-தென்னம்பட்டு ஏகாம்பரம் உயிரின் இயல்பான ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலக் கட்டுகளின்று தன்னை விடுவித்து, கட்டற்ற பரம்பொருளோடு தன்னை இயைத்துக்கொள்வதே மனித வாழ்வின் இறுதியான இலட்சியமாகும். அதற்கான முயன்ற உயிரின் முயற்சி நெறி பலவாய் விரிந்தது. அத்தகு நெறிகளுள் பண்டைய நாள் தொடங்கி முதன்மையானதாக விளங்கி வருவது யோக நெறியாகும்..வரலாற்றுக்கு முற்பட்ட மிகவும் தொன்மையான காலத்திலேயே, புலன்களால் அறியப்படாத - அறிய முடியாத பரம்பொருளை அறிவதற்குப் புலன்களை அடக்க வேண்டுமெனும் சிந்தனை எழுந்தது. ஒருமையுள் ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி, மனத்துக்கண் மாசிலானாகும் புலனடக்க ஒழுக்க நியதிகளே, யோக நெறியாக மலர்ந்தது. உண்மையில் யோக நெறி என்பது சமயம் சார்ந்த கோட்பாடல்ல. சமயத்தின் குறிக்கோள் இறைவனைக் காணல். ஆனால் யோகத்தின் இலக்கு தன்னை அறிதல். ஆதலால் யோக நெறியானது, சாதி மதங் கடந்த அனைவருக்குமான ஆன்ம தரிசனம் நோக்கிய வாழ்வியல் நெறியாகவே மானுடம் கண்டது. இந்து சமயத்தின் தத்துவ தரிசனங்கள் எனப்படும் ஆறு தரிசனங்களில் ஒன்றான, யோக தரிசனத்தைத் தோற்றுவித்தவராகப் பதஞ்சலி முனிவர் போற்றப்படுகிறார். அவர் படைத்த "யோக சூத்திரங்கள்" என்ற நூலே, யோக தரிசனத்திற்கான அடிப்படை சாத்திர நூலாகத் திகழ்கிறது. ஆயினும் பதஞ்சலி முனிவருக்கு முன்னமே, பழங்கால இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் வேத காலத்திலிருந்தே, யோக முறைமை தொன்றுதொட்டு இருந்து வருகிறது..இந்து சமயத்தின் வேத நூல்களில், மிகப் பழைமையான ரிக் வேதம் தொடங்கி, வேதாந்த சாத்திரங்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை, வான்மீகி முனிவரின் யோக வாசிஷ்டம் முதலானவற்றில் மனத்தைக் கட்டுப்படுத்தும் யோக நெறி நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. பதஞ்சலி முனிவர் தமக்கு முன்னமேயிருந்த யோக நெறிக்கான சிந்தனைகள், தத்துவங்கள், செயல்முறைகள் ஆகியவற்றையெல்லாம் உள்வாங்கி, உடலையும் மனதையும் சுவாசத்தையும் கட்டுப்படுத்தும் செயல்முறைகளிலான, எட்டு படிநிலைகள் கொண்ட "அஷ்டாங்க யோகம்" எனும் யோக நெறியை வகுத்தளித்தார். அதற்கான செயல்முறை விளக்கம் தரும் சாத்திரமே அவர் எழுதிய "யோக சூத்திரங்கள்" எனும் நூலாகும்.. வேதாந்தத்தில் யோகம்வேதத்தின் இறுதிப் பகுதியான ஞான காண்டமே உபநிடதங்கள் ஆகும். அவையே வேதத்தின் முடிபு, சாரம் எனும் பொருளில் "வேதாந்தம்" என்று அழைக்கப்படுகிறது. இவை பேசும் பெரும்பொருள் யாதெனில், அஃது ஆன்மா, பிரம்மம், பிரபஞ்சம் எனும் முப்பொருள் உண்மை குறித்ததேயாகும். உடல், மனம் கடந்து இருதயாகாசத்தில் ஒளிரும் பரம்பொருளை உடல், மனம், சுவாசம் இவற்றைக் கட்டுப்படுத்தும் யோகப் பயிற்சிகளான பிராணாயாமம், தியானம், சமாதி முதலானவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலம் தரிசிக்கலாம் என்கிறது. "விறகில்லாத அக்கினி தன்னிடமே ஒடுங்குவது போல், அலைச்சல் இல்லாத மனது தனது மூலமாகிய ஆத்மாவில் ஒடுங்கும்" என்கிறது மைத்ரேயீ உபநிடதம் (31) சு.3.."