-சந்தான கிருஷ்ணன் அள்ள அள்ளக் குறையாத அதிசயங்களின் புதையலாக விளங்குபவை மத்வமட சமஸ்தானங்களாகும். அம்மடங்களின் பீடாதிபதிகளாக அமர்ந்த ஸ்வாமிகள் ஒவ்வொருவரும் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார்கள்..அவ்வகையில், ஸ்ரீமத்வாச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீஉத்தராதி மடத்தின் இருபத்தெட்டாவது பீடாதிபதியாக அமர்ந்த ஸ்ரீசத்தியதர்மதீர்த்தரும் தாம் அருளாட்சி புரிந்த காலத்தில் பற்பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.1743 ஆம் வருடம் அவதரித்த இவர் நவரத்தின புருஷோத்தமாச்சார்யா என்று அழைக்கப்பட்டார்.இளமைக்காலத்தில் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த புருஷோத்தமாச்சார்யாவின் கனவில் வந்த ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள், “எதிர்காலத்தில் நீ உத்தராதிமடத்தின் தலைமையை ஏற்பாய். உனது தலைமையின் கீழ் இம்மடம் மிகுந்த பெருமையையும் செல்வச்செழிப்பையும் பெற்று விளங்கும்” என்று அருளாசி வழங்கினார்.ஸ்ரீஉத்தராதி மடத்தின் ஸ்ரீசத்யபோத தீர்த்தரிடம் சாஸ்திரப் பாடங்களைப் பழுதறக் கற்ற புருஷோத்தமாச்சார்யாவின் ஞானம், வைராக்கியம் ஆகியவற்றை அவதானித்த ஸ்ரீஸத்தியவர தீர்த்தர், தமக்கு அடுத்தபடியாகப் புருஷோத்தமாச்சார்யாவைப் பீடாதிபதியாக்கியதுடன் அவருக்குத் ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தர் என்ற சந்நியாஸ பெயரையையும் வழங்கினார்.ஸ்ரீராகவேந்திரர் ஆசிர்வதித்ததற்கு இணங்க, ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தர் தலைமை வகித்த காலமாகிய முப்பத்துமூன்று ஆண்டுக்காலமும் ஸ்ரீஉத்தராதி மடத்தின் சரித்திரத்தில் ஒரு பொற்காலமாகவே திகழ்ந்தது. மைசூர் அரச பரம்பரை, மராட்டிய மன்னர் பரம்பரை, ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் பரம்பரை, மைசூர் அரண்மனையில் பணிபுரிந்த திவான் பூர்ணையா ஆகிய பலரும் ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்ததுடன், ஸ்ரீஉத்தராதி மடத்துக்குப் பல்வேறு நன்கொடைகளையும் வாரி வழங்கினர். யானைகள், குதிரைகள் உள்ளிட்ட பரிவாரங்களுடன் ஸ்வாமிகள் செல்வதைப் பார்க்க ஒரு பேரரசனின் நகர்வலம் போலவே இருக்குமாம்.ஒருமுறை ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தரின் பூஜையை தரிசித்து அவரிடம் தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்குச் சுமார் பன்னிரண்டாயிரம் பக்தர்கள் காத்திருந்த வேளையில் பலத்த மழை பெய்ததில் பலரும் சிரமப்பட்டனர். அதைக்கண்ட ஸ்வாமிகள் தமது கண்களை மூடிக்கொண்டு தியானிக்கத் தொடங்கியதும் அந்தப் பெருமழை சட்டென்று நின்று பூஜை தொடர வழிவகை செய்தது.வேறு ஒரு தருணத்தில் ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தர் தாம் தங்கியிருந்த ஊரிலுள்ள சிவன் கோயிலில் ருத்ராபிஷேகம் செய்து முடித்துவிட்டுத் துறவு நெறிப்படி பிக்ஷை ஏற்கும் முன்பு, உடலெங்கும் திருநீறு பூசிச் சிவப்பழமாகத் தோற்றம் அளித்த முதியவர் ஒருவர் அவரிடம் வந்தார். ஸ்வாமிகள் பிக்ஷை ஏற்பதற்கு முன்பு தமக்கு உணவு வழங்கவேண்டும் என்று கூறிய அந்த முதியவருக்குத் தமது கையாலேயே உணவு பரிமாறிய ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தர், சந்தனம், தாம்பூலம், தட்சிணை, மலர்மாலை உள்ளிட்ட மரியாதைகளுடன் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அதன் பிறகே தாம் பிக்ஷை எடுத்துக் கொண்டார்.