முழு வேதாந்தத்தின் உட்பொருளை மிகச் சிறு வாக்கியங்களில் நிரப்பித் தருவதால் மகா வாக்கியங்கள் என்று சொல்லப்படுவனவற்றைக் கண்டோம். அவைகளைத் தவிர சூத்திரங்கள் போல பேருண்மைகளை உணர்த்தும் எளிய சொற்றொடர்களும் உண்டு!நான்கு மகா வாக்கியங்களைத் தவிர வேத – உபனிடதங்கள் நான்கு மந்திர வாக்கியங்களைக் கூறுகின்றன. சனாதன தர்மத்தின் தொன்மையையும் ஆழத்தையும் அவை தெரிவிக்கின்றன.நேதி – நேதி (யஜுர் வேதம் – பிரஹதாரண்யக உபனிடதம்) இது அல்ல; அதுவும் அல்ல இது மட்டுமல்ல; அது மட்டுமல்ல. பிரம்மம் அனந்தம் எனக் குறிப்பிடும் வாக்கியம். அதாவது நமது விவரணைகளுக்கு அப்பாற்பட்டது பிரம்மம். அளவில்லாதது. இந்த சொற்றொடர் சனாதன தர்மத்தில் தனி ஒருவனுக்கு பிரம்மனைப் பற்றிய அபிப்பிராயத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கிறது. சிவ புராணத்தில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.வேதங்கள் பற்றிய ஞானம் இல்லாதவர்களுக்கு ஒருமுறை பிரம்மா விளக்கம் தர விரும்பினார். அனைத்து தேவ தேவியர்களையும் அவரது விளக்கத்தைக் கேட்க வரவழைத்தார்.விளக்கம் எவருக்குத் தேவையோ அவர்கள் கவனத்துடன் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார். ஒருவரும் கவனத்துடன் செவி சாய்க்காவிட்டால் தனது உரையை நிறுத்தி விடுவதாகவும் அறிவித்தார். நாளடைவில் தேவர்களின் மனம் அவரது விளக்கத்தில் லயிக்கவில்லை என்பதை உணர்ந்து தன் உரையை நிறுத்தினார். .ஏன் நிறுத்தி விட்டீர்கள் ? என சிவபெருமான் வினவினார்.உங்களையும் விஷ்ணுவையும் தவிர எவர் கவனமும் என் உரையில் லயிக்கவில்லை. உங்கள் இருவருக்கும் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை. எனவே நிறுத்திவிட்டேன் என்றார் பிரம்மா.பற்றின்மை, தூய்மை, ஞானம், தெய்வீகம், விருப்பு, வெறுப்பு என சிவனும் விஷ்ணுவும் அறிந்ததுதான். இந்த உரைகள் மூலம் நானும் என்னைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினேன் என மேலும் பிரம்மா கூறினார். அவரை வாழ்த்திவிட்டு விஷ்ணு சென்றுவிட்டார். ஆனால் சிவன் பிரம்மாவை வாழ்த்திவிட்டுச் செல்லவில்லை. இந்த உரைகள் மூலம் எப்போது நீயும் அனைத்தையும் உணர்ந்து கொள்கிறாயோ அப்போதுதான் உன் விளக்கங்களை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று பணிக்கிறார்.நீண்ட கால விளக்கத்திற்குப் பின்னர் பிரம்மா தனது உரையை ‘நேதி நேதி ‘ என்று சொல்லி முடிக்கிறார். நீ இப்போது முழுமை அடையவில்லை என்று நினைக்கிறாய்.எனவே முழுமை அடைந்து விட்டாய். கடல் நான் கடலல்ல என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.உபநிடதங்களில் சொல்லப்படும் முக்கிய வாக்கியம் ' நேதி..நேதி’. பொருள் இதுவும் அல்ல; அதுவும் அல்ல. இது மட்டுமல்ல என்றும் பொருள் கொள்ளலாம். இயற்கையைப் பற்றியது. பிரம்மத்தையும் குறிப்பிடுவதாகக் கருதலாம். இயற்கை புரிந்து கொள்ள எளிமையானது; அதே சமயம் ஏகப்பட்ட ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டது.பிரம்மமும் அப்படித்தான். புரிந்து கொள்ள எளிமையானது. ஆனால், அவ்வப்போது புரிந்துகொண்டவை முழுதும் அல்ல என நினைக்க வைக்கும். எனவே ஆதியும் அந்தமும் இல்லாதது என்றே பிரம்மத்தைக் குறிப்பிடுகிறோம். தொடர்ச்சியானது அல்லது என்றும் நிலைக்கக் கூடியது என்ற அர்த்தமும் உள்ளடங்கியது.