ஆன்மாவைக் காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்கவேண்டும். நம்மையே நிறைத்துக்கொள்ள வேண்டும். கேட்பதாலும், சிந்திப்பதாலும், மேலான ஞானத்தாலும் ஆன்மாவை அறிவதால் மட்டுமே அனைத்தும் அறியப்படுகின்றன."-பிருகதாரண்யக உபநிடதம் (10)சு: 2:4:5. கேட்டு, சிந்தித்து, மெய்ஞ்ஞானத்தால் தெளிந்து, ஆன்மாவைக் காண வேண்டும், அதாவது இறைவனின் திருக்காட்சி பெறவேண்டும், இறையனுபூதி பெற வேண்டும் என்கிறது. ஞான யோகத்தின் படிநிலைகள்:ஞான யோகத்திற்கான வழிமுறைகளாக நான்கு படிநிலைகளை வேதாந்தம் வகுத்துள்ளது. அவை சிரவணம் (கேட்டல்), மனனம் (சிந்தித்தல்), நிதித்தியாஸனம் (தெளிதல்), ஸமாதி (நிட்டை கூடல்) என்பன. 1.சிரவணம் - கேட்டல்: 'தத்வமஸி' 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' முதலான மகா வாக்கிய மெய்ப்பொருளை, சற்குருவின் திருவடி நிழலில் அமர்ந்து கேட்டல். 2.மனனம் - இடையறா நினைவு: குருவிடம் கேட்டறிந்த மெய்ப்பொருளைத் தொடர்ந்து இடைவிடாமல் எண்ணெய் ஒழுக்கு போல் தனிமையில் இருந்து, ஆழ்ந்து சிந்தித்தல். 3.நிதித்தியாசனம் - தெளிதல்: சிரவணத்தாலும், மனனத்தாலும் தீர்மானமாகிய மெய்ப்பொருளில் ஒன்றி இறையுணர்வில், ஆன்ம சிந்தனையில் முற்றிலுமாக மனத்தை நிறுத்துதல் நிதித்தியாஸனம். இதுவே மிக உயர்ந்த தியானம் ஆகும். 4. ஸமாதி - நிட்டை கூடல்: அறிவையும், அறிபவனையும் கடந்து, அறியப்படும் மெய்ப்பொருளுடன் ஒன்றுபட்டுக், காற்றில்லாத இடத்தில் தீபம் அசைவற்று இருப்பது போல, சித்தம் சலியாமல் இருக்கும் நிலை ஸமாதி. அப்படி யோகத்தில் சித்தி பெற்றவர்கள் ஜீவன் முத்தர்கள் ஆவர். "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகிளத்தலென ஈரிரண்டாம்; கிளக்கின் ஞானம்வீட்டை அடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்." -சிவஞான சித்தியார் பா.276நிட்டை கிளத்தல் என்பது நிட்டை கூடுதல் ஆகும்..யோக வாசிஷ்டம்:வசிஷ்ட முனிவர் இராமபிரானுக்கு ஆன்ம ஞானம் குறித்து உபதேசித்த "யோக வாசிஷ்டம்" எனும் வேதாந்த நூல், வான்மீகி முனிவரால் இயற்றப்பட்டது. யோக ஞானம் குறித்தான மனம், பிராணன், ஜீவன், ஆன்மா, பிரம்மம் குறித்து மிகவும் நுட்பமான விளக்கங்கள் கொண்ட இந்த நூல், ஆன்மிக நெறியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அரிய ஞானப் பொக்கிஷம் ஆகும். இந்நூலிலிருந்து யோக நெறி குறித்தான தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுலோகங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஊன்றிப் படிக்க, யோக நெறியின் அடிப்படைத் தெளிவாகும்..1.