-தென்னம்பட்டு யோகம்2. பகவத் கீதையில் தியானம்:வேதாந்தம் எனப்படும் உபநிடதங்களின் சாரமே பகவத் கீதையாகும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு அருளிய உபதேச மொழிகளான பகவத் கீதை, பதினெட்டு அத்தியாயங்களையும், 700 சுலோகங்களையும் கொண்ட யோக சாஸ்திரம். பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயமான "தியான யோகம்" தியானத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், தியானப் பயிற்சி முறையின் நுணுக்கங்களையும் விளக்கி, அதைப் பயிற்சி செய்யும் முறையையும் விவரிக்கிறது..பவித்திரமான பூமி - சுகமான ஆசனம் - நிமிர்ந்த முதுகு - நாஸிகாக்ர திருஷ்டி - பிரம்மச்சரிய விரதம். இவற்றுடன் சாந்தமான அந்தக்கரணம் உள்ள சாதகன், அவன் உள்ளத்தே அமைதியான நிலை. அந்த அமைதியான நிலையில் அவன் எளிதாக தியானத்தில் பிரவேசிக்க முடியும் என்கிறார். எண்ணங்களைத் துறந்துவிட்டு, புலனுணர்வுப் பொருள்களோடும், செயல்களோடும் பற்று இல்லாமல் இருப்பானானால் ஒரு மனிதன் யோகத்தை அடைந்து விட்டான் என்று சொல்லலாம். சு: 6.4 உறுதியான இருக்கை ஒன்றை, ஒரு தூய்மையான இடத்தில், அதிக உயரம் இல்லாமலும், மிகவும் தாழ்வாக இல்லாமலும், துணி, தோல், தர்ப்பைப் புல் ஆகியவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அமைத்துக்கொள்ள வேண்டும். சு: 6.11.மனதை ஒருமுகப்படுத்தி, மனம் புலன்கள் ஆகியவற்றின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அந்த இருக்கையின் மேல் அமர்ந்து, ஆன்மிகத் தூய்மைக்காக யோகத்தைப் பயில வேண்டும். சு:6.12 ஸமம் காய – சிரோ - க்ரீவம் தாரயன் - னசண்டடலம்- ஸ்த்திர:|ஸம்ப்ரேஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச் - சானவ லோகயன். சு: 6.13 உடலை உறுதியாக வைத்துக்கொண்டு, தலையையும் கழுத்தையும் நேராக வைத்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்க்காமல் தன் மூக்கு நுனியையே உற்றுப் பார்த்திருக்க வேண்டும். மூக்கு நுனியில் பார்வையைச் செலுத்தப்படக்கூடாது என்கிறார் சங்கரர். "நாஸிக்காக்ரம்" என்பது சோதியென்ற நாசிமுனை. இது பரிபாஷை சொல். குருமுகமாக அறிந்து அவ்விடத்தில் நாட்டத்தைச் செலுத்தவேண்டும்..முழுதும் கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஆன்மாவிலேயே நிலைபெற்று விடும்போது, ஆசைப்படக்கூடிய பொருள்களிலிருந்து ஒருவன் விடுதலை பெறுகிறான். அவன் ஒன்றுபட்டிருக்கிறான் என்று அப்பொழுது சொல்லப்படுகிறது. . சு: 6.18 கட்டுப்பாடோடுகூடிய மனத்துடன் ஆன்மிக யோகத்தைப் பயில்வது, காற்றில்லாத இடத்தில் அசையாமல் எரிந்துகொண்டிருக்கும் விளக்குக்கு ஒப்பானதாகும். சு:6.19 யோகப் பயிற்சியினால் கட்டுப்படுத்தப்பட்டு மனம் அமைதியை அடைந்து, ஆன்மாவினால் ஆன்மாவை உணரும்போது அவன் தன் ஆன்மாவிலேயே திருப்தி அடைகிறான். சு: 6.20 பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தை ஆழ்ந்து படித்து சிந்தித்து செயலாற்றினால், தியானம் மேற்கொள்ளும் விதம் குறித்த எல்லா விளக்கங்களும் அதில் கிடைக்கும். தியானத்தின் மூலம் ஆன்மானுபவம் பெறுவதற்கு அதுவே வழிகாட்டியாக இருக்கும்..3. ஆதிசங்கரரின் அபரோக்ஷ அநுபூதி:இந்து சமய அத்வைத தத்துவத்தின் ஆச்சாரியரான ஆதிசங்கரர், உபநிஷத்துக்கள் வழங்கும் வேதாந்த ஞானத்தை மையக் கருத்தாகக் கொண்டு "அபரோக்ஷ அநுபூதி" எனும் அத்வைத வேதாந்த கிரந்தம் அருளியுள்ளார். இந்நூலில் வேதாந்த சாரம், ஜகத் மித்தியா, பிரம்மம் ஆத்மா விசாரம் இவற்றோடு, அத்வைத கண்ணோட்டத்துடன் முற்றிலும் புதிய கோணத்தில் "நிதித்தியாஸனம்" எனப்படும் தியான யோகம் பற்றிக் கூறுகிறார். பதஞ்சலி முனிவர் தமது அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என எட்டு அங்கங்களைக் குறிப்பிட, ஆதிசங்கரர் அபரோக்ஷ அநுபூதி எனும் இந்நூலில் "நிதித்தியாஸனம்" எனும் ராஜ யோகத்தில் இயமம், நியமம், தியாகம், மௌனம், இடம், காலம், ஆசனம், மூல பந்தம், தேக ஸாம்யம் (உடலை நேராக வைத்துக்கொள்ளுதல்), த்ருக் ஸ்திதி (பார்வையை நிலைபெறச் செய்தல்), பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, ஆத்ம தியானம், சமாதி எனப் பதினைந்து அங்கங்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார். பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோக சாஸ்திரத்தின் பொருளைக் கொள்ளாமல், முற்றிலும் அத்வைத வேதாந்தத்தின்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் புதிய விளக்கம் தருகிறார்..ஞானம் பெறுவதற்கு முன்னர் செய்யப்படும் தியானப் பயிற்சி உபாஸன தியானம். ஞானம் அடைந்த பிறகு அந்த ஞானத்தில் நிலைத்து நிற்பதற்காகச் செய்வது நிதித்தியாஸன தியானம். இந்நூலில் நிதித்தியாஸனம் எனும் நிர்க்குண உபாசனையான தியான யோகத்தை அருளியுள்ளார். " ப்ரஹ்மை வாஸ்மீதி ஸத் வ்ருத்த்யா நிராலம்ப தயா ஸ்திதி:| த்யான சப்தேன விக்யாதா பரமானந்த தாயீனீ||" -சுலோகம்: 123 'நான் பிரம்மமாக இருக்கிறேன்' என்கிற - ஸத் என்கிற நினைப்பில் மட்டுமே இருப்பது தியானம் என்று அழைக்கப்படுகிறது. நான் பிரம்மமாகவே இருக்கிறேன் என்னும் திடமான சிந்தனையுடன் வேறெதையும் பற்றாமல் - வேறெந்த எண்ணமும் உள்ளே வரவிடாமல், அந்த பாவனையிலேயே மனத்தை முழுகச் செய்வதே தியானம் ஆகும்..மனம் பிரம்மத்தில் லயித்து, தான் பிரம்மம் என்று உணர்வதே நிர்க்குண தியானமாகும். "ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி"பிரம்ம ஞானத்தை அடைந்த ஒருவன் பிரம்மமாகவே ஆகிறான் என்று முண்டக உபநிஷதம் (3.2.9) கூறுகிறது. 4. எம்பெருமானார் இராமானுஜர்:இந்து சமய விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆச்சாரியரான இராமானுஜர், பிரம்ம சூத்திரத்திற்கு எழுதியுள்ள விளக்கவுரையில் (பாஷ்யம்) தியானம் குறித்து ஒரு விளக்கம் தருகிறார். "அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா" என்ற பிரம்ம சூத்திரத்தின் (1:1:1) உரையில் பாஷ்யகாரர் இராமானுசர் கூறுகிறார். "ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படும் எண்ணெய் ஒழுக்கைப் போன்று, தியானிக்கப்படும் பொருளை இடையீடின்றிச் சிந்தித்திருப்பதே தியானம்."."தியானம் என்றால் சிந்திப்பது - ஒருமுறை சிந்திப்பதோ, நினைவுகூர்வதோ அல்ல; தியானம் என்றால் இடைவிடாமல் சிந்திப்பது; ஒரே சிந்தனையை வேறு எண்ணங்கள் கலக்காமல் தொடர்ந்து சிந்திப்பது தியானம் ஆகும்" என்கிறார். தியானத்தையே சிறப்பு வகையில் "யோகம்", "யோகத்தில் யோகம்" எனக் குறிப்பிடுவர். தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல பரம்பொருளைப் பற்றிய ஞானம் வளரும். பரம்பொருளின் சோதியைத் தன்னுள் உணர்வதே தியானத்தின் முடிந்த முடிபாகும். தியானத்தின் விளைவான அநுபூதி, மனு ஈசன் ஆவது. அடிப்படையில் மனிதனும் இறைவனும் ஒரே சைதன்யப் பொருளே, உணர்வுப் பொருளே. ஆதலால்தான் 'தத்வமஸி' (அது நீயாக இருக்கிறாய்), 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' (நான் பிரம்மமாக இருக்கிறேன்) என உபநிடத மகாவாக்கியங்கள் கூறுகின்றன. தியானம் எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும், தியானத்தில் தொடர்ந்து பயிற்சியில் இருப்பவர்கள், மரணத்திற்குப் பிறகு ஒளிப்பாதையில் செல்வர். அவ்வாறு ஒளிப்பாதை வழியாகச் செல்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்று பகவத் கீதை (8:26) கூறுகிறது.(யோகம் சித்திக்கும்)