புராதனமிக்க நம் மண்ணில் நீண்ட நெடுங்காலமாகவே சாஸ்தா வழிபாடு இருந்து வருகிறது. இந்தத் தெய்வம் மலைநாடு எனப்படும் கேரளப் பகுதியிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதியில் மலையாங்குளம் என்னும் ஊர் உள்ளது. இங்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடகலிங்க நாச்சியார் உடனுறை சித்திரபுத்திர சாஸ்தா திருக்கோயில் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவில் ரம்யமாக அமைந்துள்ளது.இங்கு சாஸ்தாவுக்குக் கோயில் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. அதை இனிக் காணலாம்.பல வருடங்களுக்கு முன்பு, சுற்றுப்புறக் கிராமத்தினர் நாள்தோறும் இங்கு வந்து தர்ப்பைப் புற்களை அறுத்து எடுத்துச் செல்வது வழக்கம். அன்றும் அதுபோல் சில பெண்கள் அரிவாள் கொண்டு புற்களை அறுக்கும்போது, தற்செயலாக புற்களின் நடுவே இருந்த சிறு பாறையில் அரிவாள் முனை ‘ணங்’ என்ற சத்தத்துடன் மோதியது. அடுத்தகணம் அரிவாள் பட்ட இடத்திலிருந்து ‘குபுகுபு’வென ரத்தம் வெளியேறியது..இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த விஷயம் அந்தச் சமயத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த கேரள மன்னன் தக்கராஜனிடம் சொல்லப்பட்டது. அன்று அரண்மனையில் இன்னோர் அதிசயமும் நடந்தது. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சாஸ்தா, மலையாங்குளம் வனப்பகுதியில் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, தனக்கு ஒரு கோயில் எழுப்புமாறு அசரீரியாகச் சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் மலையாங்குளம் கிராமப்பெண்களுடன், அரண்மனையிலிருந்து சில பெண்களை அழைத்துக்கொண்டு மன்னர் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தான். அப்போது, தனக்கு கனவில் சாஸ்தா வந்து சொன்ன இடம் அதுதான் என்பதை உணர்ந்தான். மன்னன் தன் மந்திரியுடன் கோயில் கட்டுவது குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தபோது அருகே இருந்த குளத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது..அதாவது, மன்னனுடன் வந்த அரண்மனைப் பெண்கள் சிலர், அங்கிருந்த குளத்தில் குளித்து முடித்து கரைக்கு வந்து தாங்கள் கழற்றி வைத்துவிட்டுப்போன பாடக அணிகலன்களை எடுக்க முயன்றனர். ஆனால், கீழே கிடந்த அந்த இரு பாடகங்களை என்ன முயன்றும் அவர்களால் முடியவில்லை. அங்கிருந்த அனைவரும் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டிருந்ததால், சமயோசிதமாக அவர்கள் சற்றும் தாமதியாமல் அத்தலத்தில் உருவாகப்போகும் கோயிலில் இரு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து மகாலிங்கம், பாடகலிங்கம் என பெயரிடுவதாக வேண்டி நின்றனர். என்ன ஆச்சர்யம்! அடுத்த நொடியில் பாடகங்கள் அவர்கள் கைகளில் வந்தது. இந்தக் காரணத்தாலேயே இத்தல கருவறை மூலவராக பாடகலிங்க நாச்சியார் சமேத சித்திரபுத்திர சாஸ்தா எழுந்தருளியுள்ள தாமரைப் பீடத்தின் முன்பு மகாலிங்கம், பாடகலிங்கம் என இரு அழகிய லிங்கத் திருமேனிகளை நிறுவியுள்ளனர். கோயில் திருப்பணியை கேரள மன்னர் நடத்தியதால், வடக்கு உள்சுற்றில் அவரது உருவச்சிலை உள்ளது. ஓணத் திருவிழா இரு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கேரள பக்தர்கள் திரளாக வந்து சாஸ்தாவை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்..முன்னதாக கோயிலுக்குச் செல்லும் வழியில் கம்பீரமான தோரணவாயில் அமைந்துள்ளது. வனங்களுக்கு மத்தியில் ஆஸ்தான மண்டபம், வசந்த மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற கலையமைப்பில் கிழக்குப் பார்த்தவண்ணம் கோயில் அமைந்துள்ளது. சாலக்கோபுர வாசலுக்கு முன்பு ஆஸ்தான மண்டபம் உள்ளது. வசந்த மண்டபத்தில் பூதாகர தோற்றத்துடன் ஆலி சாஸ்தா சந்நதி உள்ளது. மகாமண்டபத்தில் யானை, நந்தி வாகனங்கள் மற்றும் பலிபீடம் உள்ளன. அர்த்தமண்டப வாசலில் துவாரபாலகர், விநாயகர், பூதம் மற்றும் துளசிநாதர் சிலைகள் உள்ளன. கருவறை மூலவராக தாமரைப் பீடத்தில் சாந்நித்தியமிக்க தெய்வமாக சித்திரபுத்திர சாஸ்தாவும், பாடகலிங்க நாச்சியாரும் எழுந்தருளியுள்ளனர். சாஸ்தா வலது கையில் தாமரை மலர் தாங்கியும், இடது கையை தொங்கவிட்டபடியும் காட்சியளிக்கிறார். அம்பாள் பாடகலிங்க நாச்சியார் வலக்கையில் தாமரை மலர் ஏந்தியும், இடக்கையை முத்திரைச் சின்னமாகக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார். இவர்களுக்கு முன்புறம் மகாலிங்கம், பாடகலிங்கம் உள்ளனர். மூலவர் விமானம் வேசர வடிவில் உள்ளது.