பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் இணைந்து செயல்பட முடியுமா? ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதரித்தது உயந்த நோக்கமாகிய எல்லா மதங்களுக்கிடையேயான சமயசமரசம் மற்றும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தவே. எனவே அவருடைய ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்பட முடியும்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் பல்வேறு ஆன்மிகச் சாதனைகளைச் செய்தார். அவர் இயேசு கிறிஸ்துவையும், நபிகள் நாயகத்தையும் தரிசித்திருக்கிறார். இந்துமதம் மட்டுமில்லாமல் இஸ்லாம், கிறிஸ்தவம் மதங்களையும் பின்பற்றியிருக்கிறார்.சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோயிலின் முக்கிய நுழைவுவாயிலில் இந்து, பெளத்தம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களின் சின்னங்கள் இருக்கின்றன. இதுபோலவே தி.நகர், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்தின் பிரையர் ஹாலிலும் மற்ற மதங்களைச் சேர்ந்த சின்னங்களையும் வைத்திருக்கிறார்கள். ‘ஊர் கூடி தேர் இழுத்தல்’என்ற முதுமொழி ஒன்று இருக்கிறது. இந்த முதுமொழிக்கு ஏற்ப அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்தே ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் செல்கிறது.இந்தக் கேள்விக்கு அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் வாழ்க்கையில் நடைபெற்ற சிலவற்றைச் சொல்லவிரும்புகிறேன்.அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் பக்தர்களில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். ஒருமுறை அவர்களில் ஒருவர் அன்னையாரிடம், “அம்மா, நீங்கள் ஓர் இந்து. முஸ்லீம்களின் திருவிழாக்களில் நீங்கள் ஏன் வேண்டுதல் செய்கிறீர்கள்? படைப்பதற்காக இனிப்புகளை ஏன் அனுப்புகிறீர்கள்?’’ என்று கேட்டார்.அதற்கு அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், “அனைவருக்கும் கடவுள் ஒருவரே அல்லவா! உங்கள் குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ணர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றினார்; இஸ்லாம் நெறி சாதனைகள் செய்தார்; நமாஸ் செய்தார். எல்லாம் ஒன்றுதான். பெயர்தான் வேறு!’’ என்றார்.ஜாதி, மதம் பேதம் கடந்த அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் பிள்ளைகளான நாங்களும் ஜாதி மதம் கடந்து இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்கிறோம். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பேரருளால்தான் நான் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியராக முடிந்தது. இப்போது மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக என்னை இருக்கும்படி செய்திருக்கிறார்.சென்னையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அகமதியா பிரிவைச் சேர்ந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்று நான் ஒருமுறை அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினேன். அது முஸ்லீம்களுக்கு ஏற்புடைய வகையில் அமைந்திருந்தது.மதுரையில் கிறிஸ்துவ அமைப்பினர், ‘சமய சமரச கூட்டம்’ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அவர்களுடைய அழைப்பிற்கிணங்க இரண்டு முறை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்துமதம் பற்றி உரை நிகழ்த்தியிருக்கிறேன்.மதுரையில், ‘பிரம்மகுமாரிகள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அந்தச் சங்கத்தைச் சேர்ந்த அமைப்பினர் ஒரு சமய சமரச கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்று நான் அந்தக் கூட்டத்தில் இந்துமதத்தின் பிரதிநிதியாகச் சென்று உரை நிகழ்த்தியிருக்கிறேன்.மதுரைக்கு அருகில் செந்துறை என்ற ஊர் இருக்கிறது. அங்குள்ள முஸ்லீம்கள் ஒன்று சேர்ந்து ஒரு பள்ளிவாசல் கட்டியிருந்தார்கள். இதன் முக்கிய பொறுப்பில் இருப்பவர் டாக்டர் அப்துல் லதீப். நான் அவருடைய அழைப்பின் பேரில் அங்கு சென்று, ரிப்பன் கட் செய்து அந்த பள்ளிவாசலை திறந்து வைத்தேன். அந்த பள்ளிவாசலுக்குள் முதன் முதலில் காலடி எடுத்து வைத்ததும் நான்தான்..