- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்‘’உனது மைந்தனான பரதனது வாழ்வு பாழாகும், நீ மாற்றாளாகிய கோசலையிடம் இழிவுபடுவாய். உனது தந்தையின் எதிரிகள் அவனை அழித்துவிடுவர்’’ என்பதாகக் கூனி செய்த துர்ப்போதனையினால் கைகேயினது தூய சிந்தையும் திரிந்து போயிற்று. தீயவர்களின் தொடர்பால், நம் நல் மனமும் தீய வழியிற் செல்லும் என்பதற்குக் கைகேயின் மனமாற்றம் நல்ல ஒரு முன்னுதாரணமாம்..அதனாற்தான் நம் ஔவை மூதாட்டி, “தீயாரைக் காண்பதுவும் தீதே! திருவற்ற தீயார் சொற் கேட்பதும் தீதே!தீயாரோடு இணங்கி இருப்பதுவும் தீதே!” என்றுரைத்தாள். கவிச்சக்கரவர்த்தி கம்பர், அரக்கர்கள் செய்த பாவமும், தேவர்களும், முனிவர்களும் செய்த அறமும் தூண்டியதாலேயே கைகேயியின் மனம் மாறிற்று என்றும், அவளது இரக்கமற்ற சிந்தையால் தான் இராமனின் பெரும் புகழ் உலகெல்லாம் பரவிற்று என்றும் கூறித் தான் செய்த இராம காதையில், கைகேயியின் மனமாற்றத்திற்குச் சமாதானம் காண்கின்றார். .அதுவரை இராமனுக்கு எதிராகப் பேசிய கூனியை, வெறுத்துக் கடிந்து வைத கைகேயி, தனது இம் மனமாற்றத்திற்குப் பின், கூனியை விரும்பிப் பார்த்து, ’’என் மேல் விருப்பம் வைத்தவளும், என் மகனான பரதன் மேல் அன்பு கொண்டவளுமான நீயே, என் மகன் பரதன் இந்த நாட்டை ஆள்வதற்கான உபாயத்தைச் சொல்வாயாக!’’ என்கின்றாள்.அதைக் கேட்ட கூனியின் மனம் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறது. அவள், கைகேயியை வஞ்சனையால் மேலும் மயக்க எண்ணி, அவளை நோக்கி, “எனது தோழி கெட்டிக்காரி” என்று கூறிப் பாராட்டியதோடல்லாமல் அவள் பாதங்களிலும் வீழ்ந்து வணங்குகிறாள். வணங்கி எழுந்தவள் கைகேயியை நோக்கி, “தோழி! நீ எதற்கும் அஞ்சாதே! நீ எனது சொற்களைக் கேட்டு நடப்பாயாயின் இந்தத் தேசத்தை மட்டுமல்ல, ஏழு உலகங்களையும் உன் மகன் பரதனுக்கு உரியதாக்குவேன்”என்கிறாள்..அவளின் வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்து நின்ற கைகேயியின் அருகில் வந்த கூனி, தன் குரலைச் சற்றுத் தாழ்த்தி, “கைகேயி உனக்கு ஒன்று ஞாபகம் இருக்கின்றதா? பாவம், நீ வெகுளிப் பெண். அதனால் நான் சொல்லப்போகும் சம்பவத்தை மறந்திருப்பாய். இப்போது அச்சம்பவத்தை நான் நினைவூட்டுகிறேன். உனக்கு ஞாபகம் வருகிறதா என்று பார்” என்று கூறித் தொடர்ந்து பேசுகிறாள். “முன்பு ஒருமுறை, சம்பரன் என்ற அசுரனோடு உனது கணவன் தசரதன் போர் செய்யவேண்டி வந்தது. சம்பரனுடன் யுத்தம் செய்வதற்காகப் போர்க்களம் சென்ற போது, அப்போது தான் திருமணம் செய்திருந்த உன்னைப் பிரிய முடியாத காரணத்தால், காதல் மிகுந்து உன்னையும் போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றான் தசரதன். அப் போரில் சம்பரனின் தாக்குதலால் உன் கணவன் தசரதன் தேர்த் தட்டிலேயே மயங்கி விழுந்து போனான். அவனது தேர்ச் சாரதியும் இறந்து போக, தேர் கட்டுப்பாடின்றி ஓடத் தொடங்கியது. அப்போது தசரதனது உயிருக்கு ஆபத்து வந்ததைக் கண்டு அவன் மேல் எல்லையற்ற காதல் கொண்டிருந்த நீ சிறிதும் அஞ்சாமல், சமயோசிதமாய் ரதக்கயிற்றைப் பற்றி ரதத்தைச் செலுத்தி, அதனைப் போர்க்களத்திற்கு வெளியே கொண்டு சென்றாய். அதனால் தசரதன் உயிர் பிழைத்தான்..