-மு.வெங்கடேசன்சென்ற இதழ் தொடர்ச்சி….கோயில் உண்டியலில் அதிகமாகப் பணத்தைப் போடுபவர்களில் பலர் நேர்மையானவர்கள் இல்லை. கடவுள் அதை ஏற்றுக்கொள்கிறாரா? மேலும் மேலும் கடவுள் அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பது மாதிரி தெரிகிறதே?.கோயில் உண்டியலில் பணம் போடுபவர்களில் நல்லவர்களும் உண்டு; தீயவர்களும் உண்டு. ஊரை அடித்து உலையில் போட்டவர்களும் உண்டியலில் பணம் போடுகிறார்கள். ஆனால் அதைக் கடவுள் ஏற்றுக்கொள்வதே கிடையாது. அவர்கள் செய்யும் தவறை ஏதாவது ஒரு வகையில் இறைவன் அவர்களுக்கு உணர்த்திவிடுவார்.இன்ப, துன்பங்களை அனைவரும் அனுபவிக்கவேண்டும். கோயிலுக்குச் சென்று வருவதால் அதைத் தவிர்க்கமுடியாது. தற்காலிகமாக சிலர் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால், கர்மவினை காரணமாக அவர்கள் பிற்காலத்தில் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். நல்ல கர்மங்கள் நல்ல வினைகளையும், தீய கர்மங்கள் தீய வினைகளையும் தருகின்றன. நாம் செய்யாத வினைகள் நம்மை அண்டாது. நாம் செய்த வினைகள் நாம் அனுபவிக்கும் வரை தீராது.இறைவன் நமக்கு நல்ல நல்ல வாய்ப்புகளைத்தான் கொடுப்பார். அதைச் சரியான வழியில் பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க, சரியான வழியில் பயன்படுத்தாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள். போகிற வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும்..நிறையப்பேர் கோயிலுக்குச் செல்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?கோயில் இல்லாத ஊர் சுடுகாடு போன்றது என்று அப்பர் சுவாமிகள் கூறியிருக்கிறார். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் வாக்கு. கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அவ்வை மூதாட்டி.மக்கள் கோயிலுக்குச் செல்வதையும் கஷ்டப்படுவதையும் நீங்கள் இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. இறைவனிடம் பயம் என்ற ஒன்று இருப்பதால்தான் பலர் கோயிலுக்குச் செல்கிறார்கள். தங்களுக்குத் தேவை என்று ஏற்படும்போது மட்டும்தான் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறவர்களும் இருக்கிறார்கள். தேவை என்ற ஒன்று நிறைவேறிவிட்டால் பலர் கோயிலுக்குச் செல்வதில்லை..இராமர் படாத துன்பத்தையா நாம் அடைகிறோம்? சீதை படாத துன்பத்தையா நாம் படுகிறோம்? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுடன்தான் இருந்தார். ஆனாலும் பாண்டவர்கள் துன்பப்படவில்லையா? இதை மகாபாரதத்தின் மூலம் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். விதியின் கதைதான் மகாபாரதமாகும்.மனிதர்கள் படும் கஷ்டங்களுக்கு ஊழ்வினைதான் காரணம். அதாவது முற்பிறவி வினைகள்தான். யார் யார் எங்கு இருக்கவேண்டும் என்பதை இறைவன்தான் தீர்மானம் செய்கிறார். வாழ்க்கையில் மிகவும் பெரிய நோய் பேராசையாகும்.பெரும்பாலும் நல்லவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்..இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம்போல் மாறிமாறி வருவதுதான். இதுதான் இயற்கையின் நியதி. ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் இறைவன் திருநாமத்தை ஜபம் செய்யுங்கள். இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தியானம் செய்யுங்கள். நல்ல ஆன்மிக நூல்களைப் படியுங்கள். உயர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேளுங்கள். மனம் தூய்மையாகும். “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (குறள் 7)’’என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவப் பேராசான் திருவள்ளுவர்.பொருள்: தனக்கு ஈடுயிணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், “ஆகாயத்தில் மேகங்கள் பெரிய அளவில் திரண்டு வருகின்றன. அதை பலமான ஒரு காற்று வந்து மோதுகிறது. அப்போது மேகம் இருக்கும் இடம் தெரியாமல் கலைந்துபோகிறது. அதுபோல்தான் இறைவன் நாமஜபத்தை இடைவிடாமல் பயிற்சி செய்தால் பாவம் என்ற மேகக் கூட்டம் கலைந்துபோய்விடுகிறது’’ என்று கூறியிருக்கிறார்.