ஞானமும் - யோகமும்: "ஞானம் என்பது மனதின் அசைவை அடக்கி, அமைதி நிலையை அடைவது. யோகம் என்பது பிராணனின் அசைவை நிரோதம் செய்து, அதன் மூலமாக மனதை அடக்குவது. பிராணனை நிரோதம் செய்யும் பொருட்டு சுவாசத்தை முதலில் சமமாக்கிக் கொள்ளவேண்டும்." 2.மனம் - பிராணன்: "மனது, பிராணன் இரண்டும் ஒன்றையொட்டி மற்றொன்று நிலைத்திருக்கிறது. ஒன்று அடங்கினால் இரண்டும் ஒரே சமயத்தில் அடங்கும்." 3. மனம் – பிராணன் - ஆன்மா: "மனம் என்பது வாஸ்தவத்தில் ஆத்மாவைத் தவிர்த்து வேறல்ல. பிராணன் ஆத்மாவுடன் சேருகையில் மனதென்ற தோற்றம் ஏற்படுகிறது. சங்கல்பமாவது அசைவு. அவ்வசைவே பிராணன் எனப்படுகிறது." 4.பிராணாயாமம்: "பிராணனை அடக்கும் நிமித்தம், பிராணாயாமம் என்ற நியமம், யோக மார்க்கத்தை அனுசரிப்பவர்களால் ஏற்படுத்தப்பெற்றது. இதனால் பிராணனை அடக்குவதாகப் பொருள்படுத்த வேண்டுமே தவிர பிராணவாயுவை என்றல்ல. அதாவது சஞ்சலத்தையே தொழிலாகக் கொண்ட மனதை அசைவின்றிச் செய்வதே பிராணாயாமம். மூச்சை அடக்குவதல்ல. இது விபரீத அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. இப்பிராணயாமம் பயில்வதற்கு ஆசைகளை ஒழிப்பதும், பழக்க வழக்கங்களை ஒழிப்பதும், வைராக்கியமும் தேவை. இவற்றை அனுசரித்து பயிற்சி செய்து வந்தால், மனது அடங்குவதுடன் பிராணவாயுவின் கசிவும் ஒழுங்குப்படும்." 5. மனம் – ஆன்மா - பிரம்மம்: "ஆன்மா தான் பிரம்மம். மனம் என்பது ஆன்மாவின் இச்சையைத் தவிர வேறில்லை. மனம்தான் வெளிநோக்கம் ஏற்படுகையில் பிரபஞ்சத்தையும், உள்நோக்கம் கொண்ட பொழுது ஆன்மாவாகிய பிரம்மத்தையும் பார்க்கிறது. தேகமும் பிரபஞ்சமும் மனதின் கன சொரூபம். மனது ஜீவனின் இச்சா சொரூபம். ஜீவன் பரமாத்மா சொரூபம்."6.மனம் – பிராணன் – ஜீவன் - பிரம்மம்: "ஜீவன் என்று சொல்லப்படுவது, பிரம்மத்தில் "நான்" என்ற பாவனையால் ஏற்பட்டது. ஸ்தூல தேகம் இருக்கும் நிலையில் இது பிராணன் என்று வழங்கப்பட்டு வருகின்றது. பிராணன் தான் மனசாகப் பரிணமிக்கிறது. மனசோ ஜகத்தாக விஸ்தரிக்கின்றது. ஆகவே பிராணன், மனம், ஜகத் மூன்றும் ஒருமித்த ஜீவன் என்று சொல்லப்படுகின்றது." 7. தியானம்: "சாதாரணமாக மனம் ஒருமுகப்பட்ட நிலையை ஜனங்கள் தியானம் என்று கருதுகிறார்கள். இது தவறு. ஏனெனில் எதை நோக்கியேனும் மனம் ஒரு முகப்பட்டால் அதுவும் ஒரு மனோ விகல்பமாகும். தியானம் என்பதில் இரண்டாவதாக தோற்றம் முன்னும் பின்னும் ஏற்படக்கூடாது. இந்நிலையில் இருப்பவனைத்தான் பரமேஸ்வரன் என்று சொல்லுவது. நம்முடைய ஆன்மாதான் பரமேஸ்வரன் என்று வழங்கி வருகின்றது."8. சமாதி: "சமாதி என்பது என்ன? மனம் சமநிலையை அடைந்து உள்ளம் சதா குளிர்ந்த வண்ணம் இருப்பது தானே. அதாவது மனம் என்னும் நிலை அழிந்து அது ஆத்மாவாக நிற்பது தானே? ஆத்மாவை உணர்ந்தவன் ஒரு கண நேரங்கூட அனாத்மாவாக இருக்க முடியாது. எல்லாம் ஆத்மாவாக உணரப்படும் நிலையில் எது எதில் சமாதியடையும்? ஆத்மா ஆத்மாவிலேயே சதா நிலைபெற்று நிற்கிறது.(யோகம் சித்திக்கும்)