-சந்தான கிருஷ்ணன் எம்பெருமானார் ஸ்ரீராமாநுஜரின் முக்கியமான சிஷ்யர்களில் ஒருவர் முதலியாண்டான். இவருடைய திருக்குமாரராகிய கந்தாடையாண்டான் ஸ்ரீரங்கநாதருடைய பிரஸாதத்தின் மகிமையால் அவதரித்தவர்..பிற்காலத்தில் இப்பரம்பரையில் அவதரித்த தேவராஜ தோழப்பர் என்ற மஹானின் திருக்குமாரராகத் தோன்றியவரே கந்தாடை அண்ணன். வாதூல கோத்திரத்தில் இவர் அவதரித்தபடியால் இவர் கந்தாடை வாதூல அண்ணன் என்றும் அழைக்கப்படுகின்றார்.பெற்றோர் இவருக்கு வரதநாராயணன் என்ற திருநாமத்தை இட்டு மகிழ்ந்தனர். ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவரதநாராயணருடைய சிஷ்யர்களாகிய கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை நாயன் உள்ளிட்ட எண்மரையும் அஷ்டதிக் கஜங்கள் என்று அழைப்பர்.இவர் நாள் தவறாமல் ஸ்ரீரங்கநாதரின் திருப்பள்ளியெழுச்சி (சுப்ரபாத சேவை), திருவீதிப் புறப்பாடு உள்ளிட்ட சேவைகளில் பங்கேற்று வந்தார். ஸ்ரீரங்கநாதரின் சுப்ரபாதசேவையை ஒரே ஒரு நாள் தரிசிக்காவிடினும் தமது கண்பார்வையே போய்விடும் இன்று இவர் பக்தியுடன் கூறுவாராம்..இவருடைய பக்தியைச் சோதிக்க நினைத்த ஒரு சிலர் திருக்கோயில் அர்ச்சகர்களிடம் சொல்லி மறுநாள் காலையில் வழக்கத்தைவிட சீக்கிரமாகவே சுப்ரபாதசேவையை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதனை ஒப்புக்கொண்டு மறுநாள் அதிகாலையில் திருக்கோயிலுக்கு வந்த அர்ச்சகர்களால் ஸ்ரீபெரியபெருமாளின் கருவறைக் கதவுகளைத் திறக்க முடியவில்லை.அதே நேரம் தமது திருமாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த வரதநாராயணரை, “சுப்ரபாத சேவைக்கு நேரமாகிவிட்டது, எழுந்திருங்கள் அண்ணா!” என்று அவருடைய தம்பி எழுப்பினாராம். சட்டென்று எழுந்து கொண்ட வரதநாராயணர், உடனடியாக நீராடித் திருமண் அணிந்துகொண்டு சுப்ரபாதச் சேவைக்குத் தம்பியுடன் கிளம்பிச் சென்றார். திருக்கோயில் துவஜஸ்தம்பத்தின் அருகில் வணங்கி விட்டு எழுந்தால் அவருடன் வந்த தம்பி அங்கில்லை. தாம் மட்டுமாவது சுப்ரபாதசேவையைப் பெற்றுவிட வேண்டுமென்று வரதநாராயணர் விரைந்து உள்ளே சென்றார். கருவறையை அவர் நெருங்கியவுடன் அதன் கதவுகள் எளிதாகத் திறந்து கொண்டனவாம்..மெய்சிலிர்த்தபடி எம்பெருமானின் சுப்ரபாத சேவையைக் கண்ணார தரிசித்தவர், உறங்கிக்கொண்டிருந்த தம்மை, “அண்ணா எழுந்திருங்கள்’’ என்று கூறி எழுப்பியது சாட்சாத் திருவரங்கனே என்பதை உணர்ந்து நெஞ்சம் உருகினார்.திருவரங்கப் பெருமானால் “அண்ணன்”என்று அழைக்கப்பட்டதால் அன்று முதல் அவருக்குக் “கந்தாடை அண்ணன்” என்ற திருப்பெயர் நிலைத்துவிட்டது. ஸ்ரீவைஷ்ணவர்களிடையே “கோயில்” என்பது ஸ்ரீரங்கத்தைக் குறிக்கும். ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்து வந்த கந்தாடை அண்ணனுக்குக் “கோயில் அண்ணன்’’ என்ற பெயரும் உண்டாயிற்று..முதலியாண்டான் வம்சத்தவர்களுக்குக் கிடைத்து வந்த திருவரங்கம் பெரியகோயில் மரியாதைகளை ஸ்ரீமணவாள மாமுனிகள் மீட்டுக் கொடுத்தார். ஸ்ரீரங்கநாதனே சிறு பாலகனாக வந்து “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் தனியன் எனப்படும் ஸ்லோகத்தால் பாராட்டப்பட்ட ஸ்ரீமணவாள மாமுனிகளின் முக்கியமான சிஷ்யராகக் கோயில் கந்தாடை அண்ணன் விளங்கினார். மேலும், தம்முடைய சிஷ்யர்கள் பலரையும் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருவடிகளைப் பணியச் செய்து அவர்களுக்கு பஞ்சசம்ஸ்கார தீட்சையைப் பெற்றுத்தந்தார்.ஸ்ரீரங்கம் பெரியபெருமாளால் “ஜீயர் அண்ணன்”எனவும், காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாளால் “ஸ்வாமி அண்ணன்”என்றும் சிறப்பிக்கப்பட்ட ஸ்ரீகோயில் கந்தாடை வாதூல அண்ணன் பக்தியுடன் சமைத்த உணவையே ஸ்ரீமணவாளமாமுனிகள் தம்முடைய இறுதிக்காலங்களில் உகந்து அமுதுசெய்தருளினார்.இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஸ்ரீகோயில் கந்தாடை வாதூல அண்ணனின் அவதாரத் திருநாள் வரும் 28.9.2023 (புரட்டாசி 11) அன்று அமைகின்றது.