-டாக்டர் சுதா சேஷய்யன்மகனை அழைத்துக்கொண்டு அரண்மனை அடைந்தார் சாந்தனு. உயிருக்கு உயிராக நேசித்த மனைவி உடன் இல்லையாயினும், மகன் இருக்கிறான் என்னும் மகிழ்ச்சியில் சாந்தனுவின் வாழ்க்கை தொடர்ந்தது.இவையெல்லாம் நடந்த பின்னர், கங்கைக் கரைக்குச் செல்வதையும் மன்னர் தவிர்த்தார். கங்கை நல்லாளைக் காணவேண்டும் என்னும் ஆசை எழுந்துவிட்டால்…. நதியாகப் பாய்ந்துகொண்டிருப்பவள், மீண்டும் பெண் வடிவம் பூண்டு வரவா போகிறாள்?.காலச்சக்கரம் சுழன்றது. மெல்ல மெல்ல, யதார்த்த உலகின் போக்குகளுக்குள் சாந்தனுவும் வந்தார். இடையிலேயே, அரியணை வாரிசாகும் வகையில், செல்வ மகனைப் பழக்கினார். ஒரு நாள் இளவரசனைத் தம்முடைய அரியணையில் அமரச் செய்துவிட்டு காடுகளுக்குச் சென்று வேட்டையாடும் எண்ணம் கொண்டார். வேட்டைக் குழு புறப்பட்டது. கங்கைக் கரையைத் தவிர்த்து, யமுனை ஆற்றங்கரைப் பகுதிகளையே சாந்தனு தேர்ந்தெடுத்தார். …………………..இளவரசனைத் தன் திகழ் அரியாசனத்து இருத்தி ……………………………… பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் யமுனைக் கரையில் பாசறை அமைத்துத் தங்கி, வேட்டையில் இறங்கினார். .வேட்டைக்கு வந்திருந்தாலும், சாந்தனுவின் மனம் அமைதியாகவே இருந்தது. இளமைக் காலத்தில் உள்ளத்தில் அவ்வப்போது எட்டிப்பார்த்த கோபம், ஆசை, ஏக்கம், தாபம் போன்ற உணர்வுகள் மொத்தமாக விடைபெற்றிருந்தன. மகனிடத்தில் ராஜ்ய பாரத்தை ஒப்படைத்துவிட்டு, கங்கைக் கரையில் குடிலமைத்துத் தங்கிவிடவேண்டும் என்னும் அவா முளைவிட்டிருந்தது. இப்படியே ஒரு நாள் ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்து பாசறையில் அமர்ந்திருந்தார் மன்னர். உலகம் முழுவதையும் நறுமணமாக்கிவிடுவது போன்ற நல்மணம் ஒன்று, காற்றில் தவழ்ந்து பாசறைக்குள் நுழைந்து, அரசரைச் சூழ்ந்து அமிழ்த்தியது. என்ன என்று காண்பதற்காக வெளிப்போந்த மன்னரின் கண்களில், ஆற்றங்கரையில் நின்றிருந்த பேரழகி ஒருத்தி புலப்பட்டாள். அழகு மட்டுமல்லாமல், அவளிடத்தில் ஏதோவொரு அமைதியும் வசீகரமும் தென்பட்டன. ‘யார் இவள்?’ – வினா எழும்போதே, அதுவரை இல்லாத உணர்ச்சிக் கொந்தளிப்பு தமக்குள் தோன்றுவதை மன்னர் உணர்ந்தார். .அழகின் ஆட்டமா? கவர்ச்சியின் கோலமா? பெண்மையின் மேன்மையா? காதலின் சாகசமா? விதியின் விளையாட்டா? பெரியவர்களைக் கண்டால் வணங்கவேண்டும் என்னும் நெறியில் வளர்க்கப்பெற்ற அவள், கைகூப்பி, உடல் வளைந்து, பணிந்தாள். அரசரின் வினாவைச் செவியேற்று, தான் யார் என்பதையும் கூறினாள். ’என் தந்தையின் கட்டளைப்படி, இந்த நதியில் பரிசல்களைச் செலுத்துபவள் நான். நதியைக் கடக்கவேண்டி வருபவர்களை, இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும் அழைத்துச் செல்வேன்.’