-இரா.இரகுநாதன்மாலவனுக்கு மகாராஜாக்கள் கட்டிய கோவில்கள் இந்த மண்ணில் ஏராளம். அதில் ஒன்றுதான் அரசர் கோவில் என்னும் தலத்தில் ஜனக மகாராஜாவால் கட்டப்பட்ட வரதராஜப்பெருமாள் ஆலயம்..ஒருசமயம் பூலோகத்துக்கு வந்த நாராயணன், பாலாற்றங்கரையில் வடக்கில் இருந்து தெற்கே ஓடும் நதி தீரத்தில் அரசமரத்தடியில் வாசம் செய்தார். அவரை வாரிசு வரம் வேண்டி அங்கு வந்த ஜனக மகாராஜா தொடர்ந்து பூஜை செய்து வழிபட்டு வந்தார்.ஒருநாள் பூஜைகாலத்தைத் தவறவிட்டுவிட்டு ஜனகர் தாமதமாக வர, அங்கு பெருமாளுக்கு பூஜை முடிந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. தன் உரிமை பறிபோனதாக அழுதுபுலம்பினார் ஜனகர்.அவர் முன் தோன்றிய பெருமாள், ’’ஜனகரே! நீர் தாமதமாக வருவதை உணர்ந்து உன் சார்பாக நானே பூஜை செய்துகொண்டேன்’’ எனச்சொல்லி அவரை ஆறுதல்படுத்தினார். இப்படி பக்தனுக்காக பூஜை செய்துகொண்டவர்தான் அரசர் கோவில் வரதராஜப்பெருமாள்..இந்நிலையில் ஜனகன் பூஜை நேரத்தைத் தவறவிட்டதையும், பெருமாள் தாமாக பூஜை செய்ததையும் அறிந்த இலக்குமி கோபம் கொண்டு இத்தலத்திற்கு வந்து ஜனகரைக் கடிந்துகொண்டாள். பெருமாளோ, ‘’நீயில்லாமல் பக்தர்கள் என்னை மட்டும் தரிசிக்கும் குறை நீங்குவதற்காக நானே பூஜை செய்துகொண்டு உன்னை இங்கு வரவழைத்தேன். இனி நீயும் இங்கு எழுந்தருளி நம்மை தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கச் செய்!’’ என்றார்.அன்றுமுதல் அறுபத்து நான்கு லட்சுமிகளுக்கும் பிரதானமான சுந்தர மகாலட்சுமியாக இலக்குமி இங்கேயே தங்கி, தம்மை வேண்டும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யங்களை அள்ளித்தருகிறாள்.ஜனகர் தான் செய்த தவறுக்கு பரிகாரமாக பெருமாளுக்கும் தாயாருக்கும் அங்கேயே தேவசிற்பி விஸ்வகர்மா மூலம் ஒரு கோயிலைக் கட்டினார். வரதராஜருக்காக ஜனகமகாராஜா கட்டியதால் இது அரசர் கோவில் என அழைக்கப்பட்டு, அதுவே பின்னர் ஊரின் பெயராகவும் ஆனது.ஜனகனின் பூஜையால் சீதை பூமியில் இருந்து மகளாகக் கிடைத்தாள். ஜனகருக்கு ஜானகி கிடைத்த இடம் கோயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஜானகிபுரம் என இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.அரசர் கோவில் மூலவர் வரதராஜப்பெருமாள் காஞ்சி வரதருக்கும் மூத்தவர். பாலாற்றங்கரையில் எழுந்தருளி ஜனகமகாராஜாவால் ஆராதிக்கப்பட்டவருக்கு ஆதிவரதர், கமல வரதராஜர் மற்றும் குருவரதராஜர் எனவும் பெயருண்டு..இப்பெருமாளை பிரம்மனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளான். ஒருசமயம், ஆணவத்தால் பிரம்மன் அலைய, சிவபெருமானால் அவன் தலை கிள்ளப்பட்டதால், அவனுக்கு தேகக்குறை ஏற்பட்டு பூஜை செய்யும் தகுதியை இழந்தான். பின்னர் முனிவர்கள், தேவர்கள் ஆலோசனைப்படி இப்பாலாற்றங்கரைக்கு வந்து ஜனகன் பூஜை செய்த பெருமாளை வணங்கி, குறை நீங்கி, இழந்த பிரம்மலோகப் பதவியை மீண்டும் பெற்றான்.