-முனைவர் ஜி.குமார் உடல், உள்ளம், அறிவு ஆகியவற்றைச் சுத்திகரித்து புனிதமாக்குதல் அவசியம் என சனாதன தர்மம் வலியுறுத்துகிறது.எண்ணற்ற வழிமுறைகள் இருந்தாலும் ஆன்மிகச் சடங்குகள், யோகாசனப் பயிற்சிகள், பக்தி வழிமுறைகள் அந்த சுத்திகரிப்புக்குப் பெரும்பாலும் உதவுகின்றன. இந்து தர்மத்தின் வாழ்வுடன் இந்த எளிய சாதனங்கள் பின்னிப்பிணைந்துள்ளன. நடைமுறையில் உள்ள அவற்றின் உட்பொருளையும் நோக்கத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. குருவின் போதனையும் வழிகாட்டுதலும் அதற்கு மிகவும் முக்கியம் ஆகின்றன..சம்ஸ்காரங்கள்:சனாதன தர்மத்தில் ஒருவரின் வாழ்நாளில் முக்கியக் கடமைகளாக உபாசனை (வழிபாடு), உற்சவம் (திருவிழா), தீர்த்த யாத்திரை, அறநெறி, சம்ஸ்காரங்கள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.சம்ஸ்காரங்கள் என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ள வேண்டிய சில அர்த்தமுள்ள ஆன்மிகச் சடங்குகள். முழுமை அடைதல், தயார்படுத்திக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். சுத்திகரிப்பு என்ற அர்த்தத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.இது வடமொழிச் சொல்லாக இருந்தாலும் பாரத தேசத்தின் பிற மொழிகளிலும் விளக்கப்பட்டுள்ளன. இவை சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கைகள். இவை ஒருவரின் கர்மாக்களுடன் தொடர்புடையவை என யோக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் அகம் மற்றும் புறம் நிலையிலும் மேற்கொள்ள வேண்டியவை..சம்ஸ்காரங்கள் மிகவும் தொன்மையானவை. உலகின் மிகப் புராதன சடங்குகளாகக்கூட இவை இருந்திருக்கலாம். பழமையான ரிக் வேத சம்ஹிதையில் இவை பேசப்படுகின்றன.ஒரு நபரை வாழ்வியல் மூலம் உயர்தர ஆன்மிக நிலைக்கு உயர்த்துவதே இத்தகைய சடங்குகளின் நோக்கம். பரவலாக மேற்கொள்ளப்படும் அத்தகைய பழக்க வழக்கங்கள் ஒரு பண்பாடு அல்லது கலாசாரத்தின் முதிர்ச்சியை உணர்த்துகிறது.கருவுற்ற நாள் முதல் துவங்கும் இந்தச் சடங்குகள் ஒரு மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் தொடர்ந்து தேவைக்குத் தகுந்த நற்பண்புகளைத் தோற்றுவிக்கின்றன. வாழ்நாள் முழுதும் தொடர்ந்து அவனது ஆளுமை வளர்ச்சியடையத் துணை செய்கின்றன..இக்காலகட்டத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தீவிர மத நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று இழிவு செய்யப்பட்டாலும் அவற்றில் ஆழமான, மிக உயர்ந்த பொருள் காணப்படுகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் எந்தச் சடங்குகள் முக்கியமாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிக்கோள்களுக்கு எந்தவிதப் பேதமுமில்லாமல் காலத்திற்கு ஏற்ப சிறிதளவு மாற்றிக்கொள்ளக்கூடிய முயற்சிகளே அவை.கௌதமர் தன் தர்மசூத்திரங்களில் நாற்பது சம்ஸ்காரங்களைப் பட்டியலிடுகிறார். பிற நூல்கள் பன்னிரண்டு முதல் நாற்பத்து இரண்டு சம்ஸ்காரங்களைக் குறிப்பிடுகின்றன.