-டாக்டர் சுதா சேஷய்யன்குரு பரம்பரையில் தோன்றிய மன்னர் சாந்தனு (சந்தனு என்றே இவருடைய பெயர் அறியப்பட்டாலும், சாந்தனு என்றே வியாசர் குறிப்பிடுவதாலும், சாந்தனு என்னும் பெயருக்கான காரணம் சிறப்புமிக்கது என்பதாலும், இவ்வாறே நாமும் அழைப்போம்)..தயோ: ஸமபவத் புத்ரோ வ்ருத்தயோ: ஸ மஹாபிஷ: சாந்தஸ்ய ஜக்ஞே ஸந்தானஸ்தஸ்மாத் ஆஸீத் ஸ சாந்தனு:பிரதீபன் என்னும் மன்னரும் அவருடைய மனைவி சுனந்தாவும் தவத்தில் ஈடுபட்டனர். உள்ளமும் உணர்ச்சிகளும் தமனப்பட்டுச் சமனப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பிறந்த மகனே சாந்தனு. மஹாபிஷன் என்பதுதான் பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் என்றாலும், சாந்தமான மனநிலையில் தோன்றிய மகன் என்பதால் சாந்தனு என்றும் அழைக்கப்பட்டார். அறச் செயல்களால் மட்டுமே மகிழ்ச்சியும் மனநிறைவும் கிட்டும் என்பதை இவர் முழுமையாக உணர்ந்திருந்தார். சாந்தனுவின் குணாதிசயம், அறம் சார்ந்தே இருந்தது. அனைவருக்கும் நன்மையையே செய்தார். ய கராப்யாம் ஸ்ப்ருஷதி ஜீர்ணம் ஸ ஸுகமஷ்னுதே புனர்யுவா ச பவதி தஸ்மாத் தம் சாந்தனும் விதுயாரையெல்லாம் இம்மன்னர் தம் கைகளால் தொட்டாரோ, அவர்களெல்லாம் விவரிக்கவியலாத களிப்பை அடைந்தார்கள்; (வயதானவர்கள்கூட) இளமையைப் பெற்றார்கள். அமைதியைக் கண்டார்கள்..இதி ததஸ்ய சாந்தனுத்வம் – இதனாலேயே இவருக்குச் சாந்தனு என்னும் பெயர் நிலைத்தது. மிகச் சிறந்த மன்னராகத் திகழ்ந்த சாந்தனு, தம்முடைய ஓய்வு நேரங்களில், ஆற்றங்கரையிலும் தோட்டங்களிலும் உலவுவார். கங்கை ஆற்றின் தூய வெண்ணீரைக் கண்டு, மனம் களித்து, அந்த வெண்மையின் துள்ளலையே பார்த்துக் கொண்டு இவர் உட்கார்ந்திருந்த மாலைப் பொழுதில், திடீரென்று அங்கே ஒரு பெண் தோன்றினாள். நீர் மீதிருந்த கருத்தும், தாகசாந்தி செய்யலாம் என்னும் எண்ணமும் மாறிப்போக, அந்த மங்கையின்மீதே மன்னரின் மனம் சென்றது.பேரழகியான அவள் யார் என்று மன்னருக்குப் புரியவில்லை. இதுவரை கண்டதுமில்லை; பூவுலகத்து அழகிபோன்றும் அவள் தோன்றவில்லை. வையக மடந்தைகொல்? வரை மடந்தை கொல்? செய்ய பங்கய மலர்த் திருமடந்தை கொல்? துய்ய வண் கலைவிதச் சொல் மடந்தைகொல்? ஐயமுற்றனன் இவள் ஆர் கொல் என்னவே‘இவள் பூவுலகத்துப் பெண் தானா? ஒருவேளை இவள் மலைமகளோ? இல்லை, தாமரையில் வீற்றிருக்கும் திருமகளோ? இல்லையில்லை, சொற்களுக்கும் கலைகளுக்கும் தலைவியான கலைமகளோ? யார் என்று புரியவில்லையே!’ என்றே சாந்தனு தவித்தார்.இருவரும் ஒருவரையொருவர் கண்ணுற, இருவருக்கும் ஒருவர்மீது மற்றவர்க்கு ஈர்ப்பு ஏற்பட்டது. தம்மை மணந்து கொள்ளும்படி அவளிடம் சாந்தனு கேட்டார்.இந்த இடத்தில் கதையைச் சற்றே நிறுத்திக் கொள்வோம். வியாசரும் வில்லிபுத்தூராரும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்.அவளிடம் இனிய சொற்களைப் பேசத் தொடங்கினார் மன்னர். தாம் உவாச ததோ ராஜா ஸாந்த்வயங்ஸ்லக்ஷணயா கிரா தேவீ வா தானவீ வா த்வம் கந்தர்வீ சாத்த வ அப்ஸரா: யக்ஷீ வா பன்னகீ வாபி மானுஷீ வா ஸமுத்யமே யாசே த்வாம் ஸுரகர்பாபே பார்யா மே பவ சோபனே‘அழகானவளே, மெல்லிடை மங்கையே, தேவ மகளோ, தானவர் இனமோ, கந்தர்வக் கன்னிகையோ, அப்சர அணங்கோ, இயக்கர் இனியவளோ, நாக நங்கையோ, மானுட மடந்தையோ, யாராயினும், நின்னை மனைவியாகக் கொள்ள விழைகிறேன்’என்றே விண்ணப்பித்தார்.