வேதம் கூறும் வாழ்வியல் உண்மைகள், தத்துவங்கள், ஆன்மா, உடல் என சனாதனம் தரும் பல விளக்கங்களையும் தகவல்களையும் கண்டோம். கர்மாவிற்கு ஏற்றபடி பல பிறவிகளைக் காணும் ஆத்மா தன் அனுபவங்களுக்கு ஏற்ப செம்மைப்படும்போது முக்தி அடைய விரும்புகிறது. சில கட்டங்களிலாவது அதனிடம் அத்தகைய ஆன்மிக எழுச்சி விளைவது இயல்பே!அந்தக் காலகட்டங்களிலேயே நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? என்ற கேள்விகள் அதனிடம், அது உறையும் உயிரிடம் தோன்றுகின்றன. எனவே முக்தியை ஈட்டக்கூடிய மார்க்கத்தை, அதாவது பாதையை அல்லது வழியைக் காண அதனிடம் உந்துதலும் ஏற்படுகிறது.அந்தப் பாதையை வகுத்துத் தருபவர் குரு. அதற்கேற்ற வாழ்வியல் முறைகளையும் அமைத்துத் தருபவர் குரு. ரிஷி முனிவர்கள் அருளிய புனித நூல்களும் ஒரு சிலருக்கு வழிகாட்டலாம். தனக்குத் தானே வழி அறியும் உன்னதப் பண்பு ஒரு சிலரிடமே அமைகிறது. அத்தகையவர்களும் அவர்களது முந்தைய பிறவியில் ஒரு தகுந்த குருவால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கலாம்.குரு வழிகாட்டும் முறைகளிலும் பலவிதங்கள் இருக்கலாம். சிலர் நன்னடத்தைகளையும் நெறிமுறைகளையும் புகட்டலாம். வேதாந்தம், மொழி இலக்கணம், வழிபாடு எனப் பலவற்றைச் சிலர் போதிக்கலாம். தான் முன் உதாரணமாய்த் திகழ்ந்து சிலர் தகுந்த மார்க்கத்தை வலியுறுத்தலாம். சிலருக்கு மௌனமே கற்பித்தலுக்கு ஊர்தியாக இருக்கும். சிலர் தொடர்ந்து வகுப்புகள் எடுக்கலாம். கற்பிக்கும் முறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் குரு – சீடர்களின் ஆழ்ந்த ஈடுபாடு மட்டுமே முக்கியமானது. மேலும் அத்தகைய மார்க்கத்தை சமுதாயமே பின்பற்றும்போது ஒரு சிறந்த கலாசாரத்தை வேறூன்ற வைக்கிறது..குரு என்பவர் யார்?வெறும் தகவல்களை மட்டும் அறிவிப்பவர் குரு அல்ல. ஆனால் அது தேவையான ஒன்று. ஒரு ஆசிரியர் அந்தத் தேவையை பூர்த்தி செய்கிறார். தகவல்களுடன் சேர்த்து புத்திமதியையும் புகட்டவேண்டும். ஆனால் அவரும் குரு அல்ல. உபாத்தியாயர் என அவர் அழைக்கப்படுகிறார். சில கலைத் திறைமைகளையும் போதிக்க வேண்டும். ஆனால் அவர் ஆச்சாரியர் எனப் பெயர் பெறுகிறார்.ஆழ்ந்த ஞானத்தை அளிப்பவர் ஒரு பண்டிதர். ஆனால் நம்மை இருளிலிலிருந்து ஒளியை நோக்கி அழைத்துச் செல்லுவது மட்டுமல்லாமல் நமது புத்திக்கூர்மையையும் எழுப்புவர் மட்டுமே குரு.குருவிடம் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டு அவர் கற்பித்தவைகளைத் தொடரும்போது அவரை பரமகுரு, சத்குரு என அழைக்கவும் சீடர்கள் தயங்கியதில்லை.சத்குரு தான் என்ற அகம்பாவத்தைத் தொலைத்தவர்; பற்றில்லாதவர்; ஜீவன் முக்தி அடைந்தவர். அதாவது உயிருடன் இருக்கும்போதே மோட்ச நிலையை எய்தியவர்.