-முனைவர் ஜி.குமார்சித்தர்கள் வாக்குப்படி கோசம் என்பதற்கு புதையல் அல்லது பொக்கிஷம் என்பது பொருள். மனிதனின் பிராண சக்தி புதைந்து கிடக்கும் இடங்கள்தான் பஞ்ச கோசங்கள் என்பது சித்தர்களின் நம்பிக்கை! .தலையணையை உறை மூடுவது போல ஆன்மாவை கோசங்களாகிய உறைகள் சூழ்ந்துள்ளன. இவ்வுறைகளின் புலன்கள் மூலமாகவே உடலுணர்விலிருந்து உயிர் சார்ந்த ஆத்மிக உணர்விற்கு நகர்கிறோம். சித்த கோசம் என்பது ஆன்மிக ஞானம். சத் கோசம் என்பது ஆன்மா பிரம்மத்துடன் கலக்கும் நிலை. இந்த இரண்டு கோசங்கள் பஞ்ச கோசத்துடன் இணைந்து முக்திக்காக ஏழு கோச நிலையைக் காட்டுகின்றன. வாழ்க்கை அன்னமய கோசம் மட்டும்தான் என முதலில் நம்புகிறோம். நகை, அவலம், விழிப்பு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, சமநிலை என ஒன்பது வகையான உணர்ச்சிகளுக்கு சூழ்நிலைக்குத் தகுந்தபடி எதிர்வினை ஆற்றுகிறோம். நமது எதிர்வினை முக்குணங்களில் (சாத்வீகம், ரஜஸ், தமஸ்) நமது ஆளுமைக்கு ஒத்துப்போவதாக இருக்கும் குணத்திற்கேற்ப அமைகிறது. எனவே கர்மா முடிவுறாமல் தொடர்கிறது. பிறப்பு, இறப்பு என்ற சூழலில் மறுபடியும் சிக்கிக்கொள்கிறோம். முக்குணங்கள் மூவுடல்கள், பஞ்ச கோசங்கள் ஆகியவைகளுடன் ஆழ்ந்த தொடர்புடையது. முதலில் முக்குணங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம். மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழிச் சொல் தன்மையைக் குறிக்கும். ரஜோ (ராட்சசம்), தமோ (தாமசம்), சாத்வ (சாத்வீகம்) என்பது இந்த மூன்று குணங்களாகும்.மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படிச் செயல்படுகிறார்கள்? ஆணவத்துடனும் பிறர் தனக்குக் கீழ் இருந்து செயல்படவேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.தனக்காக பிறர் செயல்படவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணம் கொண்டவர்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கபடம் நிறைந்தவர்கள்.பிறரையும் தன்னைப்போல் நினைத்துப் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீகக் குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் பிறருக்குச் சேவை செய்பவர்கள்..பொதுவாக மூன்று குணங்களுக்கும் சில பண்புகள் உள்ளன.சத்வ குணம் அஹிம்சை, அச்சமற்ற நிலை, சாந்தம், தூய்மை, தீமைகளை மறந்து மன்னிக்கக்கூடிய பண்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.ரஜஸ் குணம் அதிக சக்தி, நீடித்த செய்கைகள், பற்றுகள், மிகுந்த ஆசைகள் ஆகியனவற்றைப் பிரதிபலிக்கிறது.தமஸ் குணம் அறியாமை, சோம்பேறித்தனம், தூய்மையற்ற நிலை, இருள் மிகுந்த சூழல் என்பனவற்றைத் தெரிவிக்கிறது. அதிக உணவுடன் அதிக நேர உறக்கமும் இக்குணத்தில் அடங்கும்.ஒவ்வொரு உயிரிடமும் மூன்று குணங்களும் காணப்பட்டாலும் ஏதாவது ஒன்று மிகுந்திருக்கும். இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதைக் காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகின்றன. மூன்று குணங்களில் எது உயர்வு, எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது. ஆனால் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களைவிட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.மூன்று குணங்கள் இல்லாத படைப்புகளே இல்லை.