1. உபநிடதங்களில் தியானம்: இந்து சமய வேதாந்த தரிசன நூல்களுள் ஒப்பற்ற ஞானக் கருவூலமாகத் திகழ்பவை உபநிடதங்கள். இவை மனம், பிராணன், ஆன்மா, பிரம்மம் குறித்து நெடுகப் பெருக்கமாகப் பேசுகின்றன. தியானம் என்பதன் முழு அறிவியலுமே மனமானது எதையும் எண்ணாமல், எங்கும் செல்லாமல் அதன் இருப்பிலேயே அசையாது வேரூன்றி நிற்பது; அதாவது ஆன்மாவில் பிரவேசிப்பது. இஃது உடல், மனம், மூச்சு இம்மூன்றும் அமைதியாகும் போது தான் எளிதாகிறது. ஜீவர்கள் முத்தி எய்துவது எங்ஙனம் என்ற வினாவிற்கு யோகசிகோபநிஷதம் உபதேசிக்கும் யோக தரிசனத்திலிருந்து தொடங்கி, உபநிடதங்கள் காட்டும் தியானம் குறித்து சில செய்திகளை இங்கே பார்ப்போம். "முத்தியை நாடுபவன் ஞானத்தையும் யோகத்தையும் நாடவேண்டும். எல்லா ஜீவர்களிடமும் மனம், ஒரு கயிற்றில் கட்டப்பட்ட பறவைப் போலப் பிணைக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் காட்டிய யோக மார்க்கத்தில் தான் பிராணனை வசப்படுத்தி மனதை ஜெயிக்க முடியும். வேறு வழியில்லை. பிடித்த ஆசனத்தில் அமர்ந்து, நாசி நுனியில் பார்வையைச் செலுத்தி, கை கால்களை அடக்கி வைத்து, மனதை ஒருமைப்படுத்தி ஓங்கார தியானம் செய்யவேண்டும். அப்படித் தொடர்ந்து பரமேசுவரனை இருதயத்தில் தியானித்து வந்தால் யோகம் சித்தித்துப் பரமேச்வரர் பிரசன்னமாவார்."- யோகசிகோபநிஷதம் (64) "த்யானம் நிர்விஷயம் மன:|" - அதாவது "தியானம் என்பது விஷய சிந்தனை இல்லாத மனம்" என்று இரத்தின சுருக்கமாக மைத்ரேயீ உபநிஷத்து (31) சு.2.2. கூறுகிறது. மனமானது விழிப்புணர்வோடு நமது நடுவீடாகிய இருதயத்தில் பிரவேசிக்கும் போது தியானமாகிய யோகம் கைவரவாகிறது. மனம் சார்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையானது மோகம், போகம், அவித்தையில் நம்மை ஆழ்த்தி விடுகிறது. "எங்ஙனம் உறையில் வாள் வைக்கப்பட்டுள்ளதோ, அங்ஙனம் இருதய கமலத்தில் (அங்குஷ்ட மாத்ர) கட்டை விரல் பிரமாணமுள்ள புருஷன் உறைகிறான்." - கௌஷீதகி உபநிஷத்து (26) "ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே ஸ்திர தீப நிபாக்ருதம்|அங்குஷ்ட்ட மாத்ரம் அசலம் த்யாயேத் ஓங்காரம் ஈச்வரம்||" "இறைவடிவான ஓங்காரத்தை இருதயத் தாமரையின் நடுவில் ஒளிரும் பெருவிரல் அளவிலான அசைவற்ற தீபத்தை தியானிக்க வேண்டும்" என்கிறது தியான பிந்து உபநிஷத்து (46) சு.19 "ஒரு குடத்தினுள் மத்தியில் பிரகாசிக்கும் விளக்கு போன்றதும், புகையற்ற ஜோதி வடிவானதும், கட்டை விரல் அளவுள்ளதுமான கூடஸ்தனான மாறுபாடற்ற அந்த ஆத்மாவைத் தியானிக்க வேண்டும்." - யோக குண்டலினீ உபநிஷத்து (87) சு.2."