என்னமோ தெரியவில்லை; சாந்தனுவுக்கு அவள்மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. பணிவாக நின்ற அவளின் தோற்றமும், இனிமையாகப் பேசிய அவளின் மொழியும், மென்மை குடிகொண்ட அவளின் நடையுடை பாவனைகளும் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. வசதிகளையும் லௌகீகத்தையும் துறக்கவேண்டும் என்று எடுத்திருந்த முடிவு, தானாகவே புரண்டுகொண்டது. வாழவேண்டும், இவளோடு வாழவேண்டும் என்னும் ஆசை கிளர்ந்தது. .கரை கடக்க உதவுபவள், தன்னைக் கரையேற்றுவாள் என்னும் நம்பிக்கை எழுந்தது. அவளிடம் பேச்சுக் கொடுத்து, அவளின் தந்தையைக் குறித்தும் வாழ்க்கை குறித்தும் சாந்தனு அறிந்தார். அவளுக்கும்கூட மன்னரிடம் ஈடுபாடும் அன்பும் வசீகரமும் தோன்றின. இருந்தாலும், தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகத் தேர்ந்தவளாகக் காணப்பட்டாள். ஏதோவொரு பக்குவம், ஏதோவொருவகை ஞானம் அவளிடம் நிறைந்திருப்பதாகத் தோன்றியது. திருமணம் குறித்த பேச்சை மன்னர் எடுத்தவுடன், தன்னுடைய தந்தையிடம் பேசும்படி கூறிவிட்டாள். திருமணத்தில் அவளுக்கு விருப்பம்தான், இருந்தாலும் தந்தையின் ஒப்புதலும் வழிகாட்டுதலும் வேண்டுமென்று கருதினாள் போலும்! தஷராஜன் என்னும் பெயர் கொண்ட தந்தையைச் சந்தித்தார் சாந்தனு. அரசனாக இருந்தாலும் தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்னும் மமதை, தஷராஜனின் வணக்கத்திலும் பாவனைகளிலும் தெளிவாகவே வெளிப்பட்டன. பாகனை அரசன் குறிப்பினால் ஏவப் பாகனும் பரதவர் பதியை ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான் ……… ஆகும் இவ்வாழ்வு என்று உரைத்தனன்……..தம்முடைய உள்ளக் கிடக்கையை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று சிந்தித்த மன்னர், தம்முடைய தேர்ப்பாகனுக்கு சமிக்ஞை புரிந்தார். மன்னரின் அங்க அசைவுகளை மட்டுமல்லாமல், நெஞ்ச நகர்வுகளையும் நன்கு அறிந்து, ஏறத்தாழ நண்பனாகவே செயல்பட்ட தேர்ப்பாகன், மன்னருக்காக மணம் பேசினான். தஷராஜன் மகளான பரிமளகந்தியாம் சத்தியவதியை, சாந்தனு மன்னர் மணம் புரிய விரும்புவதைத் தெரிவித்தான். யமுனையில் மீன் பிடித்து, யமுனையாற்றங்கரையில் படகோட்டி வாழ்ந்து கொண்டிருந்தாலும், பூலோக நுணுக்கங்களை நன்கு உணர்ந்தவன் தஷராஜன். நுட்பத்தோடு வினா எழுப்பினான். பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த சீருடை மகன் மற்று என் செய்வான் …………இந்த மன்னருக்கு மகன் உண்டு. கங்காதேவி பெற்ற அப்பிள்ளை, இவருக்குப் பின் அரசாளக் காத்திருக்கிறான். அப்படியானால், என் மகளை மணம் செய்து கொடுத்தால், சத்தியவதிக்குப் பிறக்கும் பிள்ளை என்ன செய்வான்? அவனுடைய எதிர்காலம் என்ன? .