-தென்னம்பட்டு ஏகாம்பரம்நாட்டம் இரண்டும் நடுமூக்கில்...மனம் தான் மனிதன். அது எப்போதும் புறத்தே ஓடிக்கொண்டிருக்கும் இயல்புடையது; ஆசை வயப்பட்டு சதா அலைந்துகொண்டிருப்பது. மனதற்ற பரிசுத்த நிலையே தேவ நிலையாகும். அந்த தெய்விக நிலையை அடைதலே உயரிய மெய்ஞ்ஞானமாகும். அதனை அறியும் கலையே அட்டாங்க யோக நெறியாகும்..உடலையும், சுவாசத்தையும், மனதையும் கட்டுப்படுத்தும் பயிற்சிகளில் இருந்தே யோகம் தொடங்குகிறது. மனம் முற்றிலும் அமைதியாகும்போது, மனம் அடங்கும்போது தான் ஆன்மா உணரப்படுகிறது. மனத்தை நிறுத்துவதற்கான பயிற்சிக்களமே யோக நெறியாகும். மன ஒருமைக்கும், ஆன்ம பரிபக்குவத்திற்கும் உரிய பயிற்சிகளேயன்றி, யோக நெறி மெய்ஞ்ஞானம் அன்று. அட்டாங்க யோகத்தின் ஒட்டுமொத்த செயல்முறையும் மூன்று பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது சரீரத்தைக் கடந்து செல்வது. அதாவது இயமம், நியமம், ஆசனம் எனும் முதல் மூன்றும் உடலுக்கான பயிற்சி; நம் சரீரத்திற்கு அப்பால் அடியாழத்திற்குச் செல்வதற்கு அவை உதவும். சரீரம் நம்முடைய புறவெல்லையாய் உள்ளது. நம் பிரபஞ்ச இருப்பின் பொது மைய வட்டமும் அதுவே. இரண்டாவது படிநிலை மனத்தைக் கடந்து செல்வதாகும். பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை எனும் இவை மூன்றும் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சிக்கான உள்ளார்ந்த படிநிலைகள்; இவை மூன்றும் மனதுக்கப்பால் நம்மை வழிநடத்திச் செல்வதாகும்..மூன்றாவது நம்முடைய சொந்த இருப்புணர்வில் - நடுவீட்டில் சென்றடைவது. அதாவது தியானம், சமாதி இவை இரண்டும் அதற்கான ஆன்மப் பயிற்சிகளாகும். எங்கிருந்து நாம் வந்தோமோ, அந்த மூலத்துக்குத் திரும்புவதாகும். அட்டாங்க யோகத்தின் எட்டுப் படிநிலைகளும் உடல், மனம், ஆன்மா மூன்றன் தூய்மைக்கும் துணை செய்வன என்பது நன்கு சிந்திக்கின் புலனாகும். இயம, நியம விரதங்களை விடாமல் ஒழுகுவதுடன், பிராணாயாமம் முதலியவற்றையும் பயிற்சி செய்து வர, அவற்றின் தொடர்ச்சியாக கவன ஒருமை என்கிற தாரணை, நிலைத்த தாரணையாகிய தியானம், துரியாதீதம் என்கிற சமாதி இம்மூன்றையும் ஒருசேரப் பெற்றவர்க்கே மெய்ஞ்ஞானம் இயல்பாய் வாய்க்கிறது. எல்லையற்ற ஆன்மாவின் வாசலைத் திறந்து காட்டுவது தான் தியானம். உண்மையில் ஆன்மாவின் வாசல் தான் தியானம்.தியானம் புரிவோர் தியான தானத்தையும், தியான முறையையும், தியானப் பயனையும் இன்னவையென அறிந்துசெயல்பட வேண்டியது அவசியமாகும்.."நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லைஉணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே." - திருமந்திரம்: 604 "நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டுஉயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்துயரற நாடியே தூங்க வல்லார்க்குப்பயனிது காயம் பயமில்லை தானே." - திருமந்திரம்: 605 தியானிப்பவர் எவ்விடத்தில் பார்வையை - நினைவை வைத்து, எவ்வாறு தியானம் செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறார். தியானத் தானம் என்பது "நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்..." "நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு.." என்று நடுமூக்கு, நாசி மேல் என்று கூறினார்..