-முனைவர் ஜி.குமார்வேதங்களைப் பொறுத்தவரை மனித உடல் ஆன்மா தங்கும் ஓர் இடம், அவ்வளவுதான். மற்றபடி ஆன்மாவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்து உறைகள் மூடியிருக்கின்றன. இதை மேம்படுத்துவது மானிடரின் ஆன்மிக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. .அன்னமய கோசம் அன்னம் என்பது உணவு. நம் ஸ்தூல உடல் அன்னம், அதாவது உணவால் தோன்றி, உணவால் பெருகி, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. நாம் உட்கொள்ளும் உணவு, செரிமான முறையினால் நம் உடலின் செல்களாகவும் திசுக்களாகவும் உருக்கொள்கின்றன. மீண்டும் அவை உருவம் அழிந்து உடலின் செயல்பாட்டுக்கான சக்தியாக வெளிப்படுகின்றன. உண்ணாவிரதம் இருந்தாலோ அல்லது பட்டினியாலோ உடல் இளைத்துப் போகிறது. உடல் அழிந்துகொண்டே இருக்கிறது. அதேநேரம், உணவு உட்கொள்வதால் தொடர்ந்து உடல் புதிதாக உருக்கொண்டே இருக்கிறது. இதுவே அன்னமய கோசம். உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது..அன்னமய கோசம் என்கின்ற உறை தனியாக இயங்காது. மற்ற உறைகளின் தொடர்போடுதான் இயங்கமுடியும். ஒருவனுடைய ஆளுமை இந்த அன்னமய கோசம் தரும் நிலை. மானிடரின் மறுபிறப்பிலும் இப்பிறவியின் அன்னமய கோசத்தின் நிலையின் தொடர்பிருக்கலாம். அதாவது மறு பிறப்பில் பௌதீக உடலுக்கு முந்தைய ஜன்மத்தின் உடலுடன் தொடர்பிருக்கலாம். ஆன்மிகத்தின் குறிக்கோளான மோட்சத்தை அடைவதற்கு உண்டான முதற்படியே ஆன்மாவை தசைகள், குருதியிலான அன்னமய கோசம் என்கின்ற கூண்டிலிருந்து விடுவிப்பதுதான்..பிராணமய கோசம் காற்று இல்லாத இடம் இல்லை. இது மனித உடலிலும் மூச்சுக்காற்றாக இருக்கிறது. ஆக பிராணமய கோசம் சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. மூச்சை உள்ளிழுக்கும்போது, காற்றுடன் உயிர்ச் சக்தியும் (பிராணன்) சேர்ந்து உள்ளே போய், நம் நாடி நரம்புகளில் ஓடுகிறது. நம் உடலின் உள்ளியக்கங்களை இந்தச் சக்தி ஒழுங்குப்படுத்துகிறது. இதன் இயக்கத்தாலேயே உடலின் உறுப்புகள் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள் ஆகியவை பிராணமய கோசம். நமது உடலில் இருக்கும் சக்தி நாடிகள் மூலம் இயங்குகிறது; நகர்கிறது. அவற்றில் முக்கியமானவை ஈடா, பிங்களா, சுஷும்னா ஆகியன.சக்தி உடல் அல்லது பிராணமய கோசத்தில் சுமார் 72000 நாடிகள் உள்ளன. இவை இடது, வலது, நடு அல்லது ஈடா, பிங்களா, சுஷும்னா என்ற அடிப்படையான மூன்று நாடிகளில் இருந்து பிரிகின்றன. நாடி என்றால் இங்கு நரம்பு என்று அர்த்தம் அல்ல. நாடிகள், உடலில் பிராணா நகரும் தடங்கள் அல்லது பாதைகள். ஆனால் இந்த 72000 நாடிகளுக்கு உடல்ரீதியான உருவம் இல்லை. நம்மால் பார்க்க முடியாதது..பிராணமய கோசம் நமது மூச்சு. அது உள்ளவரையே உயிர் உள்ளதாக அறிகிறோம். உண்மையில் மூச்சுவிடத் தொடங்கியது முதல் அந்த மூச்சு நிற்கும் வரையிலேயே வாழ்நாட்கள் அமைந்துள்ளன. மனதையும் உடலையும் இணைக்கும் பாலமே இந்த பிராணமய கோசம்தான். நமது செயலுக்குத் தேவையானபடி உடலில் பிராணன் என்னும் மூச்சு நகர்கிறது. யோசனையின்போது மூளைப் பகுதிக்கும், நடக்கும் போதோ ஓடும்போதோ காலின் கீழ்ப் பகுதிக்கும் சக்தி அதிகம் நகர்கிறது. எந்தவித நகர்விற்கும் ஆதாரமானது இந்த பிராணமய சக்தி. அதனால்தான் உயிர் பிரிந்தபின் உடல் நகர்வதில்லை. மற்றபடி சக்தியின் நகர்வு சமநிலையில் இல்லாதபோதுதான் மனித உடலில் வியாதிகள் பெருகுகின்றன. அவை அன்னமய கோசத்தில் வெளிப்படும். .மனோமய கோசம் மனித உணர்வுகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது, மனம். உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும். அதாவது மனோமய கோசம், மனம் என்று நாம் அழைக்கும் இயக்கங்களின் தொகுப்பு. நினைவு, ஞாபகப்படுத்துதல், சிந்தனை, உணர்ச்சிகள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலம் குறித்த திட்டங்களை அமைத்துச் செயல்படுத்துவது போன்ற இவையெல்லாம் அடங்கியது. சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், தொடுதல் போன்ற ஐவகை உணர்ச்சிகளும் மனோமய கோசத்துடன் தொடர்புடையன. எனவே நல்லவை, கெட்டவை, பிடித்தது, பிடிக்காதது போன்றவைகளை அறிந்துகொள்வது மனம் அல்லது மனோமய கோசம். எனவே மனோமய கோசத்தை மானிடர்களின் வாழ்வில் மத்தியமான அல்லது மையமான கோசம் என்றும் சொல்லலாம். எண்ணம்போல்தான் வாழ்வு என்ற பழமொழியும் மனோமய கோசத்தை ஒட்டியே எழுந்தது. ஐந்து ஞானேந்திரியங்கள் தரும் உணர்வுகள், ஞாபக சக்தி, அகங்காரம் போன்றவை மனோமய கோசம் புரியும் செய்கைகள். சமநிலையில் இல்லாதபோதுதான் மனக்கிலேசம், மனஅழுத்தம் ஆகியவை உண்டாகின்றன. .