-தென்னம்பட்டு ஏகாம்பரம்மிகவும் பழைமையானதாகக் கருதப்படும் பிருகதாரண்யக உபநிடதம், கடோபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம், சுவேதாச்வதர உபநிடதம், மைத்ரயனீய உபநிடதம் ஆகியவற்றில் யோக தத்துவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஆறு அங்கங்களைக் கொண்ட ஷடாங்க யோகமும், எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க யோகமும் உபநிடதங்களில் பார்க்க முடிகிறது..அமிருத நாதோபநிடதத்தில் (22) பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, தர்க்கம், சமாதி என்று ஆறு அங்கங்களைக் கொண்ட ஷடாங்க யோகம் பற்றிக் கூறப்படுகிறது. மண்டலப்ராஹ்மணோபநிஷத் (50), சாண்டில்யோபநிஷத் (59), ஜாபால தர்சணோபநிஷத் (91) முதலான உபநிடதங்களில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், சமாதி என எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க யோகம் குறிப்பிடப்படுகிறது..அஷ்டாங்க யோகம்: 1.இயமம்: குளிர் வெப்பம், ஆகாரம், நித்திரை ஆகியவற்றை ஜெயித்து, எப்பொழுதும் சாந்தமாகவும், நிச்சலமாகவும் இருந்து கொண்டு, விஷய நாட்டமுள்ள இந்திரியங்களை அடக்கியிருத்தல் இயமம். 2. நியமம்: குருபக்தி, சத்திய மார்க்கத்தில் பற்று, சுகமாகக் கிடைத்த வஸ்துக்களை அனுபவித்தல், அவ்அனுபவத்தால் திருப்தி, பற்றின்மை, ஏகாந்த வாசம், மனதை விஷயங்களிலிருந்து திருப்புதல், கர்ம பலனில் ஆசையின்மை, வைராக்கிய பாவனை ஆகியவை நியமங்கள். 3. ஆசனம்: நார்மடி உடுத்திச் சுகமான ஆசனத்தில் இருத்தல் ஆசன நியமம். ஆசன விதியுடன் கூடிய பின் எப்பொழுதும் பிராணாயாமத்தைக் கைக்கொள்ள வேண்டும். 4. பிராணாயாமம்: மனதிற்கினிய இடத்தில், பழகிய ஆசனத்தில் அமர்ந்து, விதித்த முறைப்படி பிராணாயாமம் செய்ய வேண்டும். பூரகம் பதினாறு, கும்பகம் அறுபத்து நான்கு, ரேசகம் முப்பத்திரண்டு மாத்திரை என்ற கணக்குப்படி மூச்சை உள்ளிழுத்தல், நிறுத்துதல், வெளியே விடுதல் எனும் பிராணாயாமம். ஸித்தியைக் காட்டும் அடையாளங்கள் காணப்படும் வரை இதைத் தொடரவேண்டும். 5. பிரத்தியாகாரம்: கண் முதலான இந்திரியங்கள் இயற்கையாக நாடிச் செல்லும் வெளி விஷயங்களினின்று மனதைத் தடுத்து, உள்முகமாகத் திருப்புதல் பிரத்தியாகாரம். பார்ப்பதையெல்லாம் ஒன்றுபட்ட மனத்துடன் பிரம்மமாகவே காண்பதும் பிரத்தியாகாரம். உடலை 'நான்' என்று எண்ணுவதை விடுத்து, மனதைப் பரம்பொருளிடம் இலயிக்கச் செய்வது உயர்ந்த பிரத்தியாகாரம். 6. தாரணை: பிரத்தியாகாரப் பயிற்சியால் வெளி விஷயங்களினின்று உள்முகமாகத் திருப்பிய மனத்தை, சைதன்யத்தில் நிலைநிறுத்துதல் தாரணை. 7. தியானம்: மலை உச்சியிலோ, நதி தீரத்திலோ, வனத்தின் வில்வ மரத்தடியிலோ, மனத்திற்கினிய பரிசுத்தமான இடத்திலோ, எங்கே மனம் ஒருமைப்படுமோ, அங்கே ஒன்றுபட்ட மனத்துடன் பழகிய ஆசனத்தில் இருந்துகொண்டு கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ உடலும் கழுத்தும் தலையும் சமமாக இருக்கும்படி உட்கார்ந்து கொண்டு அசையாமல் நாசிநுனியில் கவனத்துடன் தியானிக்க வேண்டும். அதனால் நாடிகளின் சுத்தியை அடைவான். சரீரம் இலேசாகவும், வயிற்றில் ஜடாராக்னியின் விருத்தியும் ஏற்படும். குரலும் தெளிவாகும். இவை சித்தியைக் காட்டும் அடையாளங்கள். இவற்றைக் காணும் வரை அப்பியசிக்க வேண்டும்.இடைவிடாமல் பரம்பொருளை நினைத்த வண்ணம் இருத்தல். எல்லா உடல்களிலும் உயிர் (சைதன்யம்) ஒன்றே என்று பாவித்திருத்தல் தியானம். தியானம் ஸகுணம், நிர்க்குணம் என்று இருவகைப்படும். 