ஆன்மாவின் உண்மையான, நிலையான, மாறுதல் அற்ற தன்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் தான் யார் என்ற உணர்வு எழும்! இந்த உண்மையை ஆன்மா அறிந்து கொள்வதுதான் அனைத்து துன்பங்களிலும் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே வழி..முதலில் வேண்டியது சிரத்தை அல்லது நம்பிக்கை. முதிர்ச்சி அடைந்த மனம் தன் புரிதலைத் தொடர அந்த நம்பிக்கையுடன் தியானத்தையும் பிரார்த்தனைகளையும் மேற்கொள்கிறது.சர்வம் கல்விதம் பிரம்ம (சந்தோக்கிய உபனிடதம்)பிரம்மம் எங்கும் நிறைந்துள்ளது. அனைத்தும் பிரம்மமே! அனைத்து உயிர்களிலும் (தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள்) உயிரில்லாப் பொருட்களிலும் பிரம்மன் நிறைந்துள்ளான்.பிரபஞ்சம் உயிர்கள் என அனைத்தும் பிரம்மத்தால் தோன்றியவை. அனைத்தும் அந்த பிரம்மத்தையே சென்றடைகின்றன. பிரம்மத்தால்தான் அவைகள் தக்க வைக்கவும் படுகின்றன.சாந்தோக்கிய உபனிடதம் காயத்திரி வித்யா மூலம் பிரம்மனின் இயல்புகளைக் கூறி, பிரம்மனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. பிரம்மம் உண்மையானது; ஆனால் உலகம் உண்மையற்றது. எனவே பிரம்மமே உயர்ந்த அறிவு ! மேலும், ‘ ஏகம் ஏவாத்விதீயம் பிரம்மம் ‘ என்று சொல்லப்படுகிறது.ஏகம் – ஒன்று ; ஏவ – மட்டும் ; த்வைவ – இரண்டு ; அத்விதீய – இரண்டல்ல; அதாவது பிரம்மம் ஒன்றே; இரண்டல்ல. பிரம்மன் என்பது ஒன்றே !பிரபஞ்சத்தில் பிரம்மனின் கால் பங்கு பக்தியை மட்டுமே அறிகிறோம். மீதி முக்கால் பங்கு மேலுலகத்துடன் தொடர்பில் உள்ளது. அந்த பிரம்மத்தை அமைதியாக மனதில் தியானிக்க வேண்டும். சரைவேதி சரைவேதி (ஐத்ரேய உபனிடதம் – ரிக் வேதம்)தேனீக்கள் இடைவிடாமல் ரீங்காரமிட்டபடி தித்திக்கும் தேனைச் சேகரிக்க சுற்றித் திரிகின்றன. கனிந்த பழங்களைக் கொத்தி உண்ண பறவைகளிடமும் சோம்பேறித்தனம் இல்லை. அவை மரங்களை நாடி நகர்ந்து கொண்டேயிருக்கின்றன..சூரியன் இடைவிடாமல் ஒளி தந்து கொண்டிருக்கிறான். எனவே ஆதவன் நாம் தினம் பார்க்கும் ஒரு கடவுள். எனவே ஒருவன் தன் முயற்சியைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு பயணம். செய்கைகள் புரிந்த வண்ணம் இருக்க வேண்டும்.சரைவேதி சுக்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐத்ரேய பிராம்மணத்தில் உள்ளது. இத்தகைய மந்திரங்கள் தெய்வ வழிபாடு மட்டுமல்ல; மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகள். நேர்மறை எண்ணங்களுடன் உத்வேக மூட்டுவனவை.சரைவேதி சுக்தம் நம்மை எழச்சொல்கிறது. இடைவிடாமல் நகர, அதாவது நமது கடமையின் முனைப்பில் இருக்க உபதேசிக்கிறது. மேலும் சரியான திசையில் பயணிக்கச் சொல்கிறது. விழிப்புணர்வோடு இடைவிடாத முயற்சியுடன் இருக்கும் ஒருவர் தான் வெற்றியை அடைய முடியும் என்பது இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து.ஒருவனுடைய இயல்புகளை வைத்து அவனை ஒவ்வொரு யுகத்துடன் மேலும் இந்த சுக்தம் ஒப்பிடுகிறது.செயலற்று சோம்பேறித்தனம் மிகுந்து உறங்கும் நிலையில் இருந்தால் அவன் கலியுகம். கலியுகத்தில் இருக்கப்போகும் இயல்புகளைக் கொண்டவன். உணர்வுகள் எழுந்து சற்று எச்சரிக்கையுடன் காணப்பட்டால் அவன் துவாபர யுகம் போன்றவன்.