இனிய சொற்களைச் செவிமடுத்த அந்தப் பெண்ணும், மன்னரின் விருப்பத்திற்கு இணங்கினாள் என்று வியாசர் கதையை நகர்த்துகிறார்.வில்லிபுத்தூராரின் சாந்தனு, கண்முன் தோன்றும் அப்பேரழகி யாராகவிருக்கும் என்று கூடுதலாகவே சிந்திக்கிறார். தேவமங்கையும் அல்லள்; அப்சரக் கன்னியும் அல்லள்; வித்தியாதர, கந்தர்வ, கின்னர, இயக்கப் பெண்ணும் அல்லள்; மேலுலகம் கீழுலகம் சேர்ந்தவளும் அல்லள்; ஆயின், மனிதப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். எப்படித் தெரியுமா? கண்ணிமைத்து இருநிலம் காலும் தோய்தலால் – அவளின் கண்கள் இமைத்தன; அவளின் கால்கள் நிலத்தில் தோய்ந்தன.மனிதர்களுக்கு மட்டும்தான் கண்கள் இமைக்கும்; கால்கள் தரையைத் தொடும். தேவர்களுக்குக் கண்களும் இமைக்கா; கால்கள் தரையைத் தொடாமல் சற்றே மேலேயே நிற்கும்..நிடத நாட்டு அரசன் நளன். விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தி. இருவருக்கும் இடையில் அன்னம் ஒன்று தூதாகச் சென்று, ஒருவரைப்பற்றி மற்றவரிடத்தில் கூறி, காதலை மலர்த்தியது. இதற்கிடையில், தமயந்திக்குச் சுயம்வரம் நிர்ணயித்தார் அவளின் தந்தை. தமயந்தியின் பேரெழிலைக் கேள்விப்பட்டு, அவளை மணக்கும் எண்ணத்துடன் பூவுலகம் வந்தனர் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் சிலர். நளனையே வழியில் சந்தித்து, தங்களுக்காகப் பரிந்து பேச தமயந்தியிடம் அனுப்பினர். வாக்குத் தூய்மைக்காக நளனும் சென்றான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தமயந்தி, தன் முடிவில் உறுதியாக இருந்தாள். அவளுடைய உறுதியை அறிந்த தேவர்கள், சுயம்வர நாளில், நளனாகவே தங்கள் ஒவ்வொருவரையும் வடிவமாக்கிக் கொண்டு, சுயம்வர மண்டபத்தில் அமர்ந்தனர். வானவரும் வந்திருந்தார் பொற்றேர் நளன் உருவாப் போந்துஐந்து நளன்கள் ஆங்கே அமர்ந்திருக்க, தமயந்தியும் தவித்தாள். இருந்தாலும், அச்சு அசலான நளன், மானுட நளன் யாரென்று கண்டுபிடித்தாள். கண் இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால் – எண்ணி நறும் தாமரை விரும்பு நன்னுதலே அன்னாள் அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு ஐந்து பேரில், யாருடைய கண்கள் இமைக்கின்றன, யாருடைய கால்கள் தரையில் படுகின்றன, யாருடைய மார்பிலாடும் மலர்மாலை சற்றே வாட்டம் கண்டுள்ளது என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்தாள். கண் இமை கொட்டுதலும் கால் தரை பாவுதலும் சூடிய மாலை சோர்தலும் மானுடர்க்கே ஆகும் என்பதை அறிந்தவள், ஆங்கேயும் அவற்றைக் கண்டாள். கண் கொட்டுபவன் நளன், கால் தரை தொடச் சாய்ந்தவன் நளன், மலர்மாலையின் சோர்விலும் மென்முறுவல் காட்டுபவன் நளன் என்று கண்டுபிடித்தவள், அவனுக்கே மாலை சூட்டினாள்.நளவெண்பா என்னும் காவியத்தில் புகழேந்திப் புலவர் காட்டுகிற இந்த சூட்சுமத்தை, வில்லிபுத்தூராரும் தம்முடைய காவியத்தில் சாந்தனுவிடத்தில் பொருத்திக் காட்டுகிறார். கன்னியேயாம் எனில் கடிகொள் பான்மையை ………….. உன் நினைவு உரை என உசாவினான்வந்த பெண்ணும் மணம் செய்ய ஒப்பினாள். அவளே கங்கை. சில பல நிபந்தனைகளோடு சாந்தனுவை கங்காதேவி மணந்தாள் என்று கதையைத் தொடர இருக்கிறோம்.