ஒரு சத்குரு ஸ்வயம்பூவாக, அதாவது தானாகத் தோன்றியவராக இருக்கலாம். எளிய குடும்பத்தில் பிறந்து ஞானத்தைப் பெற்றவராக இருக்கலாம். ஒரு அவதார புருஷராகவும் இருக்கலாம்.குரு - சீடர் பரம்பரை ஒரு சத்குரு உதித்து வடிவமைத்தபின் தோன்றலாம். அந்த பரம்பரை அல்லது சம்பிரதாயங்கள் நூற்றுக்கணக்கான வருடங்கள் தொடரலாம். காலப்போக்கில் அத்தகைய சம்பிரதாயங்கள் அழிகின்றனவோ என்ற அச்சம் தோன்றலாம். ஆனால் உரிய தருணத்தில் மீண்டும் ஒரு சத்குருவோ அல்லது அவதார புருஷரோ தோன்றி சனாதன தர்மத்தை நிலைநிறுத்த உதவலாம். அவ்வாறு ஏற்பட்டவைகளை நமது சரித்திரமும் உறுதிப்படுத்துகிறது.சில சமயங்களில் ஒரு குரு குறைவான நேரத்திலேயே நமது அருகில் இருந்து தர வேண்டிய புத்திமதிகளைக் கூறியும் மறையலாம்.ஆன்மிகத்தின் உச்ச நிலையை அடைந்த அவர் எல்லா பாதைகளும் அந்த ஒரே உச்சத்தையே சென்றடைகின்றன என்பதை உணர்ந்தவர். இதனையே எவ்வளவு நம்பிக்கைகள் இருக்கின்றனவோ அவ்வளவு பாதைகளும் இருக்கின்றன என இராமகிருஷ்ண பரமஹம்சரும் தெரிவித்தார். அதாவது எல்லாவித பரம்பரைகளும், சம்பிரதாயங்களும் அந்த பிரம்மத்தையே அடைய வழிகாட்டுகின்றன.கீதோபதேசத்தின்போது கண்ணனை ஒரு தேரோட்டியாக இல்லாமல் குருவாகக் காண்கிறோம். அந்தக் கட்டத்தில் பரந்தாமனும் அவனே! எப்படி வேதங்களின் சாரம் உபநிடதங்களில் காணப்படுகிறதோ அப்படியே உபநிடதங்களின் சாரம்சங்களை பகவத்கீதையில் காண்கிறோம்..உவமானமாகச் சொல்ல வேண்டுமென்றால் உபநிடதங்கள் பசுக்களைப் போன்றவை. கண்ணன் ஒரு இடையன் ஆகின்றான். அந்தத் தருணத்தில் அர்ஜுனன் கன்றுக்குட்டியை உத்தவன்; கீதை பசு தரும் பால் ஆகிறது. வேதங்கள் தரும் நீதி எளிய முறையில் பாமர மக்களை அடையவே இதிகாச புராணங்கள் தோன்றின. பாராசர ரிஷியின் மைந்தர் வியாசர். அந்த யுகத்தில் கிருஷ்ணத்வைப்பானர் என்ற நாமம் பூண்டு மஹாபாரதத்தை இயற்றினார். அவர் பின் அவரது புதல்வர் மூலம் ஒரு குரு பரம்பரை தொடர்ந்தது.கிருஷ்ணர் – அர்ஜுனன், சாந்திபணி – கிருஷ்ணர், வசிஷ்டர் - ஶ்ரீராமன், துரோணாச்சாரியர் – அர்ஜுனன், தத்தாத்ரேயர் – நவநாதர் என பல உத்தம குரு – சீடர் சரிதங்களை சனாதன தர்மம் சமுதாயத்திற்கு உதாரணங்களாகத் தெரிவித்திருக்கிறது. குருகுலக் கல்வியோ ஒரு பரம்பரையோ சார்ந்திராமல் இருக்கும் பாமர மக்களுக்கும் வாழ்நாளில் தகுந்த வழிகாட்டுபவர்கள் குறைந்த காலத்திற்குக்கூட அமையலாம். உதாரணத்திற்காக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.ஒரு சமயம் ஒரு செல்வந்தர் வெளியூரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார். வாகனத்திலிருந்து இறங்கி சற்றுத் தொலைவில் இருந்த அவர் இல்லம் வரை செல்லவேண்டும். வேலையாட்கள் எவரும் துரதிஷ்டவசமாக அங்கு போய்ச் சேரவில்லை. அவரிடம் பெரிய சுமை.