மயக்கம் தெளிந்து எழுந்த உனது கணவன் தசரதன் நடந்ததை அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டான். உனது வீரத்தையும், சமயோசிதத்தையும் கண்டு மகிழ்ந்த அவன், காதலோடு உனைப் பார்த்து, “என் அன்புக்குரியவளே! என் உயிர் காத்து உபகாரம் செய்தாய். அதற்குப் பிரதி உபகாரமாக உனக்கு நான் இரண்டு வரங்களைத் தருகிறேன். நீ எதை வேண்டுமென்றாலும் கேள்! அதனை நான் உடனே நிறைவேற்றுவேன்”என்றான். உன் கணவன்மேல் உனக்கும் எல்லையற்ற காதல் இருந்ததால் இரண்டு வரங்கள் தருகிறேன் என்று கணவன் சொன்னதும், நாணத்தோடு சிரித்த நீ அவனை நோக்கி, “சுவாமி! நீங்கள் அருகில் இருக்கும்போது எனக்கு வேறு எந்தக் குறையும் இல்லை. குறையிருந்தாலன்றோ அக்குறைகளை நீக்க வரங்கள் கேட்க வேண்டும். குறைகள் இல்லாத எனக்கு வரங்கள் எதற்கு?” எனக் கூறி அவ் வரங்கள் வேண்டாமென மறுத்துரைத்தாய்.உன் வார்த்தைகளால் மகிழ்ந்த தசரதனிற்கு உன்மேல் மேலும் காதல் உண்டாகிற்று. அதனால் அவன் உன்னை நோக்கி, நீ அப்படிச் சொல்லல் ஆகாது. சூரியவம்சத்தில் பிறந்தவனாகிய நான், தந்த வரத்தை மீளப் பெறமாட்டேன். எனவே நீ நான் தந்த இரண்டு வரங்களைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமெனப் பிடிவாதம் செய்தான். அவனது அன்புப் பிடிவாதத்தை நிராகரிக்க முடியாத நீ, காதலோடு அவனைப் பார்த்து சுவாமி! நீங்கள் தந்த வரங்கள் தந்ததாகவே இருக்கட்டும். இப்போது எனக்குத் தேவைகள் ஏதும் இல்லை. தேவைகள் ஏற்படும்போது நான் தங்களிடம் அந்த வரங்களைப் பெற்றுக்கொள்கிறேன் என்றாய்..இந்தச் சம்பவத்தைக் கூனி எடுத்துக் கூறியதும் கைகேயியின் முகம் மலர்ந்தது. அன்போடு கூனியை நோக்கிய அவள், “தோழி! என்றோ நடந்த அந்தச் சம்பவத்தை நேரில் அனுபவித்த நானே மறந்துபோனேன். ஆனால் நான் சொல்லக் கேட்டு இச்சம்பவத்தை அறிந்திருந்த நீ, இன்றும் அதனை மறவாமல் மனதில் வைத்திருக்கின்றாய். உன் அறிவின் திறத்தை என்னென்பது” என்று அவளைப் பாராட்டினாள்.அது கேட்ட கூனி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாது, “கைகேயி! இப்போது என்னைப் பாராட்டுவதா நமக்கு முக்கியம்? இராமனின் முடிசூட்டு விழா நிற்க வேண்டும். எங்கள் பரதன் முடிசூட்டிக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் அந்தப் பழைய சம்பவத்தை நான் நினைவூட்டினேன்” என்றாள்.