மதுரை, பார்க்டவுன், தபால்தந்தி நகர் 4-ஆவது தெருவின் கடைசிப் பகுதியில் வலது பக்கம் திரும்பி 2-ஆவது தெருவில் இடது பக்கத்தில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. இந்தப் பள்ளிவாசலில் இஸ்லாமிய அமைதி மையம் சார்பில் ‘சமய சமரச கூட்டம்’ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். 2022-ஆம் ஆண்டு அங்கு சென்றும் நான் இந்து மதம் பற்றி உரை நிகழ்த்தியிருக்கிறேன். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மத்திய அரசிடம் காட்டும் நெருக்கத்தை மாநில அரசுகளிடம் காட்டுகிறதா?ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அரசியல் சார்பற்ற தொண்டு நிறுவனமாக இருக்கிறது. அதற்கு மத்திய, மாநில அரசு என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. அரசியல் ஆதாயத்திற்காக நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த அரசியல் அமைப்புகளுடன் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு தொடர்பு கிடையாது. மக்களின் நன்மைக்காக ஆன்மிகத்தை வளர்க்கப் பாடுபடும் எந்த அரசையும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வரவேற்கும்.மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அதனால்தான் ‘நரேந்திரர்’என்ற பெயரை அவருக்குச் சூட்டியிருக்கிறார்கள்.ராஜ்கோட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளை இருக்கிறது. இந்த மடத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி வாலண்டியராக இருந்திருக்கிறார். அவர் குஜராத் முதலமைச்சராக ஆவதற்கு முன்பே அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சராக இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்த மாணவர்தான். சமீபத்தில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’தன்னுடைய 125-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. அதை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிட்டது. இந்த மலருக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவர் மாண்புமிகு கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி. அவர் 1970 ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்ற கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரா திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்..1972, ஜனவரி 7-ஆம் தேதி சென்னை, விவேகானந்தா கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் பற்றி மாண்புமிகு மு.கருணாநிதி ஒரு சிறப்புரை நிகழ்த்தினார். அதன்பிறகு அவர் ‘விவேகானந்தர் இல்லம்’ சென்னை மடத்திற்கு குத்தகைக்குக் கிடைப்பதற்கு உதவினார்.சென்னை, மெரினா கடற்கரையிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் விவேகானந்தர் இந்தியக் கலாசாரக் கண்காட்சியின் துவக்க விழா 1999 டிசம்பர் 20-ஆம் நாள் நடைபெற்றது. விழாவில் முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்கள் தன்னுடைய சிறப்பு சொற்பொழிவில், “உலகில் இந்தியன் தலைநிமிர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் விவேகானந்தரின் எண்ணம். சிகாகோ சென்று உரையாற்றியபோதும் அதற்காகத்தான் அவர் பாடுபட்டார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுயான் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பாடிய வழியில் நம்முடைய விவேகானந்தர் ஆழமாகச் சிந்தித்திருக்கிறார் என்பதை நாம் எண்ணியெண்ணி மகிழ்ச்சியடைகிறோம். அவருடைய ஓங்கிய எண்ணம் உலக அரங்கில் இந்தியன் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதுதான். அதை அவர் வெளிநாடுகளில் ஆற்றிய ஒவ்வொரு சொற்பொழிவிலும் நாம் காணமுடியும். சிகாகோவில் அவர் ஆற்றிய அந்தச் சொற்பொழிவில், ‘இந்தியர்கள் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல; உயர்ந்தவர்கள்’என்பதை நிலைநாட்டினார். அத்தகைய ஒரு பெரியவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவருடைய கருத்துகள் இருக்கின்ற காரணத்தால் அவர் இன்னமும் நம்மோடு இருக்கின்றார் என்றுதான் அதற்குப் பொருள். ’’எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை’’ என்பது விவேகானந்தருடைய மொழி.