வீடு வரை அந்த சுமையைத் தூக்க உதவிக்கு எவராவது வருவார்களா என சுற்றும் முற்றும் நோக்கினார். தனியாக பிட்சை பாத்திரத்துடன் நடந்து கொண்டிருந்த ஒரு துறவியை மட்டும் காண நேர்ந்தது. தயக்கத்துடன் அவரிடம் வேண்டுகோள் விடுத்து தகுந்த சன்மானமும் தருவதாகக் கூறினார்.நகைத்த துறவி அவருக்கு உதவி புரிய ஒப்புக்கொண்டார். சன்மானத்தை மறுத்துவிட்டார். ஆனால் ஒரு நிபந்தனையை மட்டும் தெரிவித்தார். செல்வந்தர் வீடு வரும்வரை செல்வந்தர் அவருக்கு சில உபயோகமான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அல்லது துறவி சொல்வதை அவர் கவனமாகக் கேட்டு வர வேண்டும்.அதிகம் பேசியோ பழகியோ அனுபவம் இல்லாத செல்வந்தர் துறவி சொல்வதைக் கேட்டுக்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். வழி நெடுக துறவி எதையோ விவரித்துக்கொண்டே வந்தார். அனைத்தும் ஆன்மிக உபதேசங்கள். செல்வந்தரின் மனம் லயிக்கவில்லை. அவர் கவனமெல்லாம் சுமையுடன் இல்லம் சென்று அடைவதிலேயே லயித்திருந்தது.அவர் இல்லத்தில் துறவி சுமையை இறக்கி வைத்தார். பின்னர் அவரது பேச்சை செல்வந்தர் கேட்டுக்கொண்டு வந்தாரா என வினவினார்..தலையைக் குனிந்துகொண்ட செல்வந்தர் கேட்கவில்லை என உண்மையைக் கூறினார்.துறவியிடம் ஒரு பெருமூச்சு!‘’செல்வந்தரே! தவறு செய்துவிட்டீர்கள். நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள். நாளை இரவு உங்கள் உயிர் பிரியப் போகிறது. எமதூதர்கள் வருவார்கள். எமதர்மனிடம் அழைத்துச் செல்வார்கள். மானிடனே! நீ செய்த பாவ புண்ணியங்களின் கர்ம பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். முதலில் நீ செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தங்கள் செய்ய விரும்புகிறாயா அல்லது புண்ணியங்களுக்கான பலன்களை அனுபவிக்க விரும்புகிறாயா என எமதர்மன் கேட்பார்.பாவங்களுக்கான பிராயச்சித்தங்கள் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் செய்த புண்ணியங்களின் பலன்களை முதலில் காண விழைகிறேன் எனச் சொல்லிவிடுங்கள்.’’துறவி வேறு எதுவும் மேலும் சொல்லாமல் விரைவாக அகன்றுவிட்டார்.செல்வந்தர் திக்பிரமையுடன் நின்றுகொண்டிருந்தார். வாயிலிருந்து வார்த்தைகளே பிறக்கவில்லை. உடலில் நடுக்கம். கோபமும் பொங்கிக் கொண்டிருந்தது.ஒரு சுமைதாங்கியாக, ஏவலாளாக வந்த அந்தத் துறவி சொன்னவைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது ஒரு பைத்தியக்காரனின் கூற்று என மறந்து விடுவதா என்று மட்டும் செல்வந்தருக்குத் தெரியவில்லை.ஆனால் மறுநாள் இரவு அந்தத் துறவி கூறியபடி செல்வந்தரது உயிர் பிரிந்தது. மேல் உலகத்தில் அவர் எமதர்மன் முன் நிறுத்தப்பட்டார்.மானிடனே! நீ புவியில் செய்த பாவச் செயல்களுக்கேற்ப பிரதிபலன்களை முதலில் அனுபவிக்கிறாயா அல்லது புண்ணியச் செயல்களுக்கான பலன்களை முதலில் பெற விரும்புகிறாயா ?