தஷராஜனின் வினா, சாந்தனுவுக்குத் திகைப்பையும் அதிர்ச்சியையும் அளித்தன. கேள்விக்கு பதில் கூறமுடியாமல் திரும்பினார். கிடைக்காமல் கிடைத்த வரமாக இருக்கிற தேவவிரதனுக்குத்தானே ராஜ்ஜியம்? எப்படியிருந்தாலும் அவன்தானே மூத்த மகன் ஆவான்! தஷராஜனைத் தவிர்த்துவிட்டு வந்துவிட்டாலும், சாந்தனுவால், சத்தியவதியை மறக்கமுடியவில்லை. இத்தனை நாட்களாக, பற்பல ஆண்டுகளாக உள்ளத்தில் தோன்றாத காதலும் கவர்ச்சியும் இவளைப் பார்த்தவுடன் மாத்திரம் ஏன் தோன்றின? கங்காதேவியின் பிரிவுக்குப் பின்னர், தேவ விரதனைக் கொணர்ந்து விடுவதற்கு முன்னருங்கூட, எந்தப் பெண்ணைப் பார்த்தும் மயங்காத உள்ளம், இப்போது இந்தப் பெண்ணைக் கண்டதும் ஈர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், இவளையே சுற்றிச் சுற்றி வருகிறதே!.குழம்பிய மனத்தோடு உலவிய சாந்தனு, சோக வசமானார். வேட்டைக்குச் சென்று திரும்பிவந்த தந்தை, ஏதோபோல் இருப்பதை தேவவிரதன் கண்டான். என்ன நடந்தது? புத்திசாலிப் பிள்ளை; பிருஹஸ்பதியின் மதி நுட்பமும், பரசுராமரின் பராக்கிரமும், வசிட்டரின் நேர்மையும் கலந்த பேரறிவல்லவா தேவவிரதனின் அறிவு? சிந்தித்தான். அப்பாவின் அகத்தில் இருப்பதை அறியவேண்டுமானால், அந்தரங்கத் தேரோட்டியிடம் அளவளாவ வேண்டும் என்பதை உணர்ந்தான். உணர்ந்ததைச் செயல்படுத்தினான். நிகழ்ந்த தன்மையைச் சாரதி புகன்றான். தேரோட்டியின் வாயிலாக நடந்ததை அறிந்த கங்கைமைந்தன், உடனேயே சென்று தஷராஜனைச் சந்தித்தான். பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்தானும் பகீரதி அல்லள் நின் மகளே நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் ’ஐயா, நீரே என்னுடைய பாட்டனார் ஆவீர். என்னுடைய தாய், இனி பாகீரதியான கங்கை அல்லள்; தங்களுடைய திருமகளான சத்தியவதியே என்னுடைய தாய். அருள்கூர்ந்து திருமணத்திற்கு உடன்படுங்கள். அரசுக்கு யான் உரிமை கோரமாட்டேன். என்னுடைய தம்பிக்குத்தான், அதாவது, தங்களுடைய திருமகளுக்குப் பிறக்கும் மகனுக்குத்தான் அரசுரிமை. இது சத்தியம்’ என்று சபதம் எடுத்தான். சத்தியவதி வியப்பில் உறைந்தாலும், தஷராஜனுக்கு இதில் முழு திருப்தி கிடைக்கவில்லை. ‘இப்போது சத்தியவதியின் மகனுக்கு உரிமை வந்துவிடும். ஆனால், எதிர்காலத்தில் இந்த தேவவிரதனுக்குத் திருமணமாகும்; இவனுக்கும் ஒரு மகன் பிறப்பான்; தந்தையான இவன் விட்டுக் கொடுத்திருந்தாலும், அந்த மகன், பாட்டன் சொத்தில் பங்குகேட்பான்; மூத்தவனுடைய வம்சாவளி என்று அந்தப் பிள்ளைக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் ஆதரவு பெருகும். என்னுடைய வம்சாவளி, என் மகள் வழியான சந்ததிகள்………’.