“பெண்களுக்கு உரிய மதிப்பை அளிப்பதன் மூலம் எல்லா நாடுகளும் சிறப்பெய்திருக்கின்றன. எந்த நாடு பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையோ, அந்த நாடும் சமுதாயமும் எப்போதும் உயர்வு அடைந்ததில்லை; எதிர்காலத்திலும் அவை உயர்வு அடையப் போவதில்லை. பெண்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான பிரச்னைகள் பல உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ‘கல்வி’ என்னும் மந்திரத்தினால் தீர்த்து வைக்க முடியாத பிரச்னை அவற்றில் எதுவுமே இல்லை’’ - இதுவும் சுவாமி விவேகானந்தருடைய மொழிகள்தான். இப்படி பல சிந்தனைத் தத்துவங்களை - முத்துகளை இந்தச் சமுதாயத்திற்காக முழங்கிய பெருமகனார் விவேகானந்தர் ஆவார்கள்..ராமகிருஷ்ணருடைய பெயரால் நாட்டில் நடைபெறுகின்ற பல நல்ல காரியங்களை நான் அறிவேன். தொண்டு நிறுவனங்களிலேயே இன்றைக்கு முதல் நிலையிலேயே இருக்கின்ற தொண்டு நிறுவனம் ராமகிருஷ்ணர் பெயரால் இயங்குகின்ற நிறுவனம் என்பதை நான் நன்கு அறிவேன். அப்படிப்பட்ட நிறுவனத்தின் சார்பில் ஒரு மடம் மயிலைப் பகுதியிலே அமைந்திருக்கிறது. அவர்கள் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நூல்களைப் படித்தவன் என்ற முறையிலே நான் சொல்கிறேன். அவை எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்’’ என்றார். முடிவில் விவேகானந்தரின் ‘கர்மயோகம்’என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் நாய்வாலை நிமிர்த்த முயற்சி செய்த பூதம், இல்லறக் கடமைகளைத் தவறாமல் செய்த பெண்மணி ஆகிய கதைகளைப் பற்றி மிகவும் விளக்கமாகக் கூறினார். சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் கலந்துகொண்டார். அப்போது என்ன பேசினார்?அவர் பேசியதைக் கொடுக்கிறோம்.’’நான் மிகவும் போற்றும் ஒரு நிறுவனம் ராமகிருஷ்ண மடமாகும். இது என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கிய பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. இந்த நிறுவனம் தனது சேவையின் 125-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது என்பது என்னுடைய மகிழ்ச்சிக்கு உரிய இன்னொரு விஷயம். தமிழ் மக்களிடம் எனக்கு மிகுந்த பாசம் உண்டு. தமிழ்மொழியை, தமிழ்க்கலாசாரத்தை நான் நேசிக்கிறேன். சென்னையில் நான் நல்லதொரு அதிர்வை உணர்கிறேன். நான் இன்று விவேகானந்த இல்லத்தைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்.சுவாமி விவேகானந்தர் புகழ்மிக்க தனது மேற்கத்திய நாட்டு வெற்றிப் பயணத்தை முடித்துத் திரும்பியபோது இங்கு (ஒன்பது நாட்கள்) தங்கி இருக்கிறார். அவர் தங்கிய அறையில் நான் தியானம் செய்தது மிகச் சிறப்பான அனுபவத்தைத் தந்தது. புத்துணர்ச்சியும் புதிய சக்தியும் பெற்றேன். இங்கு பழமையான அரிய சிந்தனைகள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இளைஞர்களுக்குச் சென்றடைவதைக் கண்டு மகிழ்ந்தேன்.நண்பர்களே, மகான் திருவள்ளுவர் தன்னுடைய இனிய குறளில்,புத்தேள்உலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிறஎன்று கூறுகிறார்(வானுலகத்திலும் சரி, இந்த உலகத்திலும் சரி உதவி செய்வதைத் தவிர சிறந்த நன்மையானது வேறொன்றும் இல்லை. அதைப் போன்ற அரிய வாய்ப்பும் வேறு இல்லை.).அதாவது, இந்த உலகிலும் தெய்வங்களின் பரவுலகிலும் கருணைக்கு இணையானது வேறெதுவுமில்லை என்பதாகும்.இந்தக் கண்ணோட்டத்தில்தான் ராமகிருஷ்ண மடம் தமிழ்நாட்டில் மக்களுக்குக் கல்வி, நூலகம், புத்தக வங்கி, மருத்துவம், கிராமப்புற மேம்பாடு, செவிலியர் பயிற்சி, தொழுநோய் விழிப்புணர்ச்சி என்று பல துறையிலும் தொண்டு செய்து வருகிறது.நண்பர்களே, ராமகிருஷ்ண மடம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி இப்போது பேசினேன். இது பிறகு வந்த விளைவாகும். முதலில் வந்தது சுவாமி விவேகானந்தரிடம் தமிழ்நாடு ஏற்படுத்திய தாக்கம் ஆகும்.