அன்று மாலை ஈசுவரன் சந்நதி திறந்தபொழுது மூலஸ்தானத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியின் மீது ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தரால் அளிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் இருந்ததைப் பார்த்த சிஷ்யர்கள் அனைவரும், ஸ்வாமிகளின் கையால் பரிமாறப்பட்ட உணவை உண்டது சாட்சாத் பரமேஸ்வரனே என்பதை உணர்ந்து பெருமிதம் அடைந்தனர்.ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தர் ஸ்ரீமத்பாகவத உரைநூல் உட்பட பல்வேறு துவைத தத்துவ நூல்களையும் இயற்றியருளியதுடன், தமக்கு அடுத்த மடாதிபதியாக ஸ்ரீசத்தியசங்கல்ப தீர்த்தரை நியமித்தருளினார்.ஸ்ரீசத்தியதர்ம தீர்த்தருடைய பிருந்தாவனம் ஷிவமொக்காவுக்கு அருகில் உள்ள பத்ரா நதிக்கரையில் உள்ள ஹோலேஹொன்னூர் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ளது. இவரது ஆராதனைத் திருநாள் வரும் 13.8.2023 (ஆடி 28ஆம் தேதி) அன்று அமைகின்றது..நதியில் கிடைத்த முருகன்! ஒருசமயம் கேரளத்திலுள்ள அழகிய கிராமமான உம்பிழியில் வசித்தவர்களிடையே பிரிவினை ஏற்பட்டது. ஒரு பிரிவினர் கீழக்குளக்கரைக்குச் சென்று வசித்தனர். ஆனால், மற்றவர்கள் விடாமல் அவர்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர்.கீழக்குளக்கரையில் வசித்தவர்களில் ஒருவர் தீவிர முருகபக்தர். அவர் ஆடிக்கிருத்திகைக்கு பழநியாண்டவரிடம் முறையிடச் சென்றார். அங்கு அந்த பக்தர் தங்கியபோது இரவில் பாலதண்டாயுதபாணி அவர் கனவில் தோன்றி, “கொடுந்துறை நதியில் எனது விக்ரஹம் உள்ளது. அதைக் கண்டெடுத்து நிறுவி கோயில் கட்டி ஆராட்டு நடத்து. எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும்” என்றார். ஊர் திரும்பிய அவர், கீழக்குளக்கரையில் வாழும் மற்றவர்களிடம் தன் கனவைத் தெரிவித்தார். அவர்களும் கொடுந்துறை நதியில் மூழ்கி, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தனர். இங்குள்ள சுப்ரமணியரின் கைவேலின் கூரிய முனை கீழ்நோக்கி இருப்பது ஒரு விசேஷம். இதை மாற்றியமைக்க சோழி போட்டுப் பார்த்ததில் கூடாது என்ற பதில் வந்துள்ளது.. கோவிலின் முன்புறமுள்ள வாவி ஒரே சமயத்தில் 2000 பேர் நீராடுமளவு விசாலமானது. வடபுறமுள்ள தீர்த்தக்கிணற்றில் சாளக்கிராமம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாலயத்தில் தினசரி 5 படி அரிசியில் சுத்தான்னம் நிவேதனம் செய்யப்படுகிறது. கனகாபிஷேகமும், சந்தனாபிஷேகமும் இங்கு விசேஷம். அரவணைப்பாயசமும் உண்டு. ஆடிக்கிருத்திகையில் இங்கு காவடித் திருவிழா கொண்டாடப்படும். கோட்டயத்துக்கு தெற்கே எம்.சி. ரோட்டில் (22 கி.மீ. தொலைவு) செங்கணாச்சேரியில் பெருன்னா என்ற கிராமத்தில் இவ்வாலயம் உள்ளது. -ஆர்.சாந்தா, மயிலாப்பூர்.