ஆடி பிறந்தாச்சு,பிறந்து பதினெட்டு நாளாச்சு.ஆறுகளிலெல்லாம் வெள்ளப்பெருக்கு வந்தாச்சு. பொங்கும் புதுப்புனலே, இன்றுஆடிப்பெருக்காச்சு.ஏரிகள் நிறைஞ்சாச்சு.வாய்க்கால், வரப்புகள் பலவாச்சு.நீர்நிலை எல்லாம்,முழுவதும் நிரம்பி வழிந்தாச்சு. ஆடிப் பட்டத்தில், வயலில்,தேடி விதைத்திடுவோம்.ஆற்று நீராலே,பயிர்கள் செழித்து வளர்ந்திடுமே.தை மாதத்தில், பயிரை,அறுவடை செய்திடலாம்.நெற்குவியலை நாம்கண்டு மகிழ்ந்திடலாம்..கங்கை என்றாலும்,காவிரி என்றாலும்,யமுனை என்றாலும்,பொன்னி என்றாலும்,எல்லாப் பெயர்களுமே,ஆதி சக்தியின் பெயர்தானே. நதிகளில் நீராட, நமதுபாவம் நீங்கிடுமே.நதியைப் பெண்ணாக,நாமும் நினைத்து மதித்திடுவோம்.மங்கலப் பொருட்களையே,கரையில் வைத்து வணங்கிடுவோம்.கைவளை குலுங்கிடவேநிறைவாய் பூசைகள் செய்திடுவோம். பலவித சாதங்களை வீட்டில்பாங்காய் சமைத்திடுவோம்.பொங்கல் செய்திடுவோம்.இவற்றைப் படைத்து வழிபடுவோம்.ஆற்றங்கரைதனிலேஅனைவரும் ஒன்றாய் அமர்ந்திடுவோம்விதவித சாதங்களை யாவரும்பகிர்ந்து உண்டிடுவோம். நன்றி மறவாமல் என்றும்நதிகளைப் போற்றிடுவோம்.வாழ்வில் வளம் பெருக,ஆதி சக்தியை வேண்டிடுவோம்! -ஸ்ரீ கோவிந்தராஜன், சென்னை-44.