ஒரு நகரத்தின் நடுவில் உள்ள ராஜகிருஹம் (அரண்மனை) போன்ற இருதய கமலமாகிய எது உளதோ அது பரமாத்மாவின் உறைவிடம். அது சின்னஞ் சிறியது; களங்கமற்றது. அதனுள் இன்னும் சிறிய ஆகாசம் - சிற்றம்பலம் உளது. அது துக்கம் நீங்கிய இடம். அதனுள் எது உள்ளதோ அதைத் தியானத்தால் தேடி அடைய வேண்டும்." -மஹாநாராயணோபநிஷத்து(19) சு.12.3.6 "உலக விஷயங்களுக்கு எட்டாததாகவும், இருதயாகாசத்தில் பிரகாசிப்பதுமான, பிரணவமாகிய ஓங்காரத்தின் பிந்துவைத் தியானிப்பதே சிறந்த தியானம்." - தேஜோபிந்து உபநிஷத்து (39) சு.1. "துரியம் புருவ மத்தியில் உள்ளது. துரியாதீதமான பரப்பிரம்மத்துடன் ஒன்றுபட்ட நிலை பிரம்மரந்திரத்தில் காணப்படுகிறது. அங்கு துரீயத்தின் துரீய எல்லையில் ஆத்மா விஷ்ணு என்று கூறப்படுகிறது. மிகவும் பரிசுத்தமான பரமாகாசத்தில் தியானம் செய்கையில் கோடி சூரியப் பிரகாசத்துடன் என்றும் விளங்கும் அதோக்ஷஜனை இருதய கமலத்தில் வீற்றிருப்பவனாக தியானிக்க வேண்டும். அப்படி தியானிக்கும் யோகிக்கு எல்லா மனோ விருத்திகளும் ஒடுங்கும். இருதய கமல மத்தியில் சைதன்யமாகப் பிரகாசிக்கும் அழியாத வஸ்துவை, துரியாதீதப் பரம்பொருளை, அளவு கடந்த அனந்த மயமான, அறிவு மயமான பிரபுவாகிய சூரியனை காற்றில்லாத இடத்தில் விளக்கு போன்றவனை தியானம் செய்யும் யோகிக்கு முத்தி கைத்தலத்தில் உள்ளதாகும்." -த்ரிசிகிப்ராஹ்மணோபநிஷத்து (46) சு.147-157 வேதாந்த சாத்திரங்களிலும், சித்தர் முத்தர்கள் பாடல்களிலும், பரிபாஷையாகப் பயின்று வரும் இந்த 'மின்னல் கொடி போலும், ஒளிரும் தீபம் போலும் பிரகாசிக்கும் இருதயம் - இருதயத் தாமரை'யானது, நமது தேகாலயத்தினுள்ளே எங்கே, எப்படி இருக்கிறது என்பதைக் குருமுகமாகத் தெரிந்து கொண்டு, அதில் தொடர்ந்து நிலைத்து நின்று தியானத்தில் பழகி வரவேண்டும். "தேஜோபிந்து என்பது உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தது, இரகசியமானது, நுட்பமானது, சந்திர கலை ரூபமுடையது என்று அறிய வேண்டும். அதுவே விஷ்ணுவின் பரம பதம் எனப்படுவது. வேறொன்றிலும் நாட்டம் இல்லாமல் சோம்பல் அற்றவனாக அதைத் தியானிக்க வேண்டும்." - தேஜோ பிந்து உபநிஷத்து (39) சு.5 தேஜோ பிந்து= விந்து வட்டம்.தேஜோ பிந்து என்ற சொல் ஒளி பொருந்திய பிரகாசமான மிகவும் நுண்ணியதான ஒரு புள்ளியைப் போலிருக்கும் ஆதிப்புள்ளி - கரும்புள்ளி - பரம்பொருளைக் குறிக்கும். "விந்து வட்டம் பளீரெனவே வீசும் பாரே." - சுப்பிரமணியர் ஞானம் 500:25 "சிற்சபை, விந்து, அறிவு, பாலம், முச்சுடர், முச்சந்தி, முப்பாழ், நெற்றிக்கண், கபாடம், சபாத்வாரம், மூலம், சாகாத்தலை முதலிய ஒருபொருட் கிளவியாம்." - வள்ளலாரின் திருவருட்பா 6 ஆம்திருமுறை வசன பாகத்தில்.. மனத்தைச் சிற்சபையின் கண்ணே நிறுத்துதல், அதாவது புருவ மத்தியில் - விந்து வட்டத்தில் நிற்கச் செய்தலே தியானமாகும். இந்த விந்து வட்டம் என்னவென்று அறியாதவர்களுக்கு, அஷ்டாங்க யோகச் செயல் கைவரவாகுவது அரிதாகும். (யோகம் சித்திக்கும்) - தென்னம்பட்டு ஏகாம்பரம்