விலங்குகளில் சிங்கம், சிறுத்தை போன்றவை ரஜோ குணத்திலும்; மான் - முயல் போன்றவை சாத்வீகக் குணத்திலும்; எருமை, பன்றி ஆகியவை தமோ குணத்திலும் இருக்கின்றன.முக்காலங்களில் நிகழ்காலம் சாத்வீக நிலையைக் குறிப்பதால் ஆன்மிகத்தில் இருப்பவர்கள் இந்த ‘ஷணத்தில் மட்டும் இரு’ - அதாவது இந்த விநாடியில் வாழ் எனக் கூறுகிறார்கள்.கனிகளில் பல வகைகள். ஆனாலும் முக்கியமானவை மா, பலா மற்றும் வாழை ஆகிய முக்கனிகள்தான். இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும் என்பார்கள். எனவே நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.இயற்பியலில் பொருட்களின் தன்மையைக் கூறும்பொழுதுகூட திட, திரவ, வாயு என்கிறார்கள். உதாரணமாக நீரை உறைய வைத்தால் பனிக்கட்டி. நீரின் இயல்பே திரவத் தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவியாகும்.நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆனால் அதுதான் உண்மை. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.மனிதனின் சுயத்தன்மைகூட கனவு, நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது..யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளைக் குறிப்பிடுகிறது.நம் இருப்புகூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணரமுடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைத்தானே உணர்தல் இயலாது.பால், நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணங்களுக்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீகக் குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உண்டு.நீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெய்யில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்படமுடியும்; ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்படமுடியாது. இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோ குணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தொல்லையைக் கொடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.இந்திய சித்தாந்தங்கள் கூறுவதில் இறைவனின் செயல் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். இச்செயலில் தலைவனாக பிரம்மா, விஷ்ணு, சிவன் எனப் பிரிக்கிறார்கள். இவ்வாறு இறை நிலை தன் தன்மையை மூன்றாகப் பிரித்தால் தான் உருவ நிலைக்கு வரமுடியும்.குணமற்ற நிலையில் இருப்பதை நிர்குணம் என்கிறோம். முதலில் இறைவன் நிர்குண பிரம்மமாக இருந்து பிறகு தன் செயலால் முக்குண நிலையை அடைகிறார். எப்பொழுது பிரம்மம் திரிகுண நிலைக்கு வருகிறதோ அந்த நொடியே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது. இந்திய கலாசாரத்தில் ஆறு வகை சமயம் (ஷண்மார்கம்) எனக் கூறும் பிரிவுகளில் ஒவ்வொரு சமயமும் மூன்று தன்மையுடனேயே விளங்குகின்றன. கணாபத்தியம் என்ற விநாயகர் வழிபாட்டில் அவர் சித்தி - புத்தியுடன் மூன்று எண்ணிக்கையில் இருக்கிறார்.