-மு.வெங்கடேசன்1ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் எந்த வகையில் மற்ற மடங்களுடன் வித்தியாசப்படுகிறது? அவர்களுடன் நல்ல உறவில் இருக்கிறதா?1897-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி சுவாமி விவேகானந்தரால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் துவக்கப்பட்டது. பக்தியையும் தொண்டையும் இணைத்து இந்த மடம் செய்து வரும் பணிகளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்கள் கொள்கையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. “ஆத்மனோ மோட்சார்த்தம் ஜகத் ஹிதாய ச - ஆத்மாவின் முக்திக்காகவும் உலக நன்மைக்காகவும் தொண்டு செய்யவேண்டும்’’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். எந்த ஒரு தனி மனிதனையும் மையமாக வைத்து இந்த நிறுவனம் செயல்படவில்லை. இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சிறப்பு அம்சமாகும்..வரலாற்றில் துறவிகளாலும் சமுதாய சேவையைச் செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்ட எழுந்த முதல் மடம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடமாகும். பொதுவாக மடங்கள் சுயமுக்தியை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படும். இந்த வகையில் மற்ற மடங்களுடன் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வித்தியாசப்படுகிறது. அதேசமயம் மற்ற மடங்களுடன் நல்ல உறவிலும் இருக்கிறது. சில மடங்களைப்போல் ஒரு தலைபட்சமான கருத்துகளை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஏற்றுக்கொள்வதில்லை. இங்கு இருக்கும் சந்நியாசிகள் சக மனிதர்களுடன் கலந்து பழகுவார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சந்நியாசமும், மக்கள் சேவையும் என்றும் இணைந்திருக்கிறது.2 ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அத்வைத மடம்தானே... எப்படி உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள்?ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அத்வைத மடம் என்பது உண்மைதான். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மகாவாக்கியம், ‘அகம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாகவே இருக்கிறேன்)’ என்பதுதான்.ஆதிசங்கரர் அத்வைதியாக இருந்தவர். அவர் பிறந்த ஊரான காலடியில் கனகதாரா ஸ்தோத்திரம், திருச்செந்தூர் முருகன் மீது சுப்ரமண்ய புஜங்கம், மீனாட்சி பஞ்சரத்தினம், மூகாம்பிகையில் இருந்தபோது செளந்தர்யலஹரி, ஸ்ரீசைலத்தில் இருந்தபோது சிவானந்தலஹரி, காசியில் இருந்தபோது விஸ்வநாத அஷ்டகம், அன்னபூர்ணா ஸ்தோத்திரம், காலபைரவர் அஷ்டகம், மணிகர்ணிகா அஷ்டகம் போன்ற பல ஸ்தோத்திரங்கள், பாடல்கள் இயற்றி இறைவனை உருவ வழிபாடு செய்திருக்கிறார்.பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அத்வைதிதான். அவரும் உருவ வழிபாட்டைச் செய்தவர்தான். ஆகையால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அத்வைதி மடமாக இருந்தாலும் உருவவழிபாட்டை புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. உருவ வழிபாட்டை அத்வைத நிலைக்குச் செய்யக்கூடிய ஒரு புறச்சாதனமாகக் கருத வேண்டும். வழிபாட்டின்போது பூஜிக்கப்படும் பரம்பொருளும், பூஜிக்கப்படும் பொருளும் ஒன்றே. ஆகவே பூஜையிலும் அத்வைதமே அடிப்படை. . பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரத்தில் பவதாரிணி காளிதேவியை உருவ வழிபாடு செய்தார். உருவக்கடவுளை வணங்குவதன் மூலம் அவர் ஆன்மிகத்தில் எவரெஸ்ட் உச்சியைத் தொட்டிருக்கிறார்.சுவாமி விவேகானந்தர் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களில் ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, துர்க்கா பூஜை, சிவராத்திரி, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜயந்தி விழா, அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் ஜயந்தி விழா, சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி விழா, குருபூர்ணிமா, தீபாவளி, புத்த ஜயந்தி, சங்கர ஜயந்தி, ராமானுஜர் ஜயந்தி போன்றவை கொண்டாடப்பட்டு வருகின்றன..பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், வாரணாசி ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஸ்ரமம், ஜாம்ஷெட்பூர், லக்னோ, சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் போன்று பல இடங்களில் துர்க்கா பூஜை சமயத்தில் விக்கிரகங்கள் வைத்து வழிபடப்படுகிறது. மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இந்த துர்க்கா விக்கிரகத்தை கொல்கத்தாவிலிருந்து வரவழைத்தது.கடந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் - துர்க்கா பூஜையின்போது இந்தியாவில் இருக்கும் 27 ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களிலும், வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களின் 15 கிளைகளிலும் துர்க்கை விக்கிரகம் வைத்து வழிபடப்பட்டது.3 மருத்துவமனை, கல்வி நிலையங்கள் நடத்துவது என்பது ஒரு மடத்தின் பணியா? ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களில் அன்னதானம் (ஏழைகளுக்கு உணவளித்தல்), ஆரோக்கியதானம் (மருத்துவப் பணிகள்), ஞானதானம் (ஆன்மிக நூல்கள் வெளியிடுதல், ஆன்மிகச் சொற்பொழிவுகள், ஆன்மிகப் பத்திரிகைகள் வெளியிடுதல்), வித்யாதானம் (கல்வி அளித்தல் - கொல்கத்தாவில் விவேகானந்த யுனிவர்சிடி) என்ற நான்கு வகையான தானங்களின் அடிப்படையில் மடத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பொதுமக்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன. இந்தப் பணிகள் சரியான பாதையில்தான் செல்கிறது. சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் தொடங்கியபோதே மடத்தின் பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலின்படி, “மக்கள் சேவையே மகேசன் சேவை’’ என்ற நோக்கத்தில் மருத்துவமனை, கல்வி நிலையங்கள் போன்றவற்றை மடம் நடத்திக்கொண்டு வருகிறது. மடத்தில் நாங்கள் வேலை செய்வதில்லை, தொண்டுதான் செய்கிறோம்..சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே 1898-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி காளி பூஜையன்று ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி’என்ற ஒன்றை சகோதரி நிவேதிதா ஆரம்பித்தார். இந்தப் பள்ளியை அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் திறந்து வைத்தார். இப்போது இந்தப் பள்ளி ‘சகோதரி நிவேதிதா’என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. சகோதரி நிவேதிதா 1902 நவம்பர் 11-ஆம் தேதி டார்ஜிலிங்கில் காலமானார்.பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்ந்த காலத்திலேயே நிவாரணப் பணியை வைத்தியநாத்திற்கு அருகில் அவர் துவக்கி வைத்தார். ஒருமுறை கொல்கத்தா முழுவதும் பிளேக் நோய் பரவியது. இந்த நோயின்போது சுவாமி விவேகானந்தரே முன்நின்று நிவாரணப் பணியை செய்தார்.இன்றைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் கல்வி நிறுவனங்களை ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்கள் நடத்தி வருகின்றன. மடத்தில் நடைபெறும் ஆன்மிகப் பணிகள், அன்னதானம், மருத்துவ பணிகள், கல்விப் பணிகள் போன்றவை மிகவும் மகத்தானது. இந்தப் பணிகளை இலவசமாகவும், மிகவும் குறைந்த செலவிலும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்கள் செய்து வருகின்றன..கல்விக்கு மூலதனம் செய்வது என்பது பிறகு கொழுத்த லாபத்தைத் தரும். வியாபார நோக்கத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தவில்லை.“ஊருக்கு உழைத்திடல் யோகம்’’ என்று மகாகவி பாரதியார் பாடியிருக்கிறார். பகவான் புத்தர், “பகுஜன சுஹாய, பகுஜன ஹீதாய’’ என்று கூறியிருக்கிறார். இதற்கு பொருள், “மற்றவர்களின் சுகத்திற்காக நாம் வாழவேண்டும். நாம் மற்றவர்களுக்கு இதமான வகையில் நம்முடைய வாழ்க்கையில் நடந்துகொள்ள வேண்டும்’’.