வஞ்சனை அறியாத கைகேயி, கூனியை நோக்கி, அன்றைய சம்பராசுரனின் போர்க்களத்தில் நடந்த பழைய சம்பவத்திற்கும், இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் விடயத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? என்று வெகுளித்தனமாகக் கேட்க, கூனி அவளைக் கூர்ந்து பார்த்து, “கைகேயி! தசரதன் அன்று உனக்கு வரையறைகள் ஏதுமின்றித் தந்த இரண்டு வரங்களும் இன்று உன் கைவசம் இருக்கின்றன. அதனை மறந்துபோனாயா? தற்போது இராமனின் முடிசூட்டு விழாவை நிறுத்துவதற்கும், பரதனுக்கு முடி சூட்டுவதற்கும் உன் கைவசம் இருக்கும் முக்கியமான ஆயுதங்கள் அந்த இரண்டு வரங்கள் தான். அந்த வரங்களால் தான் இப்போது நீ நினைத்த காரியங்களைச் சாதிக்கப் போகிறாய்” என்றாள்.. “அந்த வரங்களை வைத்து இப்போது நான் என்ன செய்யட்டும்?” என்று கைகேயி மீண்டும் அப்பாவியாய்க் கேட்க, “பைத்தியக்காரி! இது கூடவா உனக்குத் தெரியவில்லை. தசரதன் தந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தால் இராமனைக் காடு போகச் செய்! மற்றைய வரத்தால் பரதனை நாடாளச் செய்! இவற்றைச் செய்தால் உனதும், உன் பிள்ளையாகிய பரதனதும், உன் தந்தை ஜனகனதும் வாழ்வு சிறக்கும்” என்று உரைத்து முடித்தாள் கூனி.கூனியின் வார்த்தைகளைக் கேட்ட கைகேயின் மனம் உவப்படைகிறது. தன் தோழியாகிய மந்தரையின் அருகில் வந்து அவளை இறுக அணைத்துக்கொண்ட அவள் நவரத்தினங்களையும் வரிசையாக இழைத்த ஓர் அழகிய தங்க மாலையை எடுத்து அவளுக்கு அணிவிக்கிறாள். அத்தோடு நில்லாமல் அளவற்ற திரவியங்கள் எல்லாம் அவளுக்குக் கொடுத்து, “என் மகனான பரதனுக்குக் கடலால் சூழ்ந்த இந்த மாபெரும் தேசத்தைப் பெற்றுக் கொடுத்தாய். இனி பரதனுக்கு நான் தாயல்ல, நீயே தாய்” என்று கூறிக் கண்ணீர் சொரிகிறாள்.அதன் பின் முற்றாக மனம்மாறித் தீயவளாகிவிட்ட கைகேயி, “தோழி! என் பரதன் அரசாள்வதற்கான நல்ல உபாயத்தைக் கூறினாய். அதன்படியே இராமன் காடேக வேண்டுமென்றும், பரதன் நாடாள வேண்டுமென்றும் சக்கரவர்த்தியிடம் நான் வரங்களை வேண்டுவேன். அவர் அதனைத் தர மறுத்தால் சற்றும் தயங்காமல் என்னுடைய உயிரைத் துறப்பேன். இதுவே எனது முடிவு. இனி நடக்கப்போகும் காரியத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போய் வருவாயாக! எனக் கூறி அவளை அனுப்பி வைக்க, கூனியும் தன் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் கைகேயியின் அரண்மனை விட்டு வெளியேறுகிறாள்..கூனி போன பின்பு தான் படுத்திருந்த மலர்ப்படுக்கையைவிட்டு இறங்கிய கைகேயி, மழைபொழியும் மேகங்களைப் போலக் கறுத்திருந்த தனது நீண்ட கூந்தலில் சூடியிருந்த மாலைகளையெல்லாம் பிய்த்து நாலா திசைகளிலும் எறிந்தாள். அவள் சூடியிருந்த தேன் பொருந்திய மலர் மாலைகளை மொய்த்திருந்த வண்டுகளெல்லாம் கைகேயி செயல்கண்டு அதிர்ந்து பறந்தன.