இருந்தாலும் சற்றே சிந்திப்போம்..வியாசர் பொதுவாகத் தொட்டதை விரிவுபடுத்தி, மானுடக் கூறுகளின் நுணுக்கங்களைத் தெளிவாக்குகிறாரே வில்லிபுத்தூரார், என்ன காரணம்? என்ன இருந்தாலும் அவள் கங்கைதானே, அவளை மானுடப் பெண் என்று இங்கே வரையறுக்கவேண்டிய அவசியம் உண்டா?உண்டு என்றே வில்லியார் கருதியதற்கு என்ன காரணம்?அறிந்தும் புரிந்தும் கொள்ளுதல் எளிதானதுதான்! யாராவது சற்றே ஆர்ப்பாட்டமாகவும் ஆணவத்தோடும் நடந்துகொண்டால், ‘என்ன கால் தரையில் பாவலையோ?’ என்று பெரியவர்கள் கண்டிப்பார்கள். தேவர்கள் என்றும் அரக்கர்கள் என்றும் தனித்தனியாக இனமோ குலமோ குடும்பமோ இல்லை; இருக்கப் போவதுமில்லை. குலத்தை வைத்து இப்பிரிவுகள் இல்லை; குணத்தை வைத்தே! இதனால்தான், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கண்ணனும் கம்சனும் எதிர் எதிராக இருந்தார்கள்; ஒரே வம்சாவளியைச் சேர்ந்த பாண்டவர்களும் கௌரவர்களும் எதிர் எதிராக இருக்கப்போகிறார்கள்.ஞான வெளிச்சம் பெற்றவர்கள் ஒளிமயமானவர்கள்; அதாவது, தேவர்கள் (திவி=ஒளி). அஞ்ஞான இருட்டில் இருப்பவர்கள் அசுரர்கள்; அதாவது, உடல் அல்லது பௌதிக அல்லது லௌகீக வலிமை மட்டும் பெற்றவர்கள் (அசுர=வலிமை). விண்ணவராய் உயரவேண்டுமென்றால், முதலில் மண்ணவராய், மகத்தான பண்புள்ளவராய், மாறாத அறநெறியைச் சார்ந்தவராய், மானுடராய் வாழ்தல் அவசியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்தாம், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார் என்பதே வள்ளுவப் பேராசானின் தீர்ப்பு.ஆக, மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதே சிறப்பு. அறமும் அன்பும் சேர்ந்து கலந்த இனிமையில் உலக வாழ்க்கையை நடத்துவோமென்றால், வானமும் வசப்படும்; வானுலகமும் வசப்படும். காணவேண்டியதைக் கண்டு, காணவேண்டாததைத் தவிர்த்து, மண்ணில் வேரூன்றித் தரையில் தடம் பதித்தலே மானுட மகத்துவம்.கங்கை என்கிறோமே, அவள் யார்? ஆகாச கங்கை, பகீரதப் பிரயத்தனத்தால் மண்ணுக்கு வந்தாள் என்னும் தகவல், இட்சுவாகு குல வரலாற்றிலும் இராமாயணத்திலும் கிடைக்கும். ஆகாசத்தில் பாய்வதைக் காட்டிலும், மண்ணில் ஓடி மானுடத்திற்கு உதவுவதே அறமும் நன்மையும் என்பதைக் காட்டுவதே இத்தகவலின் நோக்கம். இதனை உறுதிப்படுத்தவே, இறை அவதாரங்கள்கூட இறங்கி வந்து, மண்ணில் கால் தோய நடந்தனர். இராமனின் பதினான்கு ஆண்டு வனவாச நடையும், கண்ணனின் அஸ்தினாபுரத் தூது நடையும், சிவபெருமானின் மதுரை மாநகரக் குதிரைப்பாகன் நடையும், இன்னும் இன்னும் பற்பல அவதாரத் திருநடைகளும் இதனை உறுதிசெய்யவே நடந்தன; நடக்கப்பெற்றன..வையக மடந்தையோ வரை மடந்தையோ பங்கயத் திருமடந்தையோ என்றிருந்தவள், கண்ணிமைத்துக் கால் தரை தோய நின்றாள் என்று வில்லியார் காட்டுதற்கும் இதுவே காரணம்.அமைதியின் உறைவிடமான சாந்தனுவும், ஆரவாரம் அடங்கி நின்ற அப்பெண் அணங்கும் சந்தித்தார்கள். திருமணத்தில் இணைந்தார்கள்.கதை தொடர்கிறது. மானுட மேன்மையாய் இவர்களின் மகன், (பிற்கால) பாரதத்தின் பிதாமகர் தோன்றப் போகிறார் அல்லவா! (பாரதம் விரியும்)