மேலும் அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், “ஒருவனுடைய காலையே வெட்டி எடுக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கும். ஆனால் இறைவன் திருவருளால் அவனுக்கு ஒரு சிறிய முள்குத்துவதோடு நின்றுவிடும்’’ என்று கூறியிருக்கிறார்.…………………இல்லறத்தில் இருப்பவர்களுக்கும் துறவறத்தில் இருப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?.இங்கு பல மகான்கள் காவியுடை அணியவில்லையே தவிர முழுமையான ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் காவியுடை அணிந்தவர். நாம் உப்பு சப்பில்லாமல் வாழவே கூடாது. ஒரு இலட்சியத்துடன் வாழ வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ஒருவர் ஆணா, பெண்ணா என்பதைவிட அவர் நல்லவராக வாழவேண்டும் என்பதுதான் முக்கியம். இல்லறத்தில் இருந்தாலும் சரி, துறவறத்தில் இருந்தாலும் சரி நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும்.எல்லா நதி நீரும் சமுத்திரத்தில் கலக்கும். அதுபோல்தான் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் இறைவன் ஒருவனையே இறுதியில் எல்லோரும் சென்று சேர்கிறார்கள். இல்லறத்தில் இருக்கும்போது நாம் எந்த ஒரு காரியத்தையும் வேண்டா வெறுப்பாகச் செய்யக்கூடாது. இறைவனுக்குச் செய்யும் தொண்டாக நினைத்துச் செய்ய வேண்டும்..புறத்திலும், அகத்திலும் துறந்து இருப்பவர்களே துறவிகள். தமிழ்நாட்டில் ‘வெள்ளைவேட்டி சந்நியாசி’ என்று சொல்லும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இல்லறத்தில் இருப்பவர்களின் உள்ளத்தில் சந்நியாசிகளுக்கு இருக்கும் துறவு மனப்பான்மை இருந்துகொண்டிருக்கிறது. இல்லறத்தில் இருந்தாலும் சரி, துறவறத்தில் இருந்தாலும் சரி துறவு என்பது இருவருக்கும் பொதுவானதுதான்.இல்லறத்தில் இருப்பவர்கள் தங்களுடைய குடும்பத்தினர் நலனில் மட்டும் அதிகக் கவனம் செலுத்துவார்கள். ஆனால் துறவறத்தில் உலக நன்மைக்காகப் பணிகளைச் செய்வார்கள். துறவறத்தில் ஒவ்வொரு பணியும் இறைவனுக்குச் செய்யப்படும் பணியாகவே செய்யப்படுகிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தையே உலகமாகப் பார்க்கிறார்கள். துறவறத்தில் இருப்பவர்கள் உலகத்தையே தங்கள் குடும்பமாகப் பார்க்கிறார்கள்.இல்லறத்தில் ‘வாழ்வியல்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மிகம் ஒன்றின் மூலமாகத்தான் இல்லறத்தில் அமைதி நிலவும். பிரச்னைகளை அணுகும்போது நமக்குத் தாய் உள்ளம் கட்டாயம் இருக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தர், “அவரவர் நிலையில் அவரவர் பெரியவர்’’ என்று தன்னுடைய கர்மயோகம் என்ற நூலில் கூறியிருக்கிறார்.. எவ்வளவோ கோயில்கள், மடங்கள், ஆன்மிக அமைப்புகள் இருந்தும் நாட்டில் குற்றச் செயல்கள் பெருகிக்கொண்டுதானே வருகிறது?இருக்கலாம். ஆனால் அதேசமயம் நாட்டில் தர்மகாரியங்கள் பெருமளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதும் உண்மை. தனிமனித ஒழுக்கம் வற்புறுத்தப்பட வேண்டும். உருப்படியான செயல்களைச் செய்ய வேண்டும்.“உள்ளத்தில் ஒளி உண்டானால் நல்வாக்கினிலே ஒளி உண்டாகும்’’ என்பது பாரதியார் வாக்கு.குற்றச்செயல்கள் பெருகுவது என்பது உலகின் போக்காகவே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சமூக, பொருளாதார நிலைதான் குற்றச்செயல்கள் பெருகி வருவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது..மக்களுக்கு அதிகமான ஆசைகளும், அதனால் பணக்கஷ்டமும் ஏற்படுகிறது. எனவே அதிகப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற பேராசையால் குற்றச் செயல் புரிவதற்கு ஒருவனை மனம் தூண்டுகிறது. ஆன்மிகத்தின்மீது பற்று ஏற்பட்டால் மட்டுமே ஒருவன் குற்றச்செயல்களிலிருந்து விடுபடமுடியும்.நாட்டில் சுயநலமும், பணத்தாசையும் அதிகமாக இருக்கிறது. அதனால் குற்றங்கள் பெருகுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நாட்டில் குற்றங்கள் குறைவுதான்.