8. சமாதி: தியானத்தின் மெய்மறந்த நிலை. சமாதி என்பது ஜீவாத்மா பரமாத்மாவின் ஒன்றுபட்ட நிலை. எல்லாப் பொருள்களையும் தன்னிடத்திலும், தன்னை எல்லாப் பொருள்களிடத்திலும் எப்பொழுது ஒருவன் காண்கிறானோ, அப்பொழுது பிரம்மத்தை அடைகிறான். எப்பொழுது சமாதியில் ஆழ்ந்து, ஒருவன் வேறாக எப்பொருளையும் காண்பதில்லையோ, அப்பொழுது ஒன்றேயாகிய கைவல்ய பதவியை அடைகிறான். - யோக தத்வோபநிஷத் (43) - மண்டலப்ராஹ்மணோபநிஷத்(50) - சாண்டில்யோபநிஷத் (59) - ஜாபால தர்சனோபநிஷத் (91) யோக அப்பியாசத்தின் அறிகுறிகள்யோகாப்பியாசம் பழகும் யோகியின் தேகத்தில் தோன்றும் அடையாளங்களை உபநிடதங்கள் தொகுத்துக் கூறுகின்றது. "உடல் இலகுவாகும், பிரகாசமாகும். ஜடாராக்னி வளரும். நிச்சயமாக உடலின் மெலிவு ஏற்படும். மலமும் மூத்திரமும் அற்பமாகும். யோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் ஆகாரமும், ஸ்திரீ ஸங்கமும் தானாகவே விலகி விடும். யோகியின் உடலில் விந்து தாரணையின் நல்ல மணம் தோன்றும்." -யோகதத்வ உபநிடதம் (43) "சமமானதும் பரிசுத்தமானதும், பருக்கைக் கற்கள் நெருப்பு தூசு சந்தடி நீர்த்தேக்கங்கள் முதலியவை இல்லாததும், மனதிற்கினியதும், கண்ணைப் பீடிக்காததும், காற்று அதிகமாய் வீசாததுமான குகை போன்ற இடத்தில் யோகம் பழக வேண்டும். சு:2.10. "யோகம் பழகும் போது பனி, புகை, வெயில், காற்று, நெருப்பு, மின்மினி, மின்னல், ஸ்படிகம், நிலவு இவை தோன்றினால் அது ஸாக்ஷாத்காரத்தின் முன்னோடியான அடையாளங்கள் ஆகும். சு:2.11 "உடலின் பளுவின்மை, நோயின்மை, அவாவின்மை, நிறத்தெளிவு, நல்ல குரல், இனிய மணம், மலஜலங்களின் குறைவு ஆகியவை யோக முயற்சியின் அடையாளங்கள்.". சு:2.13. - சுவேதாச்வதர உபநிடதம் (14) இதுவரை வேதாந்த தரிசனத்தில் பொதுவான யோக நெறி குறித்து சில விளக்கங்களை ஒருவாறு பார்த்தோம். அடுத்து, வேதாந்தத்தில் தியானம் குறித்த சில விளக்கங்களைப் பார்ப்போம். சகலவிதமான தியான முறைகளும் மனத்தைக் கடந்து செல்லும் வழிமுறைகளாகும்.மனம் எதையும் எண்ணாமல், எங்கும் செல்லாமல் அதன் இருப்பிலேயே நிலைத்து நிற்பின் அதுவே தியானம்.. உபாஸனம் - நிதித்தியாஸனம் —----------------------------------------------------வேதாந்தத்தில் தியானம் இரண்டு வகையாகக் குறிக்கப்படுகிறது. அவை1.உபாஸன தியானம் 2. நிதித்தியாஸன தியானம் ஆகும். ஞானம் பெறுவதற்காக சாதகனின் மனத்தைத் தயார்படுத்தும் முதல் நிலைத் தியானம் உபாஸன தியானம். ஸகுணப் பிரம்மமாகிய இஷ்ட தெய்வம், குரு முதலானவர்களின் உருவத்தை மனத்தில் நிறுத்தித் தொடர்ந்து சிந்திப்பது பஹிரங்க தியானம் ஆகும்.இதனை ஸகுண(ரூப) தியானம் என்றும் கூறுவர். பொதுவாக இன்றைய குருமார்களால் பெரிதும் கற்பிக்கப்படும் தியானங்கள் யாவும் உபாஸன தியானங்களே ஆகும். ஞானம் அடைந்த பிறகு தனது உடல் மனம் கடந்த ஆன்மாவைத் தியானம் செய்வது நிதித்தியாஸனம். நிர்க்குண பிரம்மமாகிய தன் ஆத்மாவில் மனத்தினை நிறுத்திச் செய்யும் அந்தர்முகத் தியானம் - நிர்க்குண தியானமாகிய நிதித்தியாஸனம் ஆகும். தன்னை ஆன்மாவாக உணர்ந்த அல்லது அநுபூதி பெற்றவர் மட்டுமே நிதித்தியாஸனம் எனும் உயர்நிலைத் தியானத்தில் அப்பியாசம் செய்ய முடியும்; உடலுணர்வுடைய ஏனையோர் தாம் அறிந்த உருவத்தை நினைத்து உபாசனை சாதனை செய்தலே உகந்தது. (யோகம் சித்திக்கும்)