எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை “பக்த பராதீனன்”என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் போற்றுவர். தன்னுடைய பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர் என்பது இதன் பொருளாகும்.இவ்வுலகில் இதுவரையில் அவதரித்த விஷ்ணு பக்தர்கள் அனைவரிலும் முதலிடத்தில் வைத்துப் போற்றத் தக்கவர்கள் ஆழ்வார்களே ஆவர்.அவ்வாழ்வார்களுள், திவ்யதேசத்து எம்பெருமான்களிடம் சகஜமாக பேசியும், ஊடல் செய்தும் தமது ஆழமான பக்தியை வெளிப்படுத்தியவர் திருமங்கையாழ்வார். பஞ்சகிருஷ்ணத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் அருள்பாலிக்கும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளை நம் திருமங்கையாழ்வார் தமது திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்த பொழுது அப்பாசுரங்களின் ஆழ்பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அப்பெருமாளின் திருமுகத்தில் தெரிந்தது.இதனை உணர்ந்து கொண்ட திருமங்கையாழ்வார் சற்றும் தயங்காமல், “கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே!” என்று அழைப்பு விடுத்தார்.“ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளே, அடியேனுடைய பாசுரங்களின் ஆழ்பொருளை நீர் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் அதனை உபதேசிக்கத் தயாராக இருக்கிறேன்” என்ற ஆழ்வாரின் துணிச்சலான வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பெருமாள் –“ஆழ்வாரே, உம்முடைய இந்த அவதாரம் முடிந்து பல நூற்றாண்டுகள் கழித்துப் புண்ணியமான இந்தச் சோழ நாட்டில் மீண்டும் அவதரிப்பீர். அப்பொழுது நாமும் அவதாரம் செய்து உம்முடைய சிஷ்யனாக இருந்து உம்மிடம் இருந்து சகல விசேஷார்த்தங்களையும் கற்றுக்கொள்கிறோம்!” என்று பதிலளித்தார்.அதன்படியே, ஸ்ரீராமாநுஜரின்அவதாரகாலத்திற்குப்பிறகுநஞ்சீயர்என்றஆசாரியருடையசிஷ்யராகநம்பிள்ளைஎன்பவர்அவதரித்தார்..திருமங்கையாழ்வாரின அம்சமான இவர் அவ்வாழ்வாரின் அவதார தினமாகிய கார்த்திகைமாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் இப்பூவுலகில் அவதரித்தார்.அதன் பிறகு 1167 ஆம் வருடம் திருவெள்ளியங்குடிக்கு அருகிலுள்ள சேங்கனூர் எனப்படும் சங்கநல்லூரில் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் திருநட்சத்திரமாகிய ஆவணி மாதம் ரோகிணி நன்னாளில் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை அவதரித்தார்.திருமங்கையாழ்வாரின் அம்சமாகிய நம்பிள்ளையிடம் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளின் அம்சமாகிய ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை சிஷ்யராக சேர்ந்து சகல சாஸ்திரங்களையும் பழுதறக் கற்றார். அத்துடன் திவ்வியப்பிரபந்தம் உள்ளிட்ட தெய்வீக நூல்கள் பலவற்றுக்கும் அருமையான உரைநூல்களை எழுதி “வியாக்கியான சக்கரவர்த்தி” என்ற பட்டப்பெயரையும் பெற்றார்.ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையின் திறமையை அறிந்து வியந்த நம்பிள்ளை, ஸ்ரீநம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுதும்படி பணித்தார். அதனைச் சிரமேற்கொண்டு ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை எழுதிய விளக்கவுரை இருபத்துநாலாயிரப்படி வியாக்கியானம் என்று அழைக்கப்பட்டது. (ஒற்று எழுத்துகளைத் தவிர்த்து முப்பத்திரண்டு எழுத்துகள் கொண்டது ஒரு படியாகும். இவரது வியாக்கியானம் இருபத்துநான்காயிரம் படிகள் கொண்டது).திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களில் உள்ள சில வரிகளைத் தொகுத்து இவர் அருளிய பாசுரப்படி ராமாயணம் ஸ்ரீவைஷ்ணவர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த படைப்பாகும்.பக்தருக்கு வாக்களித்த ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளின் அம்சமாக அவதரித்த ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையின் அவதாரத் திருநாள் இவ்வருடம் 7.9.2023 (ஆவணி 21 ஆம் நாள்) அன்று அமைகின்றது. - சந்தான கிருஷ்ணன் .இன்பங்களிலெல்லாம் பெரியது!இல்லறத்தார் மேற்கொள்ள வேண்டிய தலையாய அறம் - தானம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஈத்துவக்கும் இன்பமே நமக்குக் கிடைக்கக்கூடிய இன்பங்களிலெல்லாம் பெரியது என்பதையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி மனமுவந்து பிறர்க்குப் பொருள் அளித்தல் தானம் எனப்படுகிறது. தானம் தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என மூன்று வகையாக நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.அறவழியில் ஈட்டிய பொருளைக் குற்றமில்லாத அருந்தவத்தோர்க்குக் கொள்க எனப்பணிந்து மனமுவந்து கொடுத்தல் தலைப்படுதானம். பிறர் நிலைமை கண்டு மனமிரங்கி அவருக்கு உதவும் நோக்கத்தோடு ஈதல் இடைப்படுதானம். கைம்மாறு கருதியோ, புகழ்பெற வேண்டும் என்ற அச்சத்தினாலோ சுயநல அடிப்படையிலான வெவ்வேறு காரணங்களுக்காக ஈதல் கடைப்படுதானம்.தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்குச் செய்யக்கூடிய சேவைகளில் சிறந்ததும் தானங்களில் மிக உயர்ந்தது என்று கூறப்படுவதும் அன்னதானமே. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவிடுதல் என்பது மட்டுமல்ல; பிற உயிர்களுக்கு உணவளித்தலாகிய அறச்செயலும் அன்னதானம்தான்.பெரிய அளவில் பொது இடங்களில் செய்யப்படுவதுதான் அன்னதானம் என்று கருதக்கூடாது. விடியற்காலையில் வீட்டுவாசலில் அரிசி மாவினால் கோலம் போடுவது நம் மரபு. வாசலில் கோலம் போட்டதும் சிறு உயிரினங்களான எறும்பு, குருவி, அணில் போன்றவை கோலத்தில் உள்ள மாவை உண்பதைக் காணலாம். சிறுஜீவராசிகளுக்கு உணவளித்தலாகிய ஒருவகை அன்னதானம் இது.தற்போது பல வீட்டுவாசல்களில் ஸ்டிக்கர் கோலம், கல்மாவுக்கோலம் போன்றவற்றைத்தான் காணமுடிகிறது. கோலம் போடுவதற்கான அடிப்படைத் தத்துவத்தையே மறந்து அழகுக்காக இவ்வாறு செய்வது ஏற்புடையதாகாது. இனியாவது நம் மரபை மீண்டும் கடைப்பிடித்து அரிசி மாவினால் கோலம் போடுவோம். சிறு உயிரினங்களுக்கும் உணவிடுவோம். - எம். நிர்மலா, வாணரப்பேட்டை.