Bakthi Magazine
தொடர்: மகாபாரதம் – 4
தேவர்கள், அசுரர்கள் என்றெல்லாம் தனித்தனி இனங்களோ, குலங்களோ, கூட்டங்களோ கிடையாது. யாரெல்லாம் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவோ, உள்ளத்தளவில் நல்வெளிச்சம் கொண்டவர்களாகவோ இருக்கிறார்களோ, அவர்கள் தேவத்தன்மை கொண்டவர்கள். யாரெல்லாம் பிறருக்குத் துன்பம் தந்து, அடுத்தவர்களை அடக்கி ஆளவேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அவர்களெல்லாம் அசுரத் தன்மை கொண்டவர்கள்.