கெளமாரம் என்ற சுப்ரமணியர் வழிபாட்டில் வள்ளி, தெய்வானையுடன் முருகனையும், வைணவ முறையில் பூமி, நீளா சமேத பெருமாளாகவும், சாக்த முறையான அம்பாள் வழிபாட்டில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதியாகவும் மூன்று எண்ணிக்கையாக இறைவனை வணங்குகிறார்கள். சைவர்கள் சிவன், மஹேஸ்வரன், ருத்திரன் என்ற மூன்று நிலையில் சிவபெருமானை வணங்குகிறார்கள். சூரிய வழிபாடு செய்பவர்கள் சாயா மற்றும் மாயாவுடன் ஆதித்தியனான சூரியனை வணங்குகிறார்கள். முக்குணங்கள், மூவுடல்கள், பஞ்ச கோசங்களுக்கான தொடர்புகள்தான் என்ன? ஸ்தூல சரீரத்தில் உள்ளது அன்னமய கோசம். சூட்சும சரீரம் பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. காரண சரீரம் ஆனந்த மய கோசத்தை அடக்கியுள்ளது. ஐந்து கோசங்கள் மூவுடல்களின் பாகங்கள். மூவுடல்களும் பஞ்ச கோசங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்குகள் போல் கதவுகளாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதவும் திறக்கப்பட்டு நாம் யார் என்பதற்கு வழிகாட்டுகின்றன. மூன்று குணங்களும் ஐந்து கோசங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. உடலில் பொதுவாக தமோ குணம் காணப்படலாம். ஆனால் சிறிதளவு ரஜஸ், சத்வ குணங்களும் சேர்ந்தேயிருக்கும். மனம் பொதுவாக அதிகம் ரஜஸ் குணம் கொண்டிருக்கும். ஆனால் மற்ற இரண்டு குணங்களும் சிறிதளவாவது இருக்கும். ஆனந்தமய கோசம் பொதுவாக சத்வ குணம் கொண்டிருக்கும். மற்ற இரு குணங்களும் சிறிதளவு கலந்திருக்கும். நேரத்தையும் சூழ்நிலையும் பொறுத்து அக்கலவைகள் மாறலாம்..அந்த ஐந்து உறைகளுக்கிடையே நல்லிணக்கம் அவசியம். முக்தியைப் பெற உறைகள் தூய்மையாக இருக்கவேண்டும். வாழ்வியல் முறை, உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியன குணங்களைச் சமப்படுத்தவல்லன.உடல் உறுப்புகளின் சுத்திகரிப்பு விரதம் அல்லது உபவாசம், யோகாசனங்கள் போன்றவை அன்னமயகோச உறையைத் தூய்மைப் படுத்துகின்றன. மருத்துவத்தில் ஆங்கில மருத்துவ முறை இந்த அன்னமய கோசத்தையே சரி செய்கிறது. காந்த சிகிச்சை முறை, ரெய்கி, அக்குபிரஷர் போன்றவைகளும் சில ஹோமியோபதி மருந்துகளும் பிராணமய கோசத்தில் சிகிச்சை முறைகளாக ஆற்றல்புரிகின்றன. இசை, நிறங்கள், சுவை, அரோமா ஆகியனவற்றை வைத்துச் செய்யக்கூடும் சிகிச்சைகளும் சில ஹோமியோபதி மருந்துகளும் மனோமய கோசத்தைச் சீர்படுத்தலாம். தியானம், உள ரீதியாகச் செய்யப்படும் சிகிச்சைகள் விஞ்ஞானமய கோசத்தை வளப்படுத்துகின்றன. பிராணாயாமா என்ற சொல் பிராணா, அயமா என்ற இரு சொற்களின் சேர்க்கை. அயமா என்ற பதம் புலன் அல்லது பரப்பின் விஸ்தீரணத்தைக் குறிப்பிடுவது. பிராணயாமா உண்மையில் பிராண சக்தியின் விஸ்தீரணத்தை அதிகப்படுத்துகிறது.சபரிமலையில் பதினெட்டுப் படிகளில் ஐந்து கோசங்களும் ஐக்கியம். 18 படிகளையும், ஐந்து இந்திரியங்கள், ஐம்புலன்கள், ஐந்து கோசங்கள், மூன்று குணங்கள் என்று பிரித்திருக்கிறார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, கை - கால்கள் ஆகியவை ‘பஞ்சேந்திரியம்’ எனப்படுகின்றன. பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் ஆகிய ஐந்தும் ‘ஐம்புலன்கள்’ என்றும், அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஆனந்த மய அல்லது ஞானமய கோசம் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச கோசங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகியவை மூன்று குணங்களாகும். இந்த பதினெட்டையும் பயன்படுத்தியோ அல்லது வெற்றிகொண்டோ வாழ்வதற்கு ஐயப்பனின் 18 படிகளையும் ஏறி அவனை வழிபட வேண்டும் என்பது ஆன்மிக வழிபாடு தரும் ஆழ்ந்த கருத்து. (சனாதன தர்மம் தழைக்கும்)