ஒவ்வொரு தனிமனிதனும் அவரவர்களின் நிலையில் தங்கள் கடமைகளை உணர்ந்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும். ஆன்மிக அமைப்புகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்து வருகின்றன. முக்கியமாக தனிமனிதனிடம் மாற்றம் வர வேண்டும்.குற்றங்கள் என்பது எல்லாக் காலங்களிலும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எதிர்காலத்திலும் இருக்கத்தான் செய்யும். மனசாட்சி இல்லாமலும், சுயநலத்தின் பொருட்டும் செயல்படுவதால்தான் குற்றச்செயல்கள் பெருகிக்கொண்டே வருகின்றன..இந்துமதத்தைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்; குற்றம் செய்வதற்குப் பயப்படுவார்கள்.கோயில்கள், மடங்கள், ஆன்மிக அமைப்புகள் மக்களுக்குக் கற்றுத் தந்த நன்னெறியை மக்கள் பின்பற்றத் தவறுவதுதான் குற்றச்செயல்கள் பெருகிக்கொண்டே வருவதற்கான முக்கியக் காரணம்.குடும்பம் என்ற கட்டமைப்பு இப்போது தகர்ந்துகொண்டு வருகிறது. ஒருவனுடைய வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவம்தான் ஒருவனை நல்ல ஆசானாக்குகிறது.ஒருவனுக்கு ஐந்தாண்டுகள் தண்டனை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நல்லபடியாக முடித்தால், பிறகு அவனுக்கு விடுதலை கிடைக்கிறது. அதுபோலவே இந்துமதத்திலும் ஒருவன் சேர்த்து வைத்த புண்ணியம் உள்ள வரையில் அவன் சொர்க்கத்தில் இருக்கிறான். அதன்பிறகு மீண்டும் புல், பூண்டு, தண்ணீர் பாம்பு, தவளை, ஆடு, மாடு, மரம், செடிகொடிகள், மிருகங்கள், பறவைகள் போன்ற ஏதாவதாகப் பிறக்கிறான்..மற்ற மதங்களில் நரகம் என்பது நிரந்தரமானவை. ஆனால் இந்துமதத்தில் அப்படிக் கிடையாது. “உன் விதியை நீயேதான் தீர்மானிக்கிறாய்’’ என்று சுவாமி விவேகானந்தர் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.உலகமே அதர்மத்தை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நாலு பேர் மெச்ச வாழ வேண்டுமென்றால், நாமும் அதர்மத்தை மேற்கொள்ள வேண்டும் என்று, தற்காலத்தில் பலர் நினைக்கிறார்கள். அது தவறு.கிருதயுகத்தில் புண்ணியம் நூற்றுக்கு நூறு பங்கு இருந்தது. அப்போது புலியும் ஆடும் பகையை மறந்து ஒரே துறையில் நீர் அருந்தின. இப்போது கலியுகத்தில் கால்பங்கு புண்ணியம்; முக்கால் பங்கு பாவம் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் நாமும் அன்றாட வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்று வருகிறோம்..அதர்ம வழியில் சென்ற துரியோதனாதிகள் நூறு பேர் என்பதால், ‘பெரும்பான்மையினர்’ என்று அவர்களை யாரும் பாராட்டுவதில்லை. தர்ம வழியில் சென்ற பாண்டவர்கள், ‘சிறுபான்மையினர்’ என்றாலும், ஸ்ரீகிருஷ்ணனின் திருவருள் பாண்டவர்களுக்குத்தான் கிடைத்தது.“தர்மம் சர - தர்மத்தைப் பின்பற்றும் என்பது வேத வாக்கு. “நீ தர்மத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அவ்விதம் நீ செய்தால் அந்த தர்மமே உன்னைக் கட்டாயம் காப்பாற்றும்.’’ எனவே வேதத்தின் இந்தக் கட்டளைப்படி வாழ்வதுதான் சான்றோருக்கு ஏற்றச் செயலாகும்..உலகில் தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், சிறுபான்மையினராக இருந்தாலும் - சான்றோர்கள் ஒருபோதும் தர்ம நெறியிலிருந்து பிறழ மாட்டார்கள். தர்மம்தான் வாழ்க்கையில் உயிர்நாதமாக, உயர்நாதமாக விளங்குகிறது.“தர்மம் ஒழுக்கம் இல்லாதவர்கள் புழுவுக்குச் சமம்’’ என்று, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வது வழக்கம்.தர்மம், கட்டுப்பாடு, வரையறை இல்லாத வாழ்க்கை பிரேக் இல்லாத வண்டி போன்றது. தர்மத்திற்குக் கட்டுப்படுதல் என்பதை மனிதராகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டும். வாழ்க்கையில் தர்மம் இல்லாதவர்கள் வேர் இல்லாத மரம் போன்றவர்கள்..மகாபாரதம் முழுவதும் அறத்தின் வெற்றியாகவே கொண்டாடப்பெறுகிறது. ‘தர்மம் தலைகாக்கும்’என்பது உண்மை; முழு உண்மை; மூலாம் பூசப்படாத உண்மை!(பேட்டி தொடரும்)