செல்வந்தருக்கு துறவி கூறிய அறிவுரை நன்றாக நினைவில் இருந்தது.பிரபு! பாவச் செயல்களுக்கான பிரதிபலன்களை நான் அனுபவிக்கத் தயார். ஆனால் அதற்கு முன் புண்ணியச் செயல்களின் பலன்களை நான் காண விரும்புகிறேன்.எமதர்மனிடம் குழப்பம். இதற்குமுன் இத்தகைய விண்ணப்பம் வந்ததில்லை. பாவ புண்ணிய பலன்களை ஒன்றாகவே மேலுலகம் சென்ற உயிர்கள் அனுபவிக்க நியதி! எமதர்மனிடம் அதற்குத் தகுந்த பதிலில்லை. ஆனால் கேட்பதற்கான வாய்ப்பைத் தந்துவிட்டோம். எமதர்மன் வேறு வழியில்லாமல் செல்வந்தரைக் கூட்டிச் சென்று பிரம்மனின் முன் நிறுத்தினான்.பிரம்மன் தன் ஏடுகளைப் புரட்டினான். அதற்கான உபாயம் எந்த ஏடுகளிலும் இல்லை. வேறு வழியில்லாமல் பிரம்மனும் எமதர்மனும் செல்வந்தருடன் கைலாயம் சென்று மகேஸ்வரன் முன் பிரச்னையை வைத்தனர். ஈஸ்வரன் அவர்களை விஷ்ணுவிடம் அனுப்பி வைத்தார்.பிரம்மனும் எமதர்மனும் செல்வந்தருடன் வைகுந்தம் சென்று ஶ்ரீமந் நாராயணனிடம் சென்று செல்வந்தர் கேட்ட விண்ணப்பத்தையும் அவர் முன் வைத்தனர். பரந்தாமனிடம் ஒரு புன்முறுவல். செல்வந்தரைப் பார்த்து உரைக்கலானார்.உனக்குக் கிடைத்த சத்குரு உத்தமமானவர். உனது இறுதி நேரத்திலும் உனக்கு சரியான உபதேசத்தை அருளியிருக்கிறார். பிரம்மனுடன் எனது தரிசனமும் சேர்ந்து உனது விண்ணப்பத்தின் மூலம் உனக்குக் கிடைத்திருக்கிறது. இதைவிட மேலான புண்ணியத்திற்கான பலன் எதுவாக இருக்க முடியும்?புண்ணியத்தின் பலன்களை நேராகக் கண்டுவிட்டாய். அது மட்டுமல்ல. இந்த தரிசனம் உனது சகல பாவங்களையும் தொலைத்துவிட்டது.செல்வந்தர் அந்த துறவியை தனது வாழ்நாள் குருவாக எண்ணி மானசீகமாக வணங்கினார்.இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடரான விவேகானந்தர் நிர்விகல்ப சமாதி நிலையை விரைவில் அடைந்தவர். சமாதி என்பதற்கு சமன் + ஆதி எனப் பொருள். அதாவது தொடக்கத்தில் சமநிலை! ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரட்டை நிலை இல்லாமல் பிரம்மத்தை உணர்ந்த நிலையை அடைவதே நிர்விகல்ப சமாதி. அந்த சமாதி நிலையில் எப்போதும் இருக்கவே விவேகானந்தர் தன் குருவை வணங்கி ஆசிர்வதிக்கக் கோரினார்.உலக சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் விவேகானந்தர் ஆற்ற வேண்டிய அரும்பணி பரமஹம்ஸருக்கு மனதில் இருந்தது.மற்ற ஜீவாத்மாக்களுக்கு ஆற்றும் தொண்டு அந்த சமாதியை விட மிகப் பெரிய நிலை என்பதை அவர் விவேகானந்தருக்கு விளக்குகிறார். பின்னரே விவேகானந்தர் மனித சேவையில் ஈடுபட்டார். இல்லையெனில் ஒரு சமாதி நிலையில் உலகிற்குத் தெரியாமலேயே அவர் மறைந்திருப்பார்.உலக நன்மைக்காகவும் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் விவேகானந்தரைத் தடுத்தாட்கொண்ட பரமஹம்சர் ஒரு உன்னத குரு! (சனாதன தர்மம் தழைக்கும்) -முனைவர் ஜி.குமார்