-டாக்டர் சுதா சேஷய்யன்பூருவுக்கு ஆட்சி உரிமையை யயாதி மன்னர் வழங்கினாரில்லையா? எம் பனி மதி மரபிற்கு அடியும் நீ இனி என்று தந்தையால் ஆட்சி வழங்கப்பெற்ற பூரு, பௌஷ்டி என்றழைக்கப்பெற்ற கௌசல்யை என்பாளை மணந்தான். பிரவீரன், ஈச்வரன், ரௌத்ராச்வன் என்னும் மூன்று புதல்வர்கள் பிறந்தனர். பிரவீரன் ஆட்சியைத் தொடர்ந்தான். இந்த வழியில், ஒரு சில தலைமுறைகளுக்குப் பின்னர் உதித்தவன் துஷ்யந்தன். ஆமாம், சகுந்தலையின் கணவனான துஷ்யந்தன் தான்!.சகுந்தலை – துஷ்யந்தன் மகனான பரதனுக்கு முதலில் சர்வதமனன் என்றே பெயர். சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷிதான் இப்பெயரைச் சூட்டினார். பெயருக்கேற்றாற்போல், மூன்று வயதிற்குள்ளாகவே காட்டு விலங்குகளையெல்லாம் கட்டுப்படுத்தி, அவற்றுடனும் அன்புபூண்டு வாழக்கூடிய பக்குவத்தை அவன் கொண்டிருந்தான். கண்வரின் ஆச்ரமத்தில், சகுந்தலையை கந்தர்வ மணம் செய்துகொண்ட துஷ்யந்தன், ரதகஜதுரக ஊர்வலத்தில் அவளைத் தன்னுடைய நாட்டுக்கு அழைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வசதியாக மறந்தும் விட்டான். சர்வதமனன் பத்து வயதைத் தாண்டி வளர்ந்துவிட்ட நிலையில், மன்னனிடமிருந்து அழைப்பு வராத நிலையில், யுவராஜாவாகும் பக்குவம் பிள்ளைக்கு இருப்பதைக் கண்ட கண்வர், சகுந்தலையையும் பிள்ளையையும் துஷ்யந்தனிடம் அனுப்பி வைத்தார். இருவரையும் தெரியாது என்று துஷ்யந்தன் மறுக்க, சகுந்தலை சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தர்மத்தைப் பேசினாள். அந்தத் தருணத்தில் அசரீரி ஒலித்தது..துஷ்யந்த புத்ரம் சாகுந்தலம் ந்ருப, தஸ்மாத் பரஸ்வம் – துஷ்யந்த அரசனே, சகுந்தலையிடம் பிறந்த இந்தப் புத்திரன் (உன்னுடையவனே), ஆகையால் இவனை பரணம் செய்துகொள். தஸ்மாத் பவத்வயம் நாம்னா பரதோ நாம தே ஸுத: -- இவனை நீ பரிக்கும் காரணத்தால், இந்தக் குமாரனின் பெயர் பரதன் என்றே இருக்கட்டும்.இப்படித்தான், துஷ்யந்தமகனுக்கு பரதன் என்னும் பெயர் உண்டானது. பரணம் என்னும் வடமொழிச் சொல்லுக்குத் தாங்குதல், ஏற்றல், பராமரித்தல் போன்ற பொருள்கள் உள்ளன. இதிலிருந்துதான், ‘பாரம்’(எடை, கனம்) என்னும் சொல்லும் ஏற்பட்டது. மகனைத் தந்தை ஏற்றுத் தாங்கவேண்டும் என்னும் வகையில் முதலில் தோன்றிய பெயர் என்றாலும், சர்வதமனன் என்னும் அரசிளங்குமரன் வளர்ந்து, தானே அரசபீடத்தை ஏற்றபோது, பூமியையும், பூமியின் தர்மத்தையும் தன்னுடைய பொறுப்பாகச் சுமந்து பராமரித்தான். நிலத்தையும் நிலத்தின் வளத்தையும் நிலமக்களின் செழுமையையும் பேணிப் பாதுகாத்தான். எனவே, பரதன் என்னும் பெயர் மிக்க பொருத்தமாக அமைந்தது.மிகப்பெரிய நிலப்பரப்பைச் சீரும் சிறப்புமாக பரதன் ஆட்சி செய்தான். இவனுடைய ஆட்சிச் சிறப்பால், இந்த நிலப்பரப்பும் ‘பாரதம்’என்று அழைக்கப்படலானது..