பிரம்மனின் தலையைக் கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அது நீங்க அவர் ஆதிகாஞ்சி என்றழைக்கப்பட்ட இங்கு அக்ஷய திருதியை அன்று வந்து பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாரை வணங்க அக்ஷய (குறை நீங்குக) என நல்வாக்கு தாயாரிடமிருந்து கிடைத்தது. சிவனின் தோஷம் நீங்கியது. அதற்கு பிரதி உபகாரமாக தன் மூத்த மகன் விநாயகரை அட்சயப் பாத்திர விநாயகர் என்ற பெயரோடு தாயாருக்குத் துணையாக சிவபெருமான் இருத்தியதாக வரலாறு உள்ளது. ` தனிக்கோவில் தாயாருக்கு பெருந்தேவி என்றும், சுந்தர மகாலட்சுமி என்றும் பெயர் உண்டு. முப்பெரும் சக்திகளின் ஆதாரப் பீடத்தில் பத்மாசனத்தில் அன்னை அமர்ந்த கோலத்தில் காட்சிதருகின்றார். இந்தத் தாயாரின் வலது காலில் ஆறுவிரல் காணப்படுவது ஓர் அதிசய அமைப்பாகும். இதுகுறித்தும் ஒரு சம்பவம் உள்ளது..சுக்கிரன் தேவ சக்தியை அடைய குறுக்கீடுகள் பல வந்தன. அதனால் அவன் சுந்தர மகாலட்சுமித் தாயாரை வேண்டி, தடைகள் நீங்கப்பெற்றான். தன்னை சரணடைந்த சுக்கிரனை மகாலட்சுமி தனது வலது திருவடியில் ஆறாவது விரலாகச் சேர்த்துக்கொண்டாள். அன்றிலிருந்து தன்னை வணங்குவோருக்கு எவ்வகை தோஷங்கள் இருந்தாலும், அதை நீக்கி சுக்கிரனின் அனுக்ரகத்தைத் தரச்செய்கிறாள். குபேரன் தாயார் சந்நதியிலேயே எழுந்தருளியுள்ளார்.மேற்கு நோக்கிய கோவில். பலிபீடம், கொடிமரத்தை ஒட்டி கருடாழ்வார் சன்னதி கிழக்கு முகமாக உள்ளது. கருவறையில் மூலவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ளார். திருச்சுற்றில் ஆண்டாள், தாயார் சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்கே திருவடி ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். தலவிருட்சம் அரசு. இக்கோவிலில் 1251 ஆம் ஆண்டு காலத்திய பாண்டியன் சடையவர்மன் சுந்தர பாண்டியன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், ராஜ நாராயண சம்புவராயன் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலின் இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமான் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன..சனி, ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அந்நாட்களில் தாயாரையும் பெருமாளையும் வேண்டினால் செல்வம் சேரும், தடைப்பட்ட திருமணம் தடை நீங்கி நடக்கும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, நல்ல மதிப்பெண் பெற வியாழக்கிழமைகளில் குருவரதராஜப்பெருமாளை வணங்கும் பழக்கம் உண்டு.சித்திரை தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பெளர்ணமி, திருஊறல் விழா, அட்சய திருதியை, ஆடிப்பூரம், புரட்டாசி சனி வாரங்கள், குறிப்பாக மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், பாலாற்றில் இரவில் நடைபெறும் திருவூறல் திருவிழாவே பெரிய விழாவாகும்.இந்த ஆலயத்தில் சுக்ர கோமுகம் உள்ளது. அதற்கு ஆறு சுக்ரவாரங்கள் திருமஞ்சனம் செய்து மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் திருமணம் கைகூடும்; குழந்தை பாக்கியம் உண்டாகும்; செல்வம் சேரும் என்பது நம்பிக்கை!.எங்கே இருக்கு?காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் கூட்டுரோடிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், படாளம் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் அரசர் கோவில் இருக்கிறது. செங்கல்பட்டிலிருந்து நகரப்பேருந்துகளும், படாளம் கூட்டு ரோடிலிருந்து ஷேர் ஆட்டோக்களும் உள்ளன. தரிசன நேரம்காலை 7 – நண்பகல் 11; மாலை 4 – இரவு 7.