செய்யும் தொழிலில் விருத்தி வேண்டுவோர் இந்த சாஸ்தாவிடம் நம்பிக்கையோடு கோரிக்கை வைத்தால், அது விரைவில் நிறைவேறி விடுகிறதாம். எனவே, அதற்கு நன்றிக்கடனாகக் கோயில் திருப்பணிகளை விருப்பத்துடன் செய்து தருகிறார்கள். இதனாலேயே கோயில் தொடர்ந்து விரிவான வண்ணம் உள்ளது..உள்சுற்றில் தளவாய் மாடசாமி, மாடத்தி, சங்கிலி பூதத்தார், கன்னி மூலை கணபதி, மேலவாசல் காவல்காரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, வனப்பேச்சி அம்மன், பலவேசக்காரர், கருப்பசாமி, சுடலை மாடசாமி, தம்பிரான் மாடசாமி, பிரம்மச்சி, பேச்சி, கங்காதேவி, விடுமாடத்தி, நவகிரகம், விடுமாடன், தக்கராஜ மன்னன் ஆகிய சந்நதிகள் உள்ளன. தேவகோட்டத்தில் தர்ம சாஸ்தா, தட்சிணாமூர்த்தி உள்ளனர். இதில் தர்ம சாஸ்தா விக்ரகமே மூலவராக பிரதிஷ்டை செய்து வைக்க முதலில் எடுத்துவரப்பட்டதாம். கோயில் வளாகத்தில் அதை இறக்கி வைக்கும்போது எதிர்பாராத விதமாக கைவிரலில் சிறு பின்னம் ஏற்பட்டதாம். அதனால் தர்ம சாஸ்தாவுக்குப் பதிலாக புதிய விக்ரகமாக சித்திர புத்திர சாஸ்தாவை உருவாக்கி நிறுவிவிட்டனர். இத்தலத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழா பங்குனி உத்திரத் திருவிழாவாகும். இருநாட்கள் இவ்விழா நடைபெறும். இதனையொட்டி அம்பாசமுத்திரத்தில் இருந்து கோயில் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். வெளி மாவட்ட, வெளி மாநில மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வர். அதில் இரண்டாம் நாள் விழாவில், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு கருப்பசாமிக்கு சேவல், ஆடு போன்றவற்றை பலி கொடுத்து உறவினர்களோடு கொண்டாடி மகிழ்வது இத்தலத்தில் மிகவும் பிரபலம்..உள்சுற்று, வெளிச்சுற்று என இரு சுற்றுகளை உடைய கோயில். தலவிருட்சம் வில்வம். வெளிச்சுற்றில் பட்டவராயர், ஆதிகாளியம்மன் சந்நதிகள் உள்ளன. சனி, புதன், ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அமாவாசைதோறும் அன்னதானம் நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் அதிகாலை வேளையில் நீராஞ்சன தீபம் ஏற்றி சாஸ்தாவை வணங்கிவர நினைத்த காரியம் வெகு விரைவில் நிறைவேறுமாம். ஆனி உத்திரம் நாளில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுகிறது. சுற்றுப்பட்டி கிராம மக்கள் எல்லோரும் பாடகலிங்க சாமி மீது அளவு கடந்த பக்தி மிக்கவர்கள். அதனால்தான் பிரமாண்டமாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் குடும்பத்தோடு வந்து சாஸ்தாவை தரிசித்துச் செல்லத் தவறுவதில்லை. தங்கள் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருக சாஸ்தாவிடம் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்துச் செல்வதுண்டு. விழாக் காலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தங்கிச் செல்வதற்கான சகல வசதிகளும் இங்கு செய்து தரப்பட்டுள்ளன.. பலரும் இந்த சாஸ்தாவை தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். எனவே முடிகாணிக்கை செலுத்துதல், நித்ய பூஜை பணிகளுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கித் தந்து அகமகிழ்வோடு திரும்புவர். உரிய மணப்பருவம் அடைந்தும் திருமண யோகம் கூடி வராத பருவ வயதினர் பாடகலிங்க நாச்சியார் அம்பாளுக்கு திருமாங்கல்யக் காணிக்கை செலுத்தி வணங்குகின்றனர். இதனால் திருமண யோகம் எளிதில் கைகூடி வருகிறது என்கிறார்கள். தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.தங்கள் மனதை வாட்டி வதைக்கும் துன்பத்திலிருந்து விடுபட விரும்புவோர் அவசியம் ஒருமுறை குடும்பத்துடன் இத்தலம் வந்து தரிசித்துச் செல்லலாமே!எங்கே இருக்கு?திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து பொட்டல் என்னும் ஊர்வரை மினி பஸ்சில் பயணிக்கவேண்டும். அங்கிருந்து 2 கி.மீ. தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம்.தரிசன நேரம்காலை 8 – பிற்பகல் 3. - வடிவேல் முருகன்