நாசி, மூக்கு இவையெல்லாம் நாம் காணும் இந்த சுவாசிக்கும் மூக்கு அல்ல. இவை யாவும் பரிபாஷை சொற்கள். மூக்கு நுனி, நாசி முனை என்பதெல்லாம் சோதியென்ற சுழிமுனையே ஆகும். இதனை மெய்வழி ஆண்டவர்கள், "சோதியென்ற நாசிமுனை" என்பார்கள். அதாவது இருள் நாசமாகும் - நசிக்கும் இடமே நாசியாகும். எனவே, தியானிப்பவர் கண்கள் இரண்டையும் அதாவது நாட்டத்தை - பார்வையை நாசியென்ற சுழிமுனை தானத்தில் வைக்கவேண்டும். பொதுவாக இடகலை, பிங்கலை வழியாக சுவாசத்தை மாற்றி மாற்றி விடுவதே மூக்கின் இயல்பாகும். இவ் இரண்டினையும் கட்டுப்படுத்தி, சுழிமுனை வழியில் உயிர்வளியாகிய பிராண வாயுவைச் செலுத்தும் முறை குறித்து, குரு முகமாக அறிந்து பழக வேண்டும். சுழிமுனையில் சுவாசம் நடக்கும் போதுதான் தியானம் செய்யவேண்டும் என்று ஞான சரநூலும் குறிப்பிடுகிறது. இயமம், நியமம், ஆசனம் முதலான அஷ்டாங்க யோகத்தின் அடிப்படையான ஒழுகலாறுகளில் தொடர்ந்து பயிற்சியில்லாமல், நாமே நம் மனம் போன போக்கில் தியானம், நிஷ்டையென ஏதேனும் செய்ய முற்பட்டால் உடலும் மனமும் பாதிப்புக்குள்ளாக, விபரிதமாகிவிடும். இடகலை, பிங்கலையெனும் இரு சுவாசங்களையும் ஒன்றுபட செய்யுமிடமே புருவ நடு ஆகும். இவ்வாறு நடுநாடியாகிய சுழிமுனையில் அதாவது புருவ மத்தியில் நினைவு ஒன்றித் தியானித்தால் இந்தத் தேகத்திற்கு வாட்டமும் இல்லை; மனைக்கு அதாவது இந்த உடம்பிற்கும் அழிவும் இல்லை. உலக உணர்வு அற்றுப் போய், தானென்ற முனைப்பும் அடங்கும். சிவன் அவன் ஆமே.. அதாவது கடவுளும் நானும் ஒன்றானோம்; சீவன் சிவனாயிற்று என்க. தியானமாவது அக வழிபாடு. அகவழிபாட்டிற்குரிய இடம் ஆக்ஞை தானமெனும் புருவ மத்தியேயாகும். தியானித்தல் என்பது புருவ நடுக்கண் ஒளிரும் சிவசோதியினிடத்தில் நினைப்பு அழுந்தப் பெறுதல்; கண்ணாரப் பார்த்து கலந்து அங்கு இருந்திடலே ஆகும். ."ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்கண்ணாரப் பார்த்து கலந்தங்கு இருந்திடில்விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப்பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே." - திருமந்திரம்: 600 ஒண்ணா நயனம் எனும் புருவ மத்தியில் - சுழிமுனையில் தோன்றும் மெய்யுணர்வு ஒளியை - சிவச் சோதியை நன்கு பார்த்து, அதில் இலயித்து அந்த நிலையிலேயே அழுந்தி, சிதாகாயப் பெருவெளியில் பொருந்தி நிற்க, பரமாகாசக் காட்சி அனுபவத்துடன், நிர்க்குண அருவமாகிய சிவத்தைத் தரிசிக்கலாம் என்பதாம். இதனையே, சிவஞான போதம் ஒன்பதாம் சூத்திரத்தில், "ஊனக்கண் பாசம் உணராப் பதியைஞானக் கண்ணினில் சிந்தை நாடிஉராத்துனைத் தேர்த்தெனப் பாசம்ஒருவத் தண்ணிழலாம் பதி" என்று குறித்துள்ளதும் காண்க. மக்கட் பிறப்பினை எய்திய நம்மிடத்தே புறவுலகக் காட்சிகளைக் கண்டு களிக்கக்கூடிய உடம்போடுகூடிய முகத்துக் கண்கள் - இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்புடைய அகத்துக்கண் என்று, இருவகைக் கண்கள் உளதென திருமூலர்பிரான் குறிப்பிடுகிறார்.."முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்ற திருமந்திரப் பாடலையும் ஈண்டு நோக்கத்தக்கது. ஆதலால் தான் இத்தகைய அகக்கண்ணினையே, "ஒண்ணா நயனம்" என்றார். நம் தேகாலயத்தில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் (இரவி – மதி - சுடர்) என மூன்று மண்டலங்கள் உள்ளன. புருவ நடுத்தானம், சுழிமுனையந்தம், பிரம்மரந்திரம் ஆகியவை யாவும் சந்திர மண்டலத்தில் இருப்புடையன. மேலே மூன்று மண்டலங்கள் என்றது இடகலை, பிங்கலை, சுழிமுனை எனும் மூன்று நாடிகளையே குறிக்கும்..