இந்நாட்களில் பெரும்பாலும் பதினாறு சம்ஸ்காரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கர்பதானம், பும்சவனம், சீமந்தம், வித்யாரம்பம் என பித்ருக்கள் அல்லது நீத்தார் கடன்களை முடிக்கும் வரை அமைந்துள்ள இவை சோடஷ சம்ஸ்காரங்கள் (பதினாறு சடங்குகள்) என்று அழைக்கப்படுகின்றன..எந்த இறைவனையும் திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை. குறிப்பாக ஒரு சிலவற்றைப் பார்த்தால் பும்சவனம் - கருவில் உள்ள சிசுவை இவ்வுலகில் பிணைத்து ஊட்டம் அளிக்கிறது. அன்னபிரச்னம் - குழந்தைக்கு முதல் முறை திட உணவு ஊட்டுகிறது. இதுபோன்ற சில சம்ஸ்காரங்கள் அன்பு, நேசம், நல்லிணக்கம் முதலான உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவிகளாகச் செயல்படுகின்றன. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் ஒன்றாக சமய அந்தஸ்து தரும் புனிதச் சடங்கு விவாகம். மிருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி உயர்வான நோக்கங்களை நோக்கித் திருப்பி, நான்கு புருஷார்த்தங்கள் அல்லது சனாதன தர்மத்தின் லட்சியங்களை அடைய உதவும் சடங்கு. சமூக ஒழுங்கு நலனைக் காக்கவும் திருமண அமைப்பு உதவுகிறது. .இவை வாழ்வின் ஒரு கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்திற்குள் நுழையும்போது செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள். ஆனால் பெரும்பாலும் கிரஹஸ்த அல்லது இல்லற வாழ்வின் கட்டத்தில் செய்யப்படுவனவாக அமைந்துள்ளன. உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, ஆன்மிக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன. ஜீவாத்மா என்ற புருஷன் பதினாறு கலை உள்ளவன். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது. உடம்பும் ஒரு கலை. எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரனுக்கு அர்ப்பணிக்கவே பிரேத சம்ஸ்காரம் என்ற இறுதிச்சடங்கு தேவைப்படுகிறது என்றும் ஒரு கருத்து உண்டு.இந்தப் புறச்சடங்குகளைத் தவிர 1) எல்லா உயிர்களிடமும் கருணை, 2) பொறுமை, 3) பொறாமை இல்லாமை, 4) மனத்தூய்மை, 5) சாந்தம், 6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல், 7) தாராளகுணம், 8) பேராசை இல்லாமை ஆகிய எட்டுக் குணங்களைப் பேணுதலையும் அகச் சம்ஸ்காரங்களாக சனாதன தர்மம் குறிப்பிடுகிறது.பதினாறு சடங்குகளையும் செய்தே ஆகவேண்டும் என்று எந்த இந்து தர்மநூலும் கட்டாயப்படுத்தவில்லை. சமுதாயத்தில் இச்சடங்குகள் அனைவருக்கும் உரியதானவை. இதில் எட்டு அகநிலைச் சடங்குகள் இன்றியமையாதவை என வலியுறுத்தப்படுகிறது. புறச் சடங்குகளின் பொருளை உணர்ந்து அகச்சடங்குகளைக் கடைப்பிடித்து தானதர்மங்களுடன் எளிய வாழ்வைப் பின்பற்றுவதே சாலச்சிறந்தது. திருமணம், குழந்தைக்குப் பெயரிடுதல், காது குத்துதல், முடி நீக்குதல், இறுதிச் சடங்கு என சிலவே இக்காலகட்டங்களில் பின்பற்றப்படுகின்றன..யோக சாஸ்திரப் பயிற்சிகள் யோகா என்ற சொல் ஒன்றுபடுவது அல்லது இணைவது என்ற பொருளைத் தரும். எல்லாம் அறிந்த பிரம்மனுடன் ஒன்றுபடுவதற்கான முயற்சிகளே யோகா என சுருக்கமாகச் சொல்லலாம்.