வெண் மலர்களைப் பூத்த ஓர் கொடியை வேரோடு அறுத்து எறிந்தாற்போல, தான் சூடியிருந்த ஒளி பொருந்திய மேகலாபரணத்தைச் சிதறும்படியாக அறுத்து எறிந்த அவள், அதன் பின் தன் பாதங்களில் சூட்டி இருந்த மணிகள் பொருந்திய சதங்கையையும், கையில் போட்டிருந்த வைர வளையல்களையும் கழற்றி எறிந்தாள்.இப்படியாய் தன் அழகிய கோலத்தை அலங்கோலமாக்கிக் கொண்ட கைகேயி, நிறைவாக எந்தச் சுமங்கலிப் பெண்ணும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்யத் தொடங்கினாள். நிலவில் பொருந்திய கறையை நீக்கினாற்போல, தன் அழகிய நெற்றியிலிருந்த சுமங்கலிக்கேயுரிய அருமை மிகுந்த திலகத்தையும் தன் கையினாலேயே கூச்சமின்றி அழித்தாள். கணவனை இழக்கப்போகும் சம்பவத்திற்கு முன் நிகழும் அபசகுனமாய் அவளின் அச்செயல் அமைந்து போயிற்று.தொடர்ந்து தான் போட்டிருந்த அத்தனை தங்க ஆபரணங்களையும் கழற்றி எறிந்த அவள் கஸ்தூரிச் சாந்து பூசிய தன் அழகிய கறுத்த கூந்தலை, நிலம் முழுதும் பரவும் படியாய் விரித்து விட்டாள். நீலோற்பல மலர் போன்ற மை பூசிய தனது அழகிய கண்களில் இருந்த, அந்த அஞ்சனம் கரைந்து போகும்படி அழுதுகொண்டு, மலர்களை உதிர்த்த ஒரு கொடி போலப் பூமியின் மேல் விழுந்தாள்..அம்பினால் அடிபட்ட ஓர் மான் விழுந்தது போலவும், ஓர் அழகிய மயில் ஒடுங்கிக் கிடந்தாற் போலவும் வாசனை வீசுகின்ற பொற்தாமரை மலரில் வீற்றிருந்த சீதை ஆகிய இலட்சுமி அயோத்தியைவிட்டு நீங்க, இலக்குமியின் தமக்கையாகிய மூதேவி அந் நகரிற்கு வந்து சேர்ந்தாற் போலவும், அவள் கிடந்த கோலம் இருந்தது எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், நிலத்தில் வீழ்ந்திருந்த கைகேயியை வர்ணித்திருக்கிறார். இங்ஙனமாய் கைகேயி வீழ்ந்து கிடக்கையில், மறுநாள் இராமனுக்கு நடைபெறவிருக்கும் பட்டாபிஷேகத்திற்கான ஒழுங்குகள் அனைத்தையும் செய்து முடித்த தசரதச் சக்கரவர்த்தி, அம் முடிசூட்டு விழாச் செய்தியை, தன் மூன்று மனைவியரிலும் தான் அதிகம் காதல் கொண்டிருந்த கைகேயிக்கு உடன் சொல்லவேண்டும் என நினைந்து அவள் அரண்மனை நோக்கி வேகமாக நடந்தான்.இராமனைப் பெற்ற தாயாகிய கோசலையின் அரண்மனைக்குக்கூடச் செல்லாமல், தசரதன் கைகேயியின் அரண்மனைக்குச் சென்றதற்கு, அவன் கைகேயின்மேல் கொண்டிருந்த காதல் மட்டும் காரணமன்றாம். இராமனைப் பெற்றெடுக்காவிட்டாலும் அவன்மேல் பெற்ற தாயினும் மேலாக அன்பும், காதலும் கொண்டிருந்தவள் கைகேயி என்பதால்தான் தசரதன் இராமனின் முடிசூட்டு விழாச் செய்தியை கைகேயிக்கு முதலில் சொல்ல நினைத்தனனாம்.அச் செய்தியைக் கேட்டு கைகேயி அடையப் போகிற மகிழ்ச்சியைத் தனது கண் கொண்டு காணவேண்டும் என நினைந்ததால்தான், தூதர்களிடம் சொல்லி அனுப்பாமல் அச்செய்தியைத் தானே சொல்ல நினைந்து தசரதன் கைகேயின் அரண்மனைக்குச் செல்கின்றான். அங்கோ இன்பத்தை எதிர்பார்த்துச் சென்ற தசதரனுக்குத் துன்பம் காத்திருக்கின்றது. (இதிகாசம் வளரும்)