அவன் எச்சரிக்கை மிகுந்து உணர்வுகளுடன் எழுந்து நின்றால் திரேதா யுகம் போன்றவன். எழுச்சி மிகுந்து அவன் நடக்கவும் தொடங்கினால் அது கிரத யுகம் அல்லது சத்திய யுகம். நமது முயற்சிகளும் உழைப்புமே நம்மை அந்த சத்ய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.யதா பிண்டே ததா ப்ரஹ்மாண்ட், யதா ப்ரஹ்மாண்ட் ததா பிண்டே(யோகோபனிடதம் )ஒரு சிறு கல்லில் உள்ளதே பிரபஞ்சத்திலும் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ளது ஒரு கல்லிலும் நம் உடலிலும் உள்ளது.உண்மையில் இதன் பொருள்தான் என்ன?நமது உடல் பிரபஞ்சத்தைப் போன்றது; பிரபஞ்சம் நமது உடலைப் போன்றது. அதாவது மனித உடல் பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கிறது..பூஜையின்போது பண்டிதர் மந்திரங்கள் சொல்லி நம்மை நமது உடல் அங்கங்களை ஸ்பரிசிக்கச் சொல்வது உண்டு. அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.மூன்று உலகங்களும் நமது உடலிலும் உண்டு. புவ லோகம்; பூலோகம்; பாதாள லோகம். இடையின் மேற்பக்கம், இடையச் சுற்றி, இடைக்குக் கீழ் என மூன்று உலகைக் குறிக்கும் உடற்பாகம்.ஹரி வம்ச புராணம் மூவுலகங்கள் என மேல் உலகம் (ஊர்தவ லோகம்), பூவுலகம் (மத்ய லோகம்), பாதாள உலகம் (அதோ லோகம்) என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. தேவர்கள், தேவ கணங்கள் மேலுலகிலும், மானிடர்கள், மிருகங்கள் பூவுலகிலும் நாக, பூதங்கள் பாதாள உலகிலும் இருப்பதாக நம்பிக்கை.இந்தப் பிரிவுகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை மனித உடலிலும் உள்ளன.நாபி மத்திய உலகம் அல்லது பூவுலகம்.மேற்பகுதி மேலுலகம். அதில் இதயம் ஸ்வர்க்க லோகம்; வயிறு புவ லோகம்; தொண்டை மஹர லோகம்; வாய் ஜன லோகம்; மூளை தப லோகம்; மண்டையின் மேற்பகுதி சத்ய லோகம்.இடுப்பு பாதாள லோகம்; பிட்டம் ரசதல லோகம்; இடுப்பின் கீழ்ப் பகுதி தலதால லோகம்; பிறவி உறுப்புப் பகுதி மஹதால லோகம்; முழங்கால் சுதல லோகம்; காலின் மேற்பகுதி விதல லோகம்; உள்ளங்கால் தல லோகம்.ஏழு கடல்களும் மனித உடல்களில் உள்ளன. தொண்டையில் ஜல சாகர் (சாகர் - சாகரம் – கடல்); குருதியில் தஹி சாகர்; விந்துவில் ருஸ சாகர்; எலும்பு மஜ்ஜை கரித சாகர்; சளியில் சுர சாகர்; பாற்கடல் (ஷீர் சாகர்); சிறுநீரில் கர சாகர் (உப்பு நீர்); பஞ்ச பூதங்களான நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், புவி ஆகியனவையும் நம்மிடம் உறுப்புகளாகவும் தன்மைகளாகவும் உள்ளன..குருதி, உமிழ் நீர், சிறுநீர் ஆகியவை நீர்; தோல், உடல் ரோமங்கள், எலும்புகள் புவ ; ஒலி, வெறுமை, சந்தேகம், கவலைகள் என்ற குணங்கள் (ஆகாயத்தை) வெளியைக் குறிப்பிடுவன; ஓட்டம், நகர்தல், விரிவடைவு, சுருக்கம் ஆகியன காற்றின் பண்புகளைக் கொண்டவை; நம்மிடம் உள்ளன. தாகம், பசி, உறக்கம், சோம்பேறித்தனம் ஆகியவை அக்னி தரும் குணநலன்கள் ; நம்மைப் பீடிப்பவை !ஆதித்தியர்கள், ருத்திரர்கள், வசுக்கள்.... என மொத்தம் 33 தெய்வங்கள் சொல்லப்படுகின்றன. முதுகெலும்பில் உள்ள 33 வளையங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன.(சனாதன தர்மம் தழைக்கும்) - முனைவர் ஜி.குமார்