அரசர் யாவரும் அறுமுகக் கடவுள் என்றலர்ப்ப புரசை நாகம் முன் கடவினன் நாகமும் புரந்தோன் – பரதனைக் கண்ட பிற அரசர்கள் யாவரும், இவன் ஆறுமுகக்கடவுளான முருகனோ என்று வியக்கும்படியாக, பேரழகுடனும் பெருவீரத்துடனும் நின்றான். யானையை முன் செலுத்திக் கொண்டு, தேவர் உலகத்தையும் ஆள்பவனாக இருந்தான்.பரதனுக்கு மூன்று மனைவிகள், ஒன்பது பிள்ளைகள். ஒன்பது பேரும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட, பின்னர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். பாரத்வாஜ மகரிஷி முன்னின்று நடத்திக் கொடுத்த யாகத்தின் பயனாக, பூமாங்கன் என்னும் மகன் பிறந்தான். பூமாங்கனின் மகன் அஜாமீடன். அஜாமீடனின் மகன் துஷ்யந்தன். இவ்வாறே தொடர்ந்த வம்சத்தில், ஹஸ்தி என்னும் குமாரன் தோன்றினான். முக்குலத்தினும் மதிக் குலம் முதன்மை பெற்றது என்று எக்குலத்தினில் அரசும் வந்து இணையடி இறைஞ்ச மைக்குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே அக் குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான்(ஹஸ்தி என்னும் பெயரையே, தமிழ் முறைப்படி அத்தி என்று விளிக்கிறார் வில்லிபுத்தூரார்.) சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரின் வழியிலும் வந்த அரச குலங்களில், சந்திர குலமே முதன்மை பெற்றது என்று சொல்லும்படியாக, எல்லாக் குலங்களிலும் அரசர்களும் வந்து வணங்கும்படியாக, மேகக் கூட்டங்களில் எவ்வாறு புட்கலாவர்த்தம் என்னும் மேகம் உயர்ந்ததோ, அவ்வாறே, ஹஸ்தி என்னும் மன்னன் இக்குலத்தினில் தோன்றினான். காடு மேடாக்கி, நிலந்திருத்தி நெடுவளம் அமைத்த இம்மன்னன், தன்னுடைய தலைநகரமாகச் சமைத்த நகரம், இந்திரலோகத்து அமராபதிக்கும் குபேரலோகத்து அளகாபுரிக்கும் நிகராகச் சிறப்புற்றது. ஹஸ்தியின் பெயரால், இந்நகரம் ஹஸ்தினாபுரம் என்றே அழைக்கவும் பெற்றது. இதம் ஹாஸ்தினாபுரம் மாபயாமாஸ ஏதத் அஸ்ய ஹாஸ்தினாபுருத்வம் என்றே வியாசகாவியம் இதனைப் போற்றுகிறது. திரிகர்த்த நாட்டின் இளவரசி யசோதரையை இவன் மணக்க, இவர்களுக்குப் பிறந்த மகன் விகுண்டனன் என்பவன் ஆவான்..இந்தக் குலத்தில், போர்த் தொழிலிலும் நீதி நெறியிலும் மக்கள் பண்பிலும் வல்லவனாக, வளமை மிக்கவனாகத் தோன்றியவன் குரு என்பான்.தன்னுடைய மக்களுக்குச் செழுமையும் வளமையும் கிட்டவேண்டும் என்பதற்காக, மிக நீண்ட நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய கைகளால் தானே உழுது திருத்தி நகரம் அமைத்தான் இம்மன்னன். இப்பகுதியில் யார் இறந்தாலும், அவர்களுக்கு முக்தி கிட்டவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டான் (இன்றளவும், குருக்ஷேத்திரப் பகுதியில் மரணம் எய்துபவர்கள், உடனடியாக முக்தி அடைகிறார்கள் என்பது நம்பிக்கை). சரஸ்வதி நதிக்கரையான இப்பகுதி, தர்மத்தின் விளைநிலமாக விளங்கவேண்டும் என்பதே குருவின் ஆசை. தன்னுடைய காலத்தில், தர்மக்ஷேத்திரம் (அறத்தின் திருத்தலம்) என்றே அழைத்த இவ்விடம், பின்னர், குரு மன்னனின் பெயரால், குருக்ஷேத்திரம் என்றே அழைக்கப்படலானது.