கன்னியாகுமரியில் அந்தப் புகழ்பெற்ற பாறையில் சுவாமிஜி தனது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடித்தார். அது அவரை முழுமையாக மாற்றியது. இதன் தாக்கம் சிகாகோவில் வெளிப்பட்டது; உணரப்பட்டது. பின்னர் சுவாமிஜி மேலைநாட்டிலிருந்து திரும்பியபோது அவர் தமிழகத்தின் புனித மண்ணில்தான் தன் முதல் அடியை எடுத்து வைத்தார். ராமநாதபுரம் அரசர் அவரை மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்.சுவாமிஜி சென்னைக்கு வந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. நோபல் பரிசு பெற்ற மதிப்பு வாய்ந்த பிரஞ்சு எழுத்தாளர் ரோமாரோலா, சுவாமிஜிக்கு வரவேற்பு அளித்தபோது, பதினேழு வெற்றித் தோரண அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டதைத் தன்னுடைய எழுத்துகளில் பதிவு செய்திருக்கிறார். அவர் மேலும், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு சென்னையின் பொதுவாழ்வு முழுவதுமாக மாறிவிட்டது. அவரது வருகை, நகரம் முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகையாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.நண்பர்களே! சுவாமிஜி பிறந்த இடம் வங்காளம். ஆனால் அவர் ஒரு கதாநாயகனாக தமிழ்நாட்டில் வரவேற்கப்பட்டார். இது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல வருஷங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது. இது நாடு முழுவதும் மக்கள் இந்தியாவைப் பற்றி, அதன் ஒருமைப்பாட்டைப் பற்றி, அது ஒரே தேசம் என்பதைப் பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவான கருத்தினைக்கொண்டு இருந்ததைக் காட்டுகிறது. இதுதான் ஏக் பாரத்! சிரேஷ்ட பாரத்! (ஒரே பாரதம்; உன்னத பாரதம்) என்னும் பெருமிதம்!இத்தகைய அற்புதமான உணர்வோடுதான் ராமகிருஷ்ண மடமும் செயல்படுகிறது. இந்தியாவில் ராமகிருஷ்ண மடத்திற்குப் பல கிளைகள் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் அவர்கள் சுயநலமற்ற சேவையைச் செய்து வருகிறார்கள்..பல நிபுணர்கள் இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள். இதற்கும் மேலாக மிக முக்கியமாக ஒவ்வோர் இந்தியனும் இது நம்முடைய நேரம் என்றும் உணர்ந்து வருகிறார்கள். நாம் தன்னம்பிக்கையுடன் இருதரப்பு மரியாதையுடன் உலக நாடுகளுடன் தொடர்புகொள்கிறோம். சுவாமிஜி கூறினார்: “யாரும் பெண்களுக்கு உதவ வேண்டியது இல்லை. அவர்களுக்கு சரியானதொரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் சமுதாயத்திற்குத் தலைமை தாங்குவார்கள். தங்கள் பிரச்னைகளுக்குத் தாங்களே தீர்வு காண்பார்கள்.’’“கல்வியே வளமாக்குகிறது’’ என்று நம்பினார் சுவாமி விவேகானந்தர். அவர் நம்முடைய நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் பெறவேண்டும் என்று விரும்பினார். இன்று உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் இன்றைய இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றைக் கூறினார். அது, “ஐந்தே ஐந்து சிந்தனைகளை உள்வாங்கி அவற்றை முழுமையாக வாழ்வதுகூட மிக உன்னதமான சக்தியினைத் தரும்’’ என்பதாகும்.நாம் 75 வருட சுதந்திரத்தைக் கொண்டாடிவிட்ட அதே வேளையில், இந்தியாவை மேன்மையடையச் செய்ய வரும் 25 வருடங்கள் அமிர்த காலமாக வகைப்படுத்துகிறோம். இந்த அமிர்த காலகட்டத்தில் பஞ்சப்பிராண் எனப்படும் 1. வளர்ந்த பாரதத்தின் லட்சியம், 2. காலனித்துவ அடிமை மனநிலையும் அதன் தடயங்களையும் அகற்றுதல், 3. நமது பாரம்பரியத்தைக் கொண்டாடுதல், 4. மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துதல், 5. நமது கடமைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துதல் ஆகிய ஐந்து லட்சியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக மாபெரும் சாதனை இந்தத் தேசத்தில் நிகழும்.மேற்கண்ட ஐந்து சங்கல்பங்களை நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் கடைப்பிடிக்கும் உறுதியை மேற்கொள்ள முடியுமா? நமது 140 கோடி மக்களும் மேற்கண்ட கொள்கைகளைப் பின்பற்றத் தீர்மானித்தால் 2047-ஆம் ஆண்டிற்குள் நாம் எல்லோருக்குமான இந்தியாவை முன்னேற்றித் தன்னிறைவு மிக்க நாடாக ஆக்க முடியும்.இந்த மாபெரும் இலக்கு நோக்கிய பயணத்தில் சுவாமி விவேகானந்தரின் பரிபூரண ஆசிகள் நிச்சயம் நம்மோடு எப்போதும் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி கூறினார். - மு.வெங்கடேசன்