தஷராஜன் இப்படியெல்லாம் சிந்தித்து, இவை குறித்தெல்லாம் கேள்விகளை எழுப்ப…..தேவ விரதன் சளைக்கவில்லை. எந்தத் தடை வந்தாலும் அதனை மடைமாற்றி வெற்றிகொள்ளும் வித்தகம் தெரிந்தவனாயிற்றே. ‘இதுதான் உங்கள் தடையா? கவலைப்படாதீர்கள். எனக்கு மகனே இருக்கமாட்டான். திருமணம் புரியமாட்டேன். பெண்ணை மனத்தாலும் எண்ணமாட்டேன் என்று பிரம்மசரிய விரதம் பூண்டான். அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாமல், தேவ விரதனின் பிரதிக்ஞையின் ஒலி கேட்டு தேவரும் முனிவரும் கின்னரரும் கந்தர்வரும் ஆங்கே வானவீதியில் கூடினராம்; மலர் மாரி பொழிந்தனராம். ‘பீஷ்ம’ என்று மொழிந்தனராம். ’பீஷ்ம’ என்னும் சொல்லுக்கு, ‘எண்ணிப் பார்க்கமுடியாத’, ‘பயங்கர’ என்னும் பொருள்கள் உண்டு. யாரும் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத பயங்கரமான சபதத்தைத் தந்தைக்காகச் செய்தவன் என்னும் பொருளிலேயே ‘பீஷ்ம’ என்னும் பெயரே தேவவிரதனின் பெயராயிற்று. இதன் பின்னர், பீஷ்மர் என்றே இப்பெயர் நிலைத்துப் போனது. .கங்கையின் மகன் என்பதால் கங்காபுத்திரன், காங்கேயன் என்றும்; சாந்தனுவின் மகன் என்பதால் சாந்தனுஜன், சாந்தனவன் என்றும்; வெண்மை நிறத்தவன் என்பதால் கௌராங்கன் என்றும்; நேர்மையின் வெண்மை கொண்டவன் என்பதால் ஸ்வேதவீரன் என்றும், பீஷ்மருக்குப் பற்பல பெயர்கள் உண்டு. எனினும், பீஷ்மர் என்னும் பெயரே பிரதானம். வேடிக்கை என்ன தெரியுமா? வாரிசுச் சண்டையோ, வம்சாவளிச் சிக்கலோ வரக்கூடாது என்னும் எண்ணத்தில்தான், தாம் திருமணம் செய்துகொள்வதில்லை என்றும், சத்தியவதியின் பிள்ளைக்குப் போட்டியாவதில்லை என்றும் பீஷ்மர் முடிவெடுத்தார். ஆனால், தம்முடைய கண்களுக்கு எதிரிலேயே, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஏற்பட்ட வாரிசுச் சண்டையை, வம்சாவளி யுத்தத்தைக் காணவேண்டிய கட்டாயம் தோன்றியது. .விதி என்னும் சர்வ வல்லமை பொருந்திய ஆற்றல்தான், மானுட இனத்தின் பற்பல நிலைகளையும் செயல்களையும் நிர்ணயிக்கிறது. ஆனாலும், விதியின் மகனாகவே தோன்றி, விதியின் மகனாகவே வாழ்ந்து, விதியின் ஆட்டத்தைக் கண்டு, தம்முடைய திறனாலும் செயலாலும் விதியின் விதியை மாற்றமுற்பட்டவர் பீஷ்மப் பிதாமகர் என்பதை எக்காலத்தும் யாராலும் மறுக்கமுடியாது. (பாரதம் விரியும்)