-பனையபுரம் அதியமான் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்களில் அதிகம் காணப்படுவது இலுப்பை மரம். மிதமான மற்றும் வறண்ட பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது..இலுப்பை மரத்தை சங்ககாலத்தில் இருப்பை என வழங்கினர். கொத்துக்கொத்தான நீண்ட இலைகளையும், கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவக் கனிகளையும் உடைய இந்த மரத்தின் உட்புறம் வலிமையானது. வழிபாட்டுக்கு மட்டுமின்றி மருத்துவத்திற்கும் ஏற்றது இலுப்பை.ஊர்ப்புறங்களில் தோப்பில் வளர்க்கப்படும் இம்மரத்தில் கிடைக்கும் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை ஆலயங்களில் தீபமேற்றப் பயன்படுத்துகிறார்கள். இந்த இலுப்பை எண்ணெய் குளிர்காலத்தில் உறையும் தன்மை கொண்டது. அதனால் இந்த எண்ணெய்யைக் கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் நின்று நிதானித்து எரியும்.கோவில்களில் விளக்கு எரிக்க இது உகந்ததாக இருந்ததால், பழங்காலத்தில் ஆலயங்களை அடுத்து இலுப்பைத் தோப்புகள் பராமரிக்கப்பட்டன. காலப்போக்கில் இப்பழக்கம் மறைந்துபோனது. வழிபாட்டுக்கு மட்டுமன்றி கசப்புத்தன்மை கொண்ட இலுப்பை எண்ணெய் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.இலுப்பை மரம் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டதால், அக்காலத்தில் தெய்வ உருவங்களைச் செய்ய இம்மரத்தை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர். கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற திவ்ய தேசமாக விளங்கும் ஶ்ரீஅனந்தபத்மநாபசுவாமி புராணத்தில் இறைவன் தன் அடியாரான திவாகர முனிவருக்கும், வில்வமங்கலம் சுவாமிகளுக்கும் இலுப்பை மரத்தைப் பிளந்து காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகின்றது..இலக்கியம் :இலுப்பை மரம் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.குதிகா லிருப்பை வெண்பூ வுண்ணா - அகநானூறு.கருங்கோ ட்டிருப்பை பூவுறைக் குந்து- புறநானூறுகான விருப்பை வேனல் வெண்பூ - குறுந்தொகைநெய்தோய் திரியில் தண்சிதர் உறைப்ப - நற்றிணைஇப்பாடல்கள் மூலம் இலுப்பை, இருப்பை என வழங்கப்பட்டது, அதன் தன்மைகள் எனப் பல்வேறு செய்திகளை அறிய முடிகின்றது.ஆடுமின் அன்புடை யீர்அடிக் காட்பட்டதூளி கொண்டு,சூடுமின் தொண்டருள் ளீர்உம ரோடெமர்சூழ வந்து,வாடும்இவ் வாழ்க்கைதன் னைவருந் தாமல்திருந்தச் சென்று,பாடுமின் பத்தருள் ளீர்பழ மண்ணிப்படிக்க ரையே....- சுந்தரரின் திருப்பழமண்ணிப்படிக்கரை தேவாரம்.திருமண்ணிப்படிக்கரை என்ற தலம் இலுப்பை மரத்தை தலமரமாகக் கொண்டதால், இலுப்பைப்பட்டு என்று அழைக்கப்படுகின்றது.பழங்காலத்தில் இலுப்பைப் பூவை இனிப்புக்காகப் பயன்படுத்தினர். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என்ற பழமொழி இதனை நினைவுபடுத்துகின்றது. வௌவாலும் கரடியும் இலுப்பைப் பழம் உண்பதை சங்கநூல்களான நற்றிணையும் குறுந்தொகையும் குறிப்பிடுகின்றன..தலங்கள் :திருமண்ணிப்படிக்கரை, திருச்செங்கோடு ஆகிய சிவாலயங்களிலும், திருவனந்தபுரம் வைணவத் தலத்திலும் இலுப்பை தலமரமாகும். மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் பழைமையான இலுப்பை மரத்தின் அடிப்பகுதி காணப்படுகிறது. இதன் அடியில்தான் திருவள்ளுவர் அவதரித்ததாக அக்கோவில் தலபுராணம் குறிப்பிடுகின்றது.மருத்துவம்:இலுப்பையின் இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவையாகும். சதை நரம்புகளை சுருங்கச்செய்யும்.இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வந்தால் தாய்ப்பால் சுரக்கும். இதன் பூவானது உடலுக்கு வலுவைத் தரும். தீபத்திற்கு நெய் பயன்படும். பிண்ணாக்கு குடற்புழுக்களைக் கொன்று வாந்தி உண்டாக்கும். இலுப்பை எண்ணெய் புண்ணை ஆற்றும். இலுப்பைப் பூவை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் விதை வீக்கம் தீரும். பச்சைப்பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடலில் தடவி குளித்தால் சொறி, சிரங்கு ஆறிவிடும். இலுப்பை எண்ணெய்யை இளஞ்சூட்டில் தடவி வைத்திருந்து வெந்நீர் ஒத்தடம் தர இடுப்பு வலி, நரம்புத்தளர்ச்சி முதலானவை தீரும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.(தலவிருட்சம் வளரும்)