இந்த மூன்று நாடிகளிலும் தாரணை செய்து பழகினால் பிண்டமும் - அதாவது இந்த உடம்பும் ஊழி பிரியாது இருக்குமாம். ஓர் ஊழிக்காலம் அழியாது நிலைத்திருக்கும் என்பதாம். இந்த ஊனுடம்புள்ளே 72000 நாடிகள் உள்ளன. அவற்றுள் தச (பத்து) நாடிகள் கவனிக்கத் தக்கவை. இந்தப் பத்து நாடிகளிலும் மேன்மை வாய்ந்தவை மூன்றே. அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை என்பனவாம். இந்த மூன்று நாடிகளிலும் யோகப் பயிற்சிக்கும், 'யோகத்தில் யோகம்' என்று சிறப்பிக்கப்படும் தியானத்திற்கும் மிகவும் துணையாவது சுழிமுனை நாடியே யாகும். இதற்குப் பிரம்ம நாடி என்ற பெயரும் உண்டு. இந்த நாடி, புருவ மத்தியில் வந்து நிற்கும் இயல்புடையது. எல்லா தேவ ரகசியங்களும் சுழிமுனையில் வைத்தே பூட்டப் பெற்றிருக்கின்றது. மெய்ப்பொருளை உணர வல்ல ஞானிகளுக்கு இந்த சுழிமுனை நாடியே, எல்லா யோக ஞான சாதனைகளுக்கும் துணை புரிய வல்லதாகும். யோக சாதனைகளுக்கு உடனாகி வரும் புறத்தே உள்ள இரு கண்களையும் தாண்டி, அகப்புறமான உயிர்வளி யெனும் பிராணன், அகத்ததாகிய சோதி என்ற நாசி முனை-புருவ மத்தி, இடகலை -பிங்கலை- சுழிமுனை, பிரம்மரந்திரம் முதலானவற்றைக் குருமுகமாகத் தெரிந்து கொண்டு தியானிப்போமாயின், புறத்தே உள்ள கண்களும், அகப்புறமாயுள்ள வாயுவும், அகத்ததாகிய சுழிமுனை நாடியும் ஒன்றியிருக்க, சிந்தை சிவத்திடம் ஒடுங்கிப் போகும்..தாமச, ரஜோ, சத்வமாகிய முக்குணங்களையும், ஐம்புலன்களையும் அடக்கி, மூல வாயுவான பிராணவாயுவை இடகலை, பிங்கலை நாடிகளின் உதவியால் எழுப்பி, பின் கும்பித்து, சுழிமுனை வாசலைத் திறந்து, அசபையுடனும் சிலம்பொலியுடனும் சென்று, ஆசான் அருளிய மந்திர தியானம் செய்துகொண்டே, அருளைத் தருகின்ற பரவெளியில் புகுந்து, சிவஜோதியிலே உள்ளமும் அறிவும் ஊன்றிக் கரையப் பெற்றிருத்தலே தியானம் என்றுணரலாம். "முக்குணம் ஊடற வாயுவை மூலத்தேசிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்தக்க வலம் இடம் நாழிகை சாதிக்கவைக்கும் உயிர்நிலை வானவர் கோனே." - திருமந்திரம்: 615 தியானத்தில் அழுந்த அழுந்த முடிவில் சிவத்தைக் காண்டல் நிகழும். சிவக்காட்சி காணும் முன்னர் அகத்திலே கடல், யானை, புல்லாங்குழல், வண்டு, தும்பி, சங்கு, மணி முதலான நுட்பமான நாதங்கள் கேட்கும். "மணி கடல் யானை வார்குழல் மேகம்அணிவண்டு தும்பி வளை பேரிகை யாழ்தணிந்தெழு நாதங்கள் தாம் இவை பத்தும்பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே." - திருமந்திரம்: 606 சற்குரு அருளால், தியான நெறிறைச் சிரத்தையுடன் பற்றி ஒழுகுபவரே நாதக் கேள்வி - சோதிக் காட்சி - சிவமயமாதல் ஆகியவற்றை அடையப் பெறுவர்..இவ்வாறாகத் தியானத்தில் மனம் ஒன்றி, சுழிமுனையில் மூலக்கனலைச் செலுத்தி, புருவ மத்தியில் உயிருணர்வை விழித்தெழச் செய்த யோகியானவர், தன் உடம்பில் அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்ற மூன்றிலும் அனுபவம் பெறுவர். அவர் ஓர் ஊழிக்காலம் இறவாமல் இருப்பர்.யோகிகள் தியானத்தை அடுத்து அடையவேண்டியிருப்பது சமாதி நிலையாகும். தியானமாகிய அடிப்படையில் தேர்ச்சி பெறாவிடில் முடிவு நிலையாகிய சமாதி அடைதல் இயலாததாகும்.மனத்தில் அலைவு ஏற்படுமாயின், இன்னும் தியானப் பயிற்சிக்குத் தாங்கள் தகுதி அடையப் பெறவில்லையென யோகாப்பியாசிகள் தீர்மானித்துக் கொள்ளலாம்..குருபதம் அடைந்த ஜீவன் முத்தருக்கே வாழும் போதே சமாதி நிலை கைகூடுமேயல்லாது, சீடனுக்கு அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். (யோகம் சித்திக்கும்)