யோகா அல்லது யோகம் என்பது இந்தியத் தத்துவ இயலில் ஷட்தரிசனங்கள் எனச் சொல்லப்படும் ஆறு தத்துவப் பார்வைகளில் ஒன்று. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, உத்தரமீமாம்சை என்பவையே அந்த ஆறு தரிசனங்கள்.ஆறுவகை தரிசனங்களில் யோக தரிசனமும் ஒன்று என்பதைப் பார்த்தோம். தரிசனம் என்பது வழிகாட்டுதல் என்பதாகும். ஆகையால் மனிதனுக்குத் தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி முன்னேற வைக்கின்ற ஒரு பொருளே யோக தரிசனம் ஆகும்.யோக சாஸ்திர முயற்சிகள் பிரம்மனுடன் ஒன்றுபட வைக்கும் பயிற்சிகள். அதாவது இறைவனிடமிருந்து நமக்கு அளிக்கப்பட்ட ஆன்மா என்ற இறை சக்தியை இறைவனோடு இணைத்து விடுவற்கு உதவும் அரும் சாதனம் யோகமே..உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மன அழுத்தங்களைக் குறைத்து அமைதி தரரவும், நோக்கமின்றி அலையும் மானிட வாழ்வில் சேரவேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்கவும் யோகம் ஒரு சிறந்த ஆன்மிக மார்க்கமாகும்.அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர்களே முற்காலத்தில் யோகிகள் என அழைக்கப்பட்டனர். உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் யோகத்தில் ஒருங்கிணந்து ஒரே வழியில் செல்கின்றன.யோகா அல்லது யோகம் என்ற சொல் யுஜ் என்ற பதத்திலிருந்து பிறந்தது. ஒன்றாவது அல்லது இணைவது என்று பொருள். மெய்ப்பொருளுடன் ஒன்றுபடுவது. அதேசமயத்தில் உண்மையற்றவைகளிலிருந்து வேறுபடுவது என்ற அர்த்தத்தையும் தரும்.யோகப் பயிற்சிகள் வேதங்களில் காணப்படுகின்றன. உபநிடதங்கள் மேலும் விவரிக்கின்றன. நான்கு புருஷார்த்தங்களை முழுமை அடையச் செய்து முக்தி பெறுவதே யோக சாஸ்திரங்களின் குறிக்கோள். அதற்காக உடல், மனம் ஆகியவைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மிக வளர்ச்சியும் தருவதே யோக சாஸ்திரங்களின் நோக்கம்..எந்தச்செயலையும் ஒருமுனைப்பட்டும் சமநிலையிலும் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் முடிக்க இயலும் என்பது தெளிவு. ஆகையால் யோகம் மனத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைக்கும் வழி என்பதை நமது முன்னோர் காட்டியுள்ளனர்.இந்து சமய மார்க்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதில் யோகப் பயிற்சிகள் முக்கியமானவை. பிறக்கும்போது பிரியும் ஜீவாத்மா யோக சாஸ்திரங்கள் மூலமாகவும், இறுதியில் பரமாத்மாவுடன் ஒன்று சேர சாத்தியமாகிறது.உடல், மனம், ஆன்மா என்ற மூன்றின் சக்திகளும் பிரம்மனின் மீது கவனம் செலுத்த தகுந்த வழிகாட்டுதலுடன் அமைந்த யோகப் பயிற்சிகள் உதவிபுரிகின்றன. முறையாகத் தொடர்ந்து பழகிவரும் யோகா மனம் அலைபாய்வதைத் தடுக்கிறது. புத்தியை நேர்படுத்துகிறது. அகஆனந்தத்தை அடைய வைக்கிறது.ஆசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம் எனக் காலத்திற்கேற்ற முறைகளாக சனாதன தர்மம் தந்த கருவிகளில் யோக சாஸ்திரம் முக்கியமானது..ராஜயோகா, ஹதயோகா, ஞானயோகா, கர்மயோகா, பக்தியோகா, லயயோகா, மந்திரயோகா எனப் பல்வேறு வகைகள் யோக சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. தன்னலமற்ற சேவையே கர்ம யோகம். இது பற்றுதலை நீக்குகிறது.எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இறைவனைச் சரணடைவதே பக்தி யோகம். உடலும் உள்ளமும் உருகி இறைவனை மனமார நேசித்து வணங்குவது பக்தி யோகமாகிறது. பக்தி யோகத்தில் திளைப்பவர்கள் மற்ற கடமைகளைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜஸ்வாமிகள் இதற்கு ஒரு உதாரணம். அவர் தனக்கென்று பொருள் ஈட்டவில்லை. அனைத்தும் ராம பக்தி தான் என்று இருந்தவர். பூரண அறிவு ஞான யோகம். இது தகுந்த காரணங்களைக் கொண்டும், தர்க்கரீதியாகவும் சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளும் தன்மை. கூர்ந்த அறிவால் மெய்யானது எது, அசத்தியம் எது என்பதை அறிந்து கொள்வது. ஞான யோகம் என்பது உபநிடதங்களில் ஆராய்ச்சி செய்து, புத்தியின் உதவியால் இறைவனைக் கண்டடைவது. இதன்படி பார்த்தால் ஆதி சங்கரர் ஒரு ஞான யோகி..கர்ம, பக்தி, ஞான யோக சாஸ்திரங்களை பதினெட்டு அத்தியாயங்களில் பகவத்கீதை விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன் “சமத்வம் யோக உச்யாதே” என உபதேசிக்கிறார்.அதாவது மனதில் சமத்துவமும், அமைதியான சூழலும், உண்மையான மகிழ்ச்சியும் யோகாவின் மூலம் கிடைக்கிறது.ஹத, ராஜ யோகப் பயிற்சிகள் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி மனிதனை ஆன்மிக வளர்ச்சிக்குத் தயார் செய்கிறது. யோக சாஸ்திரம் ஒரு நதி என்றால் அதன் இரு ஓடைகள் முறையே ஹத, ராஜ யோகப் பயிற்சிகள்.ஹதயோகா மனிதனின் உடலில் கவனம் செலுத்துகிறது.இதில் ஆறுவகைப் பயிற்சிகள் உடலைத் தூய்மைப்படுத்துகின்றன. மனித ஆரோக்யத்தை வளர்க்கின்றன.ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் உள்பட எட்டுவகைப் பயிற்சிகள் (அஷ்டாங்க யோகா) மூலம் ராஜ யோகம் மனிதனின் மனதைக் களங்கமின்றி வைக்கின்றன.யோக சூத்திரத்தை எளிமைப்படுத்தி உலகிற்குத் தந்தவர் பதஞ்சலி முனிவர். ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவரது சித்திரங்கள் இடுப்பிற்குக் கீழ் பாம்பின் உருவத்தைப் போல இருந்தாலும் குண்டலினி சக்தியை உருவகப்படுத்துவதாகவும் அறிகிறோம்..யோகம் என்பது ரிஷி முனிவர்கள், காட்டில் தவம் செய்பவர்கள் போன்றவர்களுக்கே உரியது. பாமர மக்களுக்கு அல்ல என்ற எண்ணம் பல இடங்களிலும் காணப்படுகிறது. அது உண்மையல்ல. அனைவரும் இதைக் கையாண்டு பயன்பெறலாம். சிறிதளவு வழிகாட்டுதல் அவசியம். எனவேதான் குருவின் தொடர்பு முக்கியம். தகுதி வாய்ந்த வழிகாட்டி மூலம் யோகவழியில் மிகக் குறுகிய காலத்திலேயே மனிதன் மிக அதிக உயர்வை அடையமுடியும். இதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.அதேபோல் ஆரோக்கியம் உள்ள ஒருவனே யோகாசனத்தைச் செய்யமுடியும் என்பது சரியில்லை. ஆரோக்கியம் உள்ள உடலைப் பெறுவதற்காகவே யோகத்தைப் பயில்வதே மிகுந்த நன்மை விளைவிக்கும்.உலகப்பற்றுதல்களும், மனதின் அசுத்தங்களும் நீங்கும்பட்சத்தில் அங்கே ஆத்ம தரிசனம் காணப்படுகின்றது என்பது நிதர்சனம்!(சனாதன தர்மம் தழைக்கும்)