தலைநகரம் ஹஸ்தினாபுரமாக இருந்தபோதிலும், கலையும் பண்பாடும் தழைத்த இடமாகக் குருக்ஷேத்திரம் விளங்கியது. முனிவர்கள் பலரும் இங்கு தவமியற்றினர். வேதவியாசரின் தந்தையான பராசரர் நெடுங்காலம் தவம் செய்த பகுதி இது..குரு மன்னனின் மகன், ப்ரதீபன் என்பவன். இவனுடைய மூத்த மகன் தேவாபி என்பவன் துறவியாகிவிட்ட நிலையில், வம்சம் தழைக்க இன்னொரு பிள்ளை வேண்டுமென்று இவனும் இவன் மனைவியும் தவமிருந்தனர். நெடுங்காலம் கழித்து இவர்களுக்குப் பிறந்த மகன் சந்தனு. மனம் சாந்தமாகிப் பக்குவப்பட்ட நிலையில் பிறந்தவன் என்பதால், இவனுக்குச் சந்தனு (சாந்தனு) என்னும் பெயர் சூட்டப்பட்டதாக வியாசபாரதம் தெரிவிக்கிறது. சந்தனுவுக்கு ஒரு தம்பியும் தோன்றினான்; அவன் பெயர் பாஹ்லீகன்.இந்த சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்த மகன்தான் பீஷ்மர். பின்னர், சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த பிள்ளைகள், சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீர்யன் ஆகியோர். விசித்திரவீர்யனின் மனைவியரான அம்பிகை, அம்பாலிகை வழியாகத் தோன்றியவர்கள், திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகியோர். இவர்களின் பிள்ளைகள்தாம், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் சண்டையிட்டோர்.இதுதான் இந்தக் காப்பியத்தின் வேடிக்கை!முரண்பட்டு நின்றவர்களை அரவணைத்து, வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்களை ஒன்றிணைத்து, அனைவரையும் அன்பால் தாங்கி, நீதியால் ஆட்சி நடத்திய மன்னன் பரதன்.எல்லோரும் அருகருகே வாழுவதற்காகவும், ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகவும், தக்க வகையில் தலைநகரம் அமைத்து, ஒற்றுமையைப் பேணிய அரசன் ஹஸ்தி.நிலத்தைப் பக்குவப்படுத்தி, பலரும் பயன்படுத்துகிற வகையில் திருத்திச் செப்பனிட்டு, என்றென்றும் அறம் தழைக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் பாடுபட்ட மன்னன் குரு..பூரு வம்சம் என்பதால் பௌரவர்கள் என்றும், பரத வம்சம் என்பதால் பாரதீயர்கள் என்றும், குரு வம்சம் என்பதால் கௌரவர்கள் என்றும் இவ்வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சுட்டப்படுகிறார்கள்.குரு உள்ளிட்ட வம்ச முதல்வர்கள், நிலம் திருத்தினார்கள்; பல்லோரையும் அரவணைத்தார்கள்; பலருக்கும் நிலம் பயன்படவேண்டுமென்று விரும்பினார்கள்.ஆனால், இதே வம்சத்தைச் சேர்ந்தவர்கள், நிலத்துக்காகவே போர்க்களத்தில் மோதினார்கள். நிலம் மட்டுமில்லை, நீள அகல விஸ்தீரணங்கள் மட்டுமில்லை, ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பதற்காகவே அடித்துக் கொண்டார்கள்.நிலம் செழுமையாக்கி, மனிதர்களை ஒருமைப்படுத்திய வம்சத்தில், நிலத்திற்காகப் பிரிந்து, பிரித்துப் போரிடும் கொடுமையும் நிகழ்ந்தேறியது.அண்ணன் தம்பியே ஆனாலும், அணுக்க உறவுகள் ஆனாலும், ஆட்சியும் அதிகாரமும் ஐச்வரியமும் மண்ணும் பொன்னும் பொருளும் எப்படியெல்லாம் மயக்கிவிடுகின்றன!(பாரதம் விரியும்)