Bakthi Magazine
தொடர் : இராமாயணம்
அங்கிருந்த இளம்பெண்களில் சிலர், கைகளைக் கூப்பித் தம் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, “மதயானை போன்ற கம்பீரத்தை உடைய இந்த இராமனும், வில்லை வளைக்காமல் விடுவானானால் சீதையோடு நாமும் இனி அக்கினியில் குதித்து மாள வேண்டியதுதான்”என்று சொல்லி ஒருவரையொருவர் பார்த்து ஏங்குகின்றனர்.