Bakthi Magazine
தெய்வத்தின் இருப்பை உணர்த்தும் சக்தி நிலை நிறுத்துதல்!
சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு, பருவமழை பொய்த்து பஞ்சநிலை ஏற்பட்டதால், ஒட்டன்சத்திரம் பக்கம் உள்ள தாராபுரம் என்னும் ஊரிலிருந்து விவசாயக் குடிமக்கள் சிலர் அங்கிருந்து கிளம்பி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அன்றைக்கு பாளையப்பட்டாக இருந்த போடிநாயக்கனூர் வந்து சேர்ந்தனர். பாளையக்காரர் போடைய நாயக்கர் என்பவர் பெயரால் இவ்வூர் போடைய நாயக்கனூர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி போடிநாயக்கனூர் என ஆனது.