விஞ்ஞானமய கோசம் இதனை பகுத்தறிவு என்று சுருக்கமாகவும் எளிதாகவும் சொல்லிவிட முடியும். விஞ்ஞானமய கோசம் என்பது `உயர் மனம்‘ எனலாம். எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது? எது உண்மை, எது பொய்? நிலையானது எது? எது நிலையற்றது? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம். விஞ்ஞானமய கோசம் நம்மை, நம் இருப்பின் நோக்கம், வாழ்வின் குறிக்கோள் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தச் செய்கிறது. அருகில் உள்ள வனத்தில் கனிகளைப் பார்க்கிறோம். மனதில் ஆசை எழுகிறது. அவைகளைப் பறிக்க நாம் எத்தனிக்கிறோம். அது இன்னொருவருக்குச் சொந்தமானது; அவைகளைப் பறிப்பது அழகல்ல என்று மனதின் மற்றொரு பகுதி நம்மை எச்சரிக்கிறது. நாம் நமது முயற்சியைக் கைவிடுகிறோம். அந்த எச்சரிப்பு உள் மனதிலிருந்து எழுகிறது. அதுவே விஞ்ஞான மய கோசம். மனிதர்களை விலங்குகளிடமிருந்து பிரிப்பதே விஞ்ஞானமய கோசம்தான்!.ஆனந்தமய கோசம் மேற்கண்ட நான்கு அடுக்குகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் ஒரு நிலையே, ‘ஆனந்தமய கோசம்’ ஆகும். மிகவும் நுட்பமானது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவோ, அறியவோ முடியும். ஆனால் ஆனந்தமய கோசம் என்பது நம்முடைய புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. எந்தச் சூழ்நிலையிலும் ஏற்ற இறக்கமின்றி மனம் எப்போது நிலையாக இருக்கிறதோ அப்போது அந்த ஆனந்த நிலையை அடைந்துவிட்டோம் எனக் கூறலாம். இந்த நிலையை உணர்வதும், அடைவதும்தான் ஆன்மிகத்தின் லட்சியமாகும். அந்த ஆனந்தமே ‘பரப்பிரம்மம்’, அதாவது அடிப்படை மெய்ப்பொருள். ஆண்டவனின் புகழைப் பாடுவதாக வைத்துக்கொள்வோம். நம்மை அறியாமல் நமது நாக்கு பிறழ்கிறது. அது அன்னமய கோசம். அந்த நாவின் அசைவிற்கான சக்தியைத் தருவது பிராணமய கோசம். பாட நாவினை அசையை விழைவது மனோமய கோசம். அந்த செய்கையைத் தொடர்ச்சியாகச் செய்விப்பது விஞ்ஞான மய கோசம். ஆழ்ந்த பக்தியுடன் நாம் இசைக்கும்போது கிடைக்கும் களிப்பு ஆனந்த மய கோசம்.தர்மம் (மதம் அல்லது வாழ்வியல் முறை) அறிவியல் கூறும் உண்மைகளை தன் நம்பிக்கைகளாக உறுதிப்படுத்தவேண்டும். அறிவியல் அங்கீகரிக்காதவற்றை விலக்க வேண்டும். மேலும் அதன் நம்பிக்கைகள் தர்க்க ரீதி, ஆழ்ந்த கவனிப்புகள், மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். சனாதன தர்மம் இந்த மூன்று தன்மைகளையும் கொண்டது. அறிவியலின் பௌதீகம், வாழ்வியலில் யோக தந்திரப் பயிற்சிகள் ஆகியவைகளுடன் வேதாந்தம் ஆழ்ந்த தொடர்புடையது. .தூந்திரப் பிரதேசத்தில் இருக்கும்போது நாம் குளிரை உணர்கிறோம். பாலைவனத்தில் செல்லும்போது வெப்பத்தை அனுபவிக்கிறோம். பௌதீகத்தின் மின் காந்த புலம், கதிரியக்க புலம் ஆகியன போன்று பஞ்ச கோசங்களும் உறைகளாக விதவிதமான புலன்களாக இருக்கின்றன. பகுதிகள் என்றும் குறிப்பிடலாம். ஒவ்வொரு புலத்தின் கீழ் விழிப்பு, கனவு, உறக்கம் போன்ற வெவ்வேறு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மனித வாழ்வு என்பது இந்த ஐந்து கோசங்களையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணர, அறிய முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே உணர்ந்து புரிந்து கொள்ளலாம். எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு. எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது. இவற்றை அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள். தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிராணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். இறுதியில் ‘ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் ‘ (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும். (சனாதன தர்மம் தழைக்கும்)