சேவை என்பது மடத்திற்கு வேர் போன்றது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் கல்வி கற்கும் மாணவ - மாணவியர் கட்டடங்கள் போன்றவர்கள். அந்தக் கட்டடங்களின் உயிர் போன்று ஆசிரியர்கள்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள்.2022-2023-ஆம் ஆண்டு அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் - மிஷன் 943 கோடி வரை உதவிகளைச் செய்தது. இந்த நிவாரணப் பணிகளில் கல்வி, மருத்துவம், சமூகநலப் பணிகள், கிராமப்புற வளர்ச்சி போன்றவை அடங்கும்..4 ஒருவரை ‘கடவுள் அவதாரம்’என்று எதை வைத்துச் சொல்கிறோம்? ‘அவதாரம்’என்ற சொல்லுக்குக் ‘கீழே இறங்கி வருதல்’என்பது பொருள். இறைவன் அவதாரத்திற்கு ஸ்ரீ ராமபிரான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியவர்களை உதாரணமாகச் சொல்லலாம். கேன உபநிஷத்தில் இறைவனையேதான் ‘பிரம்மம்’என்று சொல்கிறது. பொன்னாலான ஆபரணங்கள் அணிந்து மிகுந்த அழகுடன் பொலிந்து தோன்றினாள் உமாதேவி. அவள் இந்திரனிடம், “அது நீங்கள் அடைந்த வெற்றி, உங்களுடைய வெற்றி அல்ல; அது இறைவனின் வெற்றியாகும். அதை நீங்கள் உங்கள் வெற்றியாக நினைத்து மகிழ்ந்தீர்கள்’’ என்று கூறினாள். ‘இறைவன் - கடவுள்’ என்ற சொல்லாட்சி பல காலமாக இருந்து வருகிறது. ‘கட’ என்றால் நம்மை கடந்து இறைவன் இருக்கிறான் என்பது பொருள். ‘வுள்’ என்றால் நம் உள்ளத்தில் இறைவன் இருக்கிறான் என்பது பொருள். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்வது ஒரு வகையான ஞானம்தான். இறைவன் நேரில் வரமாட்டார். யார் மூலமாகவோ நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்பவர் எவரோ அவர்தான் கடவுள். (தெய்வம் மனுஷ்ய ரூபேண.)உலகில் தவறுகள் அதிகமாக நடைபெறும்போதெல்லாம் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அவதரிக்கிறார். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் இதிகாசங்கள் ஆகும். இறைவனின் அவதாரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ‘இதி’ என்றால் ‘இப்படி’ என்று பொருள். ‘காசம்’ என்றால் ‘நடந்தது’ என்பது பொருள். எனவே ‘இதிகாசம்’ என்றால் ‘இப்படி நடந்தது’என்று பொருள். ஸ்ரீ ராமர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரபுருஷர்களாகவே நாம் வழிபடுகிறோம். எல்லா உயிர்களிடமும் அன்பு, இரக்கம் காட்டுவது இறைவன் ஒருவன்தான். ஒரு சிறிய எறும்புக்குக்கூட வழிகாட்டும் இறைவன், மனிதர்களுக்கு வழிகாட்டாமலா இருப்பான்?.“இறைவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்’’ என்று நம்முடைய பெரியோர்கள் கூறியிருப்பதை நாம் அனைவரும் அறி@வாம்.“யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ’’-பகவத்கீதை 4.7பொருள்: எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்கி இருக்கிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கிறேன்.“பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்தத்ய ஸம்பவாமி யுகே யுகே-பகவத்கீதை 4.8பொருள்: “நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோறும் நான் தோன்றுகிறேன்.’’மேலே சொல்லப்பட்ட இரண்டு சுலோகங்களும் பகவத்கீதையில் இடம் பெற்றிருக்கின்றன. ‘பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு’என்ற நூலை நீங்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள். உருவ வழிபாட்டின் மூலமாக ஒருவர் உயர்ந்தநிலையை அடையமுடியும் என்பதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிகவும் மேலான உதாரணமாக இருந்துகொண்டிருக்கிறார்.பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், வடலூர் வள்ளலார், ரமண மகரிஷி, ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த சகோதரி நிவேதிதா, பாம்பன் சுவாமிகள், பட்டினத்தார், அருணகிரிநாதர், யோகி ராம்சுரத்குமார் ஆகியோர் காவி உடை அணியவில்லை. ஆனால் அவர்கள் முழுமையான ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் துறவு இருந்தது. சம்பாதிப்பதெல்லாம் நம்முடைய சொத்து ஆகிவிடாது. அனுபவிப்பதுதான் நம்முடைய உண்மையான சொத்தாகும். இறைவன் ஒருவனே நம்முடைய ஒரே சொத்தாக இருந்துகொண்டிருக்கிறார். “பகலில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை. ஆனால் நட்சத்திரங்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுபோலவே இறைவன் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார். உன்னுடைய அக்ஞான நிலையில் நீ இறைவன் எப்போதும் இல்லை என்று சொல்லாதே’’ என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளியிருக்கிறார். நமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, அது தானாகவே நம்மைவிட்டு நீங்கும். இதை யார் செய்தது என்று சிந்தித்தால், நம்மைவிடவும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது நமக்குத் தெரியவரும். அந்த சக்திதான் இறைவன். நம் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் ‘அகங்காரம்’நம்மைவிட்டு நீங்கினால், நாம் இறைவன் இருப்பதை உணரலாம். நாம் நம்முடைய மனதை வீண் எண்ணங்களில் செல்லவிடாமல் தடுத்து, இறைவன் மீது பக்தி செலுத்தும்போது இறைவனை உணரலாம். நாம் நேர்மையாக சேர்த்த செல்வங்கள், முற்பிறவியில் நாம் செய்த நல்ல காரியங்கள் ஆகியவை நம்மிடமே திரும்பி வரும். அப்போது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நாம் உணரமுடியும். கண்ணை இமை காப்பதுபோல் இறைவன் நம்மை காத்து வருகிறான். இப்படி எவ்வளவோ சொல்ல முடியும். கலியுகமே ஆனாலும் நல்லவர்கள், அறவழியில் நடப்பவர்களின் துயரத்தைத் துடைப்பதற்கு மனித வடிவிலேயே கடவுள் உதவுகிறார். கர்மக் கணக்கின்படி மனித வாழ்க்கை நடக்கிறது. மனிதன் என்ன செய்தாலும் அவனால் அதை மாற்றியமைக்க முடியாது. இறைவனின் திருவருள் இருந்தால் கர்மக் கணக்கையும் மாற்றியமைத்து கஷ்டங்களைக் குறைக்க முடியும். உதாரணம் – மார்க்கண்டேயன். உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் முன்ஜன்ம வினைக்கு ஏற்ப உருவம் மாறுபடுகிறது. மனிதனும் தன் கர்ம வினைக்கு ஏற்பவே அனைத்தையும் அனுபவிக்கிறான். உலகில் ஒருவருடைய முகம் போல் மற்றவரின் முகம் கிடையாது. ஒருவருடைய சிந்தனையைப்போல் மற்றொருவருடைய சிந்தனை கிடையாது. எல்லாமே வேறுபட்டது. ஆனால் சைதன்யம் (இறைவன்) எல்லோருக்கும் ஒன்று. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அங்குஷ்ட (கையின் கட்டைவிரல்) பிரமாணமாக கடவுள் இருக்கிறார். அதை உணர்ந்தால் கடவுள் இருப்பதை ஒவ்வொருவரும் உணர முடியும்..சிறு எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிரினங்களையும், மனிதனையும் படைத்தது யார்? இவை இவை இப்படிதான் இயங்க வேண்டும் என்று வகுத்தது யார்? அவரே கடவுள். எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான ஜீவராசிகள், மரங்கள், மலர்கள், காய்கள், கனிகள், நீர், நிலங்கள், புழு, புச்சி அத்தனையிலும் ஆத்மா என்ற ஒன்றை வைத்து அதற்கு பெயரும் கொடுத்திருக்கிறார் இறைவன். நம் உடலில் உள்ள உறுப்புகள் இதயம், நுரையீரல், கிட்னி முதலானவை சீராக இயங்குவதே பெரும் சக்தியின் வெளிப்பாடு. இந்த சக்தியை நாம் தெய்வம், கடவுள் என்று நம்புகிறோம். ஆறு அறிவு படைத்த மனிதனால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து வழிகளில் (நிலம், நீர், ஆகாயமார்க்கங்களில்) ஒரே நாளில் பல விபத்துகள் ஏற்படுகின்றன. பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதாமல், தன் இயக்கத்தில் இயங்குவதே கடவுள் இருக்கிறார் என்பதற்கான அடையாளம். ஒரு நாளோ ஒரு நொடியில் நம் பூமி மற்ற கிரகங்களுடன் மோதினால் என்னவாகும்? அப்படி ஆகாமல் நம்மைக் காத்து நிற்பவர் இறைவன் ஒருவர்தான். நாம் conscious-ஆக மூச்சுவிடுவதில்லை. அதுதானாக நடக்கிறது. இது கடவுள் நம்மை இயக்குவதால் நடக்கிறது. நமக்கு ஆறு அறிவு இருந்தும் தூங்கும்பொழுது நம்மால் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது ஒவ்வொரு நாளும் நன்றாக தூங்கி எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் காலையில் எழுந்திருக்கிறோமே! இது கடவுள் அருள் இல்லை என்றால் வேறு என்ன? எத்தனையோ அழிவுகளுக்குப் பிறகும், தாக்குதலுக்குப் பிறகும் நம்முடைய சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறதே! இந்த தர்மத்தை இதுவரை காத்து வந்தது யார்? அவரே கடவுள். (பேட்டி தொடரும்)