் கடைசிக்காலத்தை கலியுகம் என்பார்கள்.‘கலிபுருஷனின் சித்து விளையாட்டால் கலியுகத்தில் சத்தியம், சுத்தம், பொறுமை, கருணை, இரக்கம், தேகபலம், ஞாபக சக்தி எல்லாமே குறைந்துபோகுமாம். பணத்தை வைத்துத்தான் ஒவ்வொருவரையும் எடைபோடுவார்களாம். ஏமாற்றுவதை புத்திசாலித்தனமாக நினைத்து வியாபாரம் நடக்குமாம்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேஷம் போட்டு வாழ்வார்களாம். லஞ்சம், ஊழல், கொள்ளை, களவு இதெல்லாம் சகஜமாகுமாம். மக்கள் பஞ்சத்தாலும் அரசுகள் விதிக்கும் வரிகளாலும் துன்பப்படுவார்களாம்.வியாதி பரவலாகக் காணப்படுமாம். அதிகக் குளிர், பனி, வாய்வு, உஷ்ணம், மழை ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் வாழ்நாள் படிப்படியாகக் குறைந்துபோகுமாம். ‘இவையெல்லாம் கலியுகம் எப்படி இருக்கும் என சுகப்பிரம்ம மகரிஷி சொன்னதில் ஒருபகுதிதான்..கலியுகத்தில் மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது அவசியம். அதற்கு ஏற்றத் தலமாக விளங்குகிறது தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீ கலியுக வேங்கடேசபெருமாள் ஆலயம். வாருங்கள், கண்கண்ட தெய்வமாக விளங்கும் அந்த கலியுக வேங்கடேச பெருமாளை தரிசிக்கலாம்!தஞ்சையை மராட்டிய மன்னர் ஆண்ட சமயம். அப்போது திருப்பதி வேங்கடவனுக்கு தஞ்சாவூரில் கோவில் கட்ட மன்னர் தீர்மானித்திருந்த நிலையில் ஒருநாள் அவர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், ’’தஞ்சையில் நீ கட்ட எண்ணியுள்ள கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ கலியுக வேங்கடேச பெருமாள், மகாலட்சுமி சமேத சதுர்புஜ வரதராஜபெருமாள் என இரு கோலத்தில் காட்சி தருவேன். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று நித்ய சொர்க்க வாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் வழியாகச் சென்றால் கிடைக்கும் வைகுண்ட பதவியை யாம் இத்தலத்திலேயே தந்தருள்கிறோம்’’ எனக் கூறி மறைந்தார்.திருப்பதி பெருமாளின் ஆசியால் மராட்டிய மன்னரால் தஞ்சாவூர் தெற்கு ராஜவீதியில் கட்டப்பட்டதுதான் இந்த கலியுக வேங்கடேச பெருமாள் ஆலயம். வடக்கில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதில் கிருஷ்ணரின் வரலாறு, நரசிம்ம அவதாரம் ஆகியவை சுதைச்சிற்பங்களாகக் காட்சிதருகின்றன. ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மகாமண்டபத்தை நீண்டதோர் கல் மண்டபம் இணைக்கிறது. இங்கு தசாவதாரங்களைக் குறிக்கும் வகையில் 10 கற்தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தை ஒட்டி திருச்சுற்றின் வடகிழக்கில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன..வைகானச ஆகமத்தைப் பின்பற்றும் இக்கோவிலில் நவகிரக சன்னதியில், சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், நடுவில் சூரியனுக்குப் பதிலாக சந்திரன் இருக்கிறார். இந்தச் சன்னதிக்கு தனி விமானமும் கலசமும் மேல்தளத்தில் கல்லினாலான யந்திரமும் உள்ளது. இங்குள்ள நவகிரகங்களை ஒன்பது சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிட்டும், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும், ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.முகமண்டபத்தை ஒட்டி கிழக்கே ஒரு மண்டபம் உள்ளது. அதன் நடுவே பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இம்மண்டபத்தின் விதானம், சுவர், உத்திரம் போன்ற பகுதிகளில் ராமகாதை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கும் ஆறு கல்தூண்கள் ஆறு சமயங்களைக் குறிக்கிறதாம்.இம்மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் நின்ற கோலத்தில் திருமாலும் (கலியுக வரதன்) மற்றொன்றில் அவரை வணங்கி நிற்கும் மராட்டிய தளபதி ஒருவரின் உருவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற நான்கு தூண்களையும் யாழிகள் தாங்கியுள்ளன. கலைக்கோட்டு முனிவர் (ரிஷிய சிங்கர்) மகளிர் அமைத்த பல்லாக்கில் பவனி வருதல் தொடங்கி ராமர் மணிமுடி சூடுதல் வரையிலான ராமாயண வரலாறு சிற்பங்களாகக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது..கருவறை கோஷ்டத்தில் பீடம் முதல் கொடுங்கை வரையில் கருங்கற் பணியாகவும், அதற்கு மேல் செங்கல் சுண்ணாம்பாலான கட்டுமானமாகவும் காணப்படுகிறது. மூலஸ்தான விமானம் நான்கு தளங்களுடன் வட்ட சிகரமும் சுதைச் சிற்பங்கள் கொண்டும் திகழ்கிறது.தெற்கே விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, இரணியன் - நரசிம்ம யுத்தம், பள்ளிகொண்ட பெருமாள், வராக மூர்த்தி, வாமனன், தேவியருடன் ராஜகோபாலன் ஆகிய சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.மேற்கே ரிஷிபத்திரி, சூலம் சுமந்த பிச்சாடனார், கொடிப் பெண், கூர்ம அவதாரம், மச்ச அவதாரம், வீணை ஏந்திய நாரதர், ஆடல்வல்லான், சிவகாமி மற்றும் அமர்ந்த கோலத் திருமால் ஆகிய சிற்பங்கள் அணி செய்கின்றன.வடபுறம் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், மயிலேறும் பெருமான், திருமால், பட்டாபிஷேக ராமன், எட்டுக் கரங்களுடன் மகிஷனை அழிக்கும் தேவி, அனுமன், கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன..சிவாலயங்களுக்குரிய கணபதி, கொற்றவை, பிச்சாடனார், நடராஜ பெருமான், முருகன், கஜசம்கார மூர்த்தி போன்றவை இந்த வைணவ ஆலயத்தில் இடம் பெற்றுள்ளதும், சிவனுக்குரிய வில்வ மரம் இக்கோவிலின் தல விருட்சமாக இருப்பதும் அபூர்வமானது.மூலஸ்தானத்திற்குச் செல்லும் நித்ய சொர்க்க வாசலின் வலது புறம் அனுமன் ஓவியமும், இடது புறத்தில் விநாயகர் ஓவியமும் உள்ளது. இந்த வடக்கு திசை நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முக மண்டபத்தில் கிழக்கே விநாயகரும், மூலவரை நோக்கி கருடாழ்வாரும், தென்கிழக்கில் ஐந்து தலை நாகரும், தெற்கே மகாலட்சுமி, சதுர்புஜ வரதராஜ பெருமாள், விஜயவீர அனுமன் ஆகியோரும் காணப்படுகிறார்கள்.திருச்சுற்றில் மேற்கே அமிர்த வெங்கடேஸ்வரர் சன்னதியும், அருகில் குலசேகர ஆழ்வாரும் காணப்படுகிறார். வடமேற்கில் வசந்த மண்டபம் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று உற்சவர்கள் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். வடக்கு சுவரில் கல்கி பகவான், திருபாற்கடல் பரந்தாமன் ஓவியம் வரையப்பட்டுள்ளது..கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சிதருகின்றனர். சிறிய அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கலியுக வேங்கடேச பெருமாள் சேவை சாதிக்கிறார். நின்ற திருக்கோலம். மூலவருக்கு முன்பாக உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இவர்களைக் கணப்பொழுது தரிசனம் செய்தால் போதும், கலியுக கஷ்டங்கள் யாவும் நீங்குமாம். திருப்பதி வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றிக் கொள்ளலாம். குறிப்பாக, பக்தர்கள் பலர் திருப்பதியில் வேண்டிக் கொண்ட பிரார்த்தனை திருக்கல்யாணத்தை இங்கு செய்துவருகிறார்கள். இத்தலத்தில் குழந்தைகளுக்கு காது குத்துதல் மற்றும் துலாபாரம் செய்வதால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதிகம்.பொதுவாக பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து இருக்கும். ஆனால் இக்கோவிலில் தினசரி பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய சொர்க்க வாசலைப் பயன்படுத்துவதால் இது எப்போதும் திறந்திருக்கும். எனவே இது நித்ய சொர்க்க வாசல் கோவிலாகிறது..திருவோண நட்சத்திரத்தன்று காலை 9 மணிக்கு சிரவண தீபமேற்றி மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம் செய்த தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. அன்று தலைவாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதன்மீது ஐந்து அகல் விளக்கு தீபமேற்றி பெருமாளை வழிபட்டால் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. மாலை 6 மணிக்கு உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனையும் மாலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுவது வழக்கமாம்.இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் விடியற்காலையில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அந்நாட்களில் மாவிளக்கு தீபமேற்றி பெருமாளை வழிபட்டால் வம்சம் தழைக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் தீப ஒளியில் மூலவரை தரிசிக்க முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தஞ்சையில் நடைபெறும் 24 கருடசேவையிலும், 15 நவநீத சேவைகளிலும் இத்தலத்து பெருமாள் சேவை சாதிப்பது வழக்கம்..விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி தோறும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது. ஐந்து தலை நாகரையும் கருடாழ்வாரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு - கேது தோஷங்கள் நீங்குமாம். விஜய வீர ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.சதுர்புஜ வரதராஜ பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும், முன்ஜென்ம கர்மவினைகளும் விலகிடுமாம். பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குவதில் வரதராஜ பெருமாளுக்கு அலாதி பிரியமாம். வெள்ளிக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு மகாலட்சுமிக்கு சிறப்பு அஷ்டோத்திர அர்ச்சனை நடக்கிறது.இதுதவிர திருவோணம், பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளிலும்; தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு, நாக சதுர்த்தி, கருடபஞ்சமி, தீபாவளி, சங்கராந்தி, குரு, சனி, ராகு – கேது பெயர்ச்சி ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.கலியுக கஷ்டங்கள் தீர்க்கும் வேங்கடேச பெருமாளை வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசிக்க தஞ்சாவூருக்கு வாருங்களேன்!.எங்கே இருக்கு?தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் (வடக்கு பக்கம்) நடந்து செல்லும் தொலைவிலேயே கலியுக வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.தரிசன நேரம்காலை 